
உத்தவ கீதை சாராம்சம் இது தான் – நங்கநல்லூர் J. K. SIVAN
உத்தவன் கிருஷ்ணனின் உறவினன். கிருஷ்ண பக்தன். உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன் . அதனால் தான் கிருஷ்ணன் தான் பிரிந்தாவனத்திலிருந்து மதுரா வந்ததும், சில காலம் கழித்து உத்தவனை தேரில் அனுப்பி பிரிந்தாவனம் சென்று அங்கே கோபியர்களுக்கு ஆறுதல் மொழி சொல்ல அனுப்பினான். ஆனால் கோபியர்களோ கிருஷ்ணனை மறக்கவே இல்லை. மனதிலேயே பூட்டி வைத்துக்கொண்டிருந்தனர். ஜீவன் முக்தர்கள்.
உத்தவர் தான் கிருஷ்ணனின் அவதாரம் முடியும் தருணத்தில் கடைசியாக உபதேசம் பெற்றவர்.அதை தான் உத்தவ கீதை என்று படிக்கிறோம். இல்லை, நாம் படிப்பதில்லை. கீதை என்றாலே தூர ஓடிப்போகிறோமே. அப்புறம் எங்கே படிப்பது?உத்தவ கீதை கிருஷ்ணனும் உத்தவரும் பேசுவதாக அமைந்துள்ளது. கொஞ்சம் கேட்போம்.
”கிருஷ்ணா, எது உண்மையான ஞானம், சொல்?””வேறென்ன, சாஸ்வதமான ஆத்மாவுக்கும் அநித்யமான தேஹத்துக்கும் இடையே உள்ள வித்யாசத்தை அறிந்து கொள்வது தான் ஞானம். ஆத்மாவுக்கு ஜனனம் மரணம் எதுவும் கிடையாது. இந்த உலகம் என்பதே ஒரு மாயத்தோற்றம், மாறிக்கொண்டே இருப்பது. ”
”கிருஷ்ண ப்ரபு , உலகத்தில் எப்படி வாழ்ந்து முக்தி பெறுவது?”
”உத்தவா நான் அடிக்கடி சொல்வதை மீண்டும் உனக்கு சொல்கிறேன். பற்றற்ற வாழ்க்கை தான் வழி.பலன் எதிர்பாராமல் கடமையை, கர்மத்தை செய். என்னை சரணடை . பக்தி கொள். எல்லாவற்றிலும் என்னையே காண்பாய். சுக துக்கம் எதிலும் ஒட்டாமல் வாழ்ந்தால் அதுவே முக்தி நிலை.”
”கிருஷ்ணா, மனதை எப்படி அடக்குவது? கட்டுப்பாட்டில் வைப்பது?””மனதை பக்தியில் செலுத்து . தியானம் பண்ணு, எதிலும் விருப்பு வெறுப்பு வேண்டாம். எப்போதும் என்னையே மனதில் நினை, எண்ணு. என் நாமங்களைச் சொல்.என் உருவத்தை மனதில் காண் .அப்புறம் உன் மனது வேறே எங்கும் தாவ முடியாது.”
”பக்தி என்றால் என்ன என்று விளக்கு கிருஷ்ணா?””எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பூரண பிரேமை, அன்பு என் மேல் வைப்பது தான் பக்தி. பூசை மேளம் தாளம் விருந்து எதுவும் வேண்டாம். இப்படிப்பட்ட தூய பக்தி சடங்குகள் அறிவு சார்ந்த ஞானம் எல்லாவற்றையும் கடந்தது. இப்படிப்பட்ட என் பக்தன் எங்கும் எதிலும் எவற்றிலும் என்னையே காண்பவன். சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் என்று மகிழ்பவன். வணங்குபவன்.உள்ளும் புறமும், சொல்லிலும் செயலிலும் என்னையே உணர்பவன், அனுபவிப்பவன்.”
கிருஷ்ணா, ஜீவன் எதனால் ஜனன மரண சக்கரத்தில் மாட்டிக்கொண்டு உழல்கிறான்?”அஞ்ஞானம் ஒன்றே காரணம் உத்தவா. உலக பந்த பாசங்களில் தன்னை பிணைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் திணறுகிறான். ஆசை, கர்மா இவை தான் இந்த ஜனன மரண சுழற்சிக்கு காரணம். பற்றற்ற நிலை, த்யானம் பக்தி ஒன்றே இதிலிருந்து அவனை விடுவிக்கும்.”
கிருஷ்ணா நான் அடிக்கடி கேட்கிறேனே என்று கோபிக்காதே. வாழ்வில் பற்றற்ற நிலை பெறுவது எப்படியப்பா ?’
‘ரொம்ப சுலபம் உத்தவா. ஏனோ இதை யாரும் மனதில் தங்க இடம் கொடுப்பதில்லை. உலக பந்தங்கள் சொந்தங்கள் எல்லாமே அநித்தியம் என்று திடமாக மனது ஏற்கவேண்டும். என் தெய்வீக உருவத்தை மனதில் நிறுத்தி த்யானம் பண்ணவேண்டும்.சுக துக்க இன்ப துன்ப அனுபவங்கள் எல்லாமே அநித்தியம், தோன்றி மறைபவை, நீர் மேல் குமிழி, இந்த உடல் சம்பந்தப்பட்டவையே தவிர நானாகிய இந்த ஆத்மாவுக்கும் அதற்கெல்லாமும் எந்த சம்பந்தமில்லை என்று தெளிவு பெறுவது.”உலகத்தில் மனிதனாக பிறந்து என்ன பயன், காரணம் ?”’உத்தவா அர்ஜுனனுக்கு சொன்னதை தான் உனக்கும் சொல்கிறேன். கேள். மானுடப்பிறவி எடுப்பதன் காரணம் ஆத்ம ஞானம் பெறவே. ஆத்மா என்பது தான் நானாகிய ப்ரம்மம். என்னை அடைவது தான் உண்மையான லக்ஷியம். இது எப்படி முடியும் என்றால், தன்னலமற்ற பரிபூர்ண சேவை. தூய பக்தி. நான் யார் என்று ஒவ்வொருவரும் விடாமல் விசாரம் செய்து தன்னையே சாஸ்வதமான ஆத்மாவாக அறிவது.
”கிருஷ்ணா ஆன்மீக நாட்டத்தில் யோகத்தின் பொறுப்பு என்ன?”யோகப்பயிற்சியில் ஈடுபட்டால், மனம், ஐம்புலன்கள்ஆகியவற்றை ஒழுக்கத்தில், கட்டுப்பாட்டில் அடக்கி வைக்க முடியும்.மனத்தை ஓடவிடாமல் ஒரே கோணத்தில், தீவிரமாக என் மேல் செலுத்த முடியும். யோகத்தை மூன்றாக பிரித்து கொடுத்திருக்கிறேன். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் மூன்றில் எது சௌகர்யமோ அதை பின்பற்றி முக்தி எனும் லக்ஷியத்தை அடையலாம். விடாமுயற்சி, ஒரு நிலைப்பட்ட மனம் அவசியம் வேண்டும். ”
”கிருஷ்ணா, ஒருவனை எப்படி, உண்மையான பக்தன் என அறிவது?””சுலபத்தில் கண்டுபிடிக்கலாம் உத்தவா, உண்மையான பக்தன், எளிமையாக, ஆரவாரமில்லாமல் இருப்போபன், உயிர்களிடத்தில் இரக்கம், தயை, கருணை கொண்டவனாக இருப்பான், கர்வம் பொறாமை, கோபம், வெறுப்பு, இதெல்லாம் உள்ளத்தில் இல்லாதவனாக இருப்பவன் என் பக்தன். ”
”கிருஷ்ணா, உன்னை சரணடைந்தவன், உன் மேல் தூய பக்தி கொண்டவன், பெறுவது என்ன?””அவன் சதந்தத்தில் திளைப்பவன், ஜனன மரண பிடிப்பு இல்லாதவன். என்னோடு வைகுண்டத்தில் கோலோகத்தில் இருப்பவன். சத்ய பேரின்பம் பெறுபவன். உலக ஈர்ப்புகள் அற்றவன். ஜீவன் முக்தன் ஆகி விடுவான் ”\\
”கிருஷ்ணா, எதற்கு உலகத்தில் துயரங்கள் துன்பங்கள் எல்லாம் இருக்க செய்கிறாய் ?””உத்தவா, பற்று, அஞ்ஞானம் இதனால் தான் துன்பம் விளைகிறது. ஜீவன்கள் இதை உணர்ந்து நிலையற்ற உலகத்தை அறிந்து ஆத்ம விசாரம் மேற்கொண்டு ஆத்மாவோடு கலக்க வேண்டும்.””சரி கிருஷ்ணா, பூலோகத்தில் மனித சமுதாயத்துக்கு நீ அளிக்கும் அறிவுரை என்ன?’
”உத்தவா, இது உனக்கு மட்டுமல்ல, சகலருக்கும் நான் சொல்வது இது தான். ”என் மேல் பூரண நம்பிக்கை, பக்தி கொள். காமக்ரோத மோஹ மத மாத்சர்யம் இதெல்லாம் தியாகம் செய். உன்னை நெருங்காமல் உன்னை காத்துக் கொள். எல்லா உயிரும் என் அவதாரமே, எல்லாம் நானே என உணர்ந்து சேவை புரி உதவு. இப்படி வாழ்ந்தால் முக்தி பேரின்பம் கிட்டும்.”
நண்பர்களே, கிருஷ்ணன் உத்தவனை உத்தேசித்து நமக்கு திருப்பி திருப்பி சொல்லும் அறிவுரை. என்றாவது மனதில் பதியுமா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


