
உருவமான அருவம் – நங்கநல்லூர் J K SIVAN
சிவ பெருமானின் ஒரு அம்சம் லிங்கோத்பவர். சிவன் கோவில்களில் மூலவரின் கர்பகிரஹத்தின் பின்புற சுவரில் பிரகாரத்தில் மேற்கு நோக்கி லிங்கோத்பவரை தரிசிக்கிறோம். அடி முடி காணமுடியாதவன், ஆதி அந்தமில்லாதவன் என விளங்கும் மூர்த்தி லிங்கோத்பவர். சிவராத்திரி விழாவுடன் தொடர்புடைய ஜோதி ஸ்வரூபம். ஸ்தாணு மூர்த்தி. அடியில் விஷ்ணு வராஹனாக, முடியில் ப்ரம்மா அன்னமாக கோலம்கொண்ட சிலா மூர்த்தி. க
யார் உயர்ந்தவர் என விஷ்ணுவும் பிரம்மாவும் போட்டியிட, பரமேஸ்வரன் லிங்கோத்பவராக உருவெடுத்து யார் இதன் அடியையோ முடியையோ முதலில் காண்பவரே அவரே உயர்ந்தவர் என விஷ்ணுவும் பிரம்மாவும் முறையே வராஹனாகவும் அம்சமாகவும் கீழேயும் மேலேயும் சென்றும் அடி முடி காணமுடியாத ஜோதி பிழம்பு லிங்கோத்பவர்.
திருவண்ணாமலையில் அக்னி ஸ்வரூபம்.
ராஜசிம்ம பல்லவன் 700–730 வருஷங்களில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் லிங்கோத்பவர் சிற்பத்தை முதலில் சிலை வடித்தவன். பராந்தக சோழன் 907–953) காலத்தில் லிங்கோத்பவர் சிவாலயங்களில் கருவறை பின்புறம் கோஷ்டத்தில் உருவானார். அதற்கு முன் அந்த இடத்தில் இருந்தவர் அர்த்த நாரீஸ்வரர்.
மஹா ருத்ரத்தில் ஒரு ஸ்தோத்ரம் வரும். அபிஷேகம் பண்ணுவதற்கு முன் சொல்லும் மந்திரம்.
आपाताळनभः स्थलान्तभुवनब्रह्माण्डमाविस्फुर ज्ज्योतिः स्फाटिकलिङ्गमौळिविलसत्पूर्णेन्दुवान्तामृतैः । अस्तोकाप्लुतमेकमीशमनिशं रुद्रानुवाकाञ्जपन् ध्यायेदीप्सितसिद्धयेध्रुवपदं विप्रोऽभिषिञ्चेच्छिवम् ॥
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்டமா விஸ்புரத் ஜ்யோதி: ஸ்படிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை: அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம் ருத்ராநுவாகான் ஜபன் த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||
பாதாளம் முதல் ஆகாசம் வரை அளவற்ற ஜோதி மயமாக பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் செய்.ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் இல்லாததால் எந்த வஸ்துவை அதன் எதிரில் வைக்கிறோமோ அதன்
நிறத்தை கண்ணாடிபோல் ஸ்படிகம் காட்டி பிரகாசிக்கும். குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி தான் ஸ்படிக லிங்கமும் ..பின் பக்கம் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம். நம்முடைய மனோ பாவத்தை அப்படியே பிரதிபலிக்கும்.
சிரத்தில் பூரண சந்திரன் ‘பூரண இந்து! முழு நிலவு. ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட “ஸகள ” ரூபத்தில் உச்சியில் மூன்றாம் பிறை கொண்ட சந்திர மௌலி. ரூபமே இல்லாமல் மா ‘நிஷ்கள’ லிங்க தத்வமாயிருக்கிற போது, சந்திரன், கங்கை எதுவும் இல்லை.
யோகிகள் தம் சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் சந்திர மண்டலத்தில் இருக்கும் ஜ்யோதி லிங்க ஸ்வரூபத்தை தியானம் பண்ணுபவர்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருதம் ஒழுகி பரமானந்தம் அனுபவிப்பவர்கள். ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்கிறோம். ருத்ர அபிஷேகம் செய்யும் போது சொல்வது தான் மேலே சொன்ன ஸ்தோத்திரம். எல்லோரும் ஸ்ரீருத்ரம் மனப்படமா பண்ணி சொல்லலாம். .
அகில உலகம், பிரபஞ்ச கல பிரம்மாண்டமும் சிவ ஸ்வரூபம். ஸ்ரீ ருத்ரம் சொல்கிறது. ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபமே என்கிறது.
லிங்கம் ஏன் வட்டவடிவம்? வட்டமான ஸ்வரூபத்துக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. . ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என லிங்காகாரம் , லிங்க உருவம் சொல்கிறது.
லிங்கம் உருண்டை இல்லை. நீள வட்டம். (ellipse). இந்த பூமி, பிரபஞ்சம் எல்லாமே அப்படித் தான். கோழி முட்டை மாதிரி. சூரிய மண்டல Solar System) கிரஹங்களின் அயனம் நீளவட்டம் தானே. “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் இந்த கோழிமுட்டை லிங்க ரூபத்தை தான்.
நமது நெருங்கிய உறவுகளை நினைத்தாலே நம் மனது எவ்வளவு சந்தோஷம் அடைகிறது. . நினைக்கும்போதே இப்படி இருந்தால் அவரை நேரில் நம்மருகில் பார்த்தால். இன்னும் எத்தனை கூடுதல் மகிழ்ச்சி!. அது போல தான் உருவமற்ற சிவமும் லிங்க உருவத்தோடு வந்து நமக்கு அனுக்ரஹம் பண்ணும்போது நாம் பரம சந்தோஷம் அடைகிறோம். அருகில் இல்லை நம்உடம்புக்குள்ளேயே மனதில் அல்லவா பரமேஸ்வரனை அனுபவிக்கிறோம்!
ஞானிகள் அருவத்திலேயே ஆனந்தம் அடைபவர்கள். நாம் அப்படியில்லையே. நம்மை திருப்திப் படுத்தவே ஈஸ்வரன் ம் எளிதில் மனதில் நிற்கும் லிங்க வடிவில் லிங்கோத்பவராக திவ்ய தரிசனம் எங்கும் தருகிறார். உருவமாக உனக்கு காட்டினாலும் நான் உருவமற்றவனடா என்று தான் அடி முடி காணாத ஒளி ஸ்தம்பம். ஆதி அந்தமில்லாத பழமனாதி .
அடிமுடி காணமுடியாவிட்டாலும் ஈஸ்வரன் நமக்கு நொடியில் அகப்படுபவர். ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை’. . அன்போடும் தூய பக்தியோடும் அவரைச் ‘சிக்’ கென பிடிக்கலாம் என்று மணி வாசகர் சொல்கிறாரே. அனுபவஸ்தர். வாரி வாரி வரம் அளிக்கும், எளிதில் திருப்தி பெரும் ஒரே தெய்வம் சிவன். இதனால் அவருக்கு ஒரு அபூர்வ பெயர் ‘ஆசுதோஷி’
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


