
நமக்கென்ன வேண்டும்? நங்கநல்லூர் J K SIVAN
நமக்கு என்ன வேண்டும் என்றே நமக்கு தெரிவதில்லை. அதற்கு தான் அநேக யோகிகள் , ஞானிகள், மஹான்கள் ஆச்சார்யர்கள் அவ்வப்போது தோன்றி நம்மை தூண்டி நல்வழிக்கு இட்டுச் செல்கிறார்கள். இன்று வள்ளலாரிடமிருந்து நமக்கு என்ன வேண்டும் என்ற ஒரு சின்ன லிஸ்ட் இதோ. இதைக் கற்றுக்கொள்வோம். நமது அன்றாட வாழ்க்கை சீராக அமைதியாக அமையுமே.
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே
வள்ளலார் சென்னை கந்தசாமி கோவிலுக்கு தினமும் மண்ணடியிலிருந்து நடந்து வந்து தரிசனம் செய்து பாடுவார்.தருமம் செய்வார் நிறைய இருக்கும் ஊர் நமது சென்னை. இங்கே கந்த கோட்டம் எனும் கந்தசாமி கோவிலில் வளரும் ஷண்முகா, தூய மணியே , சைவமணியே ,தெய்வமணியே, எனக்கு என்ன வேண்டும் தெரியுமா?
ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின் திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும் . உள்ளே ஒன்று வெளியே ஒன்று பேசும் வஞ்சகர் உறவு இல்லாமல் காக்க வேண்டும். பெருமை மிக்க உன் புகழையே நான் பேசுபவனாகவும், பொய் பேசாதவனாகவும் இருக்க வேண்டும். எல்லோர்க்கும் நன்மை செய்யும் பெருமை அளிக்கும் நடத்தையை பின்பற்றுபவனாக வாழ வேண்டும். திமிர், கர்வம் மதம்.என்கிற பேய் என்னை நெருங்காமல் நீ காக்க வேண்டும். பலரும் அவஸ்தைப்படும் பெண்ணாசை மனத்தை நெருங்காமல் காக்க வேண்டும். பெண்ணை நினைக்காமல் உன்னை நினைக்க வேண்டும். மதி நுட்பம் வேண்டும். உன் கருணையாகிய செல்வம் வேண்டும். நோயற்ற வாழ்வு வேண்டும். இதெல்லாம் கொடுப்பாயா கந்தசாமி? ATTACHED IS A BEAUTIFUL PAINTING OF RAJA RAVI VARMA THE IMMORTAL ARTIST
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

