
டாக்டர் பாட்டி – நங்கநல்லூர் J K SIVAN மணத்தக்காளி கீரையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன:
”சிவா, நான் சொல்றேன் எழுதி வச்சுக்கோடா. நாலு பேருக்கு சொல்லு. நல்ல காரியம் நல்ல விஷயத்தை பற்றி அடிக்கடி எல்லாத்துக்கும் சொல்லு. எனக்கு எழுத தெரியலே. இல்லேன்னா நானே எழுதிடுவேனேடா.
வற்றக்குழம்பில் பொரித்த மணத்தக்காளி வற்றல் வெகு ருசி. மணத்தக்காளி வாழை மாதிரி. அதன் இலை ,காய், பழம், சகலமும் மருந்து. ரொம்ப நாள் நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு மணத்தக்காளி வற்றல் கைகண்ட மருந்து.ஜுரம் வந்தால் நாக்கு கசக்கும். மணத்தக்காளி வற்றலை வாயிலே போட்டுக்கணும். நோய் வந்தா வாந்தி வராமாதிரி என்னவோ பண்ணும். அப்போ மணத்தக்காளி பழம் நல்லது. அல்சர், மண்ணீரல் SPLEEN வீக்கத்தை குணமாக்கும்.
சளி, சுவாசப் பிரச்னைகளை விரட்டும்.
மணத்தக்காளி, அற்புத ஒளஷதம். நாம வழக்காமலேயே தோட்டத்திலே தானாக முளைக்கிற செடி. தெற்கே இதை சுக்குட்டி கீரை என்று சொல்லுவா. எல்லா ஊரிலேயும் கிடைக்கும்.
மணத்தக்காளி சாப்பிட்டா வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றும்
மணத்தக்காளி கீரையை சமைச்சு சாப்பிட்டா சளி. இருமல், கபம் இரைப்பு, எல்லாம் போயிடும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும். மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இதெல்லாம் ஊறுகாயாகவும், வற்றலாகவும், ஜூஸ் மாதிரியும் பண்ணி வைச்சுப்போம். தினமும் கொஞ்சம் சாப்பிட்டுண்டே வந்தால் நோய்கள் நீங்கி உடல் சீராகும்.
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உடம்புக்குள்ளே இருக்கிற சூடு, வாய்புண் நீங்கும். சிறுநீர் வழியா நோயை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரமா இருக்கும்.
மணத்தக்காளி இலையைப் பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
வெறுமே பச்சையா மணத்தக்காளி இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும். மலத்தை இளக்கும் .
மணத்தக்காளி இலை சாற்றை 5 டீ ஸ்பூன் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
நாக்குலே ருசி இல்லாம இருக்கிறதை , NAUSEA வாந்தி உணர்வு வரமாதிரி இருக்கிறதை மணத்தக்காளி வற்றல் போக்கும். வீட்டிலே யாரும் பண்றதில்லே. நாட்டு மருந்து கடையிலே வற்றல் பொட்டலம் போட்டு விக்கிறான். கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை சாதத்தோடு பிசைந்து சாப்பிடணும். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது.
நாம் வீட்டிலே பண்ணி சாப்பிடுகிற உணவு ஆரோக்கியத்திற்கு அடிப்படையா இருக்கணும். உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தணும் .உடலுக்கும் மன ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களையும் ஆற்றலையும் கொடுக்கிற உணவு மணத்தக்காளி. ஊட்டச்சத்து ஜாஸ்தி.
என் சின்ன வயசிலே மட்டும் இல்லை,நங்கநல்லூர் வந்தப்பிறமும் கூட தோட்டத்திலே நிறைய மணத்தக்காளி செடிகள் இருக்கும். அதோட பழங்கள் அழகாக வயலெட், PURPLE கலர்லே குட்டியா அழகாக நிறைய செடியில் இருக்கும்.தினமும் காலம்பற செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றும்போது வாய் நிறைய மணத்தக்காளி பழம் பறிச்சு சாப்பிடுவேன்.அதனாலே தான் 85+ ஆ??வாரத்தில் ரெண்டு நாலாவது மணத்தக்காளி கீரை கூட்டு காமகமன்னு வாசனையோடு சூட இலையில் விழும். மேலே மேலே சாப்பிட பசி இருந்துண்டே இருக்குமே. பசியை மணத்தக்காளி தூண்டும். மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ, சி மற்றும் பி போன்றவை உள்ளன. இதன் பல மருத்துவப் பயன்கள் உள்ளன:நல்ல ஜீரண சக்தி கொடுக்கும். கல்லீரலுக்கு நல்லது. சரும வியாதிகளை குணப்படுத்தும்
தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கிறது. இதயத்திற்கு நல்லது.. ஈரல் பாதிப்புகளை தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் CANCER செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் (Anti-proliferative activity) சமீபத்திய ஆராய்ச்சி பண்ணி இருக்கிறார்களாம்.
அதுக்கு மேலே என்ன இருக்கு சொல்ல? வீட்டுலே மணத்தக்காளி செடி வளருங்கோ. கடையிலே போய் வத்தல் மணத்தக்காளி கீரைக்கட்டு வாங்கி சாப்பிடுங்கோ.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



