
பேசும் தெய்வம்: நங்கநல்லூர் J K SIVAN
திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா?
இன்று சனிக்கிழமை. வெங்கடேசனை, திருமலை பாலாஜியைப் பற்றி நினைக்கவேண்டிய நாள்.
அடிக்கடி பலர் மனதில் ஒரு கேள்வி எழும்?
திருப்பதி முருகன் ஸ்தலமா? திருமாலின் ஸ்தலமா?என்று. வட வேங்கடவனை வேங்கடேசன் என்கிறோம் வேங்கட சுப்பிரமணியன் என்றும் கூட அநேகருக்கு பேர் இருக்கிறதே.
இந்த கேள்வியை தமிழறிஞர் கி.வா. ஜ. விடம் மஹா பெரியவாளே ஒரு தடவை கி.வா.ஜ காஞ்சி மடத்துக்கு வந்து தரிசனம் பெற்றபோது கேட்டார்மஹா பெரியவா: ‘திருப்பதி முருகன் ஸ்தலமா, திருமால் ஸ்தலமா? இது பற்றி உனக்கு என்ன தெரியும்? கி.வா.ஜ: ” திருப்பதி முருகன் ஸ்தலம் என்பதற்கும் திருமாலின் ஸ்தலம் என்பதற்கும் இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’
மஹா: ‘எப்படி என்று சொல்ல முடியுமா?
கி.வா.ஜ : ”வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான்.அவனுக்கு தான் குமரன் என்று பெயர். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன் தான் என்பது வழக்கு. மலையும் மலை சார்ந்த நிலங்களுக்குத் தலைவன் வேலவன் எனும் முருகன் தான்.அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்
லவா?’.
மஹா: ”‘சரி ! இதில் உன்னுடைய கருத்து என்ன?’
கி.வா.ஜ : ”பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும்,திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும்.
திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’
மஹா: எனக்கு என்ன தோணிற்று என்றால், ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி. அதனால்தான் அந்த கோயில் மதில் சுவரில் சிங்க வாகனம் உள்ளது !
திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும்.முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது.
தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ் நாட்டின் தொண்டை மண்டலத் தோடுதான் சேர்ந்திருந்தது. பிற்காலத்தில் , அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது.
இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’என்றார்.
மஹா பெரியவா அருகே நின்று கொண்டிருந்த மடத்துச் சிப்பந்தியிடம்‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’என்று பணித்தார்.
அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார்.
அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார்.
கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம்.
ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது.
இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்?
கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார்.
சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது.
இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம்.
இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது.
அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு.
கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார்.
உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள்.
இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார்.
அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்…
சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது.
கிவாஜ: திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி ஸ்தலமாக தொடரவில்லை ?
மஹா: ‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்ரஹமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது.
கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ணவிக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள்.
இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு.
அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால்,மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம்.
அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு.
சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன். அவனுக்குள் எல்லாமே அடக்கம்.
அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதனால் அவரை ஏழு மலையான்’
எனச் சொல்வதும் உண்டு. அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்
திருப்பதி குறித்து இப்படி பல ரசமான எண்ணங்கள்…
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

