
இனிய மூன்று நாள் அனுபவம்: நங்கநல்லூர் J K SIVAN
ஜனவரி 11, 2024. ஹனுமத் ஜெயந்தி.
திருச்சியில் ஸ்ரீ ரங்கம் எங்கு திரும்பினாலும் குட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் கூட எண்ணற்ற பக்தர்கள் கூட்டம். வடைமாலை சாற்றி வணங்குபவர்கள். காரில் செல்லும்போது பல கோவில்களை வழியில் பார்த்து ஹனுமனை நினைத்து நமஸ்கரித்துக்கொண்டே சென்றேன்.
ஆஞ்சநேயரைப் பற்றி ஒரு சின்ன தகவல் பரிமாறிக்கொள்ளலாமா?
திருப்பதியில் நான் பார்த்த ஒரு விசித்ர ஆஞ்சநேயர் பெயர் பேடி ஆஞ்சநேயர். ஒரு தடவை, சின்ன வயசு ஆஞ்சநேயனுக்கு ஒரு புது ஆசை. நாம் ஒரு ஒட்டகத்தின் மீது சவாரி செய்தால் என்ன? என்று. சிம்மாசலம் சென்றால் ஒட்டகம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு உடனே பறக்க எத்தனித்தார்.
எப்படியோ அம்மா அஞ்சனா தேவிக்கு மகன் ஹனுமானின் எண்ணம் புரிந்து விட்டது.
”அப்படியா விஷயம். உன்னை என்ன செய்கிறேன் பார்” ஹனுமானின் ரெண்டு கைகளிலும் விலங்கு பூட்டி விட்டாள். இனி எங்கே எப்படி பறந்து ஓடுவாய் என்று பார்க்கிறேன். ஹநுமானுக்கு நண்பர்கள் நிறைய வானரங்கள் அம்மா அஞ்சலைக்கு உதவி எல்லோரும் ஹநுமானைக் கட்டிப்போட்டார்கள்.
”ஹனுமா, நீ எங்கும் செல்லக்கூடாது. இங்கேயே வேங்கடாசலபதியை பார்த்துக்கொண்டு நிற்க வேண்டும். நகரக்கூடாது என்பதற்காகவே உனக்கு இந்த விலங்கு.”
வேறு ஒரு கதையும் சொல்கிறார்கள். ஹனுமனுக்கும் ஜாம்பவானைப்போலவே ஒரு சந்தேகம். ஸ்ரீனிவாசன் ஒருவேளை ராமன் இல்லையோ ?
ஆஞ்சநேயனின் சந்தேகத்தை புரிந்து கொண்ட ஸ்ரீனிவாச பெருமாள், ராமனாக காட்சி அளித்ததும் மிகவும் திருப்தி அடைந்த ஹனுமான் தனது இரு கரங்களையும் கூப்பிக்கொண்டு நின்றார். எனக்கு இனி இத்தகைய சந்தேகம் வரக்கூடாது எனவே என் கைகளைச் சேர்ந்தே இருக்கட்டும் என்பதற்காக இருகைகளையும் சேர்த்து விலங்கிட்டுக்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
”பேடி” என்றால் காப்பு, விலங்கு என்று தெலுங்கில் அர்த்தமாம். இந்த ஹனுமான் கோவில் திருப்பதி வெங்கடாசலபதி ஆலய பிரதான வாசலைப் பார்த்தவாறு இருக்கிறது..
வைணவ சம்பிரதாயத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் இரு கை கூப்பி சரணாகதி அடைவதாக காட்டப்பட்டுள்ளது. ஆலயம் புஷ்கரணி கரையில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஞாயிறும் விசேஷ அபிஷேகம், அலங்காரம், பூஜை ஆஞ்சநேயருக்கு நடக்கிறது. ஹனுமத் ஜெயந்தி சமயத்தில் கேட்கவே வேண்டாம். கோலாகலம்.
திருப்பதி திருமலை ஏழுமலை என்று புகழப்படும் இந்த க்ஷேத்ரத்தின் ஏழு மலைகளில் ஒன்று அஞ்சனாத்ரி. இங்கு ஹனுமான் பிறந்ததாக ஒரு ஐதீகம். சிறு பிள்ளையாக இருந்தபோது ஹனுமான் செய்த விஷமங்கள் சொல்லி மாளாது. மலை பூரா சுற்றித் திரிந்து, அங்கு அமைதியாக தவம் செய்யும் ரிஷிகளையும் முனிவர்களையும் தொந்தரவு செய்வது பொறுக்க முடியாமல் அவனது ரெண்டு கைகளையும் விலங்கு போன்ற இரும்பு சங்கிலியால் அவன் தாய் அஞ்சனா தேவி கட்டிப் போட்டாள் என்றும் ஒரு விவரம் உண்டு.
ஆஞ்சநேயன் சிரஞ்சீவி. எனவே இன்றும் திருமலையில் வரும் அத்தனை பக்தர்களையும் பார்த்து ”எனது நாயகன் ராமனாகிய ஸ்ரீநிவாசனைப் பார்க்கவா வந்திருக்கிறீர்கள் சௌக்யமாக இருங்கள், சகல க்ஷேமங்களும் உங்களுக்கு உண்டாகட்டும்” என்று மனமார ஆஞ்சநேயர் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்த அற்புத ஹனுமானின் படத்தை தந்திருக்கிறேன். கலியுக வரதன் ஸ்ரீனிவாசன். அவனே ராமன். அவன் பிரதம பக்தன் ஆஞ்சநேயன். சர்வ மங்களமும் உண்டாக ஹநுமன் அருளட்டும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

