
திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
மூன்றாவது அறுபடை வீடு: 3. திருவாவினன்குடி (பழனி மலை) வரிகள் 126 முதல் 142 வரை.
முருகனின் அறுபடைவீடுகளில் மூன்றாவது பழனி மலை. மலையடிவாரத்தில் உள்ள ஸ்தலம் திருவாவினன் குடி. . சங்ககாலப் நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற சிறந்த முருக பக்தர்களால் பாடப்பட்ட ஸ்தலம் திருவாவினன்குடி . முருகன் இங்கே குழந்தை வேலாயுதஸ்வாமி. அகசித்தியர் இங்கே வந்து தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் கற்றதாக புராணம் சொல்கிறது. மேலே பழனி மலையில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலும் அடிவாரத்தில் திருவாவினன்குடி ரெண்டும் சேர்ந்து தான் அறுபடைவீடு. ஆறுமுகன் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கும் ஸ்தலம். பழனிமலை முருகன் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. ஆகவே மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
திருவாவினன்குடிக்கு அர்த்தம்: திரு: லக்ஷ்மி ஆ: பசு (காமதேனு) இனன்: சூரியன். கு: பூமாதேவி வி: அக்னி. இவர்கள் அனைவரும் இங்கே வந்து முருகனை வழிபட்டதால் இந்த ஸ்தலம் “திரு ஆ இனன் குடி” (திருவாவினன்குடி)என்று பெயர் பெற்றது.
நாரதர் ஒருநாள் ஒரு மாம்பழம் கொண்டுவந்து சிவனிடம் கொடுத்தார். முருகன் விநாயகர் ரெண்டுபேரில் யாருக்கு கொடுப்பது? உலகை முதலில் சுற்றி வருபவருக்கு பரிசு என அறிவித்தார் சிவன். மயில் மீதேறி உலகை சூத்ரா கிளம்பினார் முருகன். விநாயகரின் மூஞ்சூறு மயிலை ஜெயிக்க முடியாதே. கணேசன் ஒரு கணத்தில் முடிவெடுத்தார். அப்பா அம்மா ரெண்டுபேரையும் ஒரு சுற்று சுற்றி விட்டு எதிரே நின்றார். நீங்கள் தான் உலகம் . உலகத்தை நான் சுற்றி வந்தாயிற்று என்று சொல்லி பரிசைத்தட்டிக்கொண்டு போய் சாப்பிட்டுவிட்டார். உலகத்தை சுற்றிவந்த முருகன் தான் ஏமாற்றப்பட்டதாக பெற்றோர் மேல் கோபம் கொண்டு மயில் மேல் ஏறி பழனி வந்து கோவணாண்டியாக மலைமேல் நின்றுவிட்டார். அம்மா பார்வதி தேவி அப்பா பரமேஸ்வரன் இருவரும் முருகனைத் தொடர்ந்து இங்கே வந்து பால தண்டாயுதபாணியை சமாதானம் செய்கிறார்கள். “குழந்தை வேலாயுதா, எதற்கடா உனக்கு சாதாரண ஒரு மாம்பழம் கிடைக்கவில்லையே என்று கோபம், ” ஞானப்பழம் நீ தானே அப்பா” உனக்கு எதற்கு இன்னொரு சாதாரண மாம்பழம் என்றதால் இந்த மலை ”பழம் நீ” மலையாகியது. பிற்காலத்தில் பெரிய கோயில்கொண்டு பழனிமலையாகியது..
திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் 60 கி.மீ. தூரத்தில் இயற்கை எழில்கொஞ்சும் மலை. கடைச்சங்க நூல் அகநானூறு பழனியை பொதினி என்கிறது. எண்ணற்ற சித்தர்கள் இன்றும் வாழும் ஸ்தலம் பழனிமலை. பழனி மலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் சிவன், பார்வதி, கணபதி, முருகன், பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டி எல்லாமே சிற்பங்களாக காண்கிறது. மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்கு தெற்கே கைலாசநாதர் ஆலயம். பார்வதி பரமேஸ்வரர் முருகனை தொடர்ந்து வந்து இங்கே சமாதானம் செய்ததை ஞாபகப்படுத்தும்.
திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் உள்ள வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இங்கே ஸ்னானம் செய்து வணங்குவர். இந்த பொய்கையின் அருகிலேயிருந்து தான் காவடி எடுப்பார்கள்.
தல விருட்சம் நெல்லி மரமாகும்.
பழனி மலைக்கு எதிரே இடும்பன் மலை எனப்படும் சக்திகிரிஉள்ளது. .
ஆனந்தமயமான பழனி ஆண்டியை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.அதிகாலை முதல் ராத்திரி பூஜை முடியும் வரையில் சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடக்கும்.
சீரை தைஇய உ டுக்கையர் சீரொடு 126
வலம்புரி புரையும் வானரை முடியினர்127
மாசற இமைக்கும் உ ருவினர் மானின் 128
உ ரிவை தைஇய ஊன்கெடு மார்பின் 129
என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் (130)
பலவுடன் கழிந்த உ ண்டியர் இகலொடு 131
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும் 132
கற்றோர் அறியா அறவினர் கற்றோர்க்குத்133
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு 134
கடுஞ்சினங் கடிந்த காட்சியர் இடும்பை (135)
யாவதும் அறியா இயல்பினர் மேவரத் 136
துனியில் காட்சி முனிவர் முற்புகப் 137
புகைமுகந் தன்ன மாசில் தூவுடை 138
முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் 139
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் 141
மென்மொழி மேவலர், இன் நரம்பு உளர, 142.
பழனிமலை பிரதேசத்தில் அநேக ரிஷிகள், முனிவர்கள் மர உரி தரித்து வெள்ளி போல் வலம்புரி சங்கு போல் வவெள்ளை வெளேர் என்று பிரகாசிக்கும் நரைமுடி, ஜடாமுடியாக சிரத்தை வெண்மையான கிரீடம் போல் அலங்கரிக்க தூய்மையான உருவம் கொண்ட வர்களாக மான் தோலை போர்த்தி நோன்புகள் யாகங்கள் செய்யும், பலநாள் உபவாசம் வீரம் இருந்து உடல் இளைத்து தசைகள் குறுகி, மார்பில் எலும்புகள் கூடாக தோன்ற சதா முருகன் மேல் மனதை செலுத்தியவர்களாக சகல ஞானமும் அடைந்தவர்களாக உலவுகிறார்கள். நன்றாக கற்றவர்களும் பண்டிதர்களும் அறியாத இயல்பான ஞானத்தை உடைய முனிவர்கள் அவர்கள். ஐம்புலன்களை வென்று சினம் அடக்கியவர்களாக அந்த முனிவர்கள் அங்கே காணப்படுகிறார்கள். கடும் தவத்தை மேற்கொண்டு சித்தி பெற்றவர்கள். அப்படிப்பட்ட துறவிகள், முனிவர்கள் பழனிமலையில், திருவாவினன்குடியில் பால தண்டாயுத பாணிக்கு முன்னால் செல்கிறார்கள் என வர்ணிக்கிறார் நக்கீரர்.புகை சூழ்ந்த மேக மண்டலத்தில் அழுக்கு இல்லாத தூய உடையினையும், அரும்பு நிலையிலிருந்து மலர்ந்த பூக்களை உடைய மாலை சூழ்ந்த மார்பினையும், செவியால் இசையை அளந்து பண் உறுத்திய வார்க்கட்டினை உடைய யாழின் இசையால் பயின்ற நன்மையுடைய நெஞ்சால் எப்பொழுதும் மெல்லிய மொழியில் பேசும் இயல்புடையோருமாகிய வானவர்கள் , கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள் இனிய யாழின் நரம்பை மீட்டி முருகனைத் துதித்து இசை எழுப்புகிறார்கள் என்று முடிக்கிறார் இந்த வரிகளை.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

