
மனமெனும் குரங்கு. – நங்கநல்லூர் J K SIVAN
இன்று காலை பகவத் கீதை ஆறாவது அத்யாயம் ஆறாவது ஸ்லோகம் கண்ணில் பட்டது. ரசித்தேன்.
बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जित: | अनात्मनस्तु शत्रुत्वे वर्ते तात्मैव शत्रुवत् || 6 -6||
bandhur ātmātmanas tasya yenātmaivātmanā jitaḥ anātmanastu śhatrutve vartetātmaiva śhatru-vat
பந்துராத்மாத்மனஸ்தஸ்ய யேனாத்மைவாத்மனா ஜிதஃ | அனாத்மனஸ்து ஶத்ருத்வே வர்தேதாத்மைவ ஶத்ருவத் || 6 |
என்ன அர்த்தம். ”மனது நம் வசப்பட்டால், அதன் போக்கில் போகாமல் அதை வெற்றி கண்டால், ஆஹா, அது ஒரு சிறந்த நண்பன். உற்ற உறவினன்.ஆத்ம சிநேகிதன். அதை வளரவிட்டு, அதன் போக்கில் அது நம்மை ஆக்கிரமித்துவிட்டால், அவ்வளவு தான். அதைப் போல் துன்பம் தரும் விரோதி, துரோகி வேறு எதுவும் கிடையாது” எவ்வளவு சுருக்கமாக கிருஷ்ணன் சொல்லிவிட்டான். படித்து விட்டு வேர்க்கடலை தின்று விட்டு பேப்பரில் கொலை கொள்ளை கற்பழிப்பு லஞ்சம் செயதி படிக்க ஓடுகிறோம். கொஞ்சம் யோசித்த பொது எனக்கு புரிபட்ட அனுபவம் இது. அடிக்கடி கீதை படித்து யோசிக்க வேண்டும்.
ஒருநாள் பாதம் ஹல்வா எப்படி பண்ணவேண்டும் என்று ஒரு பெண்மணி யூட்யூபில் ஆறு நிமிஷம் செய்முறை விளக்கினாள் .சூடான பாதம் ஹல்வா படமும் காட்டிய போது நாக்கில் உமிழ்நீர் சுரந்தது. செய்வது ரொம்ப சுலபம் போலவும் தோன்றியது. யாரும் வீட்டில் இல்லாதபோது எனது ராஜ்ஜியம் என்பதால் செய்யலாமே என்று துணிந்தவுடன் தான் அதிலுள்ள கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது. சமையல் அறையில், வாணலியோ தகுந்த பாத்திரமோ தேடுவதற்கு கால் மணிக்கு மேல் ஆகி, உபகரணங்கள், நெய் , பாதம் கொட்டைகள், அரைக்க மிக்ஸி எல்லாம் தயார் செய்யும்போது ‘அடேடே சர்க்கரை டப்பா எங்கே” என்று அலைந்து தேடி மேலே உயரே ஒரு மர அலமாரியில் இருக்குமோ என்று ED அதிகாரிகள் போல் ஆராய்ந்தேன்.உயரம் எட்டவில்லை என்பதால் மேலே மாடிக்கு படுக்கை அறைகள் என்று அங்கும் இங்கும் தேடி ஒரு முக்காலியை கொண்டுவந்து போட்டு அதன் மேல் ஏறி எம்பி சர்க்கரை டப்பாவை தேடித் தொடும்போது எம்பினேன். முக்காலி காலை வாரி விட்டு கீழே விழுந்தத்தில் முகம் கிச்சன் மேடையில் க்ரானைட் கல்லில் இடித்து வாயில் கடுமையான வலி யை கிளப்பி விட்டது.
ஆஹா என் மேல் வரிசை முன்பல் ஒன்று என்னை விட்டு பிரிந்து விட்டதோ . அடாடா தாங்கமுடியவில்லையே வலி.
ஆகவே பாதம் ஹல்வா செய்முறை சரிப்படவில்லை. எல்லாவற்றையும் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வாயை அலம்பிவிட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக் கொண்டு பகவத் கீதை எடுத்து ”ஆசையை எப்படி விடுவது?” என்று கண்டுபிடிக்க படிக்க தோன்றியது. பல்வலிக்கு டாக்டரிடம் போகவில்லை. நல்லவேளை முன்பல் வலித்ததே தவிர விழவில்லை என்னை விட்டு போக ஆடவில்லை, கீழ் முனை உடைந்ததோடு சரி.
ஆசை என்பது மனதை ஆட்கொண்டால் தான் இந்தமாதிரி விபரீதங்கள் நேர்கிறது. மனதை எப்படி வெல்வது. அதை முதலில் கட்டுக்குள் கொண்டுவருவது எப்படி? என்று கிருஷ்ணன் 5000 வருஷங்கள் முன்பே அழகாக சொல்லி இருக்கிறார். கிருஷ்ணன் எப்போதுமே ஒரு சிறந்த நம்பகமான நல்ல நண்பன். சமயத்துக்கு ‘உடுக்கை இழந்தவன் கை’ போல் உதவுபவன். மனம் அடக்கப்படாவிட்டால் ஒடுக்கப்படாவிட்டால் அதைப்போல் ஒரு முழுமையான துரோகி உலகிலேயே இல்லை.
மனம் வசப்பட்டு விட்டால், வெற்றி கொள்ளப்பட்டால், பேதம் இருக்காது, வித்யாசம் தெரியாது. அருகில் எதிரில் இருப்பவர் எல்லோருமே சிறந்த நண்பர்களாக தெரிவார்கள். நமக்கு உதவுபவர்களாக காட்சி அளிப்பார்கள். நாமும் அவர்களுக்கு அப்படி தான் என்று சொல்லவே தேவையில்லை.
மனிதனின் பயங்கர விரோதிகள் யார் என்றால் பேராசை, கோபம், காமம், பொறாமை, மாயை போன்றவை. அவற்றில் சிக்கியவனுக்கு விடியல் கிடையாது. விடியல் தரேன் என்று யாராவது சொன்னால் அங்கிருந்து ஓடிவிடுவது நல்லது. புத்திசாலித்தனம். எலிக்கு மசால் வடை அப்படித்தான் பொறியில் மயக்கும். இதில் என்ன ஒரு பெரிய ஆபத்து தெரியுமா? மேலே சொன்ன விரோதிகள் எங்கோ தூரத்தில் இருப்பவர்கள் இல்லை. நமக்குளேயே நாம் சாப்பிடுவதை ஜீரணித்து கொழுத்து நமக்குள்ளே வளர்பவர்கள். அவர்கள் எவருக்காவது நல்லது செய்ததாக இதுவரை தெரியவில்லை. வாழ்வை நரகமாக்குபவர்கள். வாழும் ஒவ்வொரு கணத்தையும் ஏதாவது ஒரு கவலை, மன அழுத்தம், சந்தேகம், பயம், வெறுப்பு, கலக்கம், என்று ஏதாவது ஒரு உணர்ச்சியில் நிம்மதி இழக்கச் செய்பவர்கள்.
கொரோனாவைக் காட்டிலும் அதைப் பற்றிய பயமே பாதி பேரை கொன்று விட்டதே, நினைவிருக்கிறதா?. எதிர்மறை எண்ணங்கள் வியாதிக் கிருமிகளை விட கொடியது. இந்த மனது இருக்கிறதே அது ஒரு இருமுனை கத்தி. நல்லதும் செய்யும் கெட்டதும் விளைவிக்கும். நல்லோர் நட்பில், சத் சங்கத்தில் நல்ல எண்ணங்கள் மனதில் நிறைந்தால் நாம் பாக்யசாலிகள்.அப்படி உதவக்கூடிய மனதை கொஞ்சம் தடவிக் கொடுத்து, நல்ல பையா என்று கொஞ்சி, நல்வழிப் படுத்தி வளர்த்தால் அது நல்ல நாய்க்குட்டி. இல்லாவிட்டால் வெறிநாய். மனிதன் என்பவன் விதி வசப்பட்டவன் இல்லை. மனச்சிறையில் வாடும் கைதி.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



