சாணக்ய நீதி ஸாஸ்த்ரம்

@followers சாணக்ய நீதி ஸாஸ்த்ரம் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன்

அத்யாயம் 1 ஸ்லோகம் 6-​17

நான் உலக சரித்ரம் ஆர்வமாக படித்திருக்கிறேன். அதிலும் பாரத தேசத்தின் சரித்திரம் ரொம்ப பிடிக்கும்.
இருந்தாலும் நான் இங்கே, சரித்திரம் பற்றி எழுதப் போவதில்லை. அது எங்கோ கொண்டுபோய் விட்டு விடும். அநேகர் விரும்ப மாட்டீர்கள்.

ரெண்டாயிரம் வருஷம் முன்பு வாழ்ந்த ஒரு அறிவாளி கௌடில்யன் எனும் சாணக்கியன். அவனைப் போல் இன்னொருவனை இன்னும் பாரத தேசம் காணவில்லை. தலை சிறந்த தத்துவ வாதியா, பொருளாதார நிபுணனா, நீதிபதியா, சாஸ்திரங்கள் கற்ற வேத ப்ராமணனா, ராஜகுருவா…. யார் ?? கிங் மேக்கர் KING MAKER என்கிறோமே கௌடில்யன் உண்மையில் EMPEROR MAKER விஷ்ணு குப்தன், கௌடில்யன் என்ற அவனது இயற் பெயர்கள் மறைந்து சாணக்கியன் என்று உலகமுழுதும் அறியப்படுபவன். எது எப்படி இருந்தாலும் சாணக்யன் சொன்னதாக சில வார்த்தைகள் நமக்கு கிடைத்து அதைப் படிக்கும்போது அவன் எவ்வளவு தீர்க்க சிந்தனையாளன் என்பது புலப்படுகிறது. அவனது சாணக்ய நீதியைப் படிக்கும்போது தான் அவனது தொலை நோக்கு, பக்தி, சமூக சிந்தனை, பேரன்பு, தியாகம், நேர்மை, நிர்வாக ஆற்றல், ராஜரீகம் எல்லாம் புரிபடுகிறது.

அவனுடைய அற்புத நீதி ஸாஸ்த்ரத்தில் ஸ்லோகங்கள் 6 முதல் 17 வரை பார்ப்போம்.
Āpadarthe dhanaṃ rakṣed dārān rakṣed dhanair api,ātmānaṃ satataṃ rakṣed dārair api dhanair api.
ஆபதர்த்தே தனம் ரக்ஷேத், தாரான் ரக்ஷேத் தனைரபி, ஆத்மானம் ஸததம் ரக்ஷேத், தாரைரபி தனைரபி.

ஆபத்துக் காலத்திற்காகச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். செல்வத்தைச் செலவிட்டாவது குடும்பத்தினரைப் பாதுகாக்க வேண்டும். குடும்பத்தையும் செல்வத்தையும் விடத் தன் உயிரையும் பாதுகாப்பையும் எப்போதும் முதன்மையாகக் கருத வேண்டும். அவசரகாலச் சேமிப்பு, குடும்பப் பாதுகாப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

7. आपदर्थं धनं रक्षेच्छ्रीमन्तः कुत आपदः । कदाचिच्चलते लक्ष्मीः सञ्चितोऽपि विनश्यति ॥ ७ ॥
Āpadarthaṃ dhanaṃ rakṣec chrīmataḥ kuta āpadaḥ,kadācic calate lakṣmīḥ sañcito’pi vinaśyati.
ஆபதர்த்தம் தனம் ரக்ஷேத், ஶ்ரீமந்தஃ குத ஆபதஃ,கதாசிச்சலதே லக்ஷ்மீஃ ஸஞ்சிதோபி விநஶ்யதி.

எதிர்காலத்தில் எதிர்பாராத நேரத்தில் ஏதோ ஒரு ஆபத்து வந்தால் அதை எதிர்கொள்ள, செல்வத்தைச் சேமிக்க வேண்டும். செல்வந்தர்களுக்கும் எதிர்பாராத துன்பங்கள் ஏற்படலாம். செல்வம் எப்போதும் நிலையாக இருப்பதில்லை; சேமித்த செல்வம்கூட சில நேரங்களில் அழிந்துவிடலாம்.வருமானம் நன்றாக இருக்கும்போதே சேமிப்பை உருவாக்க வேண்டும். எதிர்காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எண்ணக்கூடாது.

8. यस्मिन्देशे न सम्मानो न वृत्तिर्न च बान्धवाः । न च विद्यागमोऽप्यस्ति वासं तत्र न कारयेत् ॥ ८ ॥
Yasmin deśe na sammāno na vṛttir na ca bāndhavāḥ,na ca vidyāgamo’py asti vāsaṃ tatra na kārayet.
யஸ்மின் தேஶே ந ஸம்மானோ ந வ்ருத்திர்ந ச பாந்தவாஃ,ந ச வித்யாகமோப்யஸ்தி வாஸம் தத்ர ந காரயேத்.

மரியாதையும் வாழ்வாதாரமும் உறவினர்களின் ஆதரவும் கல்வி அல்லது அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் இல்லாத இடத்தில் ஒருவர் நிரந்தரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது வேலைவாய்ப்பு, சமூக ஆதரவு, கல்வி, தனிமனித வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

9. धनिकः श्रोत्रियो राजा नदी वैद्यस्तु पञ्चमः । पञ्च यत्र न विद्यन्ते न तत्र दिवसं वसेत् ॥ ९ ॥
Dhanikaḥ śrotriyo rājā nadī vaidyas tu pañcamaḥ,pañca yatra na vidyante na tatra divasaṃ vaset.
தனிகஃ ஶ்ரோத்ரியோ ராஜா நதீ வைத்யஸ்து பஞ்சமஃ, பஞ்ச யத்ர ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்.

செல்வ வளம் கொண்டவர்கள், வேதக் கல்வியில் தேர்ந்தவர்கள், ஆட்சியாளர், நதி அல்லது நீர்வளம், மருத்துவர் ஆகிய ஐந்து வசதிகளும் இல்லாத இடத்தில் ஒருவர் வாழ்வதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.பழங்காலச் சமூகத்தில் பொருளாதார வளம், கல்வி, நிர்வாகம், நீர், மருத்துவம் ஆகியவை ஒரு குடியிருப்பின் அடிப்படைத் தேவைகளாகக் கருதப்பட்டன.

10. लोकयात्रा भयं लज्जा दाक्षिण्यं त्यागशीलता । पञ्च यत्र न विद्यन्ते न कुर्यात्तत्र संस्थितिम् ॥ १० ॥
Lokayātrā bhayaṃ lajjā dākṣiṇyaṃ tyāgaśīlatā, pañca yatra na vidyante na kuryāt tatra saṃsthitim.
லோகயாத்ரா பயம் லஜ்ஜா தாக்ஷிண்யம் த்யாகஶீலதா, பஞ்ச யத்ர ந வித்யந்தே ந குர்யாத் தத்ர ஸம்ஸ்திதிம்.

சமூக வாழ்க்கையைச் சீராக நடத்தும் நடைமுறை அறிவு, தவறுகளைப் பற்றிய அச்சம், நாணம், பிறரிடம் கனிவுடன் நடந்துகொள்ளுதல், தியாக மனப்பான்மை ஆகியவை இல்லாத இடத்தில் ஒருவர் நிரந்தரமாகத் தங்குவதைத் தவிர்க்க வேண்டும். நல்ல சமூகம் என்பது பொருளாதார வசதிகளால் மட்டும் உருவாவதில்லை. மனிதர்களின் பண்புகளும் சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்.

ஸ்லோகம் 11 — மனிதர்களின் உண்மையான குணத்தை அறிதல்
जानियात्प्रेषणे भृत्यान्बान्धवान्व्यसनागमे । मित्रं चापत्तिकालेषु भार्यां च विभवक्षये ॥ ११ ॥
Jānīyāt preṣaṇe bhṛtyān bāndhavān vyasanāgame,mitraṃ cāpattikāleṣu bhāryāṃ ca vibhavakṣaye.
ஜாநீயாத் ப்ரேஷணே ப்ருத்யான் பாந்தவான் வ்யஸனாகமே,மித்ரம் சாபத்திகாலேஷு பார்யாம் ச விபவக்ஷயே.

ஒரு பணியாளரிடம் வேலையை ஓப்படைக்கும்போது ​ அவரது திறமையை ​ அறிய முடியும். துன்பம் வரும்போது​ தான் உறவினர்களின் உண்மையான ​ குணம் ​தெரியவரும். ஆபத்து காலத்தில் நண்பனின் குணமும் செல்வம் குறையும்போது வாழ்க்கைத்துணையின் ஆதரவும் தெரியவரும்​ என்கிறான் சாணக்யன் . மகிழ்ச்சியான காலங்களில் பலர் நம்முடன் இருப்பார்கள். கடினமான காலங்களில் யார் உண்மையாக ஆதரிக்கிறார்கள் என்பதே உறவுகளின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

आतुरे व्यसने प्राप्ते दुर्भिक्षे शत्रुसङ्कटे । राजद्वारे श्मशाने च यस्तिष्ठति स बान्धवः ॥ १२ ॥
Āture vyasane prāpte durbhikṣe śatrusaṅkaṭe,rājadvāre śmaśāne ca yas tiṣṭhati sa bāndhavaḥ.
ஆதுரே வ்யஸனே ப்ராப்தே துர்பிக்ஷே ஶத்ருஸங்கடே,ராஜத்வாரே ஶ்மஶானே ச யஸ்திஷ்டதி ஸ பாந்தவஃ.

நோய், துன்பம், பஞ்சம், பகைவரால் ஏற்படும் ஆபத்து, அரசாங்கம் தொடர்பான நெருக்கடி, இறுதிச்சடங்கு போன்ற கடினமான நேரங்களில் நம்முடன் துணையாக நிற்பவரே உண்மையான உறவினர் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.
உண்மையான அன்பு என்பது மகிழ்ச்சியைப் பகிர்வதில் மட்டுமல்ல; துன்பத்திலும் துணை நிற்பதி​லும் தான் உள்ளது.

यो ध्रुवाणि परित्यज्य अध्रुवं परिषेवते । ध्रुवाणि तस्य नश्यन्ति अध्रुवं नष्टमेव हि ॥ १३ ॥
​Yo dhruvāṇi parityajya adhruvaṃ pariṣevate,​ dhruvāṇi tasya naśyanti adhruvaṃ naṣṭam eva hi.
யோ த்ருவாணி பரித்யஜ்ய அத்ருவம் பரிஷேவதே,​ த்ருவாணி தஸ்ய நஶ்யந்தி அத்ருவம் நஷ்டமேவ ஹி.

​சாஸ்வதமானதை கைவிட்டு நிலையற்றவற்றை​த் தேடிச் செல்பவன் , ​ஏற்கனவே தன்னிடமிருக்கும் சாஸ்வதமானதையும் இழந்துவிடுகிறான்; அவன் நாடிய நிலையற்றதும் இறுதியில் கிடைக்காமல் போகலாம்.​ இது தான் வடிகட்டின முட்டாள்தனம் என்பது.

वरयेत्कुलजां प्राज्ञो विरूपामपि कन्यकाम् । रूपशीलां न नीचस्य विवाहः सदृशे कुले ॥ १४ ॥
Varayet kulajāṃ prājño virūpām api kanyakām,​ rūpaśīlāṃ na nīcasya vivāhaḥ sadṛśe kule.
வரயேத் குலஜாம் ப்ராஜ்ஞோ விரூபாமபி கன்யகாம்,​ ரூபஶீலாம் ந நீசஸ்ய விவாஹஃ ஸத்ருஶே குலே.

​கல்யாணம் பேசும்போது, முடிவு செய்யும் போது மணப்பெண் மாப்பிள்ளை இருவரின் வெளிப்புற அழகை மட்டும் பார்க்காமல், குடும்பப் பண்பாடு, குணநலன், ஒழுக்கம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்​. அநேக குடும்பங்கள் பணத்தை மட்டும் பார்த்து வலையில் சிக்கிக்கொண்டு நிம்மதி, வாழ்க்கை, பணம் எல்லாவற்றையும் இழப்பதை இப்போது பார்க்கிறோம். குணம் தவிர, பரஸ்பர மரியாதை, மனப்பொருத்தம், மதிப்பீடுகள் மற்றும் சம்மதம் ஆகியவை ​ இக்காலத்தில் முக்கியமானவை.

नदीनां शस्त्रपाणीनां नखिनां शृङ्गिणां तथा । विश्वासो नैव कर्तव्यः स्त्रीषु राजकुलेषु च ॥ १५ ॥
Nadīnāṃ śastrapāṇīnāṃ nakhināṃ śṛṅgiṇāṃ tathā,viśvāso naiva kartavyaḥ strīṣu rājakuleṣu ca.
நதீநாம் ஶஸ்த்ரபாணீநாம் நகிநாம் ஶ்ருங்கிணாம் ததா,​ விஶ்வாஸோ நைவ கர்தவ்யஃ ஸ்த்ரீஷு ராஜகுலேஷு ச.

பெருக்கெடுக்கும் நதிகள், ஆயுதம் ஏந்தியவர்கள், கூரிய நகங்களைக் கொண்ட விலங்குகள், கொம்புள்ள விலங்குகள் போன்றவற்றின் ஆபத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்று ​ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு இந்த ஸ்லோகத்தில் சாணக்யன் சொல்கிறான். இக்கலிகாலத்தில் ஒருவரின் பாலினத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், அவருடைய நடத்தை, நம்பகத்தன்மை, சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் விவேகத்துடன் முடிவெடுக்க வேண்டும்.

विषादप्यमृतं ग्राह्यममেধ्यादपि काञ्चनम् । अमित्रादपि सद्वृत्तं बालादपि सुभाषितम् ॥ १६ ॥
Viṣād apy amṛtaṃ grāhyam amedhyād api kāñcanam,​ amitrād api sadvṛttaṃ bālād api subhāṣitam.
விஷாதப்யம்ருதம் க்ராஹ்யம், அமேத்யாதபி காஞ்சனம்,​ அமித்ராதபி ஸத்வ்ருத்தம், பாலாதபி ஸுபாஷிதம்.

விஷத்திலிருந்தும் அமுதத்தைப் பெற முடிந்தால் அதைப் பெற்றுக்கொள்ளலாம்; அசுத்தமான இடத்தில் இருந்தாலும் தங்கத்தை எடுத்துக்கொள்ளலாம். பகைவரிடமிருந்தும் நல்லொழுக்கத்தைக் கற்றுக்கொள்ளலாம்; குழந்தையிடமிருந்தும் நல்ல கருத்தைக் கற்றுக்கொள்ளலாம்.​ நல்ல விஷயங்களைப் பெற, இடம், குலம், உறவு, படிப்பு , பணம், வயது தடங்கல் இல்லை.
இத்துடன் அத்யாயம் 1 முடிகிறது. தொடர்வோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;