
ஐத்ரேய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN
ஐத்ரேய மஹரிஷி அளித்த ஐத்ரேய உபநிஷதுக்கு ஆதாரம் ரிக் வேதத்தில் ஐத்ரேய ஆரண்யகம். ஐந்து காண்டங்களாக பகுக்கப்பட்டு, இதராவின் மகன் ‘மஹிதாஸ ஐத்ரேய உபநிஷத்’ என்று அறியப்படுவது. இந்த ரிஷி, எப்படி இந்த பிரபஞ்சம் உருவானது?, உயிரினங்கள் எப்படி படைக்கப்பட்டன? என்று ரொம்ப யோசித்து எழுதிய உபநிஷத் இது.
எல்லாம் பரமாத்மாவான பிரம்மத்தின் உருவமே, ஆத்மாவின் பலவித வெளிப்பாடு தான் பிரபஞ்சம். ஆத்மா ஒன்றே அழிவற்ற சாஸ்வதம். மற்ற வெளிப்பாடுகள் மாறுபவை. சகல ஜீவன்களிலும் உள்ள ஆத்மா பரமாத்மாவோடு ஒன்றானது.
”வாக்கு எண்ணத்தில் உருவானது. எண்ணம் வாக்கில் வெளிப்படுவது. ஹே ப்ரம்மமே உன்னை நான் அறியச்செய். என் மனமும் வாக்கும் மறைநூல்கள் சொல்லும் சத்தியத்தை நான் உணரச் செய்யட்டும். அப்படி நான் தேடிய ஞானம் என்னை விட்டு அகலாதிருக்கட்டும் .அதை இரவும் பகலும் நான் சித்தித்து தெளிவு பெறவேண்டும். நான் உண்மை பேசவேண்டும். ப்ரம்மம் என்னை காப்பாற்றட்டும்.” என்று தியானம் செய்த பின் உபநிஷதத்தை அளிக்கிறார்.
பிரளயத்திற்கு பிறகு மீண்டும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எங்கும் ஆத்மாவே நிறைந்திருந்தது. வேறெதுவும் இல்லை. பரமாத்மாவான பிரம்மம் யோசித்தது. இந்த ப்ரபஞ்சத்தை ஆத்மாவிலிருந்து உருவாக்கியது. அது உருவங்கள் எடுக்க, ஜீவிக்க, வளர, வாழ அனுபவிக்க வகை செய்தது. உயிரினங்கள் வாழ உலகை வசதிகளோடு படைத்தது. பஞ்ச பூதங்கள் அவசியம் என்று உயிரின ஜீவிதத்துக்காக படைத்தது. தோன்றியது மறைந்து மீண்டும் உருவெடுக்க வழி கோலியது. சூரியன், ,நக்ஷத்திரங்கள், மேகம், மின்னல், மழை, காற்று, ஆகாசம், பூமி எல்லாம் அளித்தது. இந்த உயிரினங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஒரு புருஷனை தோற்றுவித்தது. அந்த உருண்டை எதிரே இருக்கிறது. அதற்கு உருவம் கொடுக்கவேண்டுமே ?கைகால்கள், உடம்பு, தலை என்று படைத்து தலையில் சில துவாரங்கள் உண்டாக்கியது. தலையில் உச்சிக்குழியில் ஆத்மா புகுந்தது. இப்போதும் கூட பிறந்த குழந்தைகளின் உச்சி மண்டையில் ஒரு மிருதுவான சிறு பகுதி மூச்சு விடும்போது அசைந்து கொண்டிருக்கும். ரொம்ப ஜாக்கிரதையாக பிறந்த குழந்தையை பாதுகாத்து இரவும் பகலும் கண் விழித்த்து அதை வளர்க்கிறாள்.ப்ரம்மம் தலையில் மற்றும் சில துளைகளை அமைத்தது.
வாய் என்று துளை. அது அந்த உடம்பு வளர வாழ உணவை உண்ண அதன் தேவைகளை, வெளிப்படுத்த பேச்சு, தந்தது. மூக்குஎன்று துவாரம் அமைத்து அதன் வழியாக அந்த உருவம் அசைய, தானாகவே இயங்க அதற்குள் பிராணன் எனும் வாயுவை புகுத்தி அதை உள்ளே இழுக்க, வெளியே அனுப்ப வகை செய்தது. மணங்களை உணரவும் அதற்கு வகை செய்தது. கண்கள் என்று இரு துவாரங்களை படைத்து அதில் பார்வை ஒளி அமைத்தது. சூரியனிலிருந்து அதற்கு பார்க்கும் சக்தி தந்தது. காதுகள் என்றுஇரு துவாரங்களை அமைத்து சப்தம் கேட்க, ஒலியை உணர வைத்தது. அந்த உருவத்துக்கு தலையிலிருந்து கால் வரை ஒரு போர்வை போல் தோல் எனும் சருமத்தை போட்டு முழுக்கவும் மூடியது. ஆங்காங்கே சருமத்தில் முடி அளித்து உடலுக்கு அதன் உஷ்ணத்தை சீராக பராமரிக்க வைத்தது. தலைக்குள் சில அற்புதமான அவயவங்களை வைத்து எண்ணங்கள், புத்தி, என்ற மூளையை வைத்து, அவற்றின் செயல்பாடுகள்,உடலின் அங்கங்கள் சரிவர அதனதன் செயல்பாட்டில் ஈடுபட ஒரு அதிகாரியாக செய்தது. மனித மனம் செயல் பட ஆரம்பித்ததும் ப்ரம்மம் அதன் செயல்பாட்டை குழந்தைகள் விளையாடுவதை தாய் பார்ப்பது போல் சாக்ஷி யாக பார்த்துக்கொள்ள ஆரம்பித்தது. ஐந்து வித வாயுக்களை உடலில் பரவச்செயது, உடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
உயிரூட்ட சக்தி, ஜீவரஸம் , சத்தினை உடலில் புகுத்தி ஆண் பெண் என இரு பாலாராக அவை உயிர் பெற்று வளர்ந்து மேல் மேல் உயிர்கள் பிறக்க, பெருக வழி செய்தது.
அதன் பிறகு ஜீவன் தானே உலகில் நடமாடி, மற்ற ஜீவன்களோடு இணைந்து , எதிர்த்து, எப்படியெல்லாமோ வாழ்ந்து வர ஆரம்பித்தது. தனது சுக துக்கங்களை தானே தேடிக்கொண்டது. சம்சார சாகரத்தில் உழன்று கரை ஏறமுடியாமல் தவிக்கிறது. பசி, தாகம்,உணர்ந்து தனது தேவைகளை எப்படியெல்லாமோ பூர்த்தி செயது கொள்கிறது. படைத்தவனை சிலது நினைக்கிறது, பலது மறக்கிறது. அவன் கிடையவே கிடையாதுஎன்கிறது. புத்தியை கொடுத்தகவனை விட தான் புத்திசாலி என்ற அகம்பாவம் அதை அலைக்கழிக்கிறது. எல்லாமே விளையாட்டாக பார்த்துக்கொண்டிருக்கிறார் அலகிலா விளையாட்டுடையார் அவர். பேச்சை, மூச்சை கட்டுப்பாட்டில் வைத்து பிரம்மத்தை உணர்ந்தவன் போற்றப்படுகிறான். அந்த ப்ரம்மம் அவனை நேசிக்கிறது. காக்கிறது. இதெல்லாம் நமக்கு அறிவுறுத்த்தும் ஐத்ரேய மகரிஷி கடைசியில் ஒரு மஹாவாக்யத்தோடு இதை நிறைவு செயகிறார்.
பிரஞ்ஞானம் ப்ரம்மம். நீ தாண்டா அந்த உன்னை படைத்த ப்ரம்மம். அதை நினைவில் எப்போதும் மறக்காமல் உணர்வாயாக. அதுவே நீ. நீயே அது.
இனி உபநிஷதத்துக்குள் செல்வோம். ரொம்ப நீளமாக போகிறதால் உபநிஷதத்தை அடுத்த பதிவாக பிரித்து அளிக்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



