
@followers அப்பய்ய தீக்ஷிதருக்கு கல்யாணம். – நங்கநல்லூர் J K SIVAN
அப்பய்ய தீக்ஷிதரின் முன்னோர்கள் சிவபக்தர்கள். ஞானிகள், மெத்த படித்த பண்டிதர்கள். சாஸ்த்ரங்கள், ஸ்ம்ரிதிகள் அனைத்திலும் வல்லவர்கள். அவருடைய கொள்ளு தாத்தா ஸ்ரீ அச்சன் தீக்ஷிதர் விஜய நகர சாம்ராஜ்ய அரண்மனை வித்வானாக கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்டவர். தோதாம்பா என்கிற வைஷ்ணவ இளம் பெண்ணை யாரோ ஒரு வயதானவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகள் நடந்தபோது அச்சன் தீக்ஷிதரை அணுகி உதவி கேட்ட போது அந்த பெண்ணின் சம்மதத்தோடு தானே அவளை மனைவியாக ஏற்று வாழ்வு கொடுத்த வர். அவர்களுக்கு பிறந்தவர் தான் ரங்கராஜத்வாரி.
ரங்கராஜத்வாரிக்கு புத்ர பாக்யம் வெகுகாலம் இன்றி அவர் நடராஜாவை வேண்டிக்கொண்டு ஆறு வருஷங்கள் தவம் இருந்தார். சிதம்பர நடராஜர் அருளால் அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் விநாயக சுப்ரமணிய சர்மா.
”அப்பையா” என்று செல்லமாக அப்படி அழைக்கப் பட்டவர் தான் நமது அப்பய்ய தீக்ஷிதர்.
1554ல் வடஆற்காடு ஆரணி என்ற ஊருக்கு அருகே உள்ள அடையபலம் எனும் கிராமத்தில் தான் அப்பய்ய தீக்ஷிதர் பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரன். பெயர் அச்சன் தீக்ஷிதர், ( பாலமடை நீலகண்ட தீக்ஷிதரின் தாத்தா. மதுரை திருமலை நாயக்கரின் மந்திரி) அப்பய்ய தீக்ஷிதரின் சகோதரி ஞானாம்பிகா.
அப்பய்ய தீக்ஷிதரின் அப்பா, ரங்கராஜத்வாரி வேலூர் சிற்றசர் சின்ன பொம்ம நாயக்கரின் சமஸ்தானத் தில் வித்வானாக ஆதரிக்கப்பட்டவர். அப்பாவிடமே பாடம் பயின்ற அப்பய்ய தீக்ஷிதர் பிறகு ருரு ராம கவி என்பவரிடம் வேத வேதாந்த சாஸ்திரங்கள் பயின்றார். தெய்வீக அருள் இருந்ததால் சிறு வயதிலேயே பதினான்கு கலைஞானங்களில் நிபுணர்.
தந்தையின் மறைவிற்கு பிறகு சின்னபொம்ம நாயக்கர் அப்பைய தீக்ஷிதரையும் அவர் சகோதரர் அச்சன் தீக்ஷிதரையும் சமஸ்தான வித்வான்களாக நியமித்தார்.
அக்காலத்தில் இருந்த ஸ்ரீனிவாச தாத்தாச்சாரி எள்கிற திவானுக்கு சிவபக்தர்களை பிடிக்காது. சகலகலா வல்லுனரான அப்பய்ய தீக்ஷிதர் சிவலீலைகளையும் ,சிவ மஹாத்மியத்தையும் பற்றி எழுதியது பிடிக்குமா தாத்தாச்சாரிக்கு?
அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யம் எங்கும் பரவியது. தஞ்சாவூர், காளஹஸ்தி, திருப்பதி ராஜாக்கள் அவரை புகழ்ந்து வரவேற்றனர்.
ஏற்கனவே ரத்னகேட தீக்ஷிதர் என்பவரைப் பற்றி சொல்லி இருக்கிறேனே. அவர் காஞ்சி காமாக்ஷி உபாசகர்.
சோழ ராஜா அரண்மனை வித்வான். அப்பய்ய தீக்ஷிதரைப் பற்றி கேள்விப்பட்டவுடன் அவரோடு வாதம் செய்து வென்று தனது பெருமையை நிலை நாட்டவேண்டும் என்ற முடிவெடுத்தார். நேராக காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு சென்றார்.
அவளை வழிபட்டு தியானம் செய்தார்
அவர் அம்பாளோடு நேருக்கு நேராக பேசும் சக்தி கொண்டவர்.
அம்பாள் ப்ரத்யக்ஷமானாள் . அவளை சிரமேற் கரம் குவித்து வேண்டினார்.
”அம்மா காமாக்ஷி, நீ எனக்கு வரம் கொடு”
”பக்தா, உனக்கு என்ன வேண்டும் கேள்?”
”காமாக்ஷி தாயே, நீ எனக்கு வாக் சக்தி கொடு. உன் சக்தியால் நான் வாதத்தில் அப்பய்ய தீக்ஷிதரை வெல்ல வேண்டும்”
”பக்தா, அப்பய்ய தீக்ஷிதர் சாமான்யர் அல்லர். எனது நாதன் பரமேஸ்வரனின் அவதாரம். அவரோடு மோது வதை தவிர்த்துவிடு. நிச்சயம் நீ வெற்றி பெறமுடியாது.. அந்த எண்ணத்தை உடனே கைவிடு. அதற்கு பதில் நான் சொல்வதைச் செய். உன் பெருமை குன்றாதிருக்க, உனது மகளை அப்பய்ய தீக்ஷிதருக்கு கல்யாணம் பண்ணி வை. அவர் மதிப்பையும் மரியாதையும் நீ மாமனாராக பெற்று அவர் உன்னைத் தந்தையைப் போல் பூஜிக்கும்படி நடந்துகொள்.”
அன்றிரவு, ஆச்சர்யமாக, அப்பய்ய தீக்ஷிதர் கனவில் பரமேஸ்வரனே தோன்றினார். கட்டளையிட்டார்;
”குழந்தாய், நீ உடனே காஞ்சிபுரம் போ. ரத்னகேட தீக்ஷிதர் எனும் மஹா பண்டிதர் உனக்காக தனது மகள் மங்களாம்பிகாவுடன் காத்திருப்பார். அவர் புத்ரியை உனக்கு விவாகம் செய்து வைப்பார். அவளை மனைவி யாக ஏற்று சீரும் சிறப்புடனும் வாழ்வாயாக”
அப்பய்ய தீக்ஷிதருக்கு பரமேஸ்வரன் உத்தரவு ஆச்சர்யம் அளித்தது. மறுநாள் காலையே தனது நித்யானுஷ்டானங்களை முடித்த பிறகு காஞ்சிபுரம் நோக்கி நடந்தார். அங்கே ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் அருகே ஒரு இடத்தில் வசித்தார்.
சீக்கிரமே ஒருநாள் காலை ரத்னகேட தீக்ஷிதர் அவர் இல்லம் தேடி வந்தார். அவரை வரவேற்று வணங்கி அர்க்யம், பாத பூஜை, பாத்யம், அளித்து, ஆசனம் கொடுத்து உபசரித்தார்.
அப்பய்ய தீக்ஷிதரை முதன் முதலில் பார்த்த ரத்னகேட தீக்ஷிதர் அவரது ப்ரம்ம தேஜஸைக் கண்டு பிரமித்தார்.
”மகனே, நான் உன்னைத் தேடி வந்த காரணம் தெரியுமா உனக்கு?”
”சுவாமி, கட்டளையிடுங்கள். தங்கள் சித்தன் என் சிவ பாக்யம்””என் மகள் மங்களாம்பிகாவை உனக்கு விவாகம் செய்து வைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இங்கே பெரியவர்கள் என்று நான் சொல்வது காஞ்சி தெய்வம் என் இஷ்ட தெய்வம் காமாக்ஷி அம்மன் தான் பிரதானமாக. நீ என் மகளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு சகல சௌபாக்யங் களோடு , மேன்மேலும் சீரும் சிறப்பும் பெற்று நீங்கள் தம்பதியாக நூறாண்டு காலம் வாழ ஆசிர்வாதம். இது பகவத் ஆஞை” ”ஸ்வாமி உங்கள் உத்தரவு. என் கனவிலும் அதையே பரமேஸ்வரன் உணர்த்தி இங்கே அனுப்பி அவர் சொற்படி உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன்”
அப்பய்ய தீக்ஷிதர் கல்யாணம் இனிது நிறைவேறியது. இல்லற வாழ்க்கை இனிதாக கழிந்தது. பல மாணவர் கள், சிஷ்யர்கள் பல்வேறு திசைகளிலிருந்து அவரை நாடி வந்து ஞானம் பெற்றார்கள். சிவபக்தியை பரப்பினார். பல ராஜ்யாதிபதிகள் அவரைப் போற்றி வரவேற்று உபசரித்தார்கள். எங்கும் ஸமஸ்க்ரித பக்தி ரஸ வெள்ளம் பாய்ந்தோடியது.
மேலும் சொல்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



