AITHREYA UPANISHAD J K SIVAN

ஐத்ரேய​ உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN

1.1.1आत्मा वा इदमेक एवाग्र आसीन्नान्यत्किञ्चन मिषत् । स ईक्षत लोकान्नु सृजा इति ॥
ātmā vā idam eka evāgra āsīn nānyat kiñcana miṣat | sa īkṣata lokān nu sṛjā iti ||
ஆத்மா வா இதம் ஏக ஏவாக்ர ஆசீன் நாந்யத் கிஞ்சன மிஷத் । ஸ ஈக்ஷத லோகான் நு ஸ்ருஜா இதி ॥

​நினைத்து பாருங்கள் இந்த ப்ரபஞ்சகத்தில் எங்கும் ப்ரம்ம மயம். ஒரு உயிரினமும் கிடையாது. எங்கும் நிசப்தம். மேலே வானமோ மேகமோ, சூரியனோ, சந்திரனோ, நக்ஷத்ரமோ இல்லை. மலையோ , மரமோ இல்லை.. ஒன்றே ஒன்று தான் சர்வ சாக்ஷி யாக இருக்கிறது. அதற்கு உருவமோ, நிறமோ, பெயரோ கிடையாது. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தது. அந்த பரமாத்மா தான் பரப்பிரம்மம். .அதற்கு அப்பாற்பட்ட​து எதுவும் இல்லை.​ அந்த பரப்பிரம்மம் சங்கல்பித்தது. நான் இங்கே படைக்கவேண்டியது நிறைய இருக்கிறது…”.

1.1.2 स इमाँल्लोकानसृजत । अम्भो मरीचीर्मरमापोऽदः परेण दिवं द्यौः प्रतिष्ठा अन्तरिक्षं मर्यादा पृथिवी अधस्तात् ॥
sa imāṁl lokān asṛjata | ambho marīcīr maram āpo ‘do pareṇa divaṁ dyauḥ pratiṣṭhā antarikṣaṁ maryādā pṛthivī adhastāt |
ஸ இமாந் லோகான் அஸ்ருஜத । அம்போ மரீசீர் மரம் ஆபோ அதோ பரேண திவம் த்யௌಃ பிரதிஷ்டா அந்தரிக்ஷம் மர்யாதா ப்ருதிவீ அதஸ்தாத் ॥

​பஞ்ச பூதங்களை முதலில் படைத்தது. அதுவே மேலும் கீழும் உலகங்களாகியது. ஒளி, ஒலி ருசி இவற்றை அனுபவிக்க உயிரினம் என்று பலவகை ஜீவர்களை பிறப்பித்தது. ஒளி உலகம், ஒலி உலகம், மரணம் லகம் (தெய்வ உலகம்), ஒளி உலகம்,​ பிறப்பு இறப்பு கொண்ட மரண உலகம்​, அதற்கான மனிதர்கள் இவர்களை படைக்க வேண்டும்.

1.1.3. स ईक्षत इमे नु लोका लोकपालान्नु सृजा इति । सोऽप्सु पुरुषं समुद्धृत्य अमूर्च्छयत् ॥
sa īkṣata ime nu lokā lokapālān nu sṛjā iti | so ‘psu puruṣaṁ samuddhṛtya amūrcchayat ||
ஸ ஈக்ஷத இமே நு லோகா லோகபாலான் நு ஸ்ருஜா இதி । ஸோऽப்ஸு புருஷம் ஸமுத்த்ருத்ய அமூர்ச்சயத் ॥

​மனிதன் எனும் புருஷனை படைத்தால் அவன் என் சக்தியோடு உள்ளவனாக இருக்கவேண்டும். என் ஆத்மா அவனுக்கும் இருக்க வேண்டும். அவனுக்கு சுதந்திரமாக இயங்க வசதி செய்யவேண்டும். மற்ற ஜீவன்களை கண்காணிக்க பாதுகாக்க அழிக்க அவனுக்கு திறமை, சக்தி புத்தி எல்லாம் வேறு வேண்டும். தன்னொத்த மற்ற பிறவிகளோடு அவன் எப்படி பழகவேண்டும் என்று வேறு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பரமாத்மா எண்ணினார்.

1.1.4. तं अभ्यतपत् । तस्याभितप्तस्य मुखं निरभिद्यत यथा अण्डं । मुखाद्वाग्वागादग्निः ॥
tam abhyatapat | tasyābhitaptasya mukhaṁ nirabhidyata yathā aṇḍam | mukhād vāg vāgād agniḥ ||
தம் அப்யதபத் । தஸ்யாபிதப்தஸ்ய முகம் நிரபித்யத யதா அண்டம் । முகாத் வாக் வாகாத் அக்னிஃ ॥

​அந்த மயக்கியவனார் பண்ணிய மண் பாண்டம் தான் மனிதன். அவனுக்கு உருவம் கொடுத்து உயிரூட்டினான்.
​வாய் எனும் துவாரம் மூலம் இரு திறமைகள், உண்ண பருக, பேச, வாக்கு அவன் உள்ளே புத்தி, மனம் இருதயம் பேசுபவற்றை வெளிப்படுத்த கருவியாக வாய் உருவானது.

1.1.5. नासिके निरभिद्येताम् । नासिकाभ्यां प्राणः प्राणाद्वायुः ॥
nāsike nirabhidyetām | nāsikābhyāṁ prāṇaḥ prāṇād vāyuḥ ||
நாசிகே நிரபித்யேதாம் । நாசிகாப்யாம் ப்ராணஃ ப்ராணாத் வாயுஃ ॥
​மூக்கு என்னு துவாரம் வழியாக அவன் மூச்சு காற்று சுவாசம் செய்ய கற்பித்தான். அவன் நாசிக்கு நாற்றம், மனம் அறியும் தெளிவையும் தந்தான்.

1.1.6 अक्षिणी निरभिद्येताम् । अक्षिभ्यां चक्षुः चक्षुष आदित्यः ॥
அக்ஷிணீ நிரபித்யேதாம் । அக்ஷிப்யாம் சக்ஷுஃ சக்ஷுஷ ஆதித்யஃ ॥
akṣiṇī nirabhidyetām | akṣibhyāṁ cakṣuḥ cakṣuṣa ādityaḥ ||

​கண்கள் எனும் இரு குழிகளில் ஒலிக்கருவிகளை நிறுவினான். மனத்தோடு, எண்ணத்தோடு இணைத்தான். கண்களுக்கு அறிந்து கொள்ளும் தெரிந்து கொள்ளும் சக்தி கொடுத்தான். அதிலிருந்து சூரியனை மேலே படைத்தான். சந்திரன் நக்ஷத்திரங்கள் உருவானது.

1.1.7. कर्णौ निरभिद्येताम् । कर्णाभ्यां श्रोत्रं श्रोत्राद्दिशः ॥
karṇau nirabhidyetām | karṇābhyāṁ śrotraṁ śrotrād diśaḥ ||
கர்ணௌ நிரபித்யேதாம் । கர்ணாப்யாம் ஶ்ரோத்திரம் ஶ்ரோத்திராத் திஷஃ ॥
​செவியேனும் கருவிகளை இரு புறமும் தலையில் நிறுவி அவனுக்கு சப்தத்தை புரிந்து கொள்ளும் சக்தி கொடுத்தான். நல்ல சப்தங்கள் அவனை நல்வழிப்படுத்த. தீங்கு விலைக்கும் சப்தம் கேட்கலாலிருக்க புத்தி, காதுகளை மூடிக்கொள்ள கைகள் வேறு கொடுத்தான். திசைகள் காதுகளின் சப்தங்கள் மூலம் தோன்றின.

1.1.8 त्वङ्निरभिद्यत । त्वचो लोमानि लोमभ्यो ओषधिवनस्पतयः ॥
tvaṅ nirabhidyata | tvaco lomāni lomabhyo oṣadhi-vanaspatayaḥ ||
த்வங் நிரபித்யத । த்வசோ லோமானி லோமப்யோ ஓஷதி வனஸ்பதயஃ ॥
​தலையிலிருந்து கால் வரை மனித, மற்ற உயிரினங்களுக்கு கெட்டியான ஒரு உறை போட்டு மூடினான். அதற்கு சருமம், தோல் என்று அடையாளம் . தோலின் மேல் முடிகள் அதை பாதுகாக்க , உஷ்ணத்தை சீராக வைக்க வைத்தான். செடிகள் கொடிகள், மரங்கள் தாவரங்கள் இப்படி தான் உலகில் உருவாயின.

1.1.9, हृदयं निरभिद्यत । हृदयात् मनो मनसश्चन्द्रमाः ॥
hṛdayaṁ nirabhidyata | hṛdayāt mano manasaś candramāḥ ||
ஹ்ருதயம் நிரபித்யத । ஹ்ருதயாத் மனோ மனஸஶ் சந்த்ரமாஃ ॥
இதயம் தோன்றியது. இதயத்திலிருந்து மனம்; அதிலிருந்து சந்திரன் தோன்றினான்.

1.1.10 नाभिर्निरभिद्यत । नाभ्या अपानः अपानाद्मृत्युः ॥
nābhir nirabhidyata | nābhyā apānaḥ apānād mṛtyuḥ ||
நாபிர் நிரபித்யத । நாப்யா அபாநஃ அபாநாத் ம்ருத்யுஃ ॥
​வயிறு, நாபிக்கு கீழே இரு துவாரங்கள். உடலிலிருந்து கழிவுகளை அகற்ற. ஒரு உறுப்பு தன்னைப் போல் உயிரினம் படைக்க ஜீவ சக்தியும் அளித்தான்.

1.1.11 शिश्नं निरभिद्यत । शिश्नाद्रेतः रेतस आपः ॥
śiśnaṁ nirabhidyata | śiśnād retaḥ retasa āpaḥ |
ஶிஶ்நம் நிரபித்யத । ஶிஶ்நாத் ரேதஃ ரேதஸ ஆபஃ ॥

​இத்தகைய புருஷனின் மூலம் ஆணினம் பெண்ணினம் உருவாகி பிரபஞ்சம் முழுதும் பரவி அனுபவிக்க தயாரானது. .

2,1,1, स ईक्षत कथं न्विदं मदृते स्यात् । स ईक्षत कथं न्विदं मदृते स्यात् ॥
sa īkṣata kathaṁ nu idaṁ madṛte syāt | sa īkṣata kathaṁ nu idaṁ madṛte syāt ||
ஸ ஈக்ஷத கதம் நு இதம் மத்ருதே ஸ்யாத் । ஸ ஈக்ஷத கதம் நு இதம் மத்ருதே ஸ்யாத் ॥
​
இந்த மனித உடலை இனி என்னிடமிருந்து அகன்று தானாக இயங்க வேண்டும், இதை யார் இயக்குவது?ப்ரம்மம் எனும் பரமாத்மா யோசித்தது. ஆஹா, படைத்தவன் நானல்லவா இதனுள் காரணமாக இருக்க வேண்டும் ? என முடிவெடுத்தது.

2.1.2. स ईक्षत इदं शरीरं स्यात् । अथ कोऽहं नाम भवामि इति ॥
sa īkṣata idaṁ śarīraṁ syāt | atha ko ‘haṁ nāma bhavāmi iti ||
ஸ ஈக்ஷத இதம் ஶரீரம் ஸ்யாத் । அத கோऽஹம் நாம பவாமி இதி ॥

​”மனித உடலை படைத்துவிட்டேனே. எப்படி அதன் உள்ளே நுழைவேன்?” என சற்று யோசித்ததுப்ரம்மம்

2.1.3. स एतमेव सीमानं विदार्य एतया द्वारया प्रविशत् ॥
sa etam eva sīmānaṁ vidārya etayā dvārayā praviśat ||
ஸ ஏதமேவ ஸீமானம் விதார்ய ஏதயா த்வாரயா ப்ரவிஶத் ॥

​அவன் உடலை மேலும் கீழுமாக பார்த்தது. சருமம் மூடி எங்கும் உள்ளே நுழைய வழி இல்லையே. ஆஹா தலை உச்சியை ஒருசிறிது மெதுவாக திறந்து அதன் வழியாக ப்ரம்மம், பரமாத்மா மனித உடலின் மேற்பகுதியில் இடம் பிடித்தது. புத்தி, மூளை, அறிவு எனப்படும் அதீத சக்தியை உள்ளே வைத்திருந்தது அல்லவா அதன் அருகில் அதை இயக்க தானே குடிகொண்டது. இன்றும் பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில் உச்சிக்குழி மென்மையாக மிருதுவாக காணப்படும். மூச்சு விடும்போதெல்லாம் மேலும் கீழும் அசையும். பிறந்த குழந்தையை ஜாக்கிரதையாக அது கெட்டிப்படும் வரை தாய் பாதுகாக்கிறாள்.
​ப்ரம்மம் இவ்வாறு அதன் வழியாக உடலுள் புகுந்தது. ஸஹஸ்ராரம் , கபால துவாரம் என அதற்குப்பெயர். அதன் வழியாக உள்ளே நுழைந்த ஆத்மா அந்த உடலை விட்டு செல்லும்போது கபாலத்தை வழியாகவே வெளியேறும். எல்லோருக்கும் அல்ல, மகான்களுக்கு, ஞானிகளுக்கு மட்டும். யோகிகளுக்கு தலையில் தேங்காய் உடைப்பது அதை திறப்பதற்காக தான். சமாதி அடைந்தவுடன் இதுநிகழும்.

2.1.4 तस्य त्रय आवसथाः त्रयः स्वप्नाः अयं आवसथः अयं आवसथः अयं आवसथः ॥
tasya traya āvasathāḥ trayaḥ svapnāḥ ayam āvasathaḥ ayam āvasathaḥ ayam āvasathaḥ || தஸ்ய த்ரய ஆவஸதாஃ த்ரயஃ ஸ்வப்நாஃ அயம் ஆவஸதஃ அயம் ஆவஸதஃ அயம் ஆவஸதஃ ॥

​மனித ஜீவனுக்கு மூன்று நிலைகள். விழிப்பு, கனவு, ஆழ்ந்த நித்திரை. இதுவே அவனை செயல்படுத்துகிறது. ஜாக்ரத் (விழிப்பு) ஸ்வப்ன (கனவு)​ சுஷுப்தி (ஆழ்ந்த நித்திரை) ​எனும் அவஸ்தைகள்.

३.1,1, कोऽयमात्मेति वयमुपास्महे ।कतमः स आत्मा ॥
ko ‘yam ātmā iti vayam upāsmahe | katamaḥ sa ātmā ||
கோऽயம் ஆத்மேதி வயம் உபாஸ்மஹே । கதமஃ ஸ ஆத்மா ॥
​நம் உள்ளே இருக்கும் பரமாத்மாவை நாம் தியானிக்கவேண்டும். அடிக்கடி நான் யார்? என்னைப்படைத்ததுயார்? அது எங்கே இருக்கிறது? நான் தான் அந்த ஆத்மாவாக இருக்கிறேனா? ஆஹா நான் எவ்வளவுபாக்யசாலி என்று நன்றியோடு நினைக்க வேண்டும். இதுவே ஆத்ம விசாரம் எனப்படும்.

3.1.2. येन वा पश्यति येन वा शृणोति येन वा घ्राणं जिघ्रति येन वा वाचं व्याकरोति येन वा स्वादु चास्वादु च विजानाति ॥
yena vā paśyati yena vā śṛṇoti yena vā ghrāṇaṁ jighrati yena vā vācaṁ vyākaroti yena vā svādu ca asvādu ca vijānāti ||
யேன வா பஶ்யதி யேன வா ஶ்ருணோதி யேன வா ஘்ராணம் ஜிஹ்ரதி யேன வா வாசம் வ்யாகரோதி யேன வா ஸ்வாது ச அஸ்வாது ச விஜானாதி ॥

​கண்ணால் காதால் மூக்கால், வாயால் எதெல்லாம் அனுபவிக்கிறோமோ அதை இயக்குவது மனம் எனும் அறிவு. அதை இயக்குவது ஆத்மா எனும் ப்ரம்மம்.

3.1.3. यदेतद् हृदयं मनश्चैतत् । संज्ञानमाज्ञानं विज्ञानं प्रज्ञानं मेधा दृष्टिर्धृतिः मतिः मनीषा ज्योतिः स्मृतिः संकल्पः क्रतुरसुः कामो वश इति सर्वाण्येवैतानि प्रज्ञानस्य नामधेयानि भवन्ति ॥
yad etad hṛdayaṁ manaś caitat | saṁjñānam ājñānam vijñānam prajñānam medhā dṛṣṭiḥ dhṛtiḥ matiḥ manīṣā jyotiḥ smṛtiḥ saṅkalpaḥ kratuḥ asuḥ kāmaḥ vaśa iti sarvāṇy evaitāni prajñānasya nāmadheyāni bhavanti ||
யதெதத் ஹ்ருதயம் மனஶ்சைதத் । ஸஞ்ஞானம் ஆஜ்ஞானம் விஜ்ஞானம் ப்ரஜ்ஞானம் மேதா த்ருஷ்டிஃ த்ருதி மதி மனீஷா ஜ்யோதி ஸ்ம்ருதி ஸங்கல்பஃ க்ரதுஃ அஸுஃ காமோ வச இதி ஸர்வாண்யேவைதானி ப்ரஜ்ஞானஸ்ய நாமதேயானி பவந்தி ॥

இதயம், மனம்​ எண்ணம் என்பவை அறிவு வடிவங்கள்: ஞானம், அறிவு, புத்தி, நினைவு, தீர்மானம், சிந்தனை
இவை அனைத்தும் ப்ரஞானம் (உயர்ந்த அறிவு) என்பதின்​ வேறு பெயர்கள்.

3.1.4. एष ब्रह्म एष इन्द्रः एष प्रजापतिः एते सर्वे देवाः इमानि च पञ्च महाभूतानि पृथिवी वायुराकाश आपो ज्योतिः ॥
eṣa brahma eṣa indraḥ eṣa prajāpatiḥ ete sarve devāḥ imāni ca pañca mahābhūtāni pṛthivī vāyuḥ ākāśa āpaḥ jyotiḥ ||
ஏஷ ப்ரஹ்ம ஏஷ இந்த்ரஃ ஏஷ ப்ரஜாபதிஃ ஏதே ஸர்வே தேவாஃ இமானி ச பஞ்ச மஹாபூதானி ப்ருதிவீ வாயுஃ ஆகாஶ ஆபஃ ஜ்யோதி ॥

இந்த ஆத்மா தான் பிரம்மம், இந்திரன், பிரஜாபதி, எல்லா தேவதைகளும், ஐந்து மஹாபூதங்களும் (பூமி, காற்று, ஆகாயம், நீர், தீ).​ சர்வம் ப்ரம்ம மயம் .

3.1.5. एषोऽणिमैतदात्म्यमिदं सर्वं तत्सत्यं स आत्मा तत् त्वम् असि ॥
eṣo ‘ṇimā etad ātmyaṁ idaṁ sarvaṁ tat satyaṁ sa ātmā tat tvam asi ||
ஏஷோऽணிமா ஏததாத்ம்யம் இதம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா தத் த்வம் அஸி ॥

இந்த ​ப்ரபஞ்சம் முச்சூடும் அந்த ஆத்மாவே. ​ அதுவே உண்மை. அதுவே ​ ஸஹ்யம், அதுவே ப்ரம்மம் அதுவே நீ. தத் தவம் அஸி .

3.1.6 प्रज्ञानं ब्रह्म ॥​ prajñānam brahma ||​ ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம ॥
​ஆகா, இந்த உயர்ந்த தெளிந்த அறிவே, ப்ரஞானம், எனும், ப்ரம்மம்​ உயர்ந்த, தெளிந்த, பரந்த அறிவு. பரம்பொருள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;