
”காலம் கெட்டுவிட்டது ஸார்”
அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN
யாரைப்பார்த்தாலும் ”காலம் கெட்டுவிட்டது ஸார்” என்கிறார்கள். எல்லாமே தலைகீழ். இப்போது இருப்பது அக்ரமத்தின் உச்ச கட்டம் என்று முடிவு கட்டவேண்டாம். இப்போது நாம் இருப்பது பிள்ளைப்பருவம். இன்னும் பல லக்ஷம் வருஷங்கள் இருக்கிறதாம். நாம் எந்த உருவத்தில் பிறந்து அதெல்லாம் அனுபவிப்போம் என்று யோசிக்க வழி இல்லை.
கிருஷ்ணன் மறைவுக்குப் பிறகு கலியுகம் நாளொரு அக்ரமமும் பொழுதொரு அநியாயமாக வளர்ந்து கொண்டே போய் தலை விரித்தாடுகிறது.
கலியுகத்தில் சில நல்ல சேதிகளும் காதுக்கும் கண்ணுக்கும் கிடைக்கிறது. நமது பூமியை நாம் பூகோள புத்தகத்தில் வட்டத்தின் நடுவே மேலும் கீழுமாக கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று வர்ணம் அடித்து காட்டுவதை அறிவோம். பூமி உருண்டை என்கிறோம். பூமியில் இருந்து கொண்டே தூரத்தில் பூமி நீலகலர் உருண்டையாக ஆகாசத்தில் தெரிவதை நாம் பார்க்கிறோம். சந்திராயண விண்கலம் நமக்கு எவ்வளவு துல்லியமாக நாம் வாழும் பூமியைக் காட்டியது. சந்திரனில் நிறைய தங்கப்பாறைகள் இருக்கிறதாம். GRT அங்கே போய் தங்க நகை கடை வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலிருக்கிறது. நாமும் இன்ஸ்டால்மென்டில் தங்கம் வாங்கலாம். இப்படிப்பட்ட கலிகாலத்தை நன்றாக யோசித்து சுகப்பிரம்ம ரிஷி பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொல்வதை தான் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம்.
சுக ப்ரம்ம ரிஷியின் கணிப்பில் கலிகாலத்தில் பார்க்கு மிடமெங்கும் நீக்கமற அயோக்யர்கள் அதர்ம வான்கள், அந்யாயவாதிகள், அக்ரமக் காரர்கள் கூட்டம் கூட்டமாக காணப்ப டுவார்கள். ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளாகவோ, அதிகாரம் நிறைந்த உயர்பதவி அதிகாரிகளாகவோ கூட அவர்கள் இருக்கலாம். சமூகத்தில் நிலம் நிதி படைத்த பிரபுக்களாக கூட இருக்கலாம். சமூகத்தில் பணம் படைத்தவன், தன்னை பலமானவன் என்று காட்டிக் கொள்பவன், அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான் .ஆன்மிகம், பக்தி வழிபாடு என்பது நாலு பேர் மெச்சுவதற்காக என்று ஆகிவிடும்.
ஏழு நாளில் சாகப்போகிற பரீக்ஷித் ராஜா சுகப்பிரம்ம ரிஷியைக் கசக்கிப் பிழிந்து கேள்விகள் பல கேட்டு ஞானம் பெறுவது அவனுக்காக இல்லை. அது நமக்காக. கலியுகம் போகப் போக எப்படி இருக்கும்? என்று கவலையோடு கேள்வி கேட்டு ரிஷியின் பதிலை நமக்கு அட்வான்ஸ் வார்னிங் warning மாதிரி அப்போதே வாங்கிக் கொடுத்திருக்கிறான் பரீக்ஷித்.
ஆகவே இது முன்பே தெரிந்தது என்பதால் நாம் அதிர்ச்சி அடையவேண்டாம். கலியுகத்தின் ஆரம்பத்தில் தான் நாம் இருக்கிறோம். இன்னும் ஒரு பெரும் பகுதி காத்திருக்கிறது. இப்போதே எப்படி சமயோசிதமாக நம்மை ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்கிறோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம், புத்திசாலித்தனம் எல்லாம் அடங்கியுள்ளது.
கலியுகத்தில் பேச்சு தான் முக்யம். எவனால் மற்றவனை மட்டம் தட்டி, திட்டி, பொய்யும் கற்பனையும் கலந்து பேச, அல்ல, கெட்ட வார்த்தைகளால் இகழ முடியுமோ அவன் தான் சண்ட ப்ரசண்டன், யோக்யன், பெரும்
தலைவன், நாவலன், காவலன், பாவலன், பேரறிஞன், கலைஞன் என்னவெல்லாம் பாராட்டப்படுவான் . கைதட்டப்படுவான். கருதப்படுவான். வார்த்தை ஜாலம் தான் அவனது சக்தி ஆயுதம். அதுவே சத்யம் ஆகும்.
மனைவி மக்களை வீட்டில் சௌகர்யமாக வசதிகளோடு காப்பதே அரும் பெரும் செயலாகும். ரெண்டுக்கு மேல் குழந்தைகள் இருந்தாலே அவன் பாடு தர்ம சங்கடம். உணவு, உடை, மருந்து, கல்வி, — அப்பப்பா இதை சமாளிக்கவே அவன் என்ன வெல்லாம் தகிடு தத்தம் செய்யவேண்டியிருக்கும் என்று சுகர் தெரிந்து வைத்திருக்கிறார். அப்பல்லோ மருத்துவ செலவுகள் பற்றி முன்பே அவருக்குத் தெரியும் போல் இருக்கிறது.
திருமணம் என்றால் கலிகாலத்தில் ஓட்டமாக ஓடிவிடுவான். அவன் ஓடவில்லை என்றால் பெண் வீட்டார் கண்டிஷன்கள் அவனை ஓடவைக்கும். அதனால் திருமணமற்ற உறவு புழக்கத்திலா, பழக்கத்திலா? என்பது புரியாத புதிர். ”மணம்புரியா தம்பதிகளாக” சேர்ந்து வாழ்வதைத்தவிர இன்னொரு ஷாக் கூட இருக்கிறது. ஆணோடு ஆணும் சேர்ந்து கணவன் மனைவியாக மாற நீதிமன்றம் கூட அனுமதிக்கும், இப்படிப்பட்ட அதிசய தம்பதிகள் இருக்க்கிறார்கள். அது நேரும், என்று சுகப்ரம்மம் அப்போதே தெரிந்து வைத்த்திருக்கிறாரே.
”ஐயா, சுக ப்ரம்ம மகரிஷியே, நீர் எந்த அளவுக்கு மஹா யோகி, எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பவர் என்பது நன்றாகவே தெரிகிறது. இன்றைக்கு காலை சுடச்சுட தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற பத்ரிகைகைள், மற்றும் டிவியில் சில சேனல்கள், வாட்ஸாப்ப் யூட்யூப், எல்லாம் பார்த்துவிட்டு வந்து பேசுவது போல் சொல்கிறீர்களே.
‘ தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற பழமொழி கேட்டிருக்கிறேன். அதை நடைமுறையில் பார்க்கிறேன். லஞ்சம், ஊழல், அக்கிரமம், அனாச்சாரம், எல்லாம் தலைக்குமேலே போய்விட்ட நேரத்தில் இப்படிப்பட்ட ஜனங்களுக்கு இடையே எவன் மிக சிறந்த அயோக்கிய னோ அவனே யோக்கியன் என்று நாடு அறிந்து கொண்டுள்ளது இப்போது. எப்படி உமக்கு இது தெரிந்தது அப்போதே?
ஆடையிலாதவன் ஊரில் கோவணாண்டி கேலிக்கிட மாவான். சிரிக்கப்படுவான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்களே அப்படியென்றால் நாமெல்லாம் நம்மை ஆள்பவர்கள் போல் தான் ஆசாமிகளா. ஏன் கண்ணாடி பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமா? எல்லோருமே இப்படி என்றால் யாரையும் குறை சொல்வது மஹா தப்பு அல்லவா? உன்னை நீ பார்த்துக் கொள், அப்படித்தான் இருப்பார்கள் எல்லோருமே. அதை தான் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்கி றார்களோ?
”கோனுயர குடி உயரும்” என்ற பிரகாரம் ஆள்பவனின் தூய்மையாக கைகள் நீளமில்லாமல் சரியான அளவில் இருந்தால் குடி என்ற ”குடி” மக்கள் அவ்வாறே கண்ணாடியில் பார்ப்பது போல் பிரதிபலிப்பார் களாம். இங்கே ‘குடி’ யும் ம் அதன் விலையும் உயர்ந்து கொண்டே போகிறதே. எங்கும் கலாட்டா நடக்கிறது. அப்படியும் நிறைய தாக சாந்தி தீர்க்கும் இடங்கள் இருக்கும் குடி தான் உயர்கிறது. இதற்கு மேல் இதை விவரிப்பது அனாவசியம் என்பதால் அடுத்த ஸ்லோகத்தில் சுக ப்ரம்ம ரிஷி கலிகாலத்தில் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்கிறார் என்று பார்ப்போம்.
மக்கள் பஞ்சத்தாலும், அதிக வரி சுமையாலும் துடிப்பார்கள். கிழங்கு, இலை காய் பூ, பட்டை, விதை என்று எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள்.
शीतवातातपप्रावृड्हिमैरन्योन्यत: प्रजा: ।क्षुत्तृड्भ्यां व्याधिभिश्चैव सन्तप्स्यन्ते च चिन्तया ॥ १० ॥ 12.2.10
śīta-vātātapa-prāvṛḍ- himair anyonyataḥ prajāḥ kṣut-tṛḍbhyāṁ vyādhibhiś caiva santapsyante ca cintayā
கலிகாலத்தில் எங்கும் வியாதி பரவி மக்கள் அவதிப்படுவார்கள், அநேகமாக எல்லோருமே குளிர், பனி, வாயு, உஷ்ணம், மழை, ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். சண்டைகள், பசி, தாகம், வியாதி, மனதில் சங்கடம், பயம் என்று பலவித துன்பங்களில் தவிப்பார்கள்.
त्रिंशद्विंशतिवर्षाणि परमायु: कलौ नृणाम् ॥ ११ ॥ 12.2.11 triṁśad viṁśati varṣāṇi paramāyuḥ kalau nṛṇām.
நாம் ஒருவரை ஒருவர் ”நூறாண்டு வாழ்க” என்று வாழ்த்துகிறோம். ரொம்பசரி. இப்போதைக்கு இது முடியலாம். இன்னும் காலம் செல்லச் செல்ல, கலியுகத்தில் அதிக பக்ஷம் ஒவ்வொருவருக்கும் வயது ஐம்பது தானாம் . ரொம்ப போனால் நாம் ஐம்பது வயது வாழ்வதே பேப்பரில் நம் படம் வரும் அளவுக்கு ஒரு அதிசயமாகிவிடும். சுகர் சொன்னால் அது பொய்யாகாது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாக தான் கலிகாலம் செல்லும். அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. நாமே அனுபவிக்கிறோம்.
क्षीयमाणेषु देहेषु देहिनां कलिदोषत: । वर्णाश्रमवतां धर्मे नष्टे वेदपथे नृणाम् ॥12 ॥ पाषण्डप्रचुरे धर्मे दस्युप्रायेषु राजसु । चौर्यानृतवृथाहिंसानानावृत्तिषु वै नृषु ॥ 13 ॥ शूद्रप्रायेषु वर्णेषुच्छागप्रायासु धेनुषु । गृहप्रायेष्वाश्रमेषु यौनप्रायेषु बन्धुषु ॥ 14 ॥
अणुप्रायास्वोषधीषु शमीप्रायेषु स्थास्नुषु । विद्युत्प्रायेषु मेघेषु शून्यप्रायेषु सद्मसु ॥ 15॥ इत्थं कलौ गतप्राये जनेषु खरधर्मिषु । धर्मत्राणाय सत्त्वेन भगवानवतरिष्यति ॥16. चराचरगुरोर्विष्णोरीश्वरस्याखिलात्मन: । धर्मत्राणाय साधूनां जन्म कर्मापनुत्तये ॥ 12.2.17 ॥
kṣīyamāṇeṣu deheṣu dehināṁ kali-doṣataḥ varṇāśramavatāṁ dharme naṣṭe veda-pathe nṛṇām 12 pāṣaṇḍa-pracure dharme dasyu-prāyeṣu rājasu cauryānṛta-vṛthā-hiṁsā-nānā-vṛttiṣu vai nṛṣu 13 śūdra-prāyeṣu varṇeṣu cchāga-prāyāsu dhenuṣu gṛha-prāyeṣv āśrameṣu yauna-prāyeṣu bandhuṣu 14 aṇu-prāyāsv oṣadhīṣu śamī-prāyeṣu sthāsnuṣu vidyut-prāyeṣu megheṣu śūnya-prāyeṣu sadmasu 15 itthaṁ kalau gata-prāye janeṣu khara-dharmiṣu dharma-trāṇāya sattvena avatariṣyati 16 carācara-guror viṣṇor īśvarasyākhilātmanaḥ dharma-trāṇāya sādhūnāṁ janma karmāpanuttaye 17.
”பரீக்ஷித், சொல்கிறேன் கேள். தக்க நேரம் வந்தால்,கலி முற்றினால், துஷ்டர்களை அழிக்க, சிஷ்டர்களை பராமரிக்க தாவர ஜங்கம ஜீவன்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பரந்தாமன், கலிகாலத்தில் அவதரிப்பார்.. ஒவ்வொரு யுகத்திலும் நிகழ்வது இது”
शम्भलग्राममुख्यस्य ब्राह्मणस्य महात्मन: । भवने विष्णुयशस: कल्कि: प्रादुर्भविष्यति ॥ १८ ॥ 12.2.18
śambhala-grāma-mukhyasya brāhmaṇasya mahātmanaḥ bhavane viṣṇuyaśasaḥ kalkiḥ prādurbhaviṣyati
ஸம்பளா எனும் கிராமத்தில் (இது எங்கே இருக்கிறதோ, நமக்கு தெரியவில்லை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுகர் துல்லியமாக கணிக்கிறார்.) ஒரு முக்கிய வைஷ்ணவ ப்ராமண குடும்பத்தில் கல்கி என்ற நாம தேயத்தோடு நாம் எதிர்பார்க்கும் மஹா விஷ்ணு இதோ வருகிறார் கலியுகத்தில் கல்கி பகவானாக. இது தசாவதாரத்தில் 10வது அவதாரம். லோக சம்ரக்ஷணத்துக்காக மஹா விஷ்ணுவின் இந்த அவதாரம் விநோத மானானது. கையில் வாள். வெள்ளைக் குதிரை மேல் டக் டக் என வேகமாக வருவாராம். அவர் பிறக்கப் போவது எங்கே என்று கூ ட ஏற்கனவே ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டி ருக் கிறதே. ஒரு பிராமணர் . அவர் பெயர் விஷ்ணுயாஸர் , அவர் வசிக்குமிடம் தான் ஸம்பளா கிராமம். அது எங்கே என்று என்னை கேட்காதீர்கள். தெரிந்தால் சொல்லி இருப்பேனே.
19-20: अश्वमाशुगमारुह्य देवदत्तं जगत्पति: । असिनासाधुदमनमष्टैश्वर्यगुणान्वित: ॥ 12.2.19 ॥
विचरन्नाशुना क्षौण्यां हयेनाप्रतिमद्युति: । नृपलिङ्गच्छदो दस्यून्कोटिशो निहनिष्यति ॥ 12.2.20 ॥
aśvam āśu-gam āruhya devadattaṁ jagat-patiḥ asināsādhu-damanam aṣṭaiśvarya-guṇānvitaḥ
vicarann āśunā kṣauṇyāṁ hayenāpratima-dyutiḥ nṛpa-liṅga-cchado dasyūn koṭiśo nihaniṣyathi
கலியுகம் முடியும் சமயம், எல்லா ஜீவராசிகளின் உடம்பும் ரொம்பவே குறுகி, சிறுத்து காணப்படும். பாரம்பரிய தெய்வ, மதநம்பிக்கை, கோட்பாடுகள், எல்லாம் சிதறிவிடும். வேதங்கள் புறக்கணிக்கப்படும். வேதம் காட்டும் வழி காற்றில் பறக்கும். நாஸ்திகம் தலை தூக்கி எங்கும் நாஸ்திகர்கள் தான் காணப் படுவார்கள். ராஜாக்கள், அரசாங்க தலைவர்கள் எல்லாம் திருடர்களாக மாறலாம். எங்கும் அராஜகம் தலை தூக்கும். பணமில்லாதவன் தான் தாழ் குலத்தான். பசுக்கள் ஆடு அளவுக்கு சுருங்கிவிடும். வேத ஆசிரமங்கள் வெறும் வீடுகளாகும். குடும்பம் சுருங்கி ரெண்டு பேர் தான் அதிகம் என்று ஆகிவிடும். தாவரங்களும் அளவில் சிறிதாகிவிடும். மேகங்கள் வெறுமே பளிச்பளிச் எனும் மின்னலாக மாறும். பக்தி காணாமல் போகும். மக்கள் கழுதைகளாவார்கள் என்று சொல்கிறார் சுக ப்ரம்ம ரிஷி. இப்படி நிலை ரொம்ப மோசமாக புகும் சமயம் தான் மீண்டும் விஷ்ணு அவதரிப்பார். கல்கி பகவான் தேவதத்தம் எனும் வேகமாக ஓடும் குதிரை மேல் ஏறிக்கொண்டு வருவார். கையில் கூரிய வாள் . ராஜா வேஷத்தை போட்டுக்கொண்டு மக்களை கொள்ளை யடிப்பவர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணி விடுவார்.ராஜாக்கள் தான் இப்போது அதிகம் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ராஜாங்க அதிகாரத்தில் இருப்பவர்கள் என்று எடுத்துக் கொள்வோம். கலியுகத்தின் முடிவில் தான் வருவாரோ? கலியுகத்தில் முதல் பாதத்தில் தான் இப்போது இவ்வளவு அக்ரமங்களை சகித்துக்கொண்டு வாழ்கிறோம். இப்போதே வரலாமே. இன்னும் மூன்று பாகங்கள் இருக்கிறது. அதுபற்றி நமக்கு கவலை வேண்டாம். நிச்சயம் அத்தனை லக்ஷம் வருஷங்கள் நாம் இருக்கப்போவ தில்லையே.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



