

பிறர்க்குதவி – நங்கநல்லூர் J K SIVAN
உலகத்தில் பல வித பாக்கியசாலிகள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிறந்தவர்கள் என்று சிலரை குறிப்பிடலாம். அவர்கள் தான் தனக்கென வாழா பிறர்க்குறியாளர்கள். பிறற்கு உதவ தான் இந்த உடம்பு பகவானால் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. परोपकारार्थम इदं शरीरम Paropakaram Artham Idam Shareeram ”பரோபகாரார்த்தம் இதம் சரீரம்” என்று நீதி நெறி நூல்கள் குறிப்பிடுவது இது தான்.
எப்படி உதவுகிறோம் எப்போது உதவுகிறோம் என்று கூட தீர்மானிக்காமல் உதவுகிறவர்கள் இருக்கிறார்கள். சொந்தக்காரர்களுக்கோ, குடும்பத்துக்கோ தனது கூட்டத்துக்கோ
உதவுவது, பிறர் செய்யும் உதவியை தனது உதவியாக மறைத்து காட்டி பெருமை சேர்த்துக் கொள்வது எல்லாம் அரசியல் வியாதி.
நாம் சொல்வது ஆத்மாவின் செயல்பாடு.ஜகத் குரு என்று எல்லோருக்கும் உதவும் மஹா பெரியவா போன்றவர்கள் இருந்த தேசம் இது. இருக்கிறார்கள் இன்னமும். விளம்பரம் கிடையாது. பாதரச விளக்கு ஒன்று கொடுத்தால் கூட இது ” …” அவர்களின் நன்கொடை என்று அந்த விளக்கே வெளிச்சம் தராத அளவு வர்ணம் பூசி விடுவது தர்மம் ஆகாது.
”மத்த புள்ளையை ஊட்டி வளர்த்தா பெத்த புள்ளை வளரும்” என்று கிராமத்தில் சொல்வோம். மற்றவர்கள் நமது உதவியால் எப்படி வளர்வார்கள்? என்று யோசிக்க கூட தேவையில்லை. பிறர்க்குதவி என்பது பணத்தினால் மட்டும் என்று நினைக்க வேண்டாம். சரீர உதவி, மன அளவில் உற்சாகம் தருவது, அறிவுரை தருவது.
ஒன்றும் சொல்லாமல், செய்யாமல் கூடவே இருப்பது கூட பெரிய உதவி தான்.
என்னால் முடிந்தது நான் என்னவெல்லாம் படிக்கிறேனோ, எதை ரசிக்கிறேனோ,புதிதாக தெரிந்து கொள்கிறேனோ, அதை ஒருநாளைக்கு 18-20 மணி நேரம் படித்து எழுதி, பாடி, உங்களைக் கொல்கிறேன். எத்தனை பேருக்கு இது உதவி?என்று கூட நினைக்கவில்லை. எனக்கே உதவியாக இருக்கிறதா? என்பதும் தெரியாது. 87ல் என்னால் இப்போதைக்கு முடிந்தது இவ்வளவு தான் என்று தெரிந்து கொண்டேன். பன்னிரண்டு வருஷங்களாக இது தொடர்கிறது. பல புத்தகங்கள் நன்கொடை வாங்கி வெளியிட்டு விலையில்லாமல் தந்து கொண்டிருக்கிறேன். நாலு லக்ஷம் பேருக்கு மேல் உலகமுழுவதும் முகநூலில் என் எழுத்துக்கள் கருத்துகள் போய் செருகிறதுஎன்று அறியும்போது நிச்சயம் ஒரு பத்து பேருக்காவது இது உதவினால் எனக்கு புண்யம் என்று தோன்றுகிறது.
கிருஷ்ணன் எவ்வளவு நாள் இதை அனுமதிக்கிறானோ அவ்வளவு நாள் இதுதொடரும்
என்ற நம்பிக்கை.
முக்கியமாக ஒரு விஷயம். பிறருக்கு உதவி எனும்போது அது நம்மைப் போல் பேசும் மனிதர்களுக்கு என்று மட்டும் குறைத்துக் கொள்ளவேண்டாம். வாய் பேசாத, உதவி கேட்காத, கண்ணினாலேயே குறையை, சொல்லுகிற/சொல்லாத, மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாமே ”பிறரில்” சேர்த்தி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய நெஞ்சம் கொண்டவர் வள்ளலார். ஜீவ காருண்யம் என்பது அனைத்துக்கும் பொதுவானது.
ஒரு கருங்கல் கூட முதுகு சொரிந்துகொள்ள மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உதவுகிறது.
பசு வாய்க்கு ஒரு பிடி புல் கூட பெரிய தர்மம்.
இதோ வெயில் காலம் வந்துவிட்டது. வீட்டு வாசலில் ஒரு மண் குடுவையில், அல்லது பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிறைய தண்ணீர் வைக்கலாம். எத்தனையோ பறவைகள், மிருகங்கள் தாகத்தோடு நீர் தேடும்போது பருகி மனதார நம்மை வாழ்த்துமே. அந்த பக்கெட்டைக் கூட நம்மில் யாரவது திருடினால் திருடிவிட்டு போகட்டும். இன்னொரு பழைய பக்கெட் வைப்போமே.
ச்ராத்தம் ,திதி, விடாமல் கொடுப்பது, செய்வது கூட தர்மம். அது இருப்பவர்களுக்கு அல்ல, சென்றவர்களுக்கு. எத்தனையோ புண்யவான்கள் அடிக்கடி ரத்த தானம் செய்கிறார்கள். இப்போதே தமது கண்களை தானம் செய்ய எழுதி வைக்கிறார்கள்.
எதைச் சாப்பிடும் போதும், நீர் பருகும்போதும் கூட முதலில் கிருஷ்ணா உனக்கே அர்ப்ப ணம் என்று சொல்லி சாப்பிடுவது கூட தெய்வத்துக்கு காணிக்கையாக அளிப்பதில் உண்டாகும் திருப்தி எனக்கு வெகுகாலமாக உள்ளது.
பிறருக்குதவும்போது கிடைக்கும் சந்தோஷம் வேறெதிலும் கிடைக்காது.
கிருஷ்ணன் அரச வைபோக குடும்பத்தில் பிறந்து பிறந்த அன்றே அதை விட்டு ஒரு கோப கோபி இல்லத்தில் வாழ்ந்து மற்ற சிறுவர்களோடு மாடு மேய்த்து எத்தனையோ அசுரர்களைத் தனி ஒருவனாக கொன்று,கொடியவர்களை யுத்தத்தில் அழித்து, ராஜாவானாலும் பழைய ஏழை ஸ்நேகிதனை மறக்காமல் உதவி, உலகில் தர்மத்தை நிலைநாட்ட படாத பாடு பட்டு, தேர் ஒட்டி, முதலில் தன்மேல் அம்புகளை வாங்கிக் கொண்டு, பார்த்தசாரதியாக உழைத்து, இப்படி சரீர உதவி செய்வதோடு நிற்காமல் நமக்கும் என்றும் நீதி நேர்மை நெறியோடு வாழ கீதையையும் அளித்தானே அவனை என் தெய்வமாக கொண்டாடுவதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம்!!. பிறக்குதவுவதில் அவனல்லவோ முன்னோடி.
திருமூலர் பாடல் ஒன்று இதை எழுதும்போது நினைவுக்கு வந்தது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின்
படமாடக் கோயில் பகவற்க தாமே
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றீயின்
படமாடக் கோயில் பகவற்க தாமே.
நமது தேகம் நடந்து செல்லும் ஒரு கோவில் அதில் உறைபவன் நம்மவன் சிவன். ஆகவே நாம் காணும் நடந்து செல்லும் அனைவருமே தெய்வம் தானே. அவர்களுக்கு உதவி செய்தல் கல்லால் கட்டப்பட்ட கோவிலுக்குள் உறைந்திருக்கும் கற்சிலையாக காணும் பகவானுக்கு அர்ப்பணித்த காணிக்கையாகும். இதைத்தானே ஜனசேவை ஜனார்த்தன சேவை என்கிறோம். மக்கள் சேவை மகேசன் சேவை என்பதும் இது தானே.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


