தெய்வத்தாய் இல்லம் – நங்கநல்லூர் J K SIVAN
பெரிய பெரிய நகரங்களின் தாய்கள் சிறு சிறு க்ராமங்கள். நமது தமிழகத்தில் எண்ணற்ற க்ராமங்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. வெளியே தெரியாது. நாம் கண்டு பிடித்துக் கொள்ளவேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ. தூரத்தில் இப்படித்தான் ஒரு அருமையான ஒரு சிறு கிராமம் இருந்தது, இருக்கிறது. அதன் பெயர் ஈச்சங்குடி. காவேரிக்கு வடகரையில் உள்ளது. மிகப்பழைய வீடுகளை சிதில நிலையில் கொண்ட இந்த ஊரில் ஒரு வீடு ரொம்ப பிரசித்தமானது. கிராமங்களில் அக்காலத்தில் பிரதான கோயிலைச் சுட்க்ரி இருக்கும் வீதிகளுக்கு அக்ரஹாரம் என்று பெயர். கோவிலிலும், வேத, யாக, தெய்வீக காரியங்களில் ஈடுபடும் பிராமண குடும்பங்கள் வாழ்ந்து வரும் வீடுகள் அங்கே உண்டு.
சுப்ரமணிய ஐயர் மஹாலக்ஷ்மி அம்மாளின் ரெண்டாவது பிள்ளை தான் குல தெய்வம் சுவாமிமலை முருகனை வேண்டி வைத்த பெயர் ஸ்வாமிநாதன். சரியான பெயர். பன்னிரண்டு வயசில் ஸ்வாமிநாதன் சன்யாசியாகி ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி எனும் 68 வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆன நமது மஹா பெரியவா. அப்பனுக்கு பாடம் சொன்னவன் அந்த ஸ்வாமிநாதன். இந்த ஸ்வாமிநாதன் அப்பால், வளர்ந்து அகிலத்துக்கு பாடம் சொல்லப்போகிற ஜகதகுரு மஹா பெரியவாளாகப்போகிற ஸ்வாமிநாதன்.
1993ல் ஒருமுறை பெங்களூர் ஹரி என்ற பக்தர் தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா ” நீ ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலை புனருத்தாரணம் பண்ணப் போறியா?
”பெரியவா அனுகிரஹத்தோடு அப்படி ஒரு எண்ணம் இருக்கு ”
”ரொம்ப சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும். அங்கே தான் நான் சின்ன வயசிலே அம்பாளை காருண்ய வல்லியா , கச்சபுரீஸ்வரரோடு நிறைய தரிசனம் பண்ணி இருக்கேன். வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு ” என்று மஹா பெரியவா சிரித்தார்.
”சீக்கிரமே ஆரம்பிக்க ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்”
‘ஹரி, நான் உன்னை ஒண்ணு கேட்கட்டுமா. எனக்கு உபகாரம் பண்ணுவியா?”’
”ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு கிடைக்கட்டும். நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து வளர்ந்த ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே இருக்கே உனக்கு தெரியுமா? அதை குழந்தைகளுக்கு வேதம் கத்துக்கொடுக்கிற பாடசாலையா புனருத் தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகு காலமா ஒரு எண்ணம். அங்கே வேதம் என்னிக்கும் ஒலிக்கணும். நாலு பேருக்கு ஊரிலே உபயோகமான இடமாக அதை மாத்தணும்”
ஹரி உணர்ச்சி வசத்தோடு கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
1994 ஜனவரி 8 உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை ஒருவருக்கும் தெரியாது. உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை. தியானத்தில் ஈடுபட்டார். அருகே இருந்தவர் உரக்க காதில் சொன்னார்:
”பெரியவா பெங்களூர் ஹரி தரிசனம் பண்ண வந்திருக்கார்”
“இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என்று சொல்லாமல் சொல்லி ஹரிக்கு ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டில் தான் மஹா பெரியவாளின் தாயார் மஹாலக்ஷ்மி அம்மாள் பிறந்தாள். நாகேஸ்வர சாஸ்திரிகளின் புத்ரி. வேதம் அத்வைதம், உபநிஷம் எல்லாம் நன்றாக கற்று தெரிந்த 18 வயசு சுப்ரமணிய அய்யருக்கு 7வயது மஹாலக்ஷ்மி மனைவியானாள்.
சுப்ரமணிய ஐயர் மஹாலக்ஷ்மி அம்மாளின் ரெண்டாவது பிள்ளை தான் குல தெய்வம் சுவாமிமலை முருகனை வேண்டி வைத்த பெயர் ஸ்வாமிநாதன். சரியான பெயர். பன்னிரண்டு வயசில் ஸ்வாமிநாதன் சன்யாசியாகி ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி எனும் 68 வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆன நமது மஹா பெரியவா. அப்பனுக்கு பாடம் சொன்னவன் அந்த ஸ்வாமிநாதன். இந்த ஸ்வாமிநாதன் அப்பால், வளர்ந்து அகிலத்துக்கு பாடம் சொல்லப்போகிற ஜகதகுரு மஹா பெரியவாளாகப்போகிற ஸ்வாமிநாதன்.
1932ல் ஜூன் 14 அன்று ஆந்திராவில் நகரி என்னும் ஊரில் மஹா பெரியவா முகாமிட்டி ருந்தபோது தான் தாயார் மஹா லட்சுமி அம்மாள் காலமான செய்தி வந்தது. தாய்க்கு ஸ்நானம் செய்து விட்டு பிராமணர்களுக்கு தானம் வழங்கினார். அதோடு அந்த சந்நியாசி தன்னைப் பெற்ற தாய்க்கு ஒரு சந்நியாசியின் கடமையை முடித்தார். அப்போது தான் அவர் மனதில் ஒரு எண்ணம் உதயமாயிற்று. தனது தாய் பிறந்த பழைய வீட்டை ஈச்சங்குடியில் ஒரு வேத பாடசாலையாக்கினால் என்ன? வேத சப்தம் ஒலிக்கட்டுமே . இந்த எண்ணம் பூர்த்தியாக பல வருஷம் ஆகியது. எண்ணம் எப்போது செயலாகியது?
1993ல் ஒருமுறை பெங்களூர் ஹரி என்ற பக்தர் தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா ” நீ ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலை புனருத்தாரணம் பண்ணப் போறியா?
”பெரியவா அனுகிரஹத்தோடு அப்படி ஒரு எண்ணம் இருக்கு ”
”ரொம்ப சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும். அங்கே தான் நான் சின்ன வயசிலே அம்பாளை காருண்ய வல்லியா , கச்சபுரீஸ்வரரோடு நிறைய தரிசனம் பண்ணி இருக்கேன். வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு ” என்று மஹா பெரியவா சிரித்தார்.
”சீக்கிரமே ஆரம்பிக்க ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்”
பெரியவா ஹரியை சற்று உற்றுப்பார்த்தார். ஹரி தலை வணங்கி கை கட்டி பெரியவா என்ன சொல்லப்போகிறார் என்று கவனித்தார்.
‘ஹரி, நான் உன்னை ஒண்ணு கேட்கட்டுமா. எனக்கு உபகாரம் பண்ணுவியா?”’
‘மஹா பெரியவா ஆக்ஞை எதுவா இருந்தாலும் அதை நிறைவேற்றுவேன் பெரியவா”
”ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு கிடைக்கட்டும். நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து வளர்ந்த ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே இருக்கே உனக்கு தெரியுமா? அதை குழந்தைகளுக்கு வேதம் கத்துக்கொடுக்கிற பாடசாலையா புனருத் தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகு காலமா ஒரு எண்ணம். அங்கே வேதம் என்னிக்கும் ஒலிக்கணும். நாலு பேருக்கு ஊரிலே உபயோகமான இடமாக அதை மாத்தணும்”
ஹரி உணர்ச்சி வசத்தோடு கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
”மஹா பெரியவா, இது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம்! என் பூர்வ ஜென்ம புண்யம். உடனே அதற்கு செயல்படறேன்”
இத்தனை வருஷம் எவரிடமும் சொல்லாத மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு எண்ணத்தை மஹா பெரியவா சொன்னதற்கு காரணம் இருந்திருக்கிறது. அந்த பழைய வீட்டை அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்க வேண்டும், இடித்து பாடசாலை கட்ட ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.
அந்த பழைய வீடு உரிமையாளரிடமிருந்து விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப் போடு விரைவில் பாடசாலையாகியது.
இத்தனை வருஷம் எவரிடமும் சொல்லாத மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு எண்ணத்தை மஹா பெரியவா சொன்னதற்கு காரணம் இருந்திருக்கிறது. அந்த பழைய வீட்டை அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்க வேண்டும், இடித்து பாடசாலை கட்ட ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.
அந்த பழைய வீடு உரிமையாளரிடமிருந்து விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப் போடு விரைவில் பாடசாலையாகியது.
1994 ஜனவரி 8 உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை ஒருவருக்கும் தெரியாது. உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை. தியானத்தில் ஈடுபட்டார். அருகே இருந்தவர் உரக்க காதில் சொன்னார்:
”பெரியவா பெங்களூர் ஹரி தரிசனம் பண்ண வந்திருக்கார்”
‘ யாரு பெங்களூர் ஹரியா? எங்கிருந்து?
”ஈச்சங்குடியிலிருந்து , பெரியவாளுடைய அப்பா அம்மா படம், பாதுகை கொண்டு வந்திருக்கார்”
”அழைச்சுண்டு வா”
வெள்ளிப் பாதுகைகளை காலில் மெதுவாக அணிந்துகொண்டார். ஹரிக்கு ஆசீர்வாதம் பண்ணினார்.
”பெரியவா உங்க அனுக்ரஹத்தோடு ஈச்சங்குடியிலே அந்த இல்லத்தில் பாடசாலையை ஆரம்பிக்க நாள் குறிச்சாச்சு. பத்திரிகை வெளியிடணும் . பெரியவா கையாலே தொட்டு ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும்”

ரொம்ப சந்தோசம் பெரியவாளுக்கு. அந்த பாடசாலை ஆரம்ப விழா பத்திரிகையை வாங்கிப் படித்தவர், தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். அது தான் அவருடைய பூலோக வாழ்க்கையின் கடைசி நாள்.
”அம்மா, எனக்கு உயிர் கொடுத்து வளர்த்து உலகத்துக்கு அளித்த உனக்கு என்னாலான ஒரு சிறு கைம்மாறாக இந்த சந்நியாசி இதை செய்கிறேன் அம்மா.” என்று மனதில் தோன்றி இருக்குமோ?
அன்று அவர் மனதில் இருந்த ஒரே ஒரு ஆசை பூர்த்தியாகியதை பத்திரிகை நிரூபித்து விட்டது. இந்த ஹரிக்கு நான் என்ன செய்வது?
தன்னுடைய பாதுகைகளை கழற்றி ஹரியிடம் கொடுத்தார்.
“இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என்று சொல்லாமல் சொல்லி ஹரிக்கு ஆசி வழங்கினார்.
பெங்களூர் ஹரி தான் கடைசியாக இந்த உலகத்தில் மஹா பெரியவாளுடன் பேசி அவர் ஆசிபெற்ற பக்தர். என்ன பாக்யம். இதெல்லாம் நடந்த ரெண்டு மூணு மணி நேரத்தில் மஹா பெரியவா சித்தி அடைந்துவிட்டார். பூலோகத்துக்கு ஸ்வாமிநாதன் வந்த காரியம் நூறு வருஷங்களில் ஜாம் ஜாம் என்று எல்லோரும் காலம் காலமாக என்றும் அதிசயிக்க நடந்து முடிந்து விட்டது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.