
கிருஷ்ணனின் உதவி – நங்கநல்லூர் J K SIVAN
ஐந்து விளையாட்டு வீரர்கள் இளம் வயது வாலிபர்கள் . ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பரிசு வாங்க டில்லியில் நடக்கும் போட்டிக்கு பறக்க விமான நிலையம் வந்தார்கள். இன்னும் சில நிமிஷங்களில் டிக்கெட் புக்கிங் கவுண்டர் மூடி விடுவார்கள். அதற்குள் உள்ளே ஓடவேண்டும். பைகள், பெட்டிகளோடு ஓடினார்கள் ஐந்து பேரும் . கும்பலில் தெருவோரத்தில் ஒரு பழைய மரப்பலகையில் பிளாஸ்டிக் சீட் விரித்து அதன் மேல் கொய்யா, ஆப்பிள், வாழை திராக்ஷையென பல பழங்கள் விற்றுக்கொண்டிருந்த பெண்ணின் கடையை கவனிக்கவில்லை. பெட்டிகள் பைகள் மோதியதில் அந்த பலகையை தாங்கி இருந்த மரக் கால்கள் ஆடி பலகை சாய்ந்து அதன் மேல் இருந்த பழங்கள் தரையில் சிதறி ஓடியது. அந்த கடைக்கார பெண் அழுதாள். பழங்கள் வைத்திருந்த பலகை சாய்ந்துவிட்டது என்று அறிந்தாள். அந்த வாலிபர்கள் எதிரே விமான நிலைய வாசலுக்கு ஓடினார்கள். திரும்பிப்பார்க்க கூட நேரமில்லை அவர்களுக்கு.
ஐவரில் ஒருவன் நாராயணன் மட்டும் உள்ளே ஓடாமல் அங்கேயே நின்றான். பையையும் பெட்டியை யும் ஓரமாக வைத்து விட்டு தரையில் சிதறிய பழங்களை சேகரித்து மீண்டும் பலகையை சீராக அமைத்து அதன் மேல் அடுக்கினான். அந்த கடைக்கார பெண்ணும் மெதுவாக பழங்களை த் தேடி தரையைத் தடவும் போது தான் கவனித்தான். அடாடா இந்தப் பெண் கண் பார்வை இழந்தவளா? மனம் வருந்தினான். அழும் அந்தப் பெண்ணை சமாதானப் படுத்தினான்.
” அழாதேம்மா, எல்லா பழங்களையும் சேகரித்து விட்டேன். சில பழங்கள், மிதிக்கப்பட்டு நசுங்கி விட்டன. அவற்றை தனியாக ஒரு பையில் சேகரித்து வைத்திருக்கிறேன். அதற்கு நஷ்ட ஈடாக உனக்கு நான் நூறு ரூபாய் மட்டும் தான் தர முடியும். அதிக பணம் என்னிடம் இல்லை.”
அந்த குருட்டுப் பெண் தந்து கைகளை விரித்து அவன் முகத்தைத் தடவினாள். அவளுக்கு பேச்சு வரவில்லை. நா தழுதழுத்தது. அவனை வணங்கினாள் .
”ஐயா. நீங்கள் தான் கிருஷ்ணனா?” என்று மெதுவாக உணர்ச்சி பொங்க கேட்டாள்.
”இல்லையம்மா. நான் நாராயணன்.
”அப்படியென்றால் நீங்கள் கிருஷ்ணன் அனுப்பியவரா?”‘ என்று கேட்டாள் .
”அம்மா நீ ஏன் நீ என்னை கிருஷ்ணனா அல்லது அவர் அனுப்பியவனா என்று கேட்டாய்?”
”சாமி, நான் பிறவிக்குருடி. என் அம்மா வரும் வரை இந்த கடையில் யாராவது வந்து பழம் கேட்டால் எடுத்துக் கொடுப்பேன். அவர்கள் தரும் காசை இந்த டப்பாவில் போடச் சொல்வேன்.. இன்று பழத்தட்டு பலகை கீழே சரிந்து பழங்கள் தரையில் சிந்தி ஓடிவிட்டன என்று தெரிந்ததும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்போதும் நான் மனதில் தியானம் செய்யும் கிருஷணனை வேண்டி ”கிருஷ்ணா நீ தான் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டேன். உடனே நீங்கள் வந்து உதவினீர்கள். நான் கிருஷ்ணனை பார்த்ததில்லை. அவனைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே தான் நீங்கள் தான் நான் உதவி கேட்டதும் வந்த கிருஷ்ணனா என்று கேட்டேன். நீங்கள் கிருஷ்ணன் இல்லை ஏதோ நாராயணன் என்கிறீர்கள். ஆகவே கிருஷ்ணன் அனுப்பிய ஆளாக இருக்கும் என்று கேட்டேன்”
”அம்மா நான் கிருஷ்ணன் இல்லை. அவர் இப்படி உன் பழதட்டை, பலகையை சரிந்து விழச் செய்ய மாட்டார். நானும் கிருஷ்ணனை வணங்குபவன் என்பதால் இவளுக்கு உதவு என்று மனதில் கட்டளை இட்டிருக்கலாம். அது கூட எனக்கு தெரியவில்லை”
நாராயணனுக்கு அன்றைய விமானத்தில் செல்ல முடியாமல் தவற விட்டுவிட்டோம் மறுநாள் டெல்லி போய் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிந்து விட்டது.
அப்போது ஒலி பெருக்கி உரக்க பேசியது.
”இன்றைய டில்லி விமானம் ஒரு சிறு தடங்கல் காரணமாக ரெண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும்.
என்றதும் கவுண்டருக்கு ஓடினான். அவன் சீட் கிடைத்து உள்ளே சென்றபோது அவன் நண்பர்கள் அங்கே நகத்தைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் கிருஷ்ணன் பழக்கார பெண்ணுக்கு மட்டும் உதவ வில்லை. அவன் ஆளான நாராயணனுக்கும் உதவி இருக்கி றான் என்று அவன் உள் மனது நன்றியோடு கிருஷ்ணனை வேண்டியது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



