
பட்டினத்தார் கரும்பு – நங்கநல்லூர் J K SIVAN
21.1.2026 அன்று பகல் பன்னிரெண்டுக்குள் திருவொற் றியூரில் கடற்கரைப்பக்கம் உள்ள பட்டினத்தார் ஜீவ சமாதிக்கு சென்று லிங்க ஸ்வரூபமான அந்த மஹா னைத் தரிசிக்க விரும்பினேன். ஆகவே திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரையும் வடிவுடையம்மன், தியாகராஜா ஆகியோரை தரிசித்து வேகமாக கோவிலுக்கு வெளியே வந்து மீண்டும் நெரிசலில் தப்பி கடற்கரைப்பக்கம் சென்றேன்.
கடற்கரை பக்கத்தில் அமைதியாக ஒரு இடத்தில் பட்டினத்தார் ஜீவ சமாதி ஆலயம். ஆடுகள், புறாக்கள், நாய்கள் சுதந்திரமாக உலவ ஒரு சில பக்தர்களோடு உள்ளே சென்று லிங்க தரிசனம் பெற்றேன்.
பட்டினத்தார் ஜீவ சமாதி பெற்றது பற்றி சொல்வதற்கு முன் பட்டினத்தாரைப் பற்றி கொஞ்சம் சொல்லி விட் டால் தெரியாதவர்களும் நம்மோடு பயணிக்க சௌக ர்யமாக இருக்கும்.
”உன் கையில் உள்ள பேய்க்கரும்பு எங்கே இனிக்கிற தோ அங்கே உனக்கு மோக்ஷம்” என்ற பரமேஸ்வரன் வாக்குப்படி இங்கே தான் பட்டினத்தாரின் பேய்க்கரும்பு இனித்தது. யார் இந்த பட்டினத்தார்?
பட்டினத்தார் காவிரிப்பூம்பட்டினத்தை சேர்ந்த கடல் வாணிப வைஸ்யர் . சைவ குடும்பம். திருவெண்காடு சிவன் அருளால் பிறந்ததால் பெற்றோர் சூட்டிய பெயர் திருவெண்காடர்(ஸ்வேதாரண்யர்). அப்பா சிவநேசர், அம்மா ஞானக்கலை. பரம்பரைத் தொழில் கடல் வாணிபம்.. ஆகவே ஊரில் எங்கே திரும்பினாலும் பணக்கார வியாபாரிகள் .சிவநேச செட்டி யாருக்கு திருவிடைமருதூரில் வியாபாரம். ஐந்து வயதில் திருவெண்காடர் தந்தையை இழந்தவர் சிவனடியார் களுக்கு தான தர்மம் செய்யும் குடும்பம். சிவநேசன் செட்டியார் காலத்திற்கு பின் மகன் திருவெண்காடர் வியாபாரத்தில் நிறைய செல்வம் சேர்த்தார். அந்த ஊரில் இருந்த இன்னொரு பெரும் பணக்கார சிவசிதம்பரம் செட்டியார் மகள் சிவகலை திருவெண் காடர் மனைவியானாள். பதினாறு வயதிலேயே கல்யாணம்.என்ன செல்வமிருந்தும் என்ன பிரயோஜ னம். பதினைந்து வருஷமாகியும் குழந்தை பாக்யம் இல்லையே?
அந்த ஊரில் சிவசர்மா என்று இன்னொரு சிவபக்தர் சிவ கைங்கர்யத்தில் ஈடுபாடு கொண்டு அன்னதானம் தர்மம் செய்பவர். செல்வம் குறைந்தாலும் விடாமல் அன்ன தானம் நடந்து மனைவியின் நகைகள் தாலி உட்பட அன்ன தானத்துக்கு உதவியது.
ஒரு நாள் சிவன் சிவசர்மா கனவில் தோன்றி ”சிவ சர்மா, நான் காட்டும் இடம் செல். அங்கே ஒரு குழந்தை நான் குறிப்பிடும் இடத்தில் இருக்கும். நீ அதை தூக்கிக் கொண்டு நேராக திருவெண்காடர் என்ற வணிகர் வீட்டுக்கு போய் குழந்தையை அவர்களிடம் கொடு. அன்னதானத்திற்கு பணம் கேட்டாயே, இந்த குண்டு குழந்தையின் எடைக்கு எடை பொற்காசுகள் உனக்கு அந்த திருவெண் காடர் கொடுப்பார். உன் அன்ன தானம் தொடரட்டும்.” என்கிறார் சிவன் . அவ்வாறே குழந்தையைப் பெற்றுக் கொண்ட திருவெண்காடர் நிதி உதவி செய்தார்.
”சிவகலை, நமக்கு சிவனருளால் என்ன ஒரு அற்புதமான குழந்தை கிடைத்திருக்கிறது என்று பூரித்தார் திரு வெண்காடர். அவர் மகன் மருதவாணனும் கடல் வியாபாரத்தில் ஈடுபட்டு பேர் பெற்றான். மரக்கலங் களில் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து கீழை நாடுக ளுக்குச் சென்று வியாபாரம் செயது நிறைய பணம் சம்பாதித்தான்.
ஒருமுறை நிறைய சரக்குகள் வாங்கி ஒரு கப்பலில் ஏற்றி மருதவாணனை அனுப்பினார் திருவெண்காடர்.. நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டு மருதவாணன் பல மாதங்கள் கழித்து கப்பலில் திரும்பி வர காத்தி ருந்தார்.
கப்பல் வந்தது. நிறைய மூட்டைகள் இறங்கின. திரு வெண் காடர் ஆர்வத்ததோடு அவைகளை பார்வை யிட சென்றபோது ஆச்சர்யம் காத்திருந்த து. அத்தனை மூட்டையிலும் உமி, தவிடு, சாம்பல், எரிமுட்டை எனும் விரட்டிகள். எப்படி இருக்கும் திருவெண்காடருக்கு.? மகன் மருதவாணன் மீது ஆத்திரம் வந்தது திருவெண் காடருக்கு.
”முட்டாளே, இப்படியா ஒருவன் வியாபாரம் செய்வது. உனக்கு நல்ல பாடம் கற்பிக்கிறேன்.” என கோபத் தோடு திருவெண்காடர் மருதவாணனை ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டார். கடற்கரையில் நின்றிருந்த கப்பல் அருகே அத்தனை உமி தவிடு சாம்பல் மூட்டை களையும் தூக்கி எறிந்தார். என்ன ஆச்சரியம். வெளியே எடுத்த போது தான் தெரிந்தது. மேலே தவிடு, உமி ஆனால் உள்ளே அத்தனை மூட்டைகளிலும் சொக்கத் தங்க காசுகள். தவிடு அல்ல அதெல்லாம் தங்கப்பொடி, தங்க பஸ்பம், அந்த விரட்டிகளில் நவ ரத்ன வைர வைடூர்ய கோமேதக மாணிக்க கற்கள் பொதிந்திருந் தனவே.
தலை தெறிக்க தான் செய்த தவறுக்கு தண்டனை பெற, மன்னிப்பு கேட்க மகனைத் தேடி வீடு நோக்கி ஓடினார் திருவெண்காடர். பூட்டிய அறையில் மகன் மருத வாணன் இல்லை.
”சிவகலை சீக்கிரம் வா, எங்கே மருதவாணன்?” அலறினார் திருவெண்காடர்.
”அவன் இப்போ தானே விடுவிடுவென்று எங்கேயோ போனான்..”
”ஆஹா எங்கே, எதற்கு ஏன் ? என்ன சொன்னான்?”
”ஒன்றுமே சொல்லவில்லை. இதை மட்டும் என்னிடம் கொடுத்து ”அப்பா வந்தால் இதை அவரிடம் கொடு” என்று சொன்னான்’
சிவகலை ஒரு ஓலைப் பெட்டியை திருவெண்காடரிடம் நீட்டினாள். ஆவலாக அதை பிரித்து உள்ளே பார்த்தார் திருவெண்காடர். அதில் ஒரு பனை ஓலை நறுக்கு, அதோடு ஒரு காது இல்லாத ஊசி. எதற்கு இந்த காதற்ற ஊசி. ஓலையில் ஏதோ எழுதியிருக்கிறதே? அது என்ன?”
”காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” — திருவெண்காடருக்கு தலை சுற்றியது. நூறு தடவைக்கு மேல் படித்தார். ஒவ்வொரு தடவை படிக்கும்போது ஒரு புது அர்த்தம் வெளிப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம்?
”நீ இந்த வாடகை கேட்காத கடவுள் அளித்த பூமி என்கிற வீட்டில் வசிக்கிறாய் . நிறைய அகடவிகட சாமர்த்யம் எல்லாம் பண்ணி சம்பாதித்து கோட்டை கட்டி நீ சேர்த்த செல்வம் எல்லாம்…. பாவம் நீ திடீரென் று நோட்டீஸ் இல்லாமல் இதை விட்டு நீ கிளம்பும் போது உன்னோடு கூட வரப்போவது இல்லை. அதெல் லாம் வேறு எவனுக்கோ அல்லவோ சொந்தமாகும்? நமக்கு முன்னால் இப்படித்தானே பலர் அனுபவித்ததை நாம் இப்போது அனுபவிக்கிறோம். சாஸ்வதத்தை நிரந்தரமில்லாதது கொண்டு போக முடியுமா? இதோ இந்த காது இல்லாத ஊசியைக் கூட உன்னால் கூட கொண்டு போக முடியாது. கவனம் இருக்கட்டும்.’ என்று உணர்த்தி இருக்கிறார் மருதவாணனாக வந்த ஸ்வேதா ரண்ய சிவ பெருமான்.
திருவெண்காடர் அப்படியே சிலை போல் நின்றார். வெகுநேரம் அந்த ஓலை வாசகத்தை திரும்ப திரும்ப படித்தார். ஏதோ என்று மிகவும் பாரமாக கனமாக அவர் நெஞ்சில் அமர்ந்து வலித்தது. வாசகம் அவர் மனதில் பாய்ந்து உள்ளே ஓடி வேலை செய்தது. தலை சுற்றிய தா? இந்த உலகம் சுற்றியதா? அதில் காண்பதெல்லாம் சும்மாவா? வீடு வாசல், மனைவி, சுற்றம், செல்வம், ……எல்லாமே வெறும் பயாஸ்கோப் தானா? இத்தனை நாள் நான் நிழலைத்தேடி அலைந்தேனா.. அடடா, காலத் தை அசட்டு தனமாக வீணாக்கினேனே!
எவ்வளவு காலம் விரயமாகி விட்டது. திருவெண்காடர் விலையுயர்ந்த ஆடைகளை களைந்தார். ஒரு துணி யைக் கிழித்து கோவணமாக அணிந்தார். என்னென்னவோ பாட்டுகள் இதயத்திலிருந்து பீறிட்டு வந்தன.
அதெப்படி அத்தனையும் அற்புத தத்துவப் பாடல்களாக அமைந்தன. திருவெண்காடர் திசையெதுவும் தேடாமல் மனம்போன போக்கில் கால் இழுத்துக் கொண்டு போன இடம் அலைந்தார். இவர் காவிரிப்பூம் ”பட்டினத்தை” சேர்ந்தவர் என்று அறிந்து சுருக்கமாக ”பட்டினத்தார்” என்று எல்லோரும் அழைத்தார்கள் நமக்கு நிலையாக ஒரு சித்தர் கிடைத்து விட்டார்.
இனி மேலே சொன்ன திருவொற்றியூரில் பட்டினத்தார் மோக்ஷம், ஜீவசமாதி அடைந்த விஷயம் பற்றி தொடர் வோம்.
”அப்பனே, சிவபிரானே , எனக்கு எப்போதப்பா உன் அருள் கிடைக்கும்?” என்கிறார் பட்டினத்தார்.
”இந்தா, இந்த பேய்க்கரும்பு உன்னிடம் இருக்கட்டும். என்று உப்புக்கரிக்கும் ஒரு பேய் கரும்பை திருவிடை மருதூர் மஹா லிங்க சுவாமி பட்டினத்தா ரிடம் தருகி றார்.
”பரமேஸ்வரா, என்ன கட்டளை இடுகிறீர்களோ அது அடியேன் பாக்யம்”.
‘இந்த பேய்க்கரும்பு முற்றி இனிப்புச்சுவையடையும் இடம்தான் நீ நற்கதியடையும் ஊராகும். அப்போது நீ என்னை வந்தடைவாய் .”
”எந்த ஊரில் எனக்கு இந்த கரும்பு இனிக்கும்? நான் முக்தியடையப்போகும் அந்த ஊர் எது ?” பட்டினத்தார் ஊர் ஊராக சிவ தரிசனம் செய்தவாறு நமது சென்னைக்கு அருகே இருக்கும் திரு வொற்றியூரை வந்து அடைகிறார்.
”அட இது என்ன ஆச்சர்யம், பட்டினத்தார் கையில் இருந்த கரும்பு எப்படி தானாகவே வளர்ந்தது. இனிக்கவும் செய்தது. ஓஹோ, ”எந்த ஊர் என்றவனே இது தான் அந்த ஊரோ?” இனி இங்கேயே மோக்ஷத் துக்கு வழி தேடுவேன். ”
பட்டினத்தார் திருவொற்றியூரில் தங்கினார். அங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கும் ஆதிபுரீஸ்வரர், தியாகரா ஜனைக் கண்டு வணங்கினார். ஆனந்தித்தார். சில நாட்கள் சென்றன. அருகே, கடற்கரை. அடிக்கடி அங்கே சென்று அமைதியாக உட்கார்ந்து தவம் செய்வார். வழக்கமாக அங்கே மணலில் வீடு கட்டி விளையாடும் சிறுவர்களை அழைப்பார். அவர்களோடு விளையாடு வார். ஒரு விளையாட்டு என்ன தெரியுமா?
”எல்லோரும் இங்கே வாங்க”
”என்ன தாத்தா, எதுக்கு கூப்பிட்டீங்க?”
”நான் ஒரு விளையாட்டு சொல்லி தரட்டுமா,?
”சரி தாத்தா. ”
”நாம் எல்லோருமாக இங்கே ஒரு பள்ளம் தோண்டுவோம். என்ன? நான் அதில் உட்கார்ந்து கொள்வேன். நீங்கள் என் மண்ணை போட்டு மூடி விடவேண்டும். சிறிது நேரம் கழித்து நான் வெளியே வருவேன். சரியா?”
அவர்கள் குழியில் பட்டினத்தாரை அமர வைத்து மூடுவார்கள், அவர் எழுந்து வருவார். அவர்களுக்கு ஆச்சர்யம்.
இந்த விளையாட்டு ஏற்கனவே சில நாள் தொடர்ந்தது.
அவர் தீர்மானித்த நாள் வந்தது. ”எனது நேரம் முடியப் போகிறது” என்று பட்டினத்தாருக்கு தோன்றியது. ஒருநாள் அந்த சிறுவர்களை கூப்பிட்டு அந்த குழி விளையாட்டை விளையாடினார் .
வழக்கம்போல் அவரும் சேர்ந்து குழந்தைகளோடு ஒரு ஆழமான குழி தோண்டி அதில் ”ஓம் நமசிவாய என்று அமர்ந்தார். மேலே மண்ணை போட்டு மூடச்சொன்னார். மூடினார்கள். வெகுநேரம் ஆகியும் பட்டினத்தார் வழக்க ம்போல் வெளியே வரவில்லை.
பயந்து போன குழந்தைகள் வீடு சென்று பெரியோரிடம் சொல்ல, எல்லோரும் திரண்டு வந்தார்கள். வேகமாக
எல்லோரும் குழியை திறந்தனர். உள்ளே பட்டினத்
தார் இல்லை. ஒரு சிவலிங்கம் இருந்தது. அந்த இடம்
தாம் இப்போது திருவொற்றியூரில் நாம் காணும் பட்டினத்தார் ஜீவ சமாதி ஆலயம். பெரிய ராஜ கோபுரமோ, விமானமோ இல்லை. சாதாரண கட்டிடம். முடிந்தபோதெல்லாம் திருவொற்றியூர் சென்று அங்கே அமைதியாக அமர்ந்து பட்டினத்தாரோடு சேர்ந்து தியானம் செய்வோம். நிறைய கரும்புகள் அங்கே காணப்படுகிறது.
ஆடி மாதம் உத்திராடம் நக்ஷத்திரம் அன்று குருபூஜை நடக்கும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


