

சூழ்நிலைக்குத் தக்க பதிவு — நங்கநல்லூர் J K SIVAN
AC கிட்டே போய் ரொம்ப நாளாச்சு. FAN கூட போட்டுக்க முடியலை. குளிர். கனமான சட்டையை போட்டுக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே கால் அடி வைக்காமல் உட்கார்ந்திருக்கும் நேரம். எங்கும் புயல், விடாத மழை, கனமழை, வெள்ளம், மக்கள் அவதி இதே பேச்சாக இருக்கிறது. டிசம்பர் வந்தாலே இது ஒரு
நியதி யாக போய் விட்டது. வீட்டில் சும்மா இருக்கும் போது அருமையான நேரம் மனதை உள் நோக்கி செலுத்துவதற்கு.
வெளியே காணப்படும் புயல் சுனாமிக்கு, வெள்ளத்து க்கு சற்றும் இளைத்தது அல்ல மனித மனம். யோசித் தால் நான் உளறவில்லை என்பது புரியும்.
மனித மனம் ரொம்ப சிக்கலான விஷயம். புரிபாத சமாசாரம். மனதில் உணர்வுகள் பெருகுகிறது. அதன் விளைவாக எண்ணங்கள் பிறக்கிறது சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படுகிறது. அதை தான் நாம் உணர்கிறோம். உணர்ச்சி என்கிறோம்.
அடிமனதில், ஆழ்மனதில் இன்னும் ஏராளமான பூதங்கள் உள்ளன. அவை எண்ணங்களாக அடுக் கடுக்காக வரிசையாக உள்ளன. ஆசைகள் பாசங்கள், கோபங்கள், ஆத்திரங்கள், சோகம், பயம். வன்மம், பொறாமை, சகலமும் வரிசை வரிசையாக காத்தி ருக்கிறது. எப்போது வெடிக்குமோ? பட்டாசு முனையில் தீக்குச்சி வைடது நெருப்பு பொறி காட்டுவது போல், ஏதோ ஒரு சந்தர்ப்பம், காரணம் வரும்போது படார் என்று வெடிக்கும்.. எல்லோருக்கும் இது பொருந்தும்.
மனதில் ஒரு காட்சி உருவாகும்.கண்ணோட்டம், புலனு ணர்வு இது தான். அது புலன்கள் மூலம் வெளிப்படுத் த்தும், கண், வாய், உடம்பு, மூலம் வெளிப்படுகிறது. இது நமது எதிர்ப்பார்ப்புகள், நம்பிக்கை, பழைய சம்பவங் களின் உணர்வு, ஏமாற்றம், துரோகம், சம்பந்தப்பட்ட வையாக இருக்கும். எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு கூட நடந்த விஷயமாக இருக்கும்.
நல்ல விஷயங்களும் இப்படி தான் உள்ளே அடுக்கி வரிசையாக உட்கார்ந்து தக்க சமயம் வெளியே வரும்.
நமது படிப்பு, கல்வி கேள்வி ஞானம், சங்கீதம், நடனம், பேச்சு, ஆர்வம், ஆகியவை நம்மை உயர்த்திக் காட்டுகி றது. முக்கியமான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
மனதின் வெளிப்பாடு ரெண்டு வகை.ஒன்று வேகமாக, சட்டென்று உடனேயே, மற்றது நிதானமாக உறுதியான செயல்பாடு. இது தான் மனித குணத்தை நிர்ணயிக்கி றது.
மனதின் இன்னொரு அதிசயசெயல். நம்மை நாம் யார் என்று காட்டுவது. ஒன்று உண்மையை மறைத்து வெளிப் ப டுத்துவது. இன்னொன்று உண்மையாக நான் யார் என்று வெளிப்படுத்துவது. ரெண்டுக்கும் கடலளவு வித்யாசம் இல்லையா?
மனம் எண்ணற்ற கோட்டைகளை காட்டும். எப்படி யெல் லாம் நாம் இருக்கவேண்டும் என்று திட்டம் போடும். கடந்த கால அனுபவம் , நிகழ்கால நடப்பு செயல்கள் நினைவுகள் ரெண்டும் ஒன்று சேர்ந்து கலந்து எதிர்கால எதிர்பார்ப்பை ,உருவத்தை அமைக்கும்.
மனதில் இருப்பது ஒரே ஒரு குரல் அல்ல. எத்தனையோ வித உணர்ச்சி கொந்தளிப்புகள். அநேகமாக இதற் கெல்லாம் ஆதாரம் மனதில் உள்ள அழுத்தம், வடு, நடைபெற்ற அனுபவித்த சம்பவங்களின் அடையாள சின்னம். பழிவாங்கவோ, நன்றியுடன் நினைக்கவோ இது தான் காரணம். பதட்டப்படுவதும், நிதானமாக இருப்பதும் இதன் விளைவாகத்தான்.
மனதின் அழுத்தத்தால் உடம்பு சோர்வடைகிறது. ஆதரவு தேடுகிறது. பலகாலமாக உள்ளுக்குள்ளேயே அடைக்கப்பட்டு வெளி வராமல், எப்போது வெளியே தலை நீட்டலாம் என்று காத்திருக்கும் எண்ணக் கூட்டம் தான் சுனாமி. FLASHBACK என்கிறோமே நினைவுக ளின் மீட்பு….இதற்கும் வெளியே கடல் கொந்தளிப் புக்கும் எவ்வளவு ஒற்றுமை!
மனித மனம் அருமையான ஒரு சாதனம். எண்ணற்ற அற்புதங்களை உருவாக்கும் சக்தி கொண்டது. கலை, கற்பனை, காவியம், மொழி , விஞ்ஞானம், எல்லாமே உருவாக்க கூடியது. எண்ணங்களை கோர்வையாக எடுத்து அளிக்க கூடியது. மனித இனத்தை தவிர வேறு எந்த உயிரினத்துக்கும் கடவுள் அளிக்காத ஒரு அற்புத சக்தி. பகவானே உனக்கு நன்றி.
சுனாமி எப்படி ஏற்படுகிறது? கடலடியில் தொந்தரவு, குழப்பம், நில நடுக்கம், எரிமலை கொதித்து எழும்பு வது, விண்ணிலிருந்து விழும் கற்கள் …. எல்லாம் எப்போது எப்படி எங்கே எவ்வளவு எதுவும் சொல்ல முடியாத தெரியாத நிலை…. சொல்லுங்கள் இப்போது மனதுக்கும் உள்ளே இதே நிலை தானே ஏற்படுகிறது? நான் சொல்வது கொஞ்சம் கொஞ்சமாவது சரிதானே?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


