
குருபத்னியின் விருப்பம்
மகரிஷி தௌம்யர் எப்படி சிஷ்யர்களை சோதனைக் குள்ளாக்கி அவர்களிடம் உள்ள அருங் குணங்க ளை வெளிக்காட்டி அவர்களை ஆசிர்வதித்து மஹரிஷியாக் கினார் என்று இரு சிஷ்யர்கள், ஆருணி உத்தாலகர், உபமன்யு மூலம் அறிந்து இப்போது அடுத்த சீடனான வேதா பற்றி அறிவோம்.
”வேதா, உனக்கு கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கற்றுக்கொடுத்தாகிவிட்டது என்றாலும் இன்னும் சில காலம் இங்கேயிரு” என்கிறார் தௌம்யர். குரு சொல் தட்டாதவன் வேதா. ஆகவே மேலும் சில காலம், பசி, தாகம் எல்லாம் மறந்து இரவும் பகலும் செக்கு மாடாக குரு, குரு தம்பதிகள் அவர்கள் குடும்பத்துக்கு வேண் டிய உபசாரங்கள், இட்ட பணிகள் அனைத்தையும் திருப்திகரமாக நிறைவேற்றினான் வேதா.
ஒருநாள் ”வேதா இனி நீ செல்லலாம், என்னுடைய ஆசிகளுடன் இனி ஆஸ்ரமம் அமைத்து சிஷ்யர்களுக்கு நீ கற்றதை எல்லாம் அவர்களுக்கு உபதேசிக்கலாம்” என்று விடை கொடுத்தார் தௌம்யர். வேதா அவரையும் குரு பத்னியையும் வணங்கி ஆசி பெற்று கிளம்பினான். வேதாவுக்கு அதிர்ஷ்ட தேவதை உதவினாள் . அவன் சிறந்த கல்விமானாக விளங்கி னான். கல்யாணமாகி ஆஸ்ரமத்தில் மூன்று சிஷ்யர் களுக்கு குருவானான். எந்த சிஷ்யனிடமும் வேலை வாங்குவதில்லை, யாரையும் சோதனை பண்ணுவதில் லை. தான் பட்டது தன்னோடு போகட்டும் என்றுஇருந்து விட்டான்.
பாண்டவர்களில் அர்ஜுனன் மகன் அபிமன்யு, அவன் மகன் பரீக்ஷித், தக்ஷன் எனும் நாகத்தால் உயிரிழந் தவன். பரீக்ஷித் மகன் ஜனமேஜயன். அவன் இன்னொரு க்ஷத்ரியனான பௌஷ்யன் என்பவனோடு காட்டில் வேட்டையாடி திரும்பும்போது வேதா ரிஷியின் ஆஸ்ரமத்திற்கு செல்கிறான். அவரை குருவாக ஏற்கிறான்.
வேதா மஹரிஷியின் ஒரு சிஷ்யன் உதங்கா. ‘ உதங்கா, ‘நான் ஒரு யாகத்தை நடத்த இங்கிருந்து செல்கிறேன். நீ பொறுப்பாக ஆஸ்ரமத்தை பார்த்துக்கொள், எதைச் செய்யவேண்டுமோ அதைச்செய்” என்று உத்தர விட்டுவிட்டு வேதா ஏதோ ஒரு யாகம் செய்ய கிளம்பி விட்டார். ஒருநாள் ஆஸ்ரமத்தில் இருந்த பெண்கள் உதங்காவிடம் ”உன் ஊரில் உன் மனைவிக்கு உன் உதவி உடனே தேவை, புறப்படு ” என்கிறார்கள். உதங்கா ”தாய்மார்களே, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் குரு என்னை நம்பி இந்த ஆஸ்ரமத்தை அவரில் லாத போது பொறுப்பாக கவனித்து நிர்வாகம் செய்” என்று சொல்லி இருக்கும்போது நான் இதை விட்டு எங்கும் செல்வது குருவார்த்தையை அவமதித்தது ஆகும் ” என்று சொல்லி விட்டான். சில நாட்கள் கழித்து வேதா திரும்பிவந்து நடந்ததை அறிகிறார்.
”உதங்கா, என் மகனே, உன் குருபக்தியை மெச்சினேன். எனக்கும் உனக்குமான நட்புறவு வலிமை பெற்று விட்டது. நீ உடனே உன் மனைவி இருக்கும் ஊருக்கு செல்” என்று வேதா மகிழ்ச்சியோடு உத்தரவிட்டார்.
”குருவே, நான் இங்கிருந்து செல்லு முன் எனக்கு கல்வி புகட்டிய தங்களுக்கு குரு தக்ஷிணை ஏதாவது செய் வது தான் முறை. நீங்கள் எனக்கு என்ன செய்ய வேண் டும் என்று கட்டளை இடவேண்டும்”
”அப்பா உதங்கா, நீ உன் மனைவியிடமே கேள். அவள் எதை நீ எனக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று கருதுகிறா ளோ, விரும்புகிறாளோ, அதுவே நீ எனக்கு அளிக்கும் குருதக்ஷிணை. நீ போகலாம் ”
உதங்கா குருபத்னியிடமும் விடை பெறும் முன்பு அவளிடம் ” அம்மா, குரூ எனக்கு என் மனைவி என்ன அளிக்கவேண்டும் என்று சொல்கிறாளோ அதை கொண்டுவா ” என்று சொல்லிவிட்டார். உங்களிடமும் கேட்கிறேன். அம்மா நான் உங்களுக்கு எது விருப்பம் என்று என்னிடம் சொல்லுங்கள் அதை இத்தனை காலம் மகனாக ஏற்று உணவு, உடை இடம் கொடுத்து ஆதரித்த உங்களுக்கு அதை என் காணிக்கையாக செலுத்துகிறேன் ” என்றான் உதங்கா.
”மகனே உதங்கா, எனக்கு பௌஷ்ய ராஜாவின் ராணி செவியில் அணிந்திருக்கும் குண்டலங்களை கேட்டு வாங்கி வா. இன்றைக்கு நாலாம் நாளில் ஒரு யாகம் இங்கே நடக்க போகிறது. பிராமணர்கள் அநேகர் வருவார்கள் அப்போது நான் நீ கொண்டுவரும் குண்டலங்களை அணிந்து கொள்ளவேண்டும். உன்னால் என் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி ” என்றாள் குருபத்னி.
உதங்கா விடுவிடுவென்று நடந்தான்.வழியில் பெரும் காளை ஒன்றின் மேல் ஆஜானுபாகுவாக ஒருவன் தென் பட்டான். ”இந்த காளையின் கோமியம் உனக்கு நல்லது செய்யும் துளி அருந்து” உதங்கா தயங்கினான்.
”என்ன யோசிக்கிறாய், உன் குருவே இதற்கு முன் நான் சொன்னபடி இப்படி செய்திருக்கிறார்”
உதங்கா அப்புறம் மறுவார்த்தை பேசாமல் சொன்னபடி செய்தான். மேற்கொண்டு பௌஷ்ய ராஜா அரண்ம னைக் கு சென்றான். ராஜாவை வணங்கினான்.
”மஹாராஜா, நான் உங்களிடம் யாசகம் பெற வந்திரு க்கிறேன்”
” உனக்கு என்ன வேண்டும் சொல்”
”எனது குருவின் பத்னிக்கு உங்கள் ராணி அணிந்திருக் கும் காது தோடுகள் வேண்டுமாம். அதைக் கேட்க தான் வந்திருக்கிறேன்” ”ஆஹா, நீ தாராளமாக அரண்ம னை அந்தப்புரத்துக்கு செல்லலாம். மகாராணியைப்பார்த்து உனது விருப்பதை அவளிடம் சொல்”
அந்தப்புரம் சென்ற உதங்காவுக்கு ராணி கண்ணில் படவில்லை. நேராக ராஜாவிடம் வந்து ”என்னால் ராணியைக் காண முடியவில்லை அரசே” என்றான்.
”மஹாராணி அசுத்தமாக இருப்பவர்கள் கண்ணுக்கு தென்படமாட்டாள். உன்னை பரிசுத்தம் செயது கொண் டு விட்டு பிறகு அவளைத் தேடு’
‘உதங்கா குருவையும் குரு பத்னியையும் மனதால் ஸ்மரித்து வேண்டிக் கொண்டு மந்திரங்கள் சொல்லி புனித நீரால் ஆசமனம் பண்ணிவிட்டு ராணியை பார்க்க சென்றான். ராணி கண்ணில் பட்டாள் .
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

