siva thandava sthothram j k sivan

சிவ தாண்டவ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN

மார்கழி விடியற்காலை. நாராயணனையும் நடேசனையும் பக்தர்கள் மாதமுழுதும் அதி காலையில் தொழும் நேரம். ராவணேஸ்வரன் பாடி வீணை இசைத்து கைலாச பர்வதத்தையே அசைக்கிறான். அவன் முயற்சியை ஒரு கால் கட்டைவிரலாலேயே தோல்வியுறச்செய்தான் பரமேஸ்வரன். அப்போது தான் சிவனின் சர்வ சக்தியை ராவணன் உணர்கிறான். தனது தெய்வத்தை வாயார போற்றி பாடுகிறான்.. அதுவே இந்த ஸ்தோத்ரம். மார்கழி அதிகாலையில் நாமும் ஒரு தரமாவது படிப்போம். உச்சரிப்போம். வணங்குவோம்.

ராவணன் ஒருவனைத்தான் அசுரர்களில் ஈஸ்வரன் என்று அழைப்பார்கள். சிறந்த சிவ பக்தன். விஸ்ரவஸ் மஹரிஷியின் மகன். தாய் ராக்ஷஸ குல கைகசி , இன்னொரு கைகேசி ராமாயணத்தில் ! பல ஆயிரம் வருஷங்கள் கடும் தவம் இருந்து அழியா வரம் பெற்றவன். மனிதர்களால் மரணம் இல்லை என்று கேட்க மறந்துவிட்டான். மஹா விஷ்ணு ராமனாக, மானிடனாக, ராஜ வம்சத்தில், அயோத்தி மன்னன் தசரதன் பிள்ளையாக அவதரித்து அவனைக் கொன்றார். ராவணன் மகேஸ்வரனை சாம கானத்தால் மகிழச்செய்தவன். ராவணன் இயற்றிய ஒருஅற்புத ஸ்தோத்ரம் ”சிவ தாண்டவ ஸ்தோத்ரம்”
அதை அர்த்தத்தோடு கீழே தருகிறேன்.

1. जटाटवीगलज्जल प्रवाहपावितस्थले गलेऽवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकाम्। डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्॥

Jatāṭavī-gala-jjala-pravāha-pāvita-sthale Gale’valambya lambitāṃ bhujanga-tuṅga-mālikām। Ḍamaḍ ḍamaḍ ḍamaḍ ḍama-nnināda-vaḍḍa-marvayaṃ Chakāra chaṇḍa-tāṇḍavaṃ tanotu naḥ Śivaḥ śiva

”ஆஹா, பரமசிவன் எவ்வளவு அற்புதமாக தாண்டவமாடுகிறார். ஜடாமுடியிலிருந்து கங்கை கீழே வழிகிறாள். அவருடைய நீலகண்ட கழுத்தில், சர்ப்பம் ஒன்று மாலையாக சுற்றிக்கொண்டு சந்தோஷமாக கண் உறங்குகிறது. அவர் கையில் உள்ள டமருகம் எனும் உடுக்கை மந்த்ர சப்தங்களை தாண்டவத்துக் கேற்ப ஒலிக்கிறது. சிவனும் அதில் லயித்து தனைமறந்து தாண்டவமாடுகிறார். அந்த சந்தோஷத்தோடு நம்மையும் வாழ்த்துகிறார்.

2. जटाकटाहसंभ्रम भ्रमन्निलिम्पनिर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि। धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिः प्रतिक्षणं मम॥
Jatā-kaṭāha-sambhrama-bhraman-nilimpa-nirjharī Vilola-vīchi-vallari-virājamāna-mūrdhani। Dhagad-dhagad-dhagaj-jvalal-lalāṭa-paṭṭa-pāvake Kishora-chandra-śekhare ratiḥ pratikṣaṇaṃ mama॥

நான் என்றும் சிவபக்தன் தான். என் தலைவன் தலையில் கங்கை கொப்புளித்து அலை அலையாக ஆடுகிறாளே . ஆஹா அவர் நெற்றியால் தான் எப்படி சிவந்த அக்நி ஜ்வாலை யோடு ஒரு நேத்ரம். அதற்கு நேர் மாறாக குளிர்ந்த தண்மையான பிறைச்சந்திரனும் சிரத்தில் காண்கிறான்.

3. धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर स्फुरद्दिगन्तसन्तति प्रमोदमानमानसे। कृपाकटाक्षधोरणी निरुद्धदुर्धरापदि क्वचिद्दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि॥

Dharādhara-indra-nandinī-vilāsa-bandhu-bandhura Sphurat-diganta-santati-pramoda-māna-mānase। Kṛpā-kaṭākṣa-dhoraṇī-niruddha-durdharāpadi Kvacid-digambare mano vinodam-etu vastuni॥

என் மனது ப்ரபஞ்சத்தின் திகம்பரத்தில், திளைக்கட்டும் . அதல்லவோ ப்ரம்மம், என் சிவன், அவனின் பாகமல்லவோ பார்வதி தேவி. அவள் அல்லவோ எல்லா உயிரும் போற்றும், உலகத்துயர் தீர்க்கும் காருண்ய லோகமாதா, அவன் சிந்தை நிறைந்த சக்தி .

4. जटाभुजङ्गपिङ्गल स्फुरत्फणामणिप्रभा कदम्बकुङ्कुमद्रवप्रलिप्तदिग्वधूमुखे। मदान्धसिन्धुरस्फुरत्त्वगुत्तरीयमेदुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरि॥

Jatā-bhujanga-piṅgala-sphurat-phaṇā-maṇi-prabhā Kadamba-kuṅkuma-drava-pralipta-dig-vadhū-mukhe। Madāndha-sindhu-rasphurat-tvag-uttarīya-medure Mano vinodam-adbhutaṃ bibhartu bhūta-bhartari॥

என் பிரான், கஜாசுரனை வதம் செய்து, அவன் தோலை ஆடையாக உடுத்தியவன். அவன் தேகத்தில் மாணிக்கங்கள் ஒளிவிடும் சிரம் கொண்ட நாகங்கள் படமெடுத்தாடும் அழகை என்ன சொல்வேன். அவனால் எண் திக்கிலும் சந்தன மணம் கமகம என சிந்தை கிரங்க வைக்கிறதே.

5. सहस्रलोचनप्रभृत्यशेषलेखशेखर प्रसूनधूलिधोरणी विधूसराङ्घ्रिपीठभूः। भुजङ्गराजमालया निबद्धजाटजूटकः श्रियै चिराय जायतां चकोरबन्धुशेखरः॥

Sahasra-lochana-prabhṛtya-śeṣa-lekha-śekhara Prasūna-dhūli-dhoraṇī-vidhūsarāṅghri-pīṭha-bhūḥ। Bhujanga-rāja-mālayā nibaddha-jāta-jūṭakaḥ Śriyai chirāya jāyatāṃ chakora-bandhu-śekharaḥ॥

சிவபிரானின் ஜடாமுடியை அழகாக ஒரு சிவந்த நாகம் சுற்றிக்கொண்டு அழகு அழகு சேர்க்கிறதே. அவன அவன் திருப்பாதங்களில் விழுந்து வணஙகும் பிரம்மாதி விஷ்ணு தேவர்கள் சிறப்ங்களில் இருந்து உதிர்ந்த மலர்கள் மலையுமாக குவிந்து பாதத்தையே மறைத்து விடுகிறதே. அவன் திரும்பும்போதெல்லாம் எவ்வளவு அழகாக அந்த வெள்ளி நிற கண்கூசும் பிறைச்சந்திரன் ஜொலிக்கிரான்.

6. ललाटचत्वरज्वलद्धनञ्जयस्फुलिङ्गभा निपीतपञ्चसायकं नमन्निलिम्पनायकम्। सुधामयूखलेखया विराजमानशेखरं महाकपालिसम्पदे शिरोजटालमस्तु नः॥
Lalāṭa-chatvara-jvalad-dhanañjaya-sphuliṅga-bhā Nipīta-pañca-sāyakaṃ naman-nilimpa-nāyakam। Sudhā-mayūkha-lekhayā virājamāna-śekharaṃ Mahā-kapāli-sampade śiro-jaṭālam-astu naḥ॥

என்னப்பனின் ஜடாமுடி தரிசனம் சித்தி அளிக்கட்டும். வெற்றி தரட்டும். நெற்றிக்கண் திறந்து ஒரு துளி அக்னியால் மன்மதனை எரித்தவன், சந்திர சூடன், எல்லா தேவதைகளாலும் வணங்கப்படுபவன்.

7. करालभालपट्टिकाधगद्धगद्धगज्ज्वल द्धनञ्जयाहुतीकृत प्रचण्डपञ्चसायके। धराधरेन्द्रनन्दिनी कुचाग्रचित्रपत्रक प्रकल्पनैकशिल्पिनी त्रिलोचने रतिर्मम॥
Karāla-bhāla-paṭṭikā-dhagaddha-gaddha-gajjvala Dhanañjaya-āhutīkṛta prachaṇḍa-pañcha-sāyake। Dharādhara-indra-nandinī-kuchāgra-chitra-patraka Prakalpanaika-śilpinī trilochane ratir mama॥

த்ரிநேத்ரன் எனப்படும் முக்கண்ணனை வண்ணங்கி மகிழ்கிறேன். தெய்வீக அன்போடு பாசத்தோடு உமாதேவி அவனில் சரிபாதியாக கருணையை வாரி வழங்குபவள்.

8.नवीनमेघमण्डली निरुद्धदुर्धरस्फुरत् कुहूनिशीथिनीतमः प्रबन्धबद्धकन्धरः। निलिम्पनिर्झरीधरस्तनोतु कृत्तिसिन्धुरः कलानिधानबन्धुरः श्रियं जगद्धुरन्धरः॥

Navīna-megha-maṇḍalī-niruddha-durdhara-sphurat Kuhū-niśīthini-tamaḥ prabandha-baddha-kandharaḥ। Nilimpa-nirjharī-dharaḥ stanotu kṛtti-sindhuraḥ Kalā-nidhāna-bandhuraḥ śriyaṃ jagad-dhurandharaḥ॥

என் தெய்வம் மஹாதேவன், குளிர்ந்த கங்கையை ஜடாமுடியில் தரித்தவன். யானைத்தோல் உடுத்தவன்.
ஹாலஹால விஷத்தை நெஞ்சில் சுமந்த நீல கண்டான். சர்வ சுகமும் மங்களமும் அருள்பவன்.

9. प्रफुल्लनीलपङ्कज प्रपञ्चकालिमप्रभा वलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरम्। स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदान्धकच्छिदं तमन्तकच्छिदं भजे॥
Praphulla-nīla-paṅkaja prapañcha-kālima-prabhā Valambi-kaṇṭha-kandalī-ruchi-prabaddha-kandharam। Smarachchhidaṃ purachchhidaṃ bhavachchhidaṃ makhachchhidaṃ Gajachchidāndhaka-chchhidaṃ tam-antaka-chchhidaṃ bhaje॥

மதனை எரித்தவன் திரிபுராந்தகன். காலனுக்கு காலன் . நீலத்தாமரை போன்ற கழுத்துடைய நீலகண்டன் நமக்கருள்வான்.

10. अखर्वसर्वमङ्गला कलाकदम्बमञ्जरी रसप्रवाहमाधुरी विजृम्भणामधुव्रतम्। स्मरान्तकं पुरान्तकं भवान्तकं मखान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे॥
Akharva-sarva-maṅgalā-kalā-kadamba-mañjarī Rasa-pravāha-mādhurī-vijṛmbhaṇā-madhuvratam। Smarāntakaṃ purāntakaṃ bhavāntakaṃ makhāntakaṃ Gajāntakāndhaka-kāntakaṃ tam-antaka-kāntakaṃ bhaje॥

ஆசை, கர்வம், மாயை, மரணம் சகலமும் வென்ற சர்வேஸ்வரன். தெய்வீக கலைகள் சகலமும் தன்னுள் கொண்டு தேன் போல் இனிப்பவனை பக்தர்கள் தேன் தேடும் வண்டாக சுற்றி வணங்குவதில் என்ன ஆச்சர்யம். அவனை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறேன்.

11. जयत्वदभ्रविभ्रमभ्रमद्भुजङ्गमस्फुर- धिग्धिग्धि निर्गमत्कराल भाल हव्यवाट्। धिमिद्धिमिद्धिमिद्ध्वनन्मृदङ्गतुङ्गमङ्गल- ध्वनिक्रमप्रवर्तित प्रचण्डताण्डवः शिवः॥

Jayatv-ad-abhravibhrama-bhramad-bhujanga-maśvasan Dhigdhigdhi nirgamat-karāla-bhāla-havyavāṭ। Dhimid-dhimid-dhimid-dhvanan-mṛdaṅga-tuṅga-maṅgala Dhvanikrama-pravartita-prachaṇḍa-tāṇḍavaḥ Śivaḥ॥

பரமேஸ்வரா சுபிக்ஷம் தருபவனே. உனது தாண்டவத்துக்கு உஸ்ஸ் என்று சர்ப்பங்கள் படமெடுத்து ஆடி களிக்கின்றனவே. எண்டிசையிலும் உனது உடுக்கை மந்த்ர சப்தம் எதிரொலிக்கிறதே. எங்கும் மகிழ்ச்சியோடு வணங்கும் தேவாதி தேவர்கள் முகங்கள் காண்கிறதே.

12. दृषद्विचित्रतल्पयोर्भुजङ्गमौक्तिकस्रजोर् गरिष्ठरत्नलोष्ठयोः सुहृद्विपक्षपक्षयोः। तृणारविन्दचक्षुषोः प्रजामहीमहेन्द्रयोः समं प्रवर्तयन्मनः कदा सदाशिवं भजे॥
Dṛṣad-vichitra-talpayor-bhujanga-mauktika-srajor Gariṣṭha-ratna-loṣṭhayoḥ suhṛd-vipakṣa-pakṣayoḥ। Tṛṇāravinda-chakṣuṣoḥ prajā-mahī-mahendra-yoḥ Samaṃ pravartayan-manaḥ kadā sadāśivaṃ bhaje॥

அபேதமாக நான் என்று உன்னை மனமார தரிசித்து வணங்குவேன். சப்ரமஞ்ச காட்டிலும் ஒன்று சுடுகாட்டு கட்டாந்தரையும் ஒன்றே. மண்ணும் பொன்னும் ஒன்று. எதிரியும் நண்பனும் வேறல்ல. புல்லும் பொற்றாமரையும் ஒன்றே. அரசனும் ஆண்டியும் ஒன்றே பிரபஞ்சத்தின் அசைவுகளை தன்னுடைய தாண்டவத்தால் கண்காணிக்கும் நடராஜா உனக்கு நமஸ்காரம்.

இந்த நடராஜ தாண்டவ ஸ்தோத்ரத்தை விடிகாலையில் ப்ரம்ம முஹுர்த்தத்த்தில் (4-6 am) சொல்பவர்கள் பாக்கியசாலிகள். n. .

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;