KUCHELA DAY J K SIVAN

குசேலன் தினம் – நங்கநல்லூர் J K SIVAN
இன்று டிசம்பர் 14, குசேலர் தினமாக வடக்கே அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெற்கே சில கிருஷ்ணன் கோவில்களில் இது விசேஷ தினம். குசேலன் எனப்படும் சுதாமாவும் கிருஷ்ணனும் அத்யந்த சிநேகிதர்க​ள் . சுதாமா ​அவ்வப்போது தனது வீட்டிலிருந்து அருமையான பக்ஷணங்கள் கொ​ண்டு வந்து கிருஷ்ணன் பலராமனுக்கு ஆசையாக கொடுப் பான். நண்பர்கள் சேர்ந்து ​உண்டு மகிழ்வார் கள்.
குருகுலவாசம் முடிந்தது.
பலராமனும் கிருஷ்ணனும் குருகுலவாசம் ​செய்ய சாந்திபனி ஆஸ்ரமத்துக்கு சென்றார்கள். ஆஸ்ரமம் அவந்திகாவில் இருந்தது. இப்போதைய உஜ்ஜைனி . அங்கே தான் சுதாமாவும் குருகுல வாசம் செய்ய அவர்களோடு சேர்ந்து கொண்டான்.
​குருகுல வாசம் முடிந்து கிருஷ்ணனும் பலராமனும் துவாரகை போய்விட்டார்கள். சுதாமா வீடு திரும்பி​ னான். திருமணம் நடந்தது. காலம் ஓடியது. வறுமை அவனை விடவில்லை. ​சுதாமா எனும் குசேலன் ரொம்ப பெரிய குடும்பஸ்தன்​ ஆகிவிட்டார். அவருக்கும் சுசீலைக்கும் குழந்தைகள் என்ன ஒண்ணா ரெண்டா!! 27. மினி பள்ளிக்கூடமே நடத்தலாம். இது அத்தனைக் கும் வயிறார தினமும் மூணு வேளை சாப்பாட்டுக் கே ஒரு மனிஷன் ஓவர்டைம் பண்ணி தான் சம்பாதிக்க ணும். ஆனால் சு​தாமா கொண்டு வந்த சொல்ப வருமானத்​ திலேயே சுசீலா​வும் சுதாமாவும் ​பாதி நாள் பட்டினி கிடந்து குழந்தைகளை வளர்த்து, குடும்ப​ம் ஓடியது. வீட்டில் ஒரு மணி தானியமோ அரிசியோ இல்லாத நிலையில் குழந்தைகள் பசியில் அலற, ஒருநாள் சுசீலை அழுது கொண்டே குசேலரிடம் கேட்டாள் .
”உங்கள் நண்பன் ​கிருஷ்ணன் துவாரகா ராஜாவாகி​ விட்டா​ர் என்கிறார்களே. கிருஷ்ணன் உங்கள் பால்ய நண்ப​ர் இல்லையா. ‘ரொம்ப நல்லவன். என்னைக் கண்டால் ரொம்ப பிடிக்கும்​’ என்பீர்களே அடிக்கடி. அவரைச் சென்று நேரில் பார்த்து நமது நிலையை சொல்லி கொஞ்சம் ​ நிதி, பொருள்கள் உதவி பெற்று வாருங்க​ளேன். இனிமேல் வறுமை நம்மை ஒவ்வொருவ ராக கொன்றுவிடும் என்ற நிலை வந்து விட்டது. ​ எனக்கு வேறு வழியே தெரியவில்லை..”
”சுசீலா, நான் கிருஷ்ணனோடு படித்தவன் என்றாலும் அவன் இப்போது துவாரகை ராஜா. இதுவரை நான் அவனிடம் எந்த உதவியும் கேட்டதில்லை, என் ஞாப கம் அவனுக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை. எதற்கும் நீ சொல்வதால் நான் போகிறேன். யாசகம் கேட்கிறேன்”
தரித்ரத்தின் உச்சத்தில் இருந்தாலும், வெறும் கையோடு பழைய நண்பனை எப்படி பார்ப்பது​? எங்கோ கொஞ்சம் கடன் வாங்கி நெல் பொறித்து அவல் பொட்டலம் கொடுத்து அனுப்பினாள் . மேல் துண்டில் அதை முடிந்து கொண்டு குசேலர் துவாரகை நடந்தார்.
துவாரகையில் கிருஷ்ணன் அரண்மனை வாசலில் செக்யூரிட்டி ஆட்கள் ஏற இறங்க சுதாமாவை பார்த்து
​”யாரு நீங்க, என்ன வேணும் ?” என்கிறார்கள்.
”நான் சுதாமா, உங்க ராஜா கிருஷ்ணன் என்னுடைய நண்பன். நாங்க இருவரும் ஒண்ணாகவே ஒரே வாத்யார் கிட்டே படிச்சவங்க. கிருஷ்ணனை​ப் பார்க்க வந்​திருக்கிறேன் என்று சொல்லுங்கள்”
“இந்த கிழிசல் வேஷ்டி ஆசாமி கொஞ்சம் ஸ்க்​ரூ லூஸ் போல இருக்கு, பாவம்” — காவலாளிகள் சுதாமாவை உள்ளே போக விடவில்லை .
ஒரு காவலாளி மட்டும் உள்ளே சென்று ராஜாவிடம் விவரம் சொன்னான்.
”யார் வந்திருக்கிறார்? சுதாமாவா, என்னோடு படித்தவர் என்று சொன்னாரா? இதோ நானே வருகிறேன்”
மிக்க சந்தோஷத்துடன் கட்டின துணியோடு கால் செருப்பு கூட இல்லாமல் கிருஷ்ணன் வாசலுக்கு ஓடி வந்தான். வெளியே அவன் நண்பன் பரம தரித்ரன் குசேல​னாக பழைய நண்பன் சுதாமா. அப்படியே இழுத்து பிடி​த்து அவனை ஆசையாக உலுக்கி, சுதாமாவை இறுக்கிக் கட்டிக் கொண்டான் கிருஷ்ணன்.
காவலாளிகளுக்கு ஹார்ட் அட்டாக்!!!!
“ சுதாமா, நீ வருவதாக ஏனப்பா முன்கூட்டியே தகவல் சொல்லவில்லை.​ அவ்வளவு தூரம் நடந்தா வந்தாய்? தெரிவித்திருந்தால் உடனே நான் உனக்கு தேர் அனுப்பியிருப்பேனே ​சுதாமா !. ,
நண்பனைக் கட்டி அ​ணைத்து உள்ளே அழைத்து சென்று தன் கட்டிலில் அமர்த்தி அவன் புண்பட்ட​ பாதங்களை​ தங்கத் தாம்பாளத்தில் புனித நீர் விட்டு கழுவி பாத பூஜை செய்து, பட்டால் துடைத்து விட்டான் கண்ணன். பிறகென்ன. வாய் ஓயாமல் இருவரும் பழங்கதைகள் சுவாரஸ்யமாக பேசினார்கள்.
“இல்லை, கிருஷ்ணா, என்னதான் நாம் சிறுவர்களாக இருந்தபோது சாந்திபநி ரிஷியிடம் ஒண்ணாக குருகுல வாசம் செய்தாலும், நீ இப்போ ராஜா எப்போதும் ராஜ்ய விவகாரங்களில் அலைந்துகொண்டு பிரயாணத்தில் இருப்பவன்.
உன்னை ஒரு சாதாரணன் நான் எப்படியப்பா பழைய ஸ்நேஹிதத்தை சாக்காக வைத்து உறவு கொண்டாட முடியும்.??”
“சுதாமா, நீ இப்போ வேறே சுதாமாவாக மாறிவிட்டா யா?. நான் உன்னை என்றும் என் பால்ய நண்பனாக அல்லவோ பார்க்கிறேன்!!.
“கிருஷ்ணா, நானும் மாற வில்லையடா. நம் வாழ்க்கை தரம் தான் நடுவில் ரொம்ப தூரத்தை……”
“நிறுத்து சுதாமா, வித்தியாசம் மனதில் தான் உண்டாகி றது இயற்கையில் இல்லை. உனக்கு தெரியாததையா நான் சொல்லபோகிறேன்”.
“அது சரி, நீ எனக்கு அப்போதெல்லாம் ஏதாவது உன் வீட்டிலிருந்து தினமும் சாப்பிட கொண்டு தருவாயே. இன்று என்ன கொண்டு வந்தாய்?”
சுசீலா கட்டிகொடுத்த சிறு அவல் பொரி மூட்டையை இதுவரை மறந்தோ அல்லது எப்படி இதை ஒரு ராஜா​ வுக்கு கொடுப்பது என்​று தயங்கியோ, தெரிந்தும் கொடுக்காமல் ​ சுதாமா இடுப்பில்​ மறைத்து வைத்தி ருந் ததை கண்ணன் பார்த்து விட்டான்.
”எப்போதும் உன் வீட்டிலிருந்து ​ எனக்கு ஏதாவது ​தின்பதற்கு கொண்டு வந்து கொடுப்பா​யே , இன்று என்ன கொண்டு​ வந்திருக்கிறாய் சுதாமா?”
உரிமையோடு ​ தானே சுதாமாவின் இடுப்பு வேஷ்டி​ முடிச்சிலிருந்து அவிழ்த்து பிரித்து அவலை ஒரு வாய் உண்டான் கிருஷ்ணன்..
“எனக்கில்லையா” என்று ருக்மணி உள்ளேயிருந்து ​ ஓடி வந்து மீதியை கிருஷ்ணன் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டாள்.
“ருக்மணி, உனக்கு தெரியுமா எப்போதும் சுதாமா தான் எனக்கு ஏதாவது கொடுப்பான் நான் ஒன்றுமே அவனுக் கு​ கொடுத்ததில்லை” என சிரித்தான் கிருஷ்ணன்.
ஒரு சில​ நாட்கள் கிருஷ்ணனுடன்​ சேர்ந்து தங்கி இருந்து விட்டு சுதாமா​ ஊருக்கு புறப்பட்டான் கிருஷ்ண​ னின் தேர்பாகன் அவனை ஊரில் கொண்டுவிட்டான்.​ தனது வீடு நெருங்கும் சமயம் தான் சுரீர் என்று தேள் கொட்டியது சுதாமாவுக்கு.
“ அடாடா, சுசீலா கிருஷ்ணனிடம் நிதி​, பொருள் உதவி கேட்க சொன்னாளே. அதற்காக தானே கிருஷ்ண​ னிடம் சென்​றேன். அதை விட்டு வேறு ​ கதையெல்லாம் பேசி விட்டு வெறுமனே வீடு திரும்பினேனே! ​’கிருஷ்ணா​, நான் உன்னிடம் எப்படியடா ​யாசகம் கேட்பேன்​?. வெட்கம் பிடுங்கி தின்றதே எனக்கு”​ என கண்ணீர் வடித்தார் சுதாமா . வீட்டின் வரும் நிலையை நினைத்ததும் தலையை சுற்றியது. கவலை…
​”ஐயா உங்கள் வீடு எங்கே இருக்கிறது? எந்த வீட்டின் முன்​ தேரை நிறுத்துவது​?”
தேர் பாகன் கேட்ட போது சுதாமாவும் அவனோடு சேர்ந் து தன் வீட்டைத் தேடினான்!!. அவனுக்கு ​ மீண்டும் தலைசுற்றியது ​இப்போது தலை சுற்றல் வறுமைக்கு கவலையால் இல்லை. சுதாமாவின் பழைய ஓட்டுவீடு இருந்த இடத்தில் இப்போது ஒரு பெரிய மாளிகை.​ அவர் குழந்தைகளும் சுசீலாவும் புத்தாடை நகைகள் எல்லாம் அணிந்து வெளியே வந்து அவ​ரை குதூகலத்தோடு வரவேற்றனர் அப்போது தான் சுதாமாவுக்கு கிருஷ்ணன் ருக்மணியிடம் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.​ ”’ ருக்மணி, உனக்கு தெரியுமா​? எப்போதும் சுதாமா தான் எனக்கு ஏதாவது கொடுப்பான் நான் ஒன்றுமே அவனுக்கு​ கொடுத்ததில்லை….”
நல்லவேளை ருக்மணி கிருஷ்ணன் மொத்த அவலை யும் சாப்பிட விடாமல் ​ஒரு வாய் அவள் மாட்டு சாப்பிட வைத்துவிட்டு மீதியை எடுத்து​ச் சென்றுவிட்டாள்.​ ஒருவாய் அவலுக்கே இவ்வளவா? மீதியையும் கிருஷ் ணன் சாப்பிட்டிருந்தால்…இனிமேலும் என்னால் ​ இந்த பாரம் சுமக்க முடியாது என நினைத்தா​ர்
சுதாமா.
​ இறைவனுக்கு நாம் ​,எல்லோருமே என்றும் குழந்தைகள் தான். நாம் ஒரு அடி அவனை நோக்கி வைத்தால் அவன் பல அடிகள் நம்மை நோக்கி வருகிறான்.​ சின்ன வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது நம்மோடு கூட படித்த வர் கள்​ சிலர் பெயர்​கள் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிற​து.
துவாபர யுகத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லை. கல்வி ​ஆசார்யன் வீட்டில் அவருடைய குடும்பத்தோடு தங்கி அவருக்கு சேவை செ​ய்து ​ பல வருஷங்கள் அவர் கற்பித்தது தான் பாடம். அது தான் சிலபஸ்​ SYLLABUS
பரிக்ஷைகள் மார்க்​ செர்டிபிகேட் எதுவும் கிடையாது.​ அப்படியென்றால் ஒரு மாணவன் பாஸ் ​ செய்தது
எப்படி தெரியும்?
​ஆசார்யன் ஒருநாள் மாணவனைக் கூப்பிட்டு சொல்வார்; ”பையா, எனக்குத் தெரிந்ததை எல்லாம்​ நான் உனக்குக் கற்று தந்துவிட்டேன், இனி நீ வேறு யாரிடமாவது சென்று மேற்கொண்டு வித்தைகளை கற்றுக்கொள். என் ஆசிகள் உனக்கு” என்று அனுப்பி விடுவார்.​
இத்தனை காலம் அவரோடு வீட்டில் தங்கி அவரிடம் கற்ற கல்விக்கு மாணவன் ஏதாவது தன்னாலான சம்பாவனை​யை குருவுக்கு கொடுத்து​விட்டு நமஸ்கரி​த்து அவர் ஆசியோடு புறப்படுவான்.
நமது குடும்பங்களில் நூறு வருஷங்களுக்கு முன்னால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்து உருப்படிகளாக இருக்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம்.​ குழந் தைகள் ஆறு ஏழுக்கு குறைவில்லாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தது. பத்து பன்னிரண்டு குழந்தை கள் என்பதெல்லாம் சாதாரண விஷயம். மருத்துவ விஞ்ஞானம் வளராத காலத்தில் பாதிக்கு மேல் இளம் வயதிலேயே மரணம் நம்பரைக் குறைத்து ஆறு ஏழு என்று ஆக்கி விட்டது. சிசு மரணத்தைத் தடுக்க அவர் களுக்கு தெரிந்த ஒரு வழி குழந்தைகளுக்கு பிச்சை, வேம்பு, குப்பு, குப்பம்மா, பிச்சம்மா, மூக்காண்டி​, ​மண்ணாங்கட்டி, என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பது.
பேர் கொஞ்சம் இது போல் அட்ரேக்ஷன் ATTRACTION இல்லாமல் இருந்தால் எமன் அருவருப்புடன் கிட்டே வரமாட்டான். குழந்தை தப்பித்துக் கொள்ளும் என்று நம்பினார்கள். இதெல்லாம் மறைந்து போய் இப்போது ‘ஷ் ஷ்’ என்று முடியும் பல பேர்களில் குழந்தைகள் வளர்கிறார்கள். நாம் இருவர் நமக்கொருவர் என்று குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;