IDENTIFY YOUR ENEMY NO. 1 J K SIVAN

இதோ உன் எதிரி – நங்கநல்லூர் J K SIVAN
எவ்வளவு தான் வளர்ந்தாலும் விஞ்ஞானத்தால் கண்டு பிடிக்க முடியாத ஒரு விஷயம் எது?ஒரு மனிதன் எப்போது எந்த மன நிலையில் இருப்பான், என்ன பேசுவான், அவன் குணம் எப்படி இருக்கும் என்பது அவனுக்கே தெரியாதே. விஞ்ஞானம் எப்படி கண்டு பிடிக்கும். நொடிக்கு நூறு மாறுவது தான் மனித குணம். ஓயாத அலை கடல்.
சாம்பசிவத்துக்கு தன்னையே பிடிக்காது. அப்படியிருக்கும்போது அவனுக்கு யாரைக் கண்டாலும் ஏதாவது ஒரு குறை அவர்களிடம் கண்டு பிடிப்பான்.
பளிச்சென்று முகத்தில் அடித்தால் போல பேசிடுவான்..
”கோபு, உனக்கு மொட்டை கோபுரம் பக்கத்து வீடு பாலுசாமியை தெரியுமில்லையா?
”ஆமாம்” ரொம்ப நல்லவர் ஆச்சே செட்டியார்”
”நீதான் மெச்சிக்கணும். அந்த பாலு ரொம்ப மண்டைக் கனம்,திமிர் பிடித்தவன்”.
” ஏன் உன்னை என்ன பண்ணினார்?
”பச்சை கலர்லே ஒரு சைக்கிள் ஒட்டிண்டு வந்து என் எதிர்லே அதிலே உட்கார்ந்துண்டே பேசினா என்னடா அர்த்தம் ?”
‘அதிலே என்ன சாம்பசிவம் தப்பு? அவர் சைக்கிள் மேலே தானே அவர் உட்கார்ந்தார். உன்னோடு பேசி
னது தப்பா ?’
”சைக்கிள் விலை அறுநூறு ரூபான்னு ஆறு தடவை சொல்லி ட்டானே”.
” நீ காசு கொடுக்கலியே, அவர் தானே காசு கொடுத்து வாங்கினார் . அவர் கொடுத்ததை அவர் சொன்னா என்ன தப்பு ?
”அவன் வாங்கினா? .. அதுக்காக,. டம்பமா எதுக்கு எல்லார்கிட்டயும் சொல்லணும்? திமிர் திமிர்”.
இது ஒரு சின்ன உதாரணம். இதுபோல் பொழுது விடிந் தால் முடியும் வரை யாரைப் பற்றியாவது எதைப் பற்றியாவது ஒரு குறை சொல்வான் சாம்பசிவம்.
.சாம்பசிவம் போன்ற மனிதர்கள் ஒரு பெரிய கடலில் ஒரு அலை . நம்மிடையே நிறைய சாம்ப சிவம்கள்
இருக்கிறார்கள். சந்தோஷம் என்றால் என்ன வென்றே தெரியாமல், தானும் எப்போதும் நொந்து கொண்டு
மற்றவர்களையும் துன்பப் படுத்துபவர்கள். சமூகத்தில் இவர்கள் பாவம் துர்பாக்ய சாலிகள். ஆங்கிலத்தில் NEGATIVE MINDSET என்போமே அந்த வகை ‘நொந்து சாமிகள்.’.
எதிர்மறை மனோநிலை. குறுகிய மனப்பான்மை. மனத்தடைகள் இவை யெல்லாம் தான் ஒருவனுடைய மகிழ்ச்சியைக் கடித்து மென்று தின்பவை. நிறைய பேர் புஸ்தகம் படிப்பார்கள், படம் பார்ப்பார்கள்,சிலர் விறுவிறுப்பான கதைகள் தேடுபவர்கள் , சிலர் சங்கீதம் ரசிப்பவர்கள். அவர்களால் மேலே சொன்ன மன இறுக் கத்தை ஒரு விதத்தில் சமாளிக்க முடியும்.
சீரான வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழ்பவனுக்கு சந்தோஷம் கிட்டும். சந்தோஷத்தோடு வெற்றியும் கிட்டும். வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ளா மல் களேபரமாக்கிக்கொண்டு சந்தோஷத்தை யும் வெற்றியும் மட்டும் தேடினால் எந்த ஜென்மத்திலும் அது கிட்டாது.
மற்றவர்களோடு பேசும்போது, உன்னைப்பற்றியே உயர்வாக பேசுவது தவறு. ஒவ்வொருவருக்கும் அவரவர் பற்றி உன்னைவிட அதிக உயர்வான அபிப்ராயம் இருக்கலாம் இல்லையா?. அங்கே தான் நட்பு முறிகிறது.
ஒவ்வாருவருக்கும் அவருக்கென்று எந்தவிஷயத்தைப் பற்றியும் தனியாக ஒரு அபிப்ராயம், சிந்தனை உண்டே. அது உன்னுடையதோடு ஒத்து போகாதே. உன்னிடம் பேசிக்கொண்டிரும்போது மற்றவன் மனதில் நடக்கும் யுத்தம் பற்றி உனக்கு என்ன தெரியும்? அதை மூடி மறைத்து அல்லவோ உன்னிடம் நேரத்தை செலவழித் துக் கொண்டிருக்கிறான். அவனை மதிக்கத் தெரிய வேண்டாமா?
ஒருவன் சந்தோஷமாக இருப்பது அவனவன் கையில் தான் இருக்கிறது. என்பதை விட அவன் தேடும் சந்தோஷம் அவன் மனதில் இருப்பதை அவன் அறியா தவன் என்று சொல்லலாம். மனதில் தோன்றும் எந்த எண்ணத்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம், லாபம்? என்று தீர்மானிப்பதை விட, இதனால் யாருக்கு லாபம்?என்று கொஞ்சம் விசாலமாக எண்ணும் பழக்கம் வேண்டும்.
வார்த்தைகளை வைத்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது. செயலில் தான் வார்த்தையின் பலம் புரியும். நான் ஒரு புத்தகம் எழுதப்போகிறேன் என்று சொன்னால் அதை எத்தனை பேர் முக்யமாக கருதுவார்கள்? யாருக்கு அதனால் பயன்? என்பது அல்லவோ முக்கியம். அதை உண்மையில் படித்து ஒருவர் பயன் அடைந்தால் அந்த முயற்சி வெற்றிகரமானது எனலாம். மற்றவர்களின் உதவி, தானாகவே கிடைக்கும். அப்படிக் கிடைத்து தானே இதுவரை எங்களது ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்டின் 30-35 புத்தகங்களை விலையே போடாமல் வெளி வந்திருக்கிறது. நன்கொடையில் தான் புத்தகம் அச்சிடுகிறோம். இதை ஒரு விஷய தான பணியாக மனதிருப்தியுடன் அன்றாடம் 18-19 மணி நேரம் செய்து வருகிறேன்.
‘உன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் உனக்கு வெற்றி யை தரும்படியாக நீ உழைக்கவேண்டும். அந்த வெற்றி பிறருக்கு அதனால் நீ எதிர்பார்த்த பயனைத் தர வேண்டும். அது ஒன்றே உன் உழைப்பின் ஊதியம், ரஹஸ்யம். . உனக்கு மகிழ்ச்சி தரும். உனக்கே திருப்தி இல்லாமல் நீ செய்யும் எந்த செயலும் நீயே உன் நேரத் தையும், மற்றவர் நேரத்தையும் வீணடிப்பது ஆகும். உனக்கே திருப்தி தராதது பிறருக்கு எப்படி திருப்தி அளிக்கமுடியும்.? வெற்றி உனக்கு கிட்டாமல் செய்து விடும்.
உன்னை மற்றவர்கள் ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்கின்ற உன் எதிரி, வில்லனை, உனக்குத் தெரியு மா? தெரிந்து கொள்ள விருப்பமா? உன் முதல் எதிரி யை நீ தெரிந்து கொள்ள வேண்டுமானால் உடனே ஒரு முழு நிலைக் கண்ணாடி எதிரில் நின்று கண்ணை விழித்து பார்.அங்கே தெரிபவன் யார் என்று அடையா ளம் கண்டுகொள். ஜாக்கிரதையாக நடந்துகொள். அவன் சொற்களை, செயல்களை சதா கண்காணி. அப்புறம் தப்பு பண்ண மாட்டான்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;