NAMA DEV J K SIVAN

நாம தேவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN
கடவுளோடு  பேச முடியுமா? கடவுளைப்  பார்க்க முடியுமா? இந்த கேள்வி ஆதி காலம் முதல் இன்று மாலை வரை கேட்கப்பட்டாலும் இதற்கு விடை.  ‘ஓ’ முடியுமே’  என்பது தான்.  நீ பார்த்திருக்கிறாயா? என்று கேட்டால். ”பார்த்திருக்கிறேன்  என்று  பொய்  தான் சொல்ல வேண்டும். ஆனால்  கடவுளை நேரில் பார்த்து பேசிய பலர்  இருக்கிறார்கள். இருந்தார்கள்.
கோனை கோபமாக  பண்டரிநாதன் கோவிலுக்குள் சென்று அவன் எதிரில் நின்றாள்.  அவள் கோபமாக  தன்னோடு சண்டை போட வருகிறாள் என்று பாண்டுரங்கனுக்கு நன்றாக தெரியுமே.
தன்னோடு இருந்த  நாமதேவரிடம்  ” நாமா  நீ என் பின்னால்  போய் நின்று கொள் ” என்று உத்தரவிட்டான் விட்டலன்.

”விட்டலா, என்ன  செய்கிறாய் நீ?   என்னைப்  பார்த்து பதில் சொல்.  என் மகன்  நாமா,   உன்மேல் எவ்வளவு கடலளவு பாசமும் பக்தியும்  கொண்டவன். வேறு ஒன்றுமே  அறியாதவன். அதனால் எங்கள் குடும்பம் படும்  கஷ்டத்தை கொஞ்சமாவது  நீ  உணர்கிறாயா?  குடும்ப நினைவே இல்லாமல்  உன்னையே நினைத்து இங்கே உன்னோடு அவன்  பழியாக கிடைப்பதால் அங்கே  நாங்கள் எல்லோரும்  பசி பட்டினியால் வாடுகிறோம். குடும்பம்  தத்தளிக்கிறது. அவனும் ஒரு சுகமும் அறியாதவனாக பரம தரித்ரனாக தானே  இருக்கிறான்? ஏன்?  உன்னைத் தவிர  வேறு எந்த சிந்தனையும் மனதில் இல்லாததால் தானே?விட்டலா  நாமா, உன் காலையே கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறான்.  ஊரில் எல்லோரும் எங்களை பார்த்து நாமா உதவாக்கரை, என்று  சிரிக்கிறார்கள்.”ஏன் அவன் மனதை அப்படி மாற்றினாய்?  அதனால் அவதிப்படுவது குடும்பத்தில் எல்லோருமே அல்லவா? நான் அறிந்தவரை உன்னைத்  தஞ்சம் அடைந்தவர்கள் எவருமே  குடும்பத்தை,  உலகத்தை,  தியாகம் பண்ணியவர்களாகவே  இருக்கிறார்கள். என் வீட்டில் நாமா மனைவி, குழந்தைகளைப் போய்ப்  பார். உடலில் உயிர்  ஒன்று தான் இன்னும் போகாமல் ஊசலாடிக்  கொண்டிருக்கிறது.  என் மகன் நாமாவை நீ பிடித்து வைத்திருப்பதால் நாங்கள் அனைவரும் பஞ்ச பரதேசிகளாகி விட்டோம் விட்டலா.  பத்து மாசம் சுமந்து பெற்ற  என் நாமாவை  என்னிடமிருந்து பிரித்து விட்டாயே. ஏன் இந்த பாரபக்ஷம் உனக்கு?.  சுதாமா  என்ற குசேலன் எங்களைப்  போன்ற நிலையில் இருந்தவன் உன்னைப்   பார்க்க துவாரகை  நடந்து வந்தவன் ஒரே ஒரு பிடி அவலை  மட்டுமே  கொண்டு  வந்தான். வேறு அவனிடம் எதுவும் இல்லை. அதற்கு பரிசாக அவனுக்கு நீ என்ன வெல்லாம்  அளித்தாய்?.  தங்க மாளிகை, வைர வைடூர்ய ஆபரணங்கள், எதேஷ்டமாக  ஆடை அணிகலன்கள், உணவுப் பொருள்கள் …
ராமனாக இருந்தபோது  விபீஷணனுக்கு அருள் புரிந்தாய். திரௌபதிக்கு தக்க சமயத்தில் ஒரே ஒரு கீரையை  உண்டுவிட்டு  துர்வாசர், அவருடைய ஆயிரக்கணக்கான  சிஷ்யர்கள் எல்லோர் வயிற்றையும் நிரப்பினாய். ஆனால்  எங்கள் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கூட  உன் கருணையில்லாத மனம் தான் தெரிகிறது…”
விட்டலன் சிரித்தான்.  ”அம்மா நீ ஏன் என் மேல்  தேவையில்லாமல், காரணமில்லாமல் கோபம் கொள்கிறாய்.  உன் பிள்ளை நாமதேவன் தனக்கு எதுவும் வேண்டாம் என்று வெறுத்து என்னைப்   பிடித்துக் கொண்டிருக்கிறான். நாங்கள் நல்ல நண்பர்கள்.  நீ  நாமாவை உன் பிள்ளையாக மட்டுமே பார்க்கிறாய். எங்களை பிரிக்க எண்ணுகிறாய். சரி உன் பிள்ளையை கூட்டிக் கொண்டு போ. செடியில் ஒரு  கொடியில் ஒரு காய் கனிந்து பழமாகிறது.எங்கோ வீசும் ஒரு  பலமான காற்று பழத்தை செடியின்  கொடியிலிருந்து பிரித்து கீழே தள்ளுகிறது. நீ அப்படி தான் நாமாவை என்னிடமிருந்து பிரிக்கிறாய்”.
”விட்டலா, நான் கோபப்  படவில்லை. விவசாயி பாடுபட்டு  நிலத்தில் உழுது அமோகமாக  பயிரிட்டால்  ராஜா வந்து அதெல்லாம் எடுத்துக் கொண்டு போனதுமல்லாமல்  வரியும் போடுவது போல் இருக்கிறது உன் செயல்.”
”அம்மா, உனது புண்ய கர்மாவினால் உனக்கு நாமதேவ் பிறந்தான் . என் பக்தனானான்.  அஞ்சனைக்கு  பிறந்த  மாருதி, வானரமாக இருந்தாலும்  சிறந்த ராம பக்தனானான். நாமாவும் அப்படித்தான்”.
நாமதேவர்  உலக வாழ்க்கையில் ஈடுபட்டு எல்லோரும்  போல்  பணம் சம்பாதித்து குடும்பம் நடத்தவேண்டும் என்று அம்மா  ஆசைப்படுகிறாள்….
கோனை பார்த்தாள் . விட்டலன் மசிய  மாட்டான் என்று புரிந்து  சத்யபாமாவிடமும் ருக்மணியிடமும் தன்னுடைய குறையைச் சொல்லி அழுதாள். ”
 ”தேவிகளே , இன்று  வரை  உங்கள் கணவர்  விட்டலன் மேல் எனக்கு மரியாதையும் பக்தியும் இருந்தது, அது இப்போது போய்விட்டது.என் பிள்ளையை மீட்டுக்கொடுங்கள். அவன் எல்லோரையும் போல் உலகில் வாழட்டும்.”
பிறகு  நாமதேவர் விட்டலன் பின்னால் நிற்பதைப்  பார்த்தவள்  அவருக்கு கட்டளையிட்டாள் .”நாமா இங்கே என்ன வேலை உனக்கு? எழுந்து என்னோடு வா. இந்த விட்டலன் மாயா ஜாலக்காரன். திருடன். அவன் செங்கல் மேல் நின்றாலும் எல்லோர்  வாழ்விலும்  துன்பம் தான் தருகிறான்.  நீ என்னோடு வா. நீ வராமல் நான்  இங்கிருந்து திருமப மாட்டேன்.”
விட்டலன்  அமைதியாக  பதிலளித்தான்.
 ”அம்மா,  நீ தாராளமாக நாமாவை  அவன் கையைப் பிடித்துக்கொண்டு   என்னிடமிருந்து அழைத்துப்  போ. வீணாக என் மேல் பழி போடவேண்டாம்”.
நாமா பேசாமல்  அம்மா கோனையோடு  வீட்டுக்கு நடந்தார். வழியெல்லாம்  கோனை புலம்பிக்கொண்டே வந்தாள் . நாமா, என் கண்ணே,  நீ  செய்ததை நினைத்துப் பார்.   விட்டலன் மேல் மனதை வைத்து  நமது குடும்ப  வியாபாரத்தை கவனிக்காமல் விட்டாய்.  அதில் கவனமில்லாமல்கஷ்டப்பட்டு வாங்கியும்  பொருள்களை  எல்லாம் கோட்டை விட்டாய். பெருத்த நஷ்டம் அடைந்தோம்.  இப்போது நடுத்தெருவில்   பரிதாப நிலையில் பிச்சைக்காரர்களை விட கேவலமாக உள்ளோம்.  …  நாமதேவர் கண்களில் நீர் வடிந்தது.
நாமதேவர் வீட்டில்  ராஜாயி  தனித்து இருந்தபோது என்ன நடந்தது என்று இருவருக்குமே தெரியாதே.  கேசவ் சேத்  வந்து போனது அவர்களுக்கு எப்படி தெரியும்.விட்டலன் லீலைகளை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியுமா?கோனை  தனது வீட்டு அடையாளம் தெரியாமல் திகைத்தாள்.நாம தேவர் வீடு  மாறி இருந்தது. அடையாளமே தெரியவில்லை..  உள்ளே  பலவித  வகை உணவு பதார்த்தங்கள் நிரம்பி இருந்தது.  நறுமணம்  தெருவெல்லாம்  வீசியது. ராஜாயி  பரம சந்தோஷமாக இருந்தாள் . எல்லாம்  பண்டரிநாதன் அருள் என்று வாயார போற்றினாள் . நாமதேவருக்கு இது துளியும் பிடிக்கவில்லை.   கள்ளம் கபடமற்ற ஒரு நல்ல மான் யாரோ விரித்த  வலையில் இருந்த  ஆகாரங்களை  தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என நம்பி அகப்பட்டுக்கொண்டதைப் போல  தவித்தார்.  பலத்த காற்று  அமைதியான ஒளி வீசும்  தீபத்தை  அணைத்தது போல்  வருந்தினார். கிரஹணம் பிடித்து  சூரியன் ஒளியிழந்தது போல் வாடினார்.
”அம்மா   என்ன இதெல்லாம்?, எங்கே இருந்து திடீரென்று இப்படி வசதிகள் வந்தது. எப்படி  பணம் கிடைத்து  ராஜாயி  இதெல்லாம் செய்திருக்கிறாள்?
”நாம தேவா,   எனக்கெப்படி அப்பா  தெரியும். நானும்  உன்னோடு  தானே  விட்டலனோடு இருந்தேன்.?
ராஜாயி  குறுக்கிட்டாள் . வெகு நேரமாகிவிட்டதே. இருவரும் முதலில் சாப்பிட வாருங்கள்….
மற்றவை அடுத்த பதிவில்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;