
கல்யாணத்தில் கலாட்டா
குழந்தைகளே, உங்களுக்கு தெரியுமா ஒரு அழகான கதை சினிமா? அதன் பெயர் மாயா பஜார் . 1957ல் வந்த கருப்பு வெளுப்பு படம். தமிழ் தெலுங்கு ஹிந்தி என்று பழமொழிகளில் சக்கை போடு போட்ட படம். ஸ்ரீ நாகி ரெட்டி, சக்ரபாணி கூட்டு சேர்ந்து விஜயா ப்ரொடக்ஷன் தயாரிப்பில், K. V. ரெட்டி, டைரக்ஷனில் உருவான படம். சசிரேகா பரிணயம் என்று சமஸ்க்ரிதத்தில் மஹா பாரதத்தின் ஒரு அங்கம்.
மாயா பஜார் கிட்டத்தட்ட 70 முந்தி தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருந்தது . விஜயா வாகினி நாகி ரெட்டியின் சிறந்த பரிசு அது. இதில் அற்புதமான பாத்திரங்கள் கிருஷ்ணனும் கடோத் கஜனும் தான். கிருஷ்ணனாக N T ராமராவ் கடோத் கஜனாக S V ரங்காராவ் போட்டி போட்டு நடித்த படம்.
கதை இது தான்.
துரியோதனன் மகன் லக்ஷ்மண குமரன். அவனுக்கு கிருஷ்ணனின் சகோதரன் பலராமனின் மகள் சசி ரேகாவை கல்யாணம் செய்து கொள்ள கொள்ளை ஆசை. கிருஷ்ணனுக்கோ அவளை விரும்பும், அவள் விரும்பும், அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு தான் அவள் சொந்தமாக வேண்டும் ஒரு எண்ணம். இந்த கல்யாணம் லக்ஷ்மண குமரனுக்கும் சசிரேகாவுக்கும் தான் என்று ஒருவாறு முடிவாகிவிட்டது. வனவாசத்தின் போது பாண்டவர்கள் காட்டில் அலைந்து கொண்டிருந் த சமயம் சகுனி மற்றவர்களோடு சேர்ந்து எப்படியோ பலராமன் மனதை தங்கள் பக்கம் திருப்பி அவனது மகள் சசி ரேகாவை லக்ஷ்மண குமரனுக்கு மணமுடிக்க சம்மதிக்க வைத்தனர். ஏற்கனவே துரியோதனன் பலராமனின் அபிமான சிஷ்யன். கதாயுதத்தில் துரியோதனன் பலராமனிடம் பயிற்சி பெற்றவன். இந்த திருமணம் மூலம் பலராமனின் உதவி கௌரவர் களுக்கு கிடைக்குமே!! கிருஷ்ணன் பாண்டவர்களிடம் நேசமாக இருப்பதால் பலராமனை கிருஷ்ணனிட மிருந்து பிரித்து கௌரவர்கள் பக்கம் இழுக்கவே இந்த திட்டம் என்று கிருஷ்ணன் கணித்து அவர்கள் திட்டத்தை முறியடிக்க காயை தீர்மானித்தான்.
“சுபத்ரா! நீ அபிமன்யுவோடு இடும்பவனம் செல்கிறாயா? இடும்பி வெகுநாட்களாக உன்னை அழைத்து கொண்டிருக் கிறாளே? இடும்பியின் மகன் கடோத்கஜன் தான் இப்போது அந்த காட்டரசன். அபிமன்யுவுக்கு சகோதரன். உற்ற உறவினன் ரொம்ப நல்லவனும் கூட . பிற்காலத்தில் துரியோதனாதிக
ளோடு ஒருவேளை போர் நேரிட்டால் அபிமன்யுவுக்கு ஒத்துழைக்க கூடியவனாச்சே! போய் சந்திக்க லாமே. நான் சொன்னேன் என்று சொல் அவன் உங்களுக்கு உதவ சரியானவன்.” என்று நாடகத்தை துவங்கினார் கிருஷ்ணன்.
இடும்பவனத்தில் கெடுபிடி ஜாஸ்தி. காவல் அதிகம். யாரோ அந்நியன் தேரில் வந்து கொண்டிருக்கிறான் என்று அறிந்து கடோத்கஜனின் வீரர்கள் எதிர்க்க அவர்களை அபிமன்யு கொல்கிறான். பிறகு கடோத்கஜனே நேரில் தோன்றி போர் புரிகிறான். வெற்றி தோல்வியின்றி வெகுநேரம் நடக்கும் அந்த போரில் அபிமன்யுவின் வீரம் அவனை நண்ப னாக் குகிறது. அவர்களை யார் என்று அறிந்துகொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் தனது மாளிகைக்கு அழைத்து செல்கிறான் சுபத்ரையிடமிருந்து அபிமன்யு-சசிரேகா காதலை அறிந்து எப்படியாவது தன் சகோதரனின் விருப்பம் பூர்த்தியாக தான் உதவ தீர்மானித்து கிருஷ்ணனின்ன் எண்ணமும் அதுவே என கடோத் கஜன் அறிகிறான்.
கிருஷ்ணனை வணங்கி ஆசியுடன் அடுத்து செய்ய வேண்டியவைகளையும் அறிந்து கொள்கிறான். திருமணத்துக்கு முதல் நாள் சசிரேகா தூங்கும்போது அவளை கட்டிலோடு தூக்கிக்கொண்டு இடும்ப வனம் வந்துவிடுகிறான். மாயா ஜாலங்கள் பண்ணுவதில் கடோத்கஜனுக்கு ஈடு இணை இல்லையே. கிருஷ்ணன் திட்டப்படியே கடோதகஜனே சசி ரேகாவாக உருவெடுத்து அவள் வீட்டில் இருந்து கொண்டு திருமணத்தில் ஒரே களேபரம் பண்ணுகிறான். அவனது எண்ணற்ற மாயாஜாலங்களில் கல்யாண மாளிகை திண்டாடுகிறது. லக்ஷ்மண குமாரன் அவஸ்தைப் படுகிறான். கல்யாணமும் வேண்டாம் சசிரேகாவும் வேண்டாம் என்று ஓடுகிறான். எதற்கு அவன் இப்படி மாறிவிட்டான் என்று புரியாமல் விழிக்கும்போது நிச்சயித்த முகூர்த்த நேரத்தில் இடும்ப வனத்தில் அபிமன்யு சசிரேகா திருமணம்
வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கிருஷ்ணன மெதுவாக பலராமனிடம் விஷயத்தை உடைக்க பலராமன் கடோத்கஜனின் புத்திகூர்மை, மாயாஜாலங்களை பாராட்டி அபிமன்யு சசிரேகா மீண்டும் திரும்புகிறார்கள். கிருஷ்ணன் பலராமன் ஆசியுடன் அவர்கள் மணவாழ்க்கை தொடர்கிறது. அந்த காலத்தில் NTR , SVR நடிப்புக்காகவும் கண்டசாலா பாட்டுக்காகவும், மார்கஸ் பார்ட்லி காமிராவின் மாயா ஜாலங்களுக்காகவும் கருப்பு வெளுப்பான படமாக இருந்தாலும் எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த படம் மாயா பஜார். !சுபம் சுபம் சுபம்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

