
பழங்கால இந்தியா – நங்கநல்லூர் J K SIVAN
இமயமலை அடிவாரத்தில் மேற்குப்பகுதி காடுகளில் ஒரு கிராமம் இருந்தது. அதன் பெயர் கபிலவஸ்து. நேபாளத்துக்கு தெற்கே உள்ள ஒரு பகுதி அது. . கிட்டத்தட்ட 2700 வருஷங்கள் முன்பு மலையேறிகள் எனும் குலத்தோர் சிலர் வசித்தார்கள். அவர்களில் ஒரு குடும்பம் சாக்கிய வம்சத்தை சேர்ந்தது. அதற்கு ராஜாவாக இருந்தவன் சுத்தோதனன். பாலி மொழி பேசுபவர்கள். ராணியின் பெயர் மாயா.
நிறை கர்ப்ப ஸ்திரீயான மாயா ஒரு நாள் தாய் வீட்டுக்கு சென்று விட்டு கபில வஸ்துவுக்கு திரும்பி பல்லக்கில் வந்து கொண்டிருந்தாள். லும்பினி என்ற இடம் வரும்போது அவளுக்கு பிரசவ வலி துவங்கிவிட்டது. எந்த நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில் அங்கே காணப்பட்ட ஒரு தோட்டத்திற்குள் சென்றாள் . உடனிருந்தவர்கள் உதவினார்கள். அங்கே அந்த நந்தவனத்தில் ஒரு சால் மரத்தடியில் படுத்தாள். அழகான ஆண் குழந்தையை ஈன்றாள். அதற்கு சித்தார்த்தன் என்று பெயர் இட்டார்கள். குழந்தை பிறக்கும் முன்பு மாயாவின் கனவில் ஒரு வெள்ளை யானை அவள் கருவில் புகுந்தது. குழந்தை பிறந்ததும் ப்ரம்மா பூமிக்கு வந்து தங்க தாம்பாளத்தில் குழந்தையை வாங்கிக் கொண்டார் என்றெல்லாம் கதைகள் இருக்கிறது. குழந்தை பிறந்ததும் அருகே அங்கே ஒரு சுனை திடீரென்று உருவாகி நாகங்கள் காவல் காத்தது, பிறந்தவுடன் சித்தார்த்தன் 7 தப்படி நடந்தான். 7 பாடல்கள் பாடினான் என்றெல்லாம் பௌத்தர்கள் ரெண்டாயிரம் வருஷங்களாக நம்பிக்கையோடு சொல்கிறார்கள்.
சித்தார்த்தன் உலக துன்பங்கள் மானுட வாழ்க்கை துயரங்கள் எதுவும் அறியாதவாறு வளர்க்கப்பட்டான். அவனுக்கு திருமணம் நடந்து ஒரு குழந்தையும் பிறந்தது. இளம் வயதிலிருந்தே சித்தார்த்தனுக்கு உலகில் மக்கள் படும் துயரங்களைப் போக்குவது எப்படி என்பதில் தான் முழுநேர கவனம். ஒரு நாளிரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, சித்தார்த்தன், அரண்மனையை விட்டு அவன் தோழன் சந்தகாவுடன் தனது குதிரை மேல் ஏறிக்கொண்டு வெளியேறி விட்டான். சிலகாலம் திக்கு திசை நோக்கின்றி அலைந்து, நண்பவனை திருப்பி அனுப்பிவிட்டு, குதிரையையும் ஓடவிட்டு, ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு, தனது நீண்ட கேசத்தையும் வெட்டி விட்டு மொட்டைத்தலை துறவியாக திரிந்தான். வடக்கு பீகாரில் உள்ள வைசாலி நகரத்தை சென்றடைந்தான். அங்கே அலதகலமர் என்னும் குருவிற்கு சீடனானான். ஹுஹும்.. ஒன்றும் பயனில்லை.
மனதில் நிம்மதி கிடைக்காமல் அங்கிருந்து தெற்கு பீகாரில் உள்ள மகத நகரம் சென்றான். பிறகு கயாவுக்கு சென்று, நைரஞ்சனா நதிக்கரையில் துறவிகள் செய்யும் அனுஷ்டானங்களை புரிந்தான். உபவாசங்களால் உடல் மெலிந்தது. உடலை வருத்திக் கொள்வதால் ஞானம் பெறமுடியாது என உணர்ந்தார். சற்று தூரத்தில் கண்ணில் பட்ட பெரிய போதி மரத்தின் அடியில் அமர்ந்தார். மாரன் ஆயிரம் பிள்ளைகள் பெண்களுடன் வந்து எவ்வளவு இடையூறுகள் செய்து அவர் தவத்தைக் கலைத்தாலும், புத்தரின் தியானம் கலையவில்லை. போதி மரத்தடியில் அமர்ந்த சித்தார்த்தன் என்ற கௌதமன், இனி புத்தர். உலகம் அப்படி தான் அவரை அடையாளம் கண்டது.
ஆசை, அறியாமை ரெண்டும் தான் மனிதனை துன்புறுத்துபவை என உபதேசித்தார். இவையே பல பிறவிகள் எடுத்து தொடர்ந்து துன்பம் அனுபவிக்க காரணம். இவற்றிலிருந்து விடுதலை பெற வழி என்ன? மனம் தீவிரமாக யோசித்தது. காசிக்கு சென்றார். அங்கே பழைய மாணவர்கள் ஐந்து பேரை மான் பூங்காவில் சந்தித்தார். அங்கே தான் புத்தரின் முதல் உபதேசம் துவங்கியது. தர்ம சக்ரத்தின் சுழற்சி அதுவே. புத்தருக்கு எதிராக அவரது உறவினனான தேவதத்தன் என்ற அஜாத சத்ரு (பிம்பசாரன் மகன் ) புத்தரை பழித்தான். இருமுறை புத்தரை கொல்வதற்கு ராஜகிரஹ நகரின் தெருக்களில் முயற்சி நடந்து தோல்வியை சந்தித்தது.
ஸ்ரவஸ்தி எனும் இடத்தில் ஒரே சமயத்தில் பத்து இடங்களில் பத்து புத்தராக தோன்றியதால் அவரை அடையும் கண்டு கொல்ல முடியவில்லை. ஸ்ரவஸ்தி அதிசயம் என்பது இது தான். புத்தர் திரும்பினார். வானத்திலிருந்து மூன்று ஏணிகள் பூமியை தொட்டன. நடு ஏணியில் புத்தர் வானிலிருந்து இறங்கினார். அவரை ப்ரம்மாவும் இந்திரனும் உபசரித்தனர். இந்திரன் அவருக்கு குடை பிடிக்க ப்ரம்மா சாமரம் வீசினார் . அல்லஹாபாதில் சாங்கிசா என்ற ஜில்லாவில் இது நடந்ததாக ஒரு நம்பிக்கை.
மது போதை பானங்கள் அருந்த கூடாது. பொய் சொல்லக்கூடாது, எவ்வுயிரிடத்திலும் அஹிம்சை, பெண்ணாசை கூடாது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் தேவையற்றவை, வாசனை திரவியங்கள் , ஆபரணங்கள். சுகபோக படுக்கைகள் ஆகியவை களை தவிர்க்கவேண்டும். என்பவை புத்தரின் கொள்கைகள்.
சரியான நம்பிக்கை, சரியான பேச்சு, சரியான எண்ணம், நல்வழி வாழ்க்கை, சரியான உழைப்பு, சரியான கவனம் , சரியான த்யானம் போன்றவை அவர் உபதேசங்கள். புத்தரின் உபதேசங்களில் கடவுளோ ஆத்மாவோ , வேதங்களோ, இடம்பெறவில்லை. புத்தரின் எண் பது வயது வாழ்வில் அவர் கொள்கைகள் பாரத தேசத்தில் அவ்வளவாக எடுபடவில்லை.
புத்தர் மறைந்ததும் அவர் உடல் பிரதம சீடன் மஹா கத்யபன் என்பவரால் தகனம் செய்யப்பட்டு அஸ்தி எட்டு பாகமாக பிரிக்கப்பட்டு புத்தரின் வாழ்வில் சம்பந்தப்பட்ட எட்டு இடங்களில் அஷ்ட மஹாஸ்தானம் இடங்களில் வைக்கப்பட்டது. மஹாகத்யபா அடுத்த பிரதம குருவானார். புத்தரின் காலத்திலேயே விதுதபன் எனும் ப்ரஸேனஜித் ராஜாவின் மகனால் கபிலவஸ்து ராஜ்ஜியம், சாக்கியவம்சம் அழிக்கப்பட்டது. புத்தர் பிறந்த சமயம் நிகழ்ந்த சம்பவங்கள் ஜாதகா கதைகள் என்று இன்றும் பிரபலமானவை. புத்த மதம் அசோகர் காலத்தில் வளர்ந்தது. எங்கும் பரவியது. சுங்க, குஷான வம்ச ராஜாக்கள் காலத்திலும் ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தை ஆண்டபோதும் ஆதரவு பெற்றது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



