GNAANA SAMBANDHAR J K SIVAN

ஞான சம்பந்தர் –   நங்கநல்லூர் J K  SIVAN 

 அறுபத்து  மூன்று நாயன்மார்களில் ப்ரதானமான  பெயர்கள்  அப்பர், சுந்தரர்,  சம்பந்தர், மணிவாசகர் எனும் நான்கு கு சைவ சமய குரவர்க. அவர்களில் சிறிய குழந்தையாக  அறியப்படுபவர்  திரு ஞான சம்பந்தர்.  ஒரு சாதாரண    மூன்று வயது பிராமண குழந்தை சம்பந்தன்  அழும் போது  ககன மார்க்கத்தில்   ரிஷபாரூடராக  பரமேஸ்வரனும் பார்வதியும் வந்து தோன்றி  பார்வதி தேவியே  அந்த குழந்தைக்கு  பொற் கிண்ணத்தில் பால் ஊட்டியது  சீர்காழியில் நடந்த அற்புதம்.   இன்றும்  அந்த சட்டநாதர் சிவாலயத்தின்  குளக்கரையில்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த  இந்த சம்பவத்தை ஒவ்வொரு கணமும் நினைவு கூர்கிறோம். 

ஞான சம்பந்தர் குழந்தை ஞானப்பால்  ஊட்டப்பட்டு  மூன்று வயதிலேயே  அற்புதமான தேவாரப்  பாடல்கள் இயற்றியவர். எத்தனையோ குழந்தை மேதாவிகள்  இருந்தாலும் சம்பந்தர் போல் அவர்கள் ஆக முடியாதே. பெயரே ஞான சம்பந்தன்.  1300- 1400  வருஷங்களுக்கு முன் அவர் எழுதிய தேவாரங்களைப்  பாடி  இன்றும் கோடிக்கணக்கான பக்தர்கள் மகிழ்கிறார்களே.  எளிதான காரியமா இது? என்ன காரணம்?  அவர் பாடலின் வார்த்தைகள் மந்திர சக்தி வாய்ந்தவை.  விரும்பியதை கேட் காமலேயே  தர வல்லவை.  சிறந்த நீதி நெறிகளை  போதிப்பவை. எண்ணற்ற  அற்புத பாடல்கள் ஓலைச்சுவடிகளில் இருந்து அவற்றை நாம் இழந்து விட்டோம். ஞானிகள், மஹான்கள் எவ்வளவு தான்  வாரி வழங்கினாலும்  நாம் வழக்கம்போல் கோட்டை விட்டுவிடும்  விசித்திர சமுதாயமாகவே இன்னும் மாறாமல் இருக்கிறோம்.  நமது  ஹிந்து சனாதன மஹான்கள் சிலரால்  பாதுகாக்கப்பட்டு  இருக்கும் சிலவற்றை மட்டும்  இன்னும் அழியாமல்  காப்பது நமது கடமை. எல்லாம் இறைவன் சித்தம். ஏதோ சுமார் 4000 பாடல்கள் தேவாரங்கள் நமக்கு கிடைத்ததே நமது மிகப்பெரிய  பாக்யம் என்று கருதுவோம்.  ஒரு சில முன்னோர்கள் ஸ்ரத்தையாக எதிர்காலத்தை மனதில் கொண்டு இதையாவது நமக்கு காப்பாற்றி கொடுத்ததற்கு அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
சம்பந்தர் வாழ்வில் நிறைய அதிசயங்கள் நடந்திருக்கிறது. தமிழகத்தில் அவர் தரிசிக்காத சிவன் கோவிலே இல்லை எனலாம்.  அவரது பாடல் ஒலித்த ஆலயங்கள் நிறைய உள்ளது.  அக்கால நிலை, சரித்திரம், மக்கள் வாழ்க்கை, ராஜாங்கம், நீதி,  நேர்மை  எல்லாம் அவற்றின் மூலம் அறியமுடிகிறது.
சேக்கிழார்,  இப்படிப்பட்ட ஞானிகளுடைய  வாழ்க்கை,  அவர்களால்  நிகழ்ந்த அதிசயங்கள், அவர்கள் பாடல்கள்  எல்லாவற்றையும்  முடிந்தவரை  அழகாக ஒரு ”பெரிய”  புராணமாக படைத்திருக்கிறார்.

பாண்டியன் நெடுமாறன் மதுரையை ஆண்டு கொண்டிருந்த போது  சமண மதத்தில் அவன்  பற்றுக் கொண்டிருந்தான்.  அவனை சமண  மதத்திலிருந்து மீட்டு  மீண்டும் சைவனாக்கிய பெருமை சம்பந்தருக்கு உண்டு.  சமணர்கள்  பொதுவாக  சாதுக்கள். அஹிம்ஸா வாதிகள். தமிழ் பற்று அதிகம் கொண்டவர்கள்.  நாம் தான் நாலடியார் அடிக்கடி படிக்கிறோமே. ஆனால் நெடுமாறன் காலத்தில் இருந்த அவன்  அரசவை புலவர்கள் சமணர்கள் ஆக்ரோஷமாக இருந்தார்கள்.  அவர் களோடு வாதத்தில் ஈடுபட்ட சம்பந்தர் அவர்களை வென்றார்.  அதனால் தான் பாண்டியனும்   சைவனானான்.  சம்பந்தர் மதுரை வந்திருப்பதை அறிந்த சமணர்கள் அவர் தங்கியிருந்த மடத்திற்கு  தீ மூட்டினர்.  சைவ சமண விரோதம் தலை தூக்கி யிருந்த காலம் அது.  இந்த தீ மூட்டிய விஷயம் எங்கும் பரவி விரோதம் வலுத்தது. சம்பந்தர் மதுரை  விஜயத்தால் அது ஒடுங்கியது.

திருவோத்தூர் என்கிற ஊரில் ஒரு அதிசயம். ஒரு சிவபக்தன் பனை மரங்கள் வளர்த்தான். அவற்றின் கனிகளை விற்று ஜீவனம். அதில் கிடைப்பதில் சிவன் கோவிலுக்கு பக்தர்களுக்கு கைங்கர்யம் பண்ணுபவன்.  மேற்கொண்டு  சேவை அதிகரிக்க எண்ணி, நிறைய பனை விதைத்தான். என்ன துரதிர்ஷ்டம்… அத்தனை பனை மரங்களும் ஆண் பனை. எப்படி காய்க்கும்?  அவன் தன் சிவத்தொண்டுக்கு  இப்படி ஒரு சோதனையா என்று அழுதான்.

”என்னய்யா, நீ சிவ பக்தனாயிற்றே. உன் கடவுள் உனக்கு உதவவில்லையா?’உன் சிவன் உனக்கு உதவலையா ?”. ஊரார் ஏளனம் செய்தார்கள். அந்த ஊருக்கு ஞான சம்பந்தர் வந்திருப்பதை அறிந்து  சிவபக்தன்  அவரிடம் சென்று முறையிட்டு அழுதான். சம்பந்தர் நேராக  திருவோத்தூர் சிவன் கோவிலுக்கு சென்றார். பதிகம் பாடினார். அவனது குறையை நீக்க வேண்டினார்.  சிவன் சாதாரண மானவனா?  சம்பந்தர் பாடல்களை கேட்க அல்லவோ இந்த நாடகம் ஆடியவன்.  சம்பந்தரின் பதிகங்களில் மகிழ்ந்து”குரும்பை ஆண் பனை ஈனும் ”என அருளினார் சிவபெருமான்  என்கிறார் சேக்கிழார்.
சம்பந்தர் அந்த பக்தனோடு நடந்து பனைமரங்களைச்  சென்று பார்த்தபோது அவற்றில் பனம்பழங்கள் தொங்கின. அந்த சிவ பக்தன் சந்தோஷத்தை,
”ஸாரி , என்னால் எழுத முடியவில்லை. எழுத தெரியவில்லை.  ”உபமன்யு பக்த விலாசம்” என்ற  ஸம்ஸ்க்ரித ஸ்லோகத்தில்  இது குறிப்பிடப்படுவதை பழம்பெரும்  சரித்திர, புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர்,   டாக்டர்  R நாகசாமி  எடுத்துக்காட்டி இருக்கிறார்:  ”Tala: pumamsa: sruthvai the bhavanthu paritha: palai” .

திருக்கோயிலூர் சென்ற சமயம் தூர இருந்த  ஒரு   ஆலய கோபுரம்  சம்பந்தர் கண்ணில் பட்டவுடனேயே விழுந்து வணங்கினார்.  அருகில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம்.
”என்ன இது. தெரிவது  சமணர் கோவில் கோபுரம் , இந்த சிவபக்தர் விழுந்து வணங்குகிறாரே. ஒருவேளை அவருக்கு   இது சைவ கோயிலா வேறு ஏதாவதா என்று சரியாக தெரியாதோ?”

”சுவாமி  எதிரில் தெரிவது சமணர்களின் கோவில்.” என்று அவருக்கு எடுத்துரைத்தார்கள்.  சம்பந்தர் காதில் வாங்கவில்லை. நேராக அந்த ஆலயத்திற்குள் நுழைந்தார்.  என்ன ஆச்சர்யம். கர்ப்ப கிரஹத்தில்  சிவன் காட்சி தந்தார்.  என்ன ஞான சக்தி? எப்படி காலம் காலமாக இருந்த சமண சிலை  திடீரென சிவலிங்கமாயிற்று.. இது உபமன்யு  பக்த விலாசத்தில் வருகிறது.

திருஞான சம்பந்தர் நிகழ்த்திய  அதிசயங்கள் பற்றி எழுதப்போனால் அது ஒரு தலைகாணி புஸ்தமாகிவிட நிறைய  வாய்ப்பு உண்டு. இருந்தாலும் விடப்போவதில்லை. அதில்  சிலதையாவது அவ்வப்போது  அறிந்து கொள்வோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;