
வடக்கே ஒரு ஆண்டாள் – நங்கநல்லூர் J K SIVAN
மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் சிறந்து விளங்
குவது கிருஷ்ணாவதாரம். சாதாரண யாதவ குடும்பத் தில் தானாக தன்னை இணைத்துக்கொண்டு கோகுலத் திலும் பிருந்தாவனத்தில் அவர்களோடு வளர்ந்து வாழ்ந்து அவர்களில் ஒருவனாக இருந்தாலும் அவன் ராஜ வம்சத்தவன் என்பதால் அவனது 13-15 வயதில் மதுராபுரியை ஆண்ட தனது மாமன் கம்சன் அரண் மனைக்கு சென்று அவனை ஸம்ஹாரம் செய்து தனது தாய் தந்தையரை, கம்சனின் தாய் தந்தையரை எல்லாம் சிறை மீட்டு மதுராபுரிக்கு அரசனாகவும் நேர்ந்தது.
கண்ணன் எனப்படும் கிருஷ்ணனின் பக்தர்கள் எண்ணிலடங்காதவர்கள். துவாபர யுகம், இந்த கலியுகம் ரெண்டிலும் அநேக ஆண்கள் பெண்கள் கிருஷ்ண பக்தர்கள். கிருஷ்ண பக்தர்களில் முக்ய மானவர்கள் என்றால் ஆண்டாள், மீரா, ராதை என்று மூன்று பெண்களை பெயரிடலாம்.
மீரா ராஜபுதனத்து ராஜகுமாரி. ஐந்து வயது முதல் கிரிதாரி என்ற அவள் கிருஷ்ண விக்ரஹத்தின் மேல் அளவற்ற பக்தியும் பாசமும் கொண்டவள்.
அவளது ஐந்தாவது வயதில் நடந்த ஒரு சம்பவம் இதோ ;
ராஜபுத்திர ராணா வம்ச அரண்மனைக்கு வெளியே சாலையில் ஒரு ஊர்வலம். வாத்தியங்கள் கோஷங்கள் கேட்டு அந்த அரண்மனையிலிருக்கும் ஐந்து வயது குழந்தை ஒன்று உப்பரிகையிலிருந்து எட்டிப் பார்க் கிறது. எதிரே தெருவில் ஒரு பெரிய ஊர்வலம் வருவ தை பார்த்து அம்மாவிடம் கேட்கிறது;
“இது என்னம்மா? எதுக்கு எல்லோரும் இப்படி டமாரம், மேளம் எல்லாம் அடிச்சுண்டு, பீ பீ ன்னு வாத்தியம் எல்லாம் ஊதிண்டு போகிறார்கள்?”
”இது ஒரு கல்யாண ஊர்வலம் டீ கண்ணு!”
”நடுவிலே குதிரை மேலே யாரோ ஒருவர் உட்கார்ந்தி ருக்கிறாரே அவர் யாரு? அதோ சிவப்பு தலப்பா கட்டிண்டு இருக்காரே அவர் ?”.
“அது தான் கல்யாண மாப்பிள்ளை. அவன் தான் அதோ அந்த சின்ன பெண்ணுக்கு கணவன்”.
“ எனக்கும் இது மாதிரி கல்யாணம் பண்ணுவியா?”
“ ஆமாம் இதை விட தடபுடலா”
“அப்போ எனக்கு யாரு மாப்பிள்ளே, அந்த மாதிரி தலப்பா கட்டிண்டு ?”
“வா காட்றேன்.”
ராணி தனது பெண்ணை பூஜா அறைக்கு கூட்டிக் கொண்டு போகிறாள்.ராணி கிருஷ்ண பக்தை. அதனால் தான் மீராவுக்கு கிருஷ்ணன் மேல் பக்தி வளர்ந்தது. பூஜை அறையில் அவர்கள் எதிரே குழலூதிக்கொண்டு மயில் பீலி சிரத்தில் அணிந்த புன்னகைக்கும் கிருஷ்ணனின் படம்.
“இதோ இவன் தான் உனக்கு மாப்பிள்ளை, கணவன்”
மீரா விழுந்து வணங்கினாள். இந்த விஷயத்தை ஏதோ சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதன் பின் விளைவு பற்றி யோசிக்காமல் அந்த ராணி சொல்லி விட்டாளே தவிர ராஜகுமாரி மீரா, மனதில் அதை கெட்டியாக பிடித்து கொண்டாள். எரியும் விளக்குக்கு எண்ணை யும் ஒரு நாள் கிடைத்தது.
ஆம் . அரண்மனைத் தெருவில் ஒருநாள் ஒரு பொம்மை விற்பவன் ஒரு சின்ன அழகிய கிருஷ்ணன் பொம்மை வைத்தி ருப்பதை பார்த்து விட்டு அதை வாங்கினால் தான் விடுவேன் என்று அடம் பிடித்து அதை வாங்கி கடைசியில் தன் உயிர் போகும் வரை வைத்திருந்தாள் மீரா. அவள் மூச்சு, பேச்சு எல்லாமே கிருஷ்ணன் தான். அவனுக்கு பெயர் வைத்தாள் . ”கிரிதாரி”.
விளையாட்டு வினையாக போய்விட்டதே என்று ராஜாவுக்கும் ராணிக்கும் கவலை அரித்து தின்றது. சீக்கிரமாகவே ஒரு மேவார் ராஜ புத்ர ராணாவுக்கு மீராவை கல்யாணம் செய்து வைத்தனர். ராஜஸ்தா னில் சிறு வயதிலேயே கல்யாணம் செய்து வைப்பார் கள். பேருக்கு தான் அந்த கல்யாணம் நடந்ததே தவிர மீராவை முழுசாக ஆக்ரமித்தவன் கிருஷ்ணனே.
மீராவின் கணவன் ராணா, ஒரு போரில் மாண்டான். இருபது வயதுக்குள்ளேயே மீரா தனியள் ஆனாள்.
மீராவின் உலகில் ஒரே ஒரு ஜீவன் தான்.. அதுவே கிரி தாரி எனும் அவள் கிருஷ்ணன். அவளை எல்லோரும் ஒரு இளம் சன்யாசினி யாகவே கண்டனர். அரண்ம னையை விட்டு தெருவுக்கு சென்று விட்டாள் மீரா. கண்ணன் மீது மட்டற்ற காதல் அவளை அவன் கோபி யாகவே மாற்றியது. கண்ணனை நினைத்து இரவும் பகலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். பூஜை, பஜனை. பக்தர்களும் ஆவலுடன் சேர்ந்து கொள்ள அவளது ராஜ வம்சம் இந்த பழக்கத்தை கடுமையாக எதிர்த்தது.
மீராவைக் கொன்றால் தான் இதற்கு முடிவு என்று அவளுக்கு உணவில் விஷம் வைத்தார்கள். அவதூறு பேசினார்கள். எதற்கும் மசியவில்லை அவள் மாசற்ற பக்தி பரவசம், கிருஷ்ண பிரேமை. அவள் குடித்த விஷத்தை அம்ருதமாக மாற்றினான் கிருஷ்ணன்.
படுக்கையில் கூரான விஷம் தோய்ந்த ஆணிகள் வைத்தார்கள். அனைத்து விஷ ஆணிகளையும் ரோஜா இதழ்களாக மாற்றினான் கிருஷ்ணன்.
“இந்தா உன் கிருஷ்ணனுக்கு அர்ச்சனை பண்ண புஷ்பம் ” என்று பூக்குடலைக்குள் கொடிய விஷம் கொண்ட கருநாகம் ஒன்றை வைத்தனர். பாவம், விஷயம் தெரியாத மீரா அந்த பூக்குடலைக்குள் ஆசையாக கிருஷ்ணனுக்கு அர்ச்சிக்க புஷ்பம் எடுக்க கையை விட்டாள் மீரா. கருநாகம் மல்லிகை மாலை யாயிற்று. ஆதேசேஷன் மேலே படுப்பவன் தனது பக்தையை ஒரு சாதாரண கருநாகம் தீண்ட அனுமதிப் பானா?
“நீங்கள் மிக பிரசித்த கிருஷ்ண பக்தர் உங்கள் வாயிலிருந்து கண்ணன் பெருமையை கேட்க ஆசையாய் இருக்கிறது”.என்று ஒருநாள் சைதன்யரின் சிஷ்யரான ரூப கோஸ்வாமியை சந்தித்து மீரா கேட்க விரும்பினாள். அவரைச் சந்தித்து வணங்க காத்திருந் தாள்.
“நான் ஸ்திரீகளைப் பார்ப்பதில்லை பேசுவதில்லை. புருஷர்களுக்கு தான் அனுமதி. அவள் போகலாம்” என்று அவளை பார்க்க மறுத்து விட்டார் கோஸ்வாமி. .
மீரா பணிவாக அவருக்கு பதில் சீடர்கள் மூலம் தெரிவித்தாள் ;
”ஐயா புருஷர்கள் என்று யாருமே இந்த உலகில் இல் லையே. இருப்பது ஒரே ஒரு புருஷன். மஹா புருஷன் அந்த கிருஷ்ணன் ஒருவனே. நாம் எல்லோருமே ஸ்த்ரீ பக்தர்கள் தானே”
பிறகு என்ன?
கோஸ்வாமி ஓடிவந்து மீராவின் காலடியில் சரண மடைந்தார். ஊர் ஊராக பாடிக்கொண்டே ஆடிக் கொண்டே மீரா காசிக்கும் சென்று கபீர் தாஸுடன் கிருஷ்ண பஜன் செய்தாள்.
நேரமாகி விட்டது. கிருஷ்ண ப்ரேமையின் உச்சகட்டம் வந்து விட்டது. கிருஷ்ணனுக்காகவே வாழ்வை அர்ப் பணித்து எண்ணற்ற பக்திப் பாடல்களை கர்ணாம்ரு தமாக வழங்கிவிட்டு துவாரகையில் எல்லாரும் பார்க்க மீரா கிருஷ்ணனோடு கலந்தாள் என்பது வரலாறு.
மீரா வடக்கே ஒரு ஆண்டாள் ஆகிவிட்டாள் .
இறைவனோடு கூடிய வாழ்க்கைக்கு ஈடு உண்டா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



