
சகுனி தந்த ஆறுதல்- நங்கநல்லூர் J K சிவன்
பாரதியின் உயிர் போய்விட்டது என்று சொல்வது ரொம்ப ரொம்ப தப்பு. அவர் உயிரே அவர் எழுத்து தானே. அவர் எழுத்து அவரிருந்த காலத்தை விட இப்போது பல லக்ஷம் மடங்கு பெருகி பரவி விட்டதே. ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் பாடல்களில் அவர் உயிரை உணர்த்துகிறதே. அவர் உருவம் மறைந்து விட்டது என்று சொன்னாலும் தப்பு. பட்டி தொட்டியெல்லாம் பாரதி என்னால் முண்டாசு, மீசை, கருப்பு கொட்டு, நெற்றியில் காலணா அளவு சிகப்பு குங்குமம் கண்களில் ஒரு தீர்க்கம் என்று எல்லோர் மனத்திலும் பதிந்துள்ளதே. ஆகவே பாரதி அமரர் என்றும் அவரது எழுத்து அமர காவியம் என்று சொல்வது சரியானதே. இதோ ஒரு அத்யாயம் அவரது அற்புத படைப்பான பாஞ்சாலி சபதத்திலிருந்து. பாஞ்சாலி சபதத்தை முழுமையாக ”காத்திடவா கேசவா” என்று மன த்ரிப்தியோடு எழுதி வெளியிட்டேன். இன்னும் சில புத்தகங்கள் உள்ளன. வேண்டுவோர் அணுகலாம். 98402790
மனதில் தீய எண்ணம் குடி கொண்டுவிட்டால் அது படுத்தும் பாடு பொறுக்கமுடியாதது. தூக்கம் போய்விடும், பசி இருக்காது. எதிலும் மனது ஈடுபடாது. ஏக்கத்தால், ஏமாற்றத்தால், கோபத்தால் பெருமூச்சு அனலாக வெளியே வரும். நண்பர்களே வெறுத்து விலகி விடுவார்கள். இப்படிப்பட்ட அவஸ்தையில் துரியோதனன் மாமனைக் கண்ட போது அவனுக்கு சகுனி தெய்வமாக தோன்றினான். அவனிடம் தனது உள்ளத்திலிருந்த பொறாமையைக் கக்கிவிட்டான்.
”அடே துரியோதனா. இதற்கா இத்தனை அவஸ்தை படுகிறாய். பேதையே. என்னிடம் சொல்லிவிட்டாய் அல்லவா. நிம்மதியாக இரு. உனக்கு அத்தனையும் வெற்றியாக பெற்றுத் தருகிறேன். அலட்டிக்கொள்ளாதே. நான் சொல்வதைக் கவனமாக கேள்.. ஒரு அழகிய தேவ சபை போன்ற மண்டபம் கட்டியிருக்கிறேன் நீங்கள் அதைக் காண வாருங்கள் என்று பாண்டவர்களை இங்கு அழைத்து விடு. பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன். அவர்களை எப்படியாக சூதாட்டத்தில் என்னோடு விளையாடச் செய்வேன். அவர்கள் கைவசம் உள்ள அனைத்தையும் சப் ஜாடா (இது எங்கள் ஊரில் சொல்லும் வார்த்தை, எல்லாவற்றையும் என்று அர்த்தம்) அரை நாழிகைப் பொழுதில் உன்னை அடையச் செய்கிறேனா இல்லையா பார். அவர்களை உன் பணியாட்களாக பண்ணுகிறேன்.
அப்பனே, சூதில் நான் எவ்வளவு வல்லவன் என்று நீ அறிவாய். அதை விட்டு அவர்களோடு போர் புரிய முற்பட்டால், தோல்வியோ வெற்றியோ எது வருமோ யார் கண்டார்? . அவர்களது வீரம் பலம் உலகறிந்தது. எதற்கு தேவையற்ற அந்த முயற்சி, சுலபமாக உனக்கு வெற்றி என் சூதாட்டம் மூலம் கிடைக்க வழி இருக்கும்போது.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்வோமடா மகனே. யுதிஷ்டிரனின் நாடு, குடி படைகள் அனைத்துமே நீ உட்கார்ந்த இடத்தில் வெல்லப் போகிறாய். கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு எதற்கு நெய்யை தேடித் போகவேண்டும்? ” என்றான் சகுனி.
துரியோதனன் செவியில் இன்பத் தேனாக சகுனியின் பேச்சு வந்து பாய்ந்தது. தனது கழுத்திலிருந்த ஒரு பொன் மணியிட்ட சங்கிலியை மாமன் சகுனியை அணைத்து மகிழ்ந்து சகுனியின் கழுத்தில் சூட்டினான்
”மாமா, உன்னைப்போல் எனக்கு ஆதரவாக நாலு வார்த்தைகள் நல்ல யோசனைகள் கொடுக்க யார் இருக்கிறார்கள்? என்று மனதில் சந்தோஷத்தோடு சகுனியைக் கட்டித் தழுவினான் துரியோதனன்.
மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சியை இனி பாரதியார் படைத்த பாஞ்சாலியின் சபதம் பாடலாக ருசித்து ரசித்து படிப்போமா
சகுனியின் சதி
என்று சுயோதனன் கூறியே — நெஞ்சம்
ஈர்ந்திடக் கண்ட சகுனிதான்; — ‘அட!
இன்று தருகுவன் வெற்றியே; — இதற்கு
இத்தனை வீண்சொல் வளர்ப்பதேன்? — இனி
ஒன்றுரைப் பேன் நல் உபாயந்தான்; — அதை
ஊன்றிக் கருத்தொடு கேட்பையால்; — ஒரு
மன்று புனைந்திடச் செய்திநீ, — தெய்வ
மண்டப மொத்த நலங்கொண்டே;
‘மண்டபங் காண வருவிரென் — றந்த
மன்னவர் தம்மை வரவழைத் — தங்கு
கொண்ட கருத்தை முடிப்பவே — மெல்லக்
கூட்டிவன் சூது பொரச்செய்வோம்; — அந்த
வண்டரை நாழிகை யொன்றிலே — தங்கள்
வான்பொருள் யாவையும் தோற்றுனைப் — பணி
தொண்ட ரெனச்செய் திடுவன்யான், — என் றன்
சூதின் வலிமை அறிவைநீ.
வெஞ்சமர் செய்திடு வோமெனில் — அதில்
வெற்றியும் தோல்வியும் யார்கண்டார்? — அந்தப்
பஞ்சவர் வீரம் பெரிதுகாண்! — ஒரு
பார்த்தன்கை வில்லுக் கெதிருண்டோ? — உன்றன்
நெஞ்சத்திற் சூதை யிகழ்ச்சியாக் — கொள்ள
நீதமில்லை, முன்னைப் பார்த்திவர் — தொகை
கொஞ்ச மிலைப்பெருஞ் சூதினால் — வெற்றி
கொண்டு பகையை அழித்துளோர்.
‘நாடும் குடிகளும் செல்வமும் — எண்ணி,
நானிலத் தோர்கொடும் போர்செய்வார்; — அன்றி
ஓடுங் குருதியைத் தேக்கவோ? — தமர்
ஊன்குவை கண்டு களிக்கவோ? — அந்த
நாடும் குடிகளும் செல்வமும் — ஒரு
நாழிகைப் போதினில் சூதினால் — வெல்லக்
கூடு மெனிற்பிறி தெண்ணலேன்? — எந்தன்
கொள்கை இது’வெனக் கூறினான்.
இங்கிது கேட்ட சுயோதனன் — ‘மிக
இங்கிதம் சொல்லினை, மாமனே!’ — என்று
சங்கிலிப் பொன்னின் மணியிட்ட — ஒளித்
தாமம் சகுனிக்குச் சூட்டினான்; — பின்னர்,
‘எங்கும் புவிமிசை உன்னைப்போல் — எனக்
கில்லை இனியது சொல்லுவோர்’ — என்று
பொங்கும் உவகையின் மார்புறக் — கட்டிப்
பூரித்து விம்மித் தழுவினான்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



