kaivalyopanishad slokas 21 -25 J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகம் 21-25
இந்த பதிவோடு கைவலியோபநிஷத் நிறைவு பெறுகிறது. நிச்சயம் வாசகர்கள் இந்த உபநிஷத் என்ன சொல்கிறது என்று கேட்டால் மோட்டுவளையை பார்க்க கூடும். இது இந்த உபநிஷத் படித்தால் மட்டும் அல்ல எந்த உபநிஷத் படித்தாலும் ஏற்படக்கூடிய .அனுபவம் தான். காரணம். மிக உயர்ந்த அத்வைத தத்துவமாக ஆதி சங்கரர் விளக்கும் இந்த உபநிஷதமும் ஆத்மா ப்ரம்மம் ரெண்டும் ஒன்றே. அதை எவன் முயற்சியெடுத்து தான் வேறு ஆத்மா வேறு என்று வித்த்யாசமின்றி ஆணாக காண்கிறானோ அவனே ப்ரம்ம ஞானி என உணர்த்தும் சிறந்த தத்வம்.
நிறைய படிக்கவேண்டும் என்பதை விட அடிக்கடி அதையே படித்துக் கொண்டுவரவேண்டும். அதுவும் போதாது. படித்ததை மனதில் ஆழ்ந்து யோசிக்க வேண்டும். திரும்ப திரும்ப அது என்ன சொல்கிறது என்று ஆராயவேண்டும். அப்போது தான் உயர்ந்த தத்துவங்களை புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்த உபநிஷதங்களை அடிக்கடி எழுதுகிறேன். நீங்கள் தான் அதை ஆழ்ந்து உணர்ந்து பயன் பெறவேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
21.अपाणिपादोऽहमचिन्त्यशक्तिः पश्याम्यचक्षुः स श‍ृणोम्यकर्णः । अहं विजानामि विविक्तरूपो न चास्ति वेत्ता मम चित्सदाऽहम् ॥ २१
apāṇipādo’hamacintyaśaktiḥ paśyāmyacakṣuḥ sa śṛṇomyakarṇaḥ .ahaṃ vijānāmi viviktarūpo na cāsti vettā mama citsadā’ham .. 21
நான் அங்கமில்லாதவன். கையில்லாதவன். கால்கள் அற்றவன். கண்ணற்றவன். காது இல்லாததால் எதையும் கேட்க இயலாதவன். ஆனால் விவரிக்க வொண்ணா சக்தி உள்ளவன். விழிகள் இல்லாமலேயே சகலத்தையும் பார்க்க முடித்தவன். காதில்லாமலேயே எங்கோ கேட்கும் சப்தத்தை துல்லியமாக கேட்க முடித்தவன். உருவமற்றவன். என்னால் சகலத்தையும் சர்வத்தையும் அறிய முடியும். ஆனால் என்னை ஒருவரும் எளிதில் அறிய முடியாது. என்னை முழுமையாக அறிந்தவர் எவருமே இல்லை. நான் ஞானம். ப்ரம்ம ஞானம். ஆத்ம ஞானம். .
22.वेदैरनेकैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम् न पुण्यपापे मम नास्ति नाशो न जन्म देहेन्द्रियबुद्धिरस्ति ॥ २२॥ ।
vedairanekairahameva vedyo vedāntakṛdvedavideva cāham .na puṇyapāpe mama nāsti nāśo na janma dehendriyabuddhirasti .. 22..
22.எல்லா வேதங்களும் கூறும் உண்மை நானே. உபநிஷதுகள் அனைத்தின் உட்பொருள் நானே. வேதங்களின் முடிவு எனப்படும் வேதாந்த சாரம் நானே. வேதங்கள் சொல்வது அனைத்தும் நான் அறிந்ததே. என்னை விலாவாரியாக இப்படிப்பட்ட தன்மை என்று சொல்லவும் முடியாது. இப்படிப்பட்டது இல்லை என்று விலக்கவும் முடியாது. அழிவு முடிவு என்று எதுவுமே இல்லாதவன் நான். எனக்கு எப்போதும் ஜனனமும் இல்லை, மரணமும் இல்லை. உடல், தேகம், உருவம் எதுவும் இல்லை. புலன்களோ அவற்றின் உணர்வோ எதுவும் இல்லாதவன். என்னை மனத்திலோ, புத்தியிலோ, தேடினாலும் கிடைக்காதவன். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று என்னை வெகு அழகாக ஞானிகள் சொல்கிறார்கள்.
23 न भूमिरापो न च वह्निरस्ति न चानिलो मेऽस्ति न चाम्बरं च । एवं विदित्वा परमात्मरूपं गुहाशयं निष्कलमद्वितीयम् ॥ २३
na bhūmirāpo na ca vahnirasti na cānilo me’sti na cāmbaraṃ ca .evaṃ viditvā paramātmarūpaṃ guhāśayaṃ niṣkalamadvitīyam .. 23
24.समस्तसाक्षिं सदसद्विहीनं प्रयाति शुद्धं परमात्मरूपम् ॥
samastasākṣiṃ sadasadvihīnaṃ prayāti śuddhaṃ paramātmarūpam ..24
மேற்கண்ட ரெண்டு ஸ்லோகங்களையும் ஒன்றாக இணைத்து விளக்கம் சொல்கிறேன். எனக்கு பூமி, ஆகாசம்,அக்னி, ஜலம் ,வாயு என்ற பஞ்ச பூதங்களும் கிடையாது. பரமாத்மா என்பது நான் தான். என்னை நீ அப்படி உணர்வாய்? நான் ஓவ்வொரு ஹ்ருதயத்தின் குகையிலும் நிரந்தரமாக இருக்கிறேன். என்னை பாகங்களாக பிரித்தே பார்க்க முடியாது.
எனக்கு அடுத்தது, நான் முதல் இது ரெண்டாவது என்ற எந்த வரிசையும் கிடையாது. நான் சர்வ ஸாக்ஷி . ஒவ்வொரு கணத்திலும், நான் சகலமும் நடப்பதை உணர்பவன். காண்பவன் அதற்கு சாக்ஷியாக உள்ளவன். இருப்பது, இல்லாதது, உள்ளது அல்லது என்று எதையும் என்னைப்பற்றி கூறவே முடியாது. இதெல்லாம் பிரம்மம் பேசுவதாக அறிவோம்.
25. यः शतरुद्रियमधीते सोऽग्निपूतो भवति सुरापानात्पूतो भवति स ब्रह्महत्यायाः पूतो भवति स सुवर्णस्तेयात्पूतो भवति स कृत्याकृत्यात्पूतो भवति तस्मादविमुक्तमाश्रितो भवत्यत्याश्रमी सर्वदा सकृद्वा जपेत् ॥
ya śatarudriyamadhīte so’gnipūto bhavati surāpānātpūto bhavati sa brahmahatyāyāḥ pūto bhavati sa suvarṇasteyātpūto bhavati
sa kṛtyākṛtyātpūto bhavati tasmādavimuktamāśrito bhavatyatyāśramī sarvadā sakṛdvā japet ..
கைவலியோபநிஷதம் முடியும் தருவாயில் ரிஷி ருத்ரம், ருத்ரன், சத ருத்ரீயம் பற்றி சொல்கிறாரே அதைப் பற்றி கொஞ்சம் விளக்க வேண்டாமா?
சிவாலயங்களில் பரமேஸ்வரனுக்கு அபிஷேகம் பண்ணும்போது உச்சரிக்கும் மந்திரம் ருத்ரம், ஸ்ரீ ருத்ரம், மிக சக்திவாய்ந்த, வேத மந்திரம். சதா ருத்ரீயம் என்றால் நூறு ருத்ரனைப் போற்றி ஸ்தோத்ரம் பண்ணுவது ருத்ரம், ருத்ரனை நூறு விதமாக ஸ்தோத்ரம் பண்ணுவது சத ருத்ரீயம். கிருஷ்ண யஜுர்வேதத்தின் தைத்ரியஸம்ஹிதையில் காணப்படுவது ஸ்ரீ ருத்ரம். நமகம் சமகம் என இருபகுதியாக காணப்படுகிறது. ருத்ரன் தான் வேதகாலத்தில் அறியப்பட்ட பரமேஸ்வரன். நமக்கும் எனும் பகுதி நமோ என ஆரம்பிக்கும் மந்த்ரங்கள். எல்லா ரூபத்திலும் சிவனை வணங்குவது. ”நமஸ்தே ருத்ர மன்யவ உத்தோதிஷவ நமஸ்தே அஸ்து தன்வநே பாஹுப்யாமுத தே நம꞉” என்று ஒரு மந்திரத்தை உதாரணமாக கொடுக்கிறேன். இதற்கு அர்த்தம். “அழிவை ஏற்படுத்தும் ருத்ரா! உன் வில்லுக்கும் அம்புக்கும், உன் கரங்களுக்கும் வணக்கம்.” அடுத்த பகுதி சமகம் என்பதில் பகவானிடம் என்ன வேண்டிக்கொள்ளவேண்டும் என்று நமக்கு அறிவிப்பது. பரமேஸ்வரனின் ஆசீர்வாதங்களையும், வளங்களையும் வேண்டுவது. சமே சமே என்று முடியும் மந்திரங்கள். அதற்கு ஒரு உதாரணம்; ”சமே ருத்ர ப்ரயுஞ்சீஷ்வ, சமே ருத்ர ப்ரயுஞ்சீஷ்வ” — ருத்ரா, என்னை ஆசீர்வதியுங்கள், ருத்ரா, , ருத்ரா “சமே அஸ்வ சமே அஸ்வ”- எனக்கு குதிரைகள் கிடைக்கட்டும், “சமே கௌ சமே கௌ” எனக்கு பசுக்கள் கிடைக்கட்டும், இதெல்லாம் வேதகால வேண்டுகோள்கள். இப்போது கடவுள் உனக்கு குதிரை வேண்டுமா என்று கேட்டால் வேண்டாம் நீயே வைத்துள்ள்ளப்ப, ஒரு மொபைல் டெலிபோன் கொடுப்பாயா என்று தான் கேட்போம். ஆனாலும் பகவானிடத்தில் அன்றும் இன்றும் என்றும் ரிஷிகள் கேட்ட சமகம் தான் தப்பில்லாமல் சொல்வது முறை. சம்ப்ரதாயம்.
இந்த மந்திரத்தில் ரிஷி சதருத்ரீயம் எவன் சொல்கிறானோ அவன் அக்னியால் பரிசுத்தம் அடைந்தவனாகிறான். மது இத்யாதிகளிலிருந்து விடுபடுகிறான். ப்ரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. சர்வ பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான். சிவனோடு இணைகிறான். ஒரு தடவையாவது ருத்ரம் படிக்க வேண்டும். பாராயணம் பண்ண வேண்டும். சம்சார சாகரத்திலிருந்து கரையேற முடியும். இது ஒன்றே அடையப்பட வேண்டியது.கைவல்யம் இது தான்.
25.अनेन ज्ञानमाप्नोति संसारार्णवनाशनम् । तस्मादेवं विदित्वैनं कैवल्यं पदमश्नुते कैवल्यं पदमश्नुत इति ॥
anena jñānamāpnoti saṃsārārṇavanāśanam . tasmādevaṃ viditvainaṃ kaivalyaṃ padamaśnute kaivalyaṃ padamaśnuta iti ..
இப்படி கைவல்யத்தை உணர்ந்தவன் ஞானம் பெறுகிறான். எந்த மாற்றமும் அவனை நெருங்காது. அதிலேயே திளைத்து ஒன்று படுவான். கைவல்யம் அடைகிறான். அதாவது முக்தி பெறுகிறான். இதைத்த்தான் கைவல்ய உபநிஷதம் நமக்கு உணர்த்துகிறது.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;