
வைராக்ய சதகம் – பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 41-50.
41.सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं च तत् पार्श्वे तस्य च सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः स च राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः ॥ ४१॥
ஸா ரம்யா நக³ரீ மஹாந்ஸ ந்ருʼபதி: ஸாமந்தசக்ரம் ச தத் பார்ஶ்வே தஸ்ய ச ஸா வித³க்³த⁴பரிஷத்தாஶ்சந்த்³ரபி³ம்பா³நநா: ।
உத்³வ்ருʼத்த: ஸ ச ராஜபுத்ரநிவஹஸ்தே ப³ந்தி³நஸ்தா: கதா:² ஸர்வம் யஸ்ய வஶாத³கா³த்ஸ்ம்ருʼதிபத²ம் காலாய தஸ்மை நம: ॥ 41 ॥
புகழ்பெற்ற பேரரசர்களின் வரலாற்றை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மிகவும் போற்றப்பட்டவர்களாக, புகழ்பெற்றவர்களாக, அதிகசக்தி, செல்வம் உடையவர்களாக இருந்திருப்பார்கள் ஆனால் காலம் சென்றதும் அவர்களுடைய புகழ், பெருமை வரலாற்று புத்தகத்தில் சில பக்கங்களாக சுருங்கிவிடுகிறது. அவர்களுடைய வாழ்ந்த காலத்தின் பெருமையானது இப்படி சுருங்கி இருக்கும்போது சாதாரண மக்களின் நிலைமையை பற்றி சொல்லவே வேண்டாம். எங்கேடா காணோம் அவர்களை? ஹர்ஷன், அக்பர், சந்திரகுப்தன், ராஜராஜன்…. எல்லாம் மண்ணுக்குள். வந்த இடத்துக்கே போயாச்சு. அழகிய நகரங்களை ஆண்ட சக்ரவர்த்திகள். எல்லாம் கருப்பும் வெள்ளையுமா அச்சிட்ட புத்தகங்களில் பெயர்களை மட்டும் தான் சின்ன எழுத்தில் பார்க்கமுடிகிறது. ராஜாக்கள் மட்டும் இல்லை. வித்வான்கள், பிரபுக்கள், கலையரசிகள், கவிஞர்கள், கலைஞர்கள் ,அழகிகள்…. யாரும் இவரக்ளை பற்றி நினைப்பது கூட இல்லை.இவர்கள் கதியே இப்படி என்றால் நம்மைப்போன்ற அல்ப புழுக்களின் நிலையை ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள். யார் இதெல்லாம் இப்படி மாற்றுவது தெரியுமா…. கால தேவன் ஒருவனே.. காலமே உனக்கு எல்லோரும் சமம்.
42. यत्रानेकः क्वचिदपि गृहे तत्र तिष्ठत्यथैको यत्राप्येकस्तदनु बहवस्तत्र नैकोऽपि चान्ते । इत्थं नेयौ रजनिदिवसौ लोलयन्द्वाविवाक्षौ कालः कल्यो भुवनफलके क्रीडति प्राणिशारैः ॥ ४२॥
யத்ராநேக: க்வசித³பி க்³ருʼஹே தத்ர திஷ்ட²த்யதை²கோ யத்ராப்யேகஸ்தத³நு ப³ஹவஸ்தத்ர நைகோঽபி சாந்தே ।
இத்த²ம் நேயௌ ரஜநிதி³வஸௌ லோலயந்த்³வாவிவாக்ஷௌ கால: கல்யோ பு⁴வநப²லகே க்ரீட³தி ப்ராணிஶாரை: ॥ 42 ॥
நமக்கே இப்போது நிதர்சனமாக தெரிகிறதே. ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாக கலகலவென்று இருந்த வீடுகள் இப்போது களையிழந்து ஒருவரோ இருவரோ மட்டும் இருக்கும் நிசப்த குடில்களாக காணப்படுகிறது. ஒவ்வொருவராக இல்லங்களிலிருந்து தனித்து சென்று விட்டார்கள். கடைசியில் ஒருவருமில்லாத பாழ் மனையாகிவிடும். எல்லாம் காலத்தின் கோலம் தான். வெகு அழகாக கால தேவன் வாழ்வில் உலகில் இந்த சொக்கட்டான் விளையாட்டை விளையாடி ஜெயிக்கிறான். மனிதன் தோற்கிறான். பகடைக்காய்கள் இதில் நாம் தான். உலக வாழ்க்கை ஒரு பரமபத படம். சத்தியமான விளையாட்டு. அதில் ஜீவன்கள் தான் நகரும் காய்கள். மேலும் கீழும் அசைந்து செல்வன. இரவும் பகலும் தான் ரெண்டு தாயக் கட்டை. அது காட்டும் எண் தான் அந்தந்த ஜீவனின் கர்மவினை. அதில் மேலே ஏற்றிபெருமை கொடுக்கும் ஏணிகளும் உண்டு. எங்கிருந்தபோதிலும் கீழே அழுத்திதள்ள பெரும் பாம்புகளும் உண்டு. எல்லாம் எண்கள் சொல்லும் வித்தை. எத்தனையோ வீடுகளில் ஆளே இல்லை.ஒருவர் இருந்த இடத்தில் பலர், பலர் இருந்த இடத்தில் ஒருவருமே இல்லாத நிலையும் மாறி மாறி வரும். முடிவில் காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
43. आदित्यस्य गतागतैरहरहः संक्षीयते जीवितं व्यापारैर्बहुकार्यभारगुरुभिः कालोऽपि न ज्ञायते । दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते पीत्वा मोहमयीं प्रमादमदिरामुन्मत्तभूतं जगत् ॥ ४३॥
ஆதி³த்யஸ்ய க³தாக³தைரஹரஹ: ஸங்க்ஷீயதே ஜீவிதம் வ்யாபாரைர்ப³ஹுகார்யபா⁴ரகு³ருபி:⁴ காலோঽபி ந ஜ்ஞாயதே । த்³ருʼஷ்ட்வா ஜந்மஜராவிபத்திமரணம் த்ராஸஶ்ச நோத்பத்³யதே பீத்வா மோஹமயீம் ப்ரமாத³மதி³ராமுந்மத்தபூ⁴தம் ஜக³த் ॥ 43 ॥
ஒவ்வொருநாளும் குறித்த நேரத்தில் சூரியன் உதிக்கிறான். நாள் துவங்குகிறது. அவன் அஸ்தமனத்தோடு நாள் முடிகிறது. நமது வாழ்க்கை காலத்துக்குள் அடங்குவது. எத்தனை பிறப்புகள் எத்தனை இறப்புகள் நாள் தோறும். வியாதி, அவஸ்தை, வலி, துன்பம். நமது பேராசையில் மோகத்தில் நமது இன்ப துன்பங்கள் வளர்கின்றன, வீழ்கின்றன. திரும்ப திரும்ப இதே வாடிக்கையாக அல்லவோ போய் விட்டது.
44 रात्रिः सैव पुनः स एव दिवसो मत्वा मुधा जन्तवो धावन्त्युद्यमिनस्तथैव निभृतप्रारब्धतत्तत्क्रियाः । व्यापारैः पुनरुक्तभूत विषयैरित्थंविधेनामुना संसारेण कदर्थिता वयमहो मोहान्न लज्जामहे ॥ ४४॥
ராத்ரி: ஸைவ புந: ஸ ஏவ தி³வஸோ மத்வா முதா⁴ ஜந்தவோ தா⁴வந்த்யுத்³யமிநஸ்ததை²வ நிப்⁴ருʼதப்ராரப்³த⁴தத்தத்க்ரியா: । வ்யாபாரை
: புநருக்தபூ⁴த விஷயைரித்த²ம்விதே⁴நாமுநா ஸம்ஸாரேண கத³ர்தி²தா வயமஹோ மோஹாந்ந லஜ்ஜாமஹே ॥
ஒவ்வொருநாளும் பகலும் தொடர்ந்து இரவும் விடாமல் மாறி மாறி வருவதைப் பார்க்கிறோம். இந்த நேரத்தில் உயிர்கள் அனைத்தும் ஓடி ஆடி சுறுசுறுப்பாக தான் விரும்புபவைகளைத் தேடி அலைகிறது. எல்லாம் ஆசையின் காரணத்தால், சிரருக்கு பேராசை காரணம். துளியும் இப்படி அலைவதில் நமக்கு வெட்கமே இல்லை. ஒரு ஜென்மம் முடிந்து இன்னொன்று ஆரம்பித்தாலும் நமது அலைச்சல், வேட்கை, தீரவில்லையே. மரணம் ஆசையை மறக்கச் செய்யவில்லை.
45. न ध्यातं पदमीश्वरस्य विधिवत्संसारविच्छित्तये स्वर्गद्वारकवाटपाट नपटुर्धर्मोऽपि नोपार्जितः । नारी पीनपयोधरोरुयुगलं स्वप्नेऽपि नालिङ्गितं
मातुः केवलमेव यौवनवनच्छेदे कुठारा वयम् ॥ ४५॥\
ந த்⁴யாதம் பத³மீஶ்வரஸ்ய விதி⁴வத்ஸம்ஸார விச்சி²த்தயே ஸ்வர்க³த்³வாரகவாட பாடநபடுர்த⁴ர்மோঽபி நோபார்ஜித: ।
நாரீ பீநபயோத⁴ரோருயுக³ளம் ஸ்வப்நேঽபி நாலிங்கி³தம் மாது: கேவலமேவ யௌவநவநச்சே²தே³ குடா²ரா வயம் ॥ 45 ॥
நமக்கு தெரியும், எத்தனையோ முறை பல பல வேதாந்த புத்தகங்களில் படித்தும், பிரசங்கங்கள் கேட்டும், இந்த உலக பந்தத்திலிருந்து விடுதலை பெற, பகவானின் திருவடிகளை நினைப்பதில்லை,ஆத்மாவை ப்ரம்மம் என்று உணர முடியவில்லை, ஆத்மா என்பது என்ன என்று விசாரம் செய்ய முயற்சிக்க வில்லை. உலக ஈர்ப்புகள் கனவுகளிலும் நம்மை ஆக்கிரமித்து அடிமையாக்குகிறது. ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர குறைவதாக இல்லை. இப்படி மாறி மாறி வரும் துன்பக்கடலிலிருந்து விடுபட என்றாவது நாம் இறைவன் திருவடியை நினைத்து தியானம் செய் கிறோமா? ஸ்வரகத்தின் கதவுகளை திறக்கும் வழி காட்டம் மந்த்ரங்கள், ஜெபங்களையாவது, யாகம் ஹோமம் ஏதாவது ஒன்றிலாவது ஈடுபடுகிறோமா ? ஆனால் கனவிலும் நினைவிலும் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை மூன்றும் தாம் நம்மை படுகுழியில் தள்ளுகிறது.
46. नाभ्यस्ता प्रतिवादिवृन्ददमनी विद्या विनीतोचिता खड्गाग्रैः करिकुम्भपीठदलनैर्नाकं न नीतं यशः ।कान्ताकोमलपल्लवाधररसः पीतो न चन्द्रोदयेतारुण्यं गतमेव निष्फलमहो शून्यालये दीपवत् ॥
நாப்⁴யஸ்தா ப்ரதிவாதி³வ்ருʼந்த³த³மநீ வித்³யா விநீதோசிதா க²ட்³கா³க்³ரை: கரிகும்ப⁴பீட²த³லநைர்நாகம் ந நீதம் யஶ: ।
காந்தாகோமலபல்லவாத⁴ரரஸ: பீதோ ந சந்த்³ரோத³யே தாருண்யம் க³தமேவ நிஷ்ப²லமஹோ ஶூந்யாலயே தீ³பவத் ॥ 46 ॥
சிறந்த கல்வியறிவு இருந்தால் பெருமை வாய்ந்த பண்டிதர்களை வாதத்தில் வெல்லலாம். அறிவு, ஞானம் இல்லையே. வானளாவும் பேரும் புகழும் இல்லை. தேக பலத்தால் ஒரு வாள் வீச்சால் யானையின் தலையைக் கூட துண்டிக்கும் சக்தி யும் கிடையாது. பெண்கள் என் மேல் மோகம் கொள்ளும் அழகோ, அந்தஸ்தோ எதுவும் இல்லை. பின் எதற்காக இந்த இளமை. அதனால் என்ன பிரயோஜனம்? யாருமில்லாத கைவிடப்பட்ட வீட்டில் ஒரு தீபம் மாதிரி.
47. विद्या नाधिगता कलङ्करहिता वित्तं च नोपार्जितं शुश्रूषापि समाहितेन मनसा पित्रोर्न सम्पादिता । आलोलायतलोचनाः प्रियतमाः स्वप्नेऽपि नालिङ्गिताः कालोऽयं परपिण्डलोलुपतया काकैरिव प्रेर्यते ॥ ४७॥
வித்³யா நாதி⁴க³தா கலங்கரஹிதா வித்தம் ச நோபார்ஜிதம் ஶுஶ்ரூஷாபி ஸமாஹிதேந மநஸா பித்ரோர்ந ஸம்பாதி³தா । ஆலோலாயதலோசநா: ப்ரியதமா: ஸ்வப்நேऽபி நாலிங்கி³தா: காலோऽயம் பரபிண்ட³லோலுபதயா காகைரிவ ப்ரேர்யதே ॥
குறையில்லாத அறிவும், ஞானம் எதுவும் பெறவில்லை. தனமும் சேமிக்கவில்லை, சரஸ்வதி லட்சுமி இருவரின் கடாக்ஷம் எப்போதும் கிடையாது. பெற்றோரை தெய்வமாக மதித்து வணங்கி ஆசி பெறாத ஜென்மம். எப்போதும் உலகத்தில், எதையோ தேடி, அலுத்து, ஏமாந்து, களைத்து விழுந்து கிடைக்கும்ஆசைகள் நிறைவேறாத மூடனாக தான் வாழ்கிறேன். என் முழு வாழ்க்கையும் வ்யர்த்தம்.
48. वयं येभ्यो जाताश्चिरपरिचिता एव खलु ते समं यैः संवृद्धाः स्मृतिविषयतां तेऽपि गमिताः । इदानीमेते स्मः प्रतिदिवसमासन्नपतना गतास्तुल्यावस्थां सिकतिलनदीतीरतरुभिः ॥ ४८॥
வயம் யேப்⁴யோ ஜாதாஶ்சிரபரிசிதா ஏவ க²லு தே ஸமம் யை: ஸம்வ்ருʼத்³தா:⁴ ஸ்ம்ருʼதிவிஷயதாம் தேঽபி க³மிதா:
இதா³நீமேதே ஸ்ம: ப்ரதிதி³வஸமாஸந்நபதநா க³தாஸ்துல்யாவஸ்தா²ம் ஸிகதிலநதீ³தீரதருபி:⁴ ॥ 48 ॥
என் நிலையை ஒரு க்ஷணம் யோசித்து பார்க்கிறேன். என்னைப் பெற்ற அருமைத்தாய், தந்தை இந்த மண்ணை மறந்து காணாமல் போய் எத்தனை வருஷம் ஆகிவிட்டதே. பகவான் திருவடியில் என்னை மறந்து ஆனந்தமாக இருக்கிறார்களோ? என்னோடு உடன் பிறந்த ஜீவன்களும் எங்கே போய்விட்டார்கள்? வெறும் எண்ணத்தில், மனத்திரையில் சித்திரமாக தோன்றி மறைபவர்களாகி விட்டார்கள். நான்? இப்போது வ்ருத்தாப்யன். சக்தி இழந்தவன். முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவன். என் நிலை என்ன தெரியுமா? ஆற்றங்கரை மண்ணில் வேர்ப் பதித்து நிற்கும் மரம். எப்போது ஆற்றில் வெள்ளம் வருமோ? வெள்ள நீர் பலமாக என்னை வேரோடு கிளப்பி அடித்துக் கொண்டு போகுமோ?
49, आयुर्वर्षशतं नृणां परिमितं रात्रौ तदर्धं गतं तस्यार्धस्य परस्य चार्धमपरं बालत्ववृद्धत्वयोः । शेषं व्याधिवियोगदुःखसहितं सेवादिभिर्नीयते जीवे वारितरङ्गचञ्चलतरे सौख्यं कुतः प्राणिनाम् ॥ ४९॥
ayurvarsasatam nrnam parimitam ratrau tadardham gatam tasyardhasya parasya cardhamaparam balatvavrddhatvayoh sesam
vyadhiviyoga duhkhasahitam sevadibhirniyate jive varitaraṅgacancalatare saukhyam kutah praninam ॥ 49
ஆயுர்வர்ஷஶதம் ந்ரு’ணாம் பரிமிதம் ராத்ரௌ தத³ர்த⁴ம் க³தம் தஸ்யார்த⁴ஸ்ய பரஸ்ய சார்த⁴மபரம் பா³லத்வவ்ரு’த்³த⁴த்வயோ: । ஶேஷம் வ்யாதி⁴வியோக³து:³க²ஸஹிதம் ஸேவாதி³பி⁴ர்நீயதே ஜீவே வாரிதரங்க³சஞ்சலதரே ஸௌக்²யம் குத: ப்ராணிநாம் ॥ 49॥
இந்த கலிகாலத்தில் ஒருவரை வாழ்த்தும்போது ”சதமானம் பவதி. .. சதாயுஸ் ‘ நூறு வயது வாழ்வீராக என்று சொல்கிறோம். நூறு வயது ரொம்ப பெரிய வயதாகிவிட்டது இப்போது. நூறு வயது இருந்தாலும் அதில் பாதி ஐம்பது வருஷம் இரவில் தூக்கத்தில் போய்விடுகிறது. இருக்கும் ஐம்பது வருஷத்தில் பால்யம், விருத்தாப்பியம் என்று பயன்படாமல் பாதி வயசு போய்விடுகிறது. மீதி இருக்கும் வருஷங்களில் இறைவனை சிந்திக்காமல் தடுக்க இருக்கவே இருக்கிறது வியாதி, துக்கம், பொழுது போக்கு. சந்தோஷம். ஆகவே நீர்மேல் குமிழி வாழ்க்கை தான் வாழ்கிறோம். சொச்சம் இருக்கும் வருஷங்களிலாவது சில நேரங்கள் ஆத்மாவை அறிகிறோமா?
50. .क्षणं बालो भूत्वा क्षणमपि युवा कामरसिकः क्षणं वित्तैर्हीनः क्षणमपि च सम्पूर्णविभवः । जराजीर्णैरङ्गैर्नट इव वलीमण्डिततनुः नरः संसारान्ते विशति यमधानीयवनिकाम् ॥
ksanam balo bhutva ksanamapi yuva kamarasikah ksanam vittairhinah ksanamapi ca sampurnavibhavah । jarajirnairaṅgairnata iva valimanditatanuh narah samsarante visati yamadhaniyavanikam ॥ 50 ॥
க்ஷணம் பா³லோ பூ⁴த்வா க்ஷணமபி யுவா காமரஸிக: க்ஷணம் வித்தைர்ஹீந: க்ஷணமபி ச ஸம்பூர்ணவிப⁴வ: । ஜராஜீர்ணைரங்கை³ர்நட இவ வலீமண்டி³ததநு: நர: ஸம்ஸாராந்தே விஶதி யமதா⁴நீயவநிகாம் ॥ 50॥
வாழ்க்கையில் என்னென்ன வேஷம் போடுகிறோம். குழந்தையாக சில வருஷங்கள், அப்புறம் யௌவன வாலிபனாக, சில வறுஷங்கள் வருமானம் போதாமல் பணத்தை தேடி அலைந்து பிச்சைக்காரனாக, சில வருஷங்கள் பணம் சேர்ந்த பணக்காரனாக திமிரோடு, உடல் குறுகி, நோய்வாய்ப்பட்டு சக்தி இழந்து, சருமம் சுருங்கி, கூன் விழுந்து செவிடாகி, மரண பயத்தில் நடுங்கி சாகாமல் சாகிறோம். அதுவரையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் மனிதன் சிறந்த நாடக நடிகன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




