TEMPLE VISITS J K SIVAN

கோவிலுக்கு போவோமா? – நங்கநல்லூர் J K SIVAN

நாம் எல்லா ஆலயங்களுக்கும் செல்லும்போது எண்ணெய் , விளக்கு, திரி எல்லாம் எடுத்துக்கொண்டு போகிறோமே. ஏன்? பூர்வ ஜென்ம ஸத் கர்மபலன் இல்லையென்றால் இந்த எண்ணமே தோன்றாது.

தேவாரம் திருவாசகம் ப்ரபந்தம் போன்றவை பகவானை சதா சிந்தித்து அருள் பெரா மஹான்களின் அறிவுரை.

கடவுளை வழிபடுவது கூட விஞ்ஞானம் தான். நம்மைப் போலவே பகவானுக்கும் ஐம்புலன்கள் இருப்பதாக மனதில் கொள்வோம். பஞ்ச பூதங்களில் நிறைந்தவர் அல்லவா.பகவான் நமது மனதில் குடிபுகுவதும் விஞ்ஞானம் தான். அறிவின் முதிர்ச்சி தான் விஞ்ஞானம். நமது உடலில் ஆத்மா புகுவதும் விஞ்ஞானம் தான். சூர்யன் சந்திரன் அங்காரகன் குரு எல்லாம் அதீத சக்திகள். பிறப்பு இறப்பு இரண்டின் ரஹஸ்யத்தை இன்னும் விஞ்ஞானம் அறிய முடியவில்லை.

கடவுளோடு நம்முடைய ஒரே தொடர்பு தான் பிரார்த்தனை. தியானம். இதற்கு உதவுவது தான் வேத சாஸ்திரங்கள், மந்த்ரங்கள். விளங்குபவர்கள் தான் ஆச்சார்யர்கள், குருமார்கள். அதன் வழிபாட்டு கோட்பாடு தான் ஆகமம். ஏதோ ஒரு காந்த சக்தி தான் நம்மை பகவானோடு இணைக்கிறது. அது தான் பக்தி நம்பிக்கை.

நாம் இன்னும் கடவுளை முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. முடியவில்லை. பரமேஸ்வரனை ஆகமம் பஞ்ச முகத்தோடு காட்டுகிறது. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், இதற்கெல்லாம் அர்த்தம் நமக்கு தெரியுமா? தெரிந்துகொள்ள என்றாவது முயல்கிறோமா? ஈசானம் நிர்குணம். தத்புருஷம் பூர்ண பரமாத்மா. சீர்காழியில் ப்ரம்ம சிவனை தத்புருஷ ஸ்வருபமாக வழிபட்டார். தத்புருஷ லிங்கம் கோயில்களில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் மூர்த்திகள் .அகோர மூர்த்தி அஷ்ட திக்குகளை கண்காணிப்பவர். தக்ஷிணாமூர்த்தி குரு. நடராஜர், பைரவர் ருத்ரர் எல்லோருமே தெற்கு நோக்குபவர்கள்.

தேவி, இறைவியோடு சேர்ந்து காணப்படுபவர் வாமதேவர். பிரபஞ்ச காரணர்.தேகத்தில் பாதியை உமைக்கு அருளி ரெண்டும் ஒன்று என காணப்படுபவர். சக்தி சிவ ஐக்கியம். ஸ்ரீனிவாசன் அப்படித்தான் மஹாலக்ஷ்மியை தன்னுள் கொண்டவர். ஐஸ்வர்ய தேவதை.

சத்யோஜாதம் சக்தி ஸ்வரூபம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஸத்யோஜாதர். அக்னி ஸ்வரூபம். மேற்கு நோக்கி காணப்படுபவர். சோமாஸ்கந்த மூர்த்தி வெளிப்படுத்துவது பகவான் அன்பு அறிவு ஆற்றல்கள் இணைந்தவர் என்பதை.நமசிவாய என்பதே பஞ்ச பூதங்களை பிரபஞ்சத்தில் ஒன்றாக உணர்த்தும் பஞ்சாக்ஷர, ஐந்தெழுத்து மந்திரம்.

நீர்; அபிஷேகமாக, அக்னி தீபமாக, விளக்காக, ஹோம கொண்ட தீயாக, புஷ்பங்கள் நைவேத்தியம் அன்னதானம் எல்லாம் பூமியின் காணிக்கையாக, அவசியங்களாக, ஆகாயம் நிர்மலமான மனம், தியானம், ஜபம், தவம், இவற்றை ஊக்குவிப்பது.

நம் அன்றாட வாழ்க்கை இறைவனின் அருள். அவனிடம் பக்தி இன்றி நாம் அவன் அளிக்கும் அன்பு பரிசுகளை அனுபவிக்கிறோம். எளிமையாக தீபம் ஏற்றுவதன் மூலமாகவாவது அவனை நினைப்போம் என்பதற்காக தான் எண்ணெய் , திரி இதெல்லாம் கொண்டு போய் கொடுக்கும் வழக்கத்தை நாம் நமது புண்ய ஸ்தல யாத்திரையில் பின்பற்றுகிறோம். மந்திரங்கள், ஸ்லோகங்கள் , ஸ்தோத்திரங்கள், கீர்த்தனைகள் பக்திரசத்தோடு பாடுவது எல்லாமே மனதின் பக்தி வெளிப்பாடு. எந்த மொழியிலும் இது ஒன்று தான். குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லித்தரவேண்டும். பழக்கப்படுத்த வேண்டும்.

கோயில்களை பராமரிப்பது, கோயில்களில் விளக்கேற்றுவது, உழவாரப்பணி செய்வது, எல்லோரையும் கோயில்வளுக்கு கூட்டிச் செல்வது எல்லாமே மனதுக்கு திருப்தி அளிப்பவை. கோயில் இறைவனின் உறைவிடம்.
எண்ணங்கள் தான் நம்மை திசை திருப்பி இழுத்து அவதிப்படச் செய்பவை. அவற்றை கட்டுப்படுத்தி கடவுள் பக்கம் திருப்பவேண்டும். விடிகாலையில் சாயந்திர அஸ்தமன நேரத்திலாவது ஒரு சில நிமிஷங்கல் இறைவனை த்யானம் பண்ணுவது மிகச் சிறந்த நேரம். சந்தியாவந்தனம் அந்த நேரத்தில் தான் செயகிறோம்.

கோயில் மூலவர் கற்பகிரஹம், கருவறை மிக மந்திர சக்தி வாய்ந்தது. விஞ்ஞான பூர்வமாக சக்தி நிறைந்தது. விளக்கு ஏற்றுவதால் ஆயுள் வ்ருத்தி. கண்ணுக்கு ஒளி கூடும். ராமலிங்கர், மணிவாசகர் தீபமாகவே இணைந்தவர்கள். கடவுளை நாம் சொந்தம் கொண்டாட முடியாது. கடனாக வாங்கலாம். பக்தி தான் இணைக்கும் பாலம்.
வாருங்கள் நானும் உங்களோடு சேர்ந்து பல கோயில்களுக்கு முடிந்தவரை செல்வோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;