
தமிழ்த் தாத்தா நினைவுகள் – நங்கநல்லூர் J K SIVAN
”ஆதி மூர்த்தி போய்ட்டானே”
உ.வே.சா. என்றும் நிலையாக நம் மனதில் இருப்பவர். சிலையாக நிற்பவர். தமிழ் தாத்தா என்ற பொருத்த மான பேர் கொண்டவர். அவர் வாழ்வில் சில சம்பவங்க ளை நினைத்து பார்த்து எழுதி வைத்திருக்கிறார். அதில் ஒரு சம்பவம் படித்துவிட்டு எழுதுகிறேன்.
தஞ்சாவூருக்கு சிறப்பு அதை ஆண்ட மராத்தி ராஜாக் கள். எவ்வளவு கலை ஆர்வம் எவ்வளவு தாராள மனம். எத்தனை கலைஞர்களை, வித்வான்களை, சாஸ்த்ர வல்லுநர்களை, ஞானிகளை ஆதரித்து வளர்த்தவர்கள். இசை இயல் நாடகம் என்று முத்தமிழுக்கு மராத்தி ராஜாக்கள் செய்த தொண்டு மகத்தானது. ஜேஜே என்று சதா காலமும் தஞ்சாவூர் அரண்மனையில் எண்ணற்ற வித்துவான்கள் காணப்படுவார்கள். சரபோஜி, சிவாஜி, சகாராம் ராயர் போன்றவர்கள் காலத்திற்கு பிறகு வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் தஞ்சை கலை, களை, இழந்துவிட்டது. சரபோஜிக்கு பிறகு சிவாஜி மஹாராஜா காலத்தில் ஆதி மூர்த்தி ஐயர் ஒரு சிறந்த வித்வான். பச்சைமிரியன் ஆதிப்பையர், பல்லவி கோபாலய்யர், கனம் கிருஷ்ணய்யர்,சுந்தரமய்யர் போன்ற மஹா வித்துவான்கள் கிருதிகளை பாடம் பண்ணியவர். சமஸ்க்ரிதம், தமிழ், தெலுங்கு மும்மொழிகளில் ஆயிரக்கணக்கான கிருதிகள் தெரியும். 72 மேளகர்த்தா ராகமாலிகை மெட்டமைத்துப் பாடி தஞ்சாவூர் ஸமஸ்தான வித்வானாக புகழ் பெற்றவர். தமிழ் தாத்தாவின் அப்பா வேங்கடசுப்பையரின் நண்பர். ஆதிமூர்த்தி அய்யர் பாடினால் கனம் கிருஷ்ணய்யர் பாடுவது போலவே இருக்கும் என்று வேங்கடசுப்பையர் சொல்வார்.
சிவாஜி மஹாராஜா காலத்துக்கு பிறகு ஆதிமூர்த்தி ஐயர் தஞ்சாவூர் தெற்குவீதி வராகப்பய்யர் சந்தில் தன வீட்டில் தனித்து இருந்தார். வேறு பிரபுக்கள் எவரையும் சந்திக்கவில்லை. தமிழ் தாத்தா கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு ஸரஸ்வதி மஹாலில் சில பழைய தமிழ்ச்சுவடிகளை தேடி சென்றபோது அவர் அப்பா வேங்கடசுப்பையர் ”சாமிநாதா, தஞ்சாவூர் போனா என் நண்பன் ஆதி மூர்த்தி அங்கே இருக்கான். போய் பார்த்துட்டு க்ஷேமம் விசாரிச்சுட்டு வா” என்றார்.
தஞ்சாவூரில் ஓலைச்சுவடி வேலை முடித்துவிட்டு ஆதி மூர்த்தி அய்யர் வீட்டு விலாசம் தேடி நடந்து அவர் வீட்டுக்கு மத்தியானம் 2 மணிக்கு தமிழ்த்தாத்தா சென்றார்.
கதவு திறந்திருந்தது. பெரிய பழையகால நான்கு ஐந்து கட்டுக்கள் கொண்ட வீடு. உள்ளே சென்று மாமா என்று குரல் கொடுத்தார்….யாரும் இல்லை. அங்கேயே நின் றார் ஐயர் . சற்று நேரத்தில் உள் காட்டிலிருந்து ஒரு வயசானவர், அழுக்கு வேஷ்டி, வெள்ளை தாடி மீசை. ஒல்லியான தேகம். ஒரு கையில் சொம்பு . ஒருகையால் நெற்றியை மறைத்துக்கொண்டு
”யாரு ? . என்றார் .
”ஆதி மூர்த்தி ஐயர் வீடு தானே… அவரைப் பார்க்க வந்திருக்கேன்”
”ஆதி மூர்த்தியா? அவன் எப்போவோ போயிட்டானே ”
”அடாடா, அவர் இங்கே இருக்கார்னு எங்கப்பா சொல்லி போய் பார்த்துட்டு வான்னு சொன்னார்”
” நீ யாருட பிள்ளை?”
”நான் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் பிள்ளை சாமிநாதன்”
”ஓஹோ. வேங்கடசுப்பையர் சௌக்கியமா இருக்காரா?’
”சௌக்கியமா இருக்கார்”
” நீ என்ன பண்றே?”
”கும்மோணம் காலேஜ்லே தமிழ் பண்டிதர்”
”என்ன சம்பளம்?”
”மாசம் அம்பது ரூபா”
”ரொம்ப சந்தோஷம். ஆத்துக்கு போய் வேங்கட சுப்பை
யர் கிட்டே ஆதி மூர்த்தி செத்துபோய்ட்டான். சிவாஜி மஹாராஜா எப்போ போனாரோ, அப்போவே அவனும் போய்ட்டான்னு சொல்லு”
”நீங்க……”
”ஆதி மூர்த்தி தான்… இப்போ இருந்தும் ஒண்ணு இல்லாததும் ஒண்ணு. எப்போ என் வித்தைக்கு விநியோகம் இல்லியோ அப்போ நான் இருந்தும் இல்லாதவன் தானே..என்ன கௌரவம்? சங்கீத அருமை தெரியாதவன் நடுவிலே நடைபிணமா இருக்கிறது செத்தமாதிரி தானே..எனக்கு சங்கீதம் தெரியும்னு யாரிட்டயும் சொல்லவேணாம். என் சங்கீதம் துருப்பிடிச்சு போச்சு. இப்போ தனக்கு தானே வித்வான்னு சொல்லிக்கிறவன் தான் நடமாடறான். என்னை யாரு மதிக்கிறா? எவன் வரான் ? ஏதோ அத்திப்பூத்தாமாறி நீ வந்தே. வேங்கடசுப்பையருக்கு பழைய அபிமானம். அதுசரி வேங்கடசுப்பையர் அருமை எனக்கு தெரியும். என் அருமை அவருக்கு தெரியும். நீ சங்கீதம் கத்துண்டியா, பாடுவியா?”
”ஆரம்பத்துலே கொஞ்சம் கத்துண்டேன்.. அப்புறம் தமிழ் கத்துண்டதிலே சங்கீதத்திலே கவனம் செலுத்த முடியலே..”.
‘அடாடா, என்ன தப்பு காரியம் பண்ணிட்டே. அப்பா கிட்டே கனம் கிருஷ்ணய்யர் க்ரிதியெல்லாம் அப்யாசம் பண்ணிருக்கலாமே. [பெரிய சம்பத்தை இழந்துட்டே..”
”எனக்கு இப்போவும் அது கொஞ்சம் கொஞ்சம் தெரியும். ஆனா உங்கள மாதிரி மஹா வித்துவான் எதிரே பாட சங்கோஜம்.. பயம்.”
அவரிடம் ஆசி பெற்று ஊர் திரும்பினேன்.. அப்பாவிடம் சொன்னேன். ரொம்ப கண்ணீர் விட்டார். மஹா வித்வான். ஆதி மூர்த்தி அய்யர். மஹாராஜா, சங்கீதம் தெரிந்தவர் இல்லாத போது நாமும் இறந்த மாதிரின்னு இருக்காரே..
படிக்காசு புலவர் சொன்னது ஞாபகம் வருது;
”பூமாதிருந்தென்ன புவி மா திருந்தென்ன -பூதளத்தில்
நா மாதிருந்தென்ன, நாமிருந்தென்ன, நன்னாவலர்க்கு
கோமணழகமர் மால் சீதக்காதி கொடைமிகுந்த
சீமானி றந்திட்டபோதே புலமையும் செத்ததுவே”
சையத் அப்துல் காதிர் என்பவர் காயல்பட்டினத்தில் ஒரு முஸ்லீம் பிரபு. சீதக்காதி என்று தமிழில் பாடப்படுபவர். நிறைய தமிழ் வித்வான்களை பண்டிதர்களை ஆதரித்து பரிசுகள் அளித்தவர். படிக்காசு புலவர் சீதக்காதி இறந்ததும் இனி லட்சுமி, சரஸ்வதி, பூமாதேவி இருந்து, நான் இருந்து என்ன பயன்? சீதக்காதி இறந்ததும் உலகில் புலமையும் செத்துவிட்டது என்று பாடின பாட்டு இது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


