
everyonefollowme மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN
7 வது பகுதி
எனக்கு நிறைய போனிலும் phone நேரிலும் நண்பர்கள் சொல்வது என்ன தெரியுமா?
”அடடா, இப்படி ஒரு ஸ்வாரஸ்யமான மயில் ராவணன் கதை இதுவரை கேட்டதில்லையே”. இது நிச்சயம் ராவண புராண காவியங்களில் இல்லை. நாட்டுப்புற பாடல்களில் வரும். பழங்காலத்தில் வீட்டில் கதையாக பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு. என் சிறுவயதில் தெருக்கூத்துகளில் அஹி மஹி ராவணன், என்று மயில் ராவணன் கதையை இரவு நேரம் விடிய விடிய க்ராமத்தார்கள் நடித்து பார்த்திருக்கிறேன்.
இனி அடுத்த பகுதி கதைக்குள் செல்வோம்.
மயில் ராவணன் அரண்மனைக்குள் தூம்ரதண்டி
தண்ணீர் குடத்துடன் சென்றபோது துலா சாதனங்கள் யாரோ எதிரி ஒருவன் உள்ளே நுழைந்ததை காட்டி விட்டதால் ராக்ஷஸ வீரர்கள் ஓடிவந்தார்கள். அதற்குள் ஹனுமான் ”சீக்கிரம் உள்ளே சென்றுவிடு, ஓடு” என்றுசொல்லியபடி தூம்ரதண்டி தண்ணீர் குடத்துடன் இருந்த மாவிலைக் கொத்தோடு நுழை வாயிலின் உள்ளே தடுக்கி விழுவது போல பாசாங்கு செய்தாள். அவ்வளவுதான். அரண்மனைக்கு உள்ளே சென்று விழுந்த மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக இருந்த ஹனுமானும் மாவிலையில் இருந்து வெளியில் குதித்து, தன் விஸ்வரூபத்தை எடுத்து அதி பலம் கொண்டு அத்தனை வீரர்களையும் அடித்து, துவைத்து துவம்சம் செய்து கொன்றார்.
பாதாளத்திலே நடந்ததையெல்லாம் ஆனந்தத்து
டனே வானத்தில் இருந்த தேவர்கள் பிரமித்தபடி பார்த்து, பார்த்து பரவசம் அடைந்து மகிழ்ந்தார்கள். ‘ ராம லஷ்மணர்களை அனுமான் காப்பாற்றி விடுவார்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கெல்லாம் வந்து விட்டது.
அதையெல்லாம் பார்த்த தூம்ரதண்டி பெரு மகிழ்ச்சி அடைந்து ‘ஐயா அனுமனே இப்போ நீங்கள் செய்ய வேண்டியது கடகன் மற்றும் விருசிமுகன் என்ற இரண்டு அசுரர்களையும் அழிக்க வேண்டும். அவர்களே காளி கோவிலுக்கு காவலில் உள்ள பெரும் தளபதிகள். அவர்களை வதம் பண்ணாலே பாதி காரியம் ஆனது போலாகிடும். அதோ தெரிகிறதே அதுதான் கடகன் வீடு. அதுக்கு பக்கத்தில் உள்ளதுதான் விருசிமுகன் வீடும்’ என்று அவர்கள் வீட்டை அனுமானுக்குக் காட்டிவிட்டு அங்கிருந்து வேக வேகமாக சென்று விட்டாள். அவளை அங்கு பார்த்து விட்டால் உடனே தயங்காமல் மயில் ராவணன் அவளையும் அவள் பிள்ளையும் வெட்டிப் போட்டு விடுவான் என்று அவளுக்கு தெரியும்..
தூம்ரதண்டி அடையாளம் காட்டிய வீட்டை அனுமானும் அதி வேகமாக சென்றடைந்து அந்த இருவரும் தத்தம் மனைவிகளுடன் சல்லாபித்துக் கொண்டு இருக்கை யிலேயே தன் வாலை அவர்கள் வீட்டுக்குள் செலுத்தி அவர்கள் படுத்திருந்த கட்டிலோடு சேர்த்து வாலால் அவர்களைக் கட்டி வெளியில் இழுத்து துவம்சம் செய்தார். விருசிமுகனோ ‘சுவாமி என்னை விட்டுடு….என்னை விட்டுடு.. இத்தனையும் செய்தது அந்த மகாபாவி மயில் ராவணன்தான்….அதோ அங்குள்ள வீட்டில் அவன் இருக்கான். அவனை வதம் செய்யுங்கோள்” என அலறினாலும் அவனையும் அனுமான் அழித்தார். ஆனால் அந்த குழப்பத்தில் கடகன் மட்டும், தப்பித்தோம் பிழைத்தோம் என எப்படியோ தப்பியோடினான்.
தூம்ரதண்டி, அவளும் அவள் பிள்ளையும் மயில் ராவணனால் விலங்கிட்டு அடைத்திருந்த இடத்துக்கு ஹநுமானை அழைத்து சென்றாள். அங்கே அவள் பிள்ளையை விலங்கிலிருந்து விடுவித்தார். அவனுக்கு பயம். ‘இதுவும் மயில் ராவணன் நாடகமோ?” என்று.
”யார் இவர்? இங்கு வந்து என் கால் விலங்கை, கை விலங்கை, மார் விலங்கை ஒடித்தவர்?மயில் ராவணன் ஆளோ ?” அவன் நடுங்கியதைக் கண்ட ஹனுமான்
”அப்பனே நீ இங்கிருந்து கிளம்பி என்னோடு வா. உனக்கு நானே பட்டம் சூட்டுகிறேன். உன் தாயோடு தான் வந்திருக்கிறேன் ”என்ற போது தூம்ர தண்டியும் அவன் பயத்தை போக்கினாள்
”மகனே, நீலமேகா, இன்றோடு நம் துயருக்கு விடுதலை. இவர் தான் ஹனுமான். ராம தூதர். சீக்கிர மாக வெளி யே வா. மயில் ராவணன் வந்தால் உன்னை வெட்டி விடுவான்” என்றாள் . அவனும் ஓடிவந்தான். இருவரும் ஹனுமான் காலில் விழுந்து ‘ஐயா, ராமபக்தரே, தயவு செய்து நீங்கள் இங்கிருந்து ராம லஷ்மணர்களை விடுதலை செய்து கொண்டு போகும் முன் என் மாமன் மயில் ராவணனையும் வதம் செய்து விட்டுப் போங்கள். இல்லையெனில் எங்களை அவன் சுக்குநூறாக கிழித்துப் போட்டு ஹிம்சை செய்து கொலை பண்ணிவிடுவான். எங்களைக் காப்பாற்றும்” என அழுதார்கள்.
‘நீங்கள் இருவரும் எங்காவது சற்று நேரம் பத்திரமாக இருங்கள். ஏதாவது ஆபத்து என்றால் என்னை உரத்த குரலில் அழைத்தால் நான் எங்கிருந்தாலும் எனக்குக் காது கேட்கும். உடனே வந்து உங்களைக் காப்பாற்று வேன். என கூறி விட்டு ஹனுமான் காளி கோவிலுக்குப் போனார்.
இதெல்லாம் நடந்ததை அறியாத மயில் ராவணன் அதி பாதாள லோகத்தில் தன் மனைவியுடன் அதி உல்லாசத் தில் இருந்தான். ‘தேவி இப்போது தான் என் தங்கை தூம்ரதண்டியை பூஜைக்கு தண்ணீர் கொண்டு வர அனுப்பி விட்டு வந்தேன். அவள் வர இன்னும் ரெண்டு ஜாமமாகும். அதற்குள் நான் குளித்துவிட்டு பூஜைக்கு தயாராகணும் நேரம் இருக்கிறது என்றான்”
ராக்ஷசர்களை துவம்சம் செய்த அனுமான் காளி கோவில் மூடி இருப்பதை கண்டார். நிசப்தமாக இருந்தது. பாதாள லோகத்தில் மயில் ராவணன் குளம் ஒன்றில் ஸ்நானம செய்ய போனான்.
ஹனுமார் பார்வதி தேவியை மனதில் துதித்து ‘அம்மா, என்னை மன்னித்தருள். இதுவும் உன்னையே வேண்டிக் கொண்டுதான் செய்கிறேன்’ என்று பலம் கொண்டு ரெண்டு முஷ்டிகளாலும் காளி கோவில் கதவை குத்தி கதவை பிளந்தார். கோவில் உள்ளே அடுக்கடுக்காய் மண்பங்கள். ஆயிரம் கால் மண்டபம், அபிஷேக மண்ட பம், எண்ணை மண்டபம், வண்ண மண்டபம், கல் மண்ட பம், கல்யாண மண்டபம், புஷ்ப மண்டபம், வைர, வைடூரிய, பவள, தவழ, மகர மண்டபங்கள். அதெல் லாம் தாவி தாவி சென்று இருக்க அத்துணையையும் அரை நாழிகையில் தாவித் தாவிச் சென்று காளி சன்னதியை நெருங்கினார். காளி உக்கிரமாக இருந்தாள். பல் ஒவ்வொன்றும் நூறு விரல் நீளம், ஜடையோ பின்னி பின்னி ராஜநாகம் போலவே காணப்பட, வாயோ பலி வேணும், பலி வேணும் எனக் கூவுவது போல காட்சி தந்தது. அந்தக் காளியைக் கண்டாலே யாருமே அஞ்சி நடுங்ககுவார்கள். காளிக்கு முன்னாலே ஒரு பெட்டி..
அனுமாருக்கு நீலமேகன்தான் காளிக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள ஒரு பெட்டியில் ராம லஷ்மணர்களை மயில் ராவணன் பூட்டி வைத்துள்ளதை சொன்னான். அதனால் அனுமாருக்கு ராம லஷ்மணர்களை கண்டுபிடிக்க கஷ்டம் ஏதுமில்லை. ஹனுமான் ஆடாமல், அசையாமல் பரம பக்தியோடு மெல்ல மெல்ல அந்தப் பெட்டியை திறந்து பார்த்தார். அதை திறந்ததும் அப்படியே திடுக்கிட்டார். அவர் கண்களில் நீர் வழிந்தது. காரணம். பெட்டிக்குள் மயில் ராவணன் போட்டு இருந்த மாய சூத்திரம் மற்றும் மந்திரக் கட்டி னால் ராமரும் லஷ்மணரும் ஆடாமல் அசையாமல் மயங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு ஸ்மரணை இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க அவர்களைத் தடவிக் கொடுத்தார். அவர்கள் கண் விழிக்க அவர் ஸ்தோத்திரம் பண்ணினார். ராமபிரான் மெல்லக் கண் விழித்தார்.
‘வா ஹனுமான், நாம் இப்போது எங்கே இருக்கிறோம்? நான் ஏன் இந்த பெட்டியில் கிடக்கிறேன்? இதென்ன தேசம்? இதென்ன ஊர்? ராமரால் எழுந்திருக்க முடியவில்லை.
ஹநுமானுக்கு கண்களில் தண்ணீர் குளம் போல முட்டிக்கொண்டு பீறிட்டது.
‘ஹே ராமச்சந்திர ப்ரபோ, ஜகத் குருவே, என்னை ஏமாற்றி உங்களை மயில் ராவணன் இங்கே கொண்டு வந்து வைத்து மாய மந்திரத்தால் கட்டும் போட்டு விட்டான். உங்களை மீட்டு அழைத்துக் கொண்டு போகவே நானும் இங்கே வந்துள்ளேன். கவலை வேண்டாம். முதலில் அவனைக் கொன்று விட்டு உங்களை மாயக்கட்டில் இருந்து விடுவிப்பேன். அவன் வருவதற்குள் உங்களை இங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்று விடுவேன். அதுவரை பத்திரமாக இதில் இருங்கள்’ என்று அழுதுக்கொண்டே கூறினார். காளியை வேண்டிக் கொண்டார்.
பெட்டியில் ராமர் கண்களை மூடியபடியே இருந்தார். அவரால் கண்களையும் முழுவதாக திறக்க முடியாமல் மயில் ராவணனின் மாயக்கட்டு சக்தி வாய்ந்ததாக இருந்தது.
அடுத்த பதிவுடன் மயில் ராவணன் கதை நிறைவு பெரும். ஒருநாள் ராமனை தியானம் பண்ணிக்கொண்டு காத்திருப்போமா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

