SADHU RAS KHAN J K SIVAN

கிருஷ்ண பக்த ரஸ்கான் – நங்கநல்லூர் J K SIVAN

தூய்மையான பக்திக்கு ஜாதியோ, மதமோ, வயதோ, ஆண்பால் பெண்பாலோ எதுவுமில்லை. அதுவும் கிருஷ்ணன் என்றால் அவனுக்கு பக்தர்கள் கூட்டம் ஏராளம். அப்படி ஒரு அருமையான பக்தர் 16ம் நூற்றாண்டு ஹிந்திக்காரர் ரஸ்கான், மேற்கு உத்ரப்ரதேசத்தவர். அவருக்குத்தெரிந்த மொழி பிரிஜ் பாஷா. குடத்திலிட்ட விளக்காக இருந்த அவரை கிருஷ்ணன் உலகறிய வைத்து விட்டான். அவர் கிருஷ்ணன் மேல் பாடிய பாடல்கள் ”சுஜான்” எனும் தொகுப்பு. அதை யாரோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அடியேன் கண்ணில் பட்டு ஆனந்தமடைந்தேன். அடேடே, ரஸ்கான் இன்னொரு ஸூர்தாஸர் போல் இருக்கிறதே.
அக்காலத்தில் மதப்பிரிவினை, அரசியல் புழுக்கள் இல்லை. எவரிடம் பக்தி இருந்ததோ அது பரிமளித்தது. வித்யாசம் மனதில் துளியும் இல்லாமல் அவரவர் தமக்கு விரும்பிய கடவுளை நேசித்து வழிபட்டு அவரவர் பண்பாட்டின் படி வாழ்ந்த காலம். இந்தியா பாகிஸ்தானாக மாறாத பொற்காலம்.

கபீர் தாசர் போல் ஒருவர் ரஸ்கான் எனும் கிருஷ்ண பக்தர். ரஸ்கான் தனது கிருஷ்ண பக்தி பாடல்களில் நமது தெலுங்கு வேமனா போல், ஸூர்தாஸ் போல் தனது பெயரையும் சேர்த்து சொல்லிக்கொள்கிறார்.

एक सुतीरथ डोलत हैइक बार हजार पुरान बकेहैं। एक लगेजप मेंतप मेंइक ससद्ध समाधन मेंअटकेहैं। चेत जुदेखत हौ रसखान सुमूढ़ महा ससगरेभटकेहैं। सााााँच सह वेजन आपुनपौ यह स्याम गुपाल पैवारी दकेहैं।।23।।|(Sujaan, p.6, verse 23)

சில பக்தர்கள் புனித யாத்திரை ஊர் ஊராக வெகுகாலம் வெகுதூரம் நடந்து போகிறார்கள். ஒருசிலர் ஒரு இடத்தில் உட்கார்ந்து நூற்றுக்கணக்கான புராணங்களை படிக்கிறார்கள். பாராயணம் பண்ணுகிறார்கள். சிலர் தனித்தனியாக ஜபமாலை, ருத்ராக்ஷம், துளசிமாலை மணிகளை உருட்டி நாம ஜபம் செய்கிறார்கள். சிலர் இரவு பகல் மணிக்கணக்காக பூஜை செய்கிறார்கள். சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் உபவாசம் இருக்கிறார்கள். அடேய், ரஸ்கான், இவர்கள் எல்லாம் எதை தேடுகிறார்களோ அதை விட்டு வேறு எங்கோ அல்லவா செல்கிறார்கள்? கிருஷ்ணன் பயலை மனதில் கெட்டியாக இறுக்கிப் பிடித்து நிறுத்திக்கொண்டு அவன் அழகில் மயங்கி, அவனை ஒவ்வொரு நொடியும் ரசித்துக் கொண்டே அவனோடு ஐக்கியமாக அல்லவோ கூடவேண்டும்?

ரஸ்கான் வாழ்க்கை குறிப்பை சொல்லவேண்டுமானால், அக்பர் டில்லி பாதுஷாவாக ஆண்ட காலத்தில் நமது சூர்தாஸ் வாழ்ந்தார். அதே சமயம் இன்னொரு முஸ்லீம் சுஃபி SUFI ஒருவரும் அருமையான கவிஞர் ஸயீத் இப்ராஹிம் கான் என்பவரும் வாழ்ந்தார். அவர் ஒரு பஷ்ட்டூன் சர்தார். பாரசீகத்தவர் சுருக்கமாக ரஸ்கான். (1534-1619) . டில்லி பக்கத்தில் அம்ரோஹாவில் வாழ்ந்தவர்.

இதுவரை பிரிந்தாவனம் சென்று வந்த எத்தனையோ நண்பர்கள் ஏன் இதுவரை ரஸ்கான் எனும் பரம கிருஷ்ண பக்தரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. அல்லது அவர்கள் எழுதி சொல்லி, பேசி, நான் அறியாமல் போய்விட்டேனா? அப்படி இருக்க முடியாதே. இன்று தான் அவரைப் பற்றி ஒரு முகநூல் நண்பர் குறிப்பிட்டிருந்தார் உடனே தேடிப்பிடித்தேனே.

எங்கோ ஒரு சிறிய கிராமத்தில் சின்ன ஜாகிர்தார் ஒருவருக்கு மகனாக பிறந்தவர் சையத் இப்ராஹிம். அவரே பின்னர் ரஸ்கான். பிரிந்தாவனத்துக்கு ஓடிவந்து அங்கேயே சாகும் வரை கிருஷ்ணனின் அடிமையாக வாழ்ந்த மஹான். அடேயப்பா எப்படி இத்தனை பாடல்கள் கிருஷ்ணன் மேல்.! கிருஷ்ணனின் அழகு, அவனுக்கும் ராதைக்கு உண்டான பிரேமை.. இதிலேயே காலம் பூரா திளைத்து மகிழ்ந்து எழுதியவர் ரஸ்கான். கூசாமல் சொல்லலாம் இன்னொரு ஸூர்தாஸ் ரஸ்கான் சமாதி மதுராவில் மஹாபன் எனும் இடத்தில் இன்றும் உள்ளது. மதுராவுக்கு 6 மைல் கிழக்கே. அநேக கிருஷ்ண பக்தர்கள் சென்று வணங்குகிறார்கள். நான் மதுரா சென்ற போது எனக்கு தெரியாமல் போனது எனது துரதிர்ஷ்டம்.

சிறு பையனாக இருந்தபோது ரஸ்கான், பழைய டில்லியில் ஒரு வெற்றிலை பாக்கு கடை முன்னால் நின்றிருந்தான். பீடா மடித்துக்கொண்டிருந்த கடைக்காரருக்கு பின்னால் சுவற்றில் புன்னகைக்கும் குழந்தை கிருஷ்ணன் இடையில் வஸ்திரமில்லாமல் ஆடையில்லாமல் வெறும் காலோடு நின்றவன் காந்தம் போல் ரஸ்கான் மனதை கவர்ந்துவிட்டான்.

”கடைக்காரரே , உங்கள் பின்னால் சுவற்றில் படத்தில் இருக்கும் அழகான குழந்தை யார்? டில்லியில் உடலை துளைக்கும் குளிரில் பாவம் ஏன் உடையில்லாமல், வெறும் காலோடு அவன் நிற்கிறான்? அவனைப் பற்றி அக்கறை கொண்டவர் யாரும் இல்லையோ?
”அப்பனே, உனக்கு தெரியாதா? இது கிருஷ்ணன், ஹிந்துக்கள் கொண்டாடி வணங்கும் கிருஷ்ண பகவான்.
”ஓஹோ, அப்படியா, இந்த கிருஷ்ணனை எங்கே பார்க்கலாம்?”
”ஏன் கேட்கிறாய் தம்பி?”
”இல்லை, நான் பணம் சேர்த்து அவனுக்கு துணிமணி வஸ்திரம், காலுக்கு செருப்பு எல்லாம் வாங்கி கொண்டு போய் கொடுக்க எனக்கு ஆசையாக இருக்கிறது”
வெத்தலை பாக்கு பெட்டி கடைக்காரருக்கு ரஸ்கான் உண்மையிலேயே கிருஷ்ணன் மேல் பாசத்தோடு கேட்பது புரிந்தது.
”பையா, நீ இங்கிருந்து சில மைல் தூரம் நடந்தால் பிருந்தாவன் என்கிற ஊர் வரும். அங்க விசாரித்தால் கிருஷ்ணன் இருக்கும் இடம் சொல்வார்கள். எல்லோருக்கும் அங்கே தெரியும். போய் விசாரிச்சுக்கோ ”

பணக்கார வீட்டு பையன், ஜாகிர் பிள்ளை அல்லவா? நிறைய பட்டு வஸ்திரங்கள், காலுக்கு பாதுகைகள் வாங்கிக்கொண்டு குதிரை மேல் ரஸ்கான் புறப்படுகிறார். பிருந்தாவனம் சென்ற ரஸ்கான் அப்பறம் ஊர் திரும்பவே இல்லை.

பக்த கல்பத்ருமா என்று ஒரு நூல். அதில் ஒரு சம்பவம். ரஸ்கான் தனது குருவோடு பிருந்தாவனம் சென்றுவருவோம் என்று புறப்பட்டார். அங்கே அவர் மனம் பூரா கிருஷ்ணன் மேல் வியாபித்திருக்க அப்படியே மூர்ச்சையாகி விழுகிறார். அப்போது கிருஷ்ணன் அவருக்கு தரிசனம் தருகிறான் . அவ்வளவு தான், அப்புறம் அவர் பிரிந்தாவனத்தை விட்டு பிராணன் போகும் வரை எங்கும் நகரவே இல்லை.
கிருஷ்ணன் அடிமையாக கடைசிமூச்சு வரை வாழ்ந்து மதுராவில் சமாதி அடைந்த மஹான்.

मानुष हौं तो वही रसखासन बसौ ब्रज गोकुल गांव केग्वारन। जो पसुहौं तो कहा बसुमेरो चरौं सनत नंद की धेनुमााँझारन। पाहन हौं तो वही सगरर को जो धयो कर छत्र पुरंदर धारन। जो खग हौं बसेरो करौं समल कासलंदी कूल कदंब की डारन।।1।।

இந்த பாட்டில் ரஸ்கானின் கிருஷ்ண தாகம்:
‘மறுபடியும் நான் மனிதனாக பிறக்க வேண்டும். அப்போது நீ என்னை எப்படியாவது வ்ரஜபூமியில் கோகுலத்தில் ஒரு கோபனாக படைக்க வேண்டும்.. ஒரு வேளை என்னை ஒரு பசுவாக பிறக்க வைத்தால் நானும் நந்தகோபன் பசு மந்தைகளோடு சேர்ந்து மேய்ந்து கொண்டிருக்க வேண்டும். சரி, வெறும் கல்லாக நீ படைத்தால், கோவர்த்தன கிரி மலையின் கல்லாக இருக்கவேண்டும். அதை தானே குடையாக கிருஷ்ணன் தூக்கி பிடித்து கோபகோபியரை பாதுகாத்தான்… எப்படி? ” மண்ணானாலும் திருச்செந்தூரில் …. ” பாட்டு மாதிரியே அற்புதமாக இருக்கிறதே. ரஸ்கான் காப்பி அடிக்கவில்லை. ரஸ்கான் காலத்தில் இந்த பாட்டு பிறக்க வில்லையே.
ஒருவேளை நான் ஏதாவது ஒரு பறவையாக பிறந்துவிட்டால், நிச்சயம் யமுனை நதிக்கரையில் , காளிங் கனை வதம் செய்ய கிருஷ்ணன் ஏறிய கதம்ப மரத்தின் மேல் ஏதோ ஒரு கிளையில் கூடு கட்டிக்கொண்டு வாழவேண்டும்.”

बेनुबजावत गोधन गावत ग्वालन सङ्ग गली मधी आयो I बान्सुरी मेउनी मेरोइ नाव सुग्वासलनी के समस टेरी सुनाओ II ए सजनी सुसन सास केत्राससन नंद केपास उसास न आयौ। कै सी करौ रसखासन नसहं सहत चैनन ही सचतचो चरुायौ।।174।।

”மாலை நேர மஞ்சள் வெயிலில் எல்லோரும் பசுக்களை மேய்த்துவிட்டு கன்றுக்குட்டிகளோடு வீடு திரும்புகிறார்கள். கிருஷ்ணன் உடம்பெல்லாம் புழுதி, மண். வியர்வை. புல்லாங்குழலை அற்புதமாக ஊதிக் கொண்டு வருகிறான். நண்பர்கள், பசுக்கள் புடைசூழ.
அடேய் , ரஸ்கான், கேட்டாயா? கிருஷ்ணன் புல்லாங்குழலில் அவன் நண்பர்களை அழைப்பது உன் பெயரை சொல்லி கூப்பிடுகிறது போல் இருக்கிறதல்லவா? காதில் இன்ப ஒலியாக கேட்கிறதே. உன் மாமியார், மைத்துனி மேல் உனக்கு பயம் அதிகமாச்சே, அவர்கள் காதில் உன் திகைப்பு விம்மல் ஒலி கேட்காமல் மறைத்துக் கொள். உன் இதயத்தை அந்த கிருஷ்ணன் கொள்ளை கொண்டு போய் விட்டானே. கவலை விடு.

धूरर भरेअसत सोसभत श्यामजूतैसी बनी ससर सुंदर चोटी। खेलत खात सिरैअंगना पग पैजनी बाजसत पीरी कछोटी। वा छसव को रसखासन सबलोकत वारत काम कला सनसध कोटी। काग केभाग बड़ेसजनी हरर-हाथ सों लैगयौ माखन-रोटी॥ (Bhati 138)

”ஒரு கோபி இன்னொருத்தியிடம் சொல்கிறாள்;
அந்தப் பயல் ஷ்யாமுக்கு தலையைப் பின்னி கொண்டை போட்டு விட்டிருக்கிறாள் அவன் தாய் யசோதை.. அதைப் பார்த்தால் எவ்வளவு காந்த சக்தியோடு கண்ணையும் மனத்தையும் கவர்கிறது. பிருந்தாவனத்தில் இருக்கும் மொத்த மண்ணில் பாதிக்கு மேல் அவன் உடம்பில் தான். அத்தனை விளையாட்டு, புரண்டு ஓடி விழுந்து. அவன் ஓடும்போதும், விளையாடும்போதும், முற்றத்தில் ஏதாவது பக்ஷணத்தை சாப்பிடும்போதும், அவன் கால் சிலம்பு ஒலித்துக்கொண்டே இருக்கிறதே. அதற்கு தான் எத்தனை செவிக்கினிய நாதம் தர முடிகிறது. அவன் அழகுக்கு அழகு செய்வது எது? இதோ அவன் இடுப்பில் தரித்திருக்கும் பீதாம்பர த்தை நழுவி விழாமல் இடுப்போடு இறுக்கிப்பிடித்து அதன் மேல் அவன் வரிந்து கட்டியிருக்கும் வஸ்திரம்., BELT மாதிரி. அது தான்., ”அடியே, அங்கே பாரடி, அந்த நீல வண்ண கிருஷ்ணன் உடம்பை. மஞ்சள், சிகப்பு, செம்மண் கலந்த புழுதி தலையிலிருந்து கால் வரை. அதுவே அவனுக்கு அழகை கூட்டுகிறது. தலையில் இறுக்கமாக தூக்கிக் கட்டிய சுருண்ட முடி. அதில் லாகவமாக செருகப்பட்ட மயில் பீலி. அடாடா என்ன அழகு பார். வாய் கொள்ளாமல் ரொட்டி,வெண்ணெய். ஓரிடத்தில் நிற்காமல் ஆடுகிறான் ஓடுகிறான். காலில் அணிந்திருக்கும் சலங்கை ஒளி ஜல் ஜல் என்று சங்கீதமாக ஒலிக் கிறதே.அவனுக்கென்றே எடுப்பாக இடையில் எவ்வளவு அழகாக கண்ணைப்பறிக்கும் மஞ்சள் பீதாம்பர வஸ்திரம். ”பலே பலே” என்று மன்மதன் கூட அவன் அழகில் வெட்கித் தலை குனிகிறான். அட , அதோ பார்த்தாயா அந்த காக்காவை.
என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவனே கருப்பு, அவன் கையில் இருக்கும் ரொட்டித்துண்டில் நிறைய வெண்ணையைத் தடவிக் கொடுத்து அவன் கையில் வைத்திருப்பதை அருகே மரத்தில் பசியோடு இருந்த காக்கா பார்த்து விட்டது . கிருஷ்ணன் எப்போது கொஞ்சம் அசருவான் , கவனக்குறைவாக இருக்கிறான் என்று கணித்து சரியான சமயம் பறந்து வந்து ஒரு ரொட்டியை ”லபக்” செய்துவிட்டதே. திருடனிடமே திருடிய அதிர்ஷ்டம் செய்த காக்கை.”

जा सदन तेसनरख्यो नंदनंदन कानी तजी कर बंधन टूटयो। चारु सबलोसकन कीनी सुमार सम्हार गई मन मोर नेलूट्यो। सागर कों ससलला सजसम धावेन रोकी रुकैकुलको पुल टूट्यो। मत्त भयो मन संग सिरेरसखानी सरूप सुधारस घुट्यो।।56।।

கண்ணனிடம் காதல் கொண்ட ஒரு கோபி நம்பியிடம் முனகுகிறாள். தேம்பி அழுகிறாள்.
”என்றைக்கு இந்த ஸ்யாமள வண்ண கிருஷ்ணனைப் பார்த்தேனோ, அன்னிக்கே, எனக்கு குடும்ப கௌரவம், உறவு மானம் வெட்கம் அச்சம் நாணம், எல்லாம் மறந்து போச்சுடி, நான் பார்த்தபோது என்னை ஒரு கணம் தலையை திருப்பி கடைக்கண்ணால் பார்த்தானே அதில் அடிமையானவள் தான். அப்புறம் என் இதயத்தையே காணோம். அவன் மேல் கொண்ட காதல் கரைகாணா கடல். என் இதயத்தை வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதன் பேரலைகள் என் குடும்ப உறவுகளை என்னிடமிருந்து தூரத் தூக்கி எறிந்து விட்டது. என் மனம் கள் வெறி கொண்டு நிலை கொள்ளாமல் தவிக்கிறது. தேவர்கள் சேர்த்து வைத்திருந்த அத்தனை அம்ருதத்தையும் நான் ஒருத்தியே குடித்து விட்டேனடி.

कंु डल लोल कपोल महा छसब कंु जन तें सनकस्यो सुखकारी।।
हौ सखी आवत ही दगरें पग पैंड़ तजी ररझई बनवारी।
रसखानी परी मुस्कानी के पाननी कौन गनै कुलकानी सवचारी।।79।।

”என்னிக்கி இந்த சியாமளா கிருஷ்ணன் புன்னகை என் மனதைப் பிளந்து உள்ளே பதிந்ததோ, அப்புறம் என்னால் மீளவே முடியவில்லை. அவனை மறக்கவே முடியவில்லை. இதோ பார் வருகிறான் அந்தப் பயல். அந்த வளைந்த சந்தில் தான் அவன் அப்பா நந்தகோபன் வீடு. காதில் பார், எவ்வளவு பளபளவென்று கண்ணைப்பறிக்கும் குண்டலம் அவனது கருப்பு கொழுகொழு கன்னங்களில் நர்த்தனமாடுகிறது அவன் நடக்கும்போது. மெல்ல மெல்ல இதோ என் கிட்டே வந்து விட்டான். பித்துப் பிடித்த நான் கட்டுப்பாடு இல்லாமல் அவன் பின்னாலேயே ஓடுகிறேன். என்னால் அந்த காந்த புன்னகையை பார்க்காமல் இருக்கவே முடியாதே. எனக்கு அப்பா அம்மா, குடும்பம் எதுவுமே வேண்டாமடா.”

17ம் நூற்றாண்டு நூல் பாவப்ரகாஷ் என்ன சொல்கிறது? ரஸ்கான் ஒரு ஹிந்து நண்பனோடு வெகு அன்பாக இருந்தான். இருவரும் ஒரே தட்டில் சாப்பிடுவார்கள்..அருகில் இதை கவனித்த சில முஸ்லிம்கள் அவரை இஸ்லாம் மதத்துக்கு எதிரியாக கருதினார்கள். ரஸ்கான் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. லக்ஷியம் பண்ணவில்லை. அவருண்டு, அவர் மனதில் கிருஷ்ணனுண்டு. அவனைப்பற்றிய கவிதை உண்டு. முதல் வரியிலேயே மேலே சொல்லிவிட்டேனே. கடவுள் பக்தி என்பது, மதம், இனம், சமூகம் குடும்பம் இதெல்லாம் கடந்தது.

प्रान वही जु रहैं रिझि वापर, रूप वही जिहिं वाहि रिझायो। सीस वही जिहिं वे परसे पग, अंग वही जिहीं वा परसायो
दूध वही जु दुहायो वही सों, दही सु सही जु वहीं ढुरकायो।और कहाँ लौं कहौं ‘रसखान री भाव वही जू वही मन भायो॥

தம்பி, உனது தெம்பு, புத்துணர்ச்சி, மனதில் ஆர்வம் எல்லாம் நல்ல செயல்களைத் தூண்டும் எண்ணங்களாக, சொல்லாக அமைந்துவிட்டால் கிருஷ்ணனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கிறது என்று அர்த்தம். அவனுக்கு உன்னைப் பிடித்து விட்டால், நீ அழகனாக மாறிவிடுகிறாய். இது தான் உண்மை அழகு.
ஒரு சிரத்துக்கு எப்போது மதிப்பு தெரியுமா, அது கண்ணன் காலடியில் குனிந்து வணங்கும்போது. அவனைத் தொடும்படியாக உன் செயல்கள் எண்ணங்கள் அமைந்துவிட்டால் அப்போது தான் உன் ஹ்ருதயம் உண்மையிலேயே மனித ஹ்ருதயம். பசுக்களோடு எப்போதும் காணும் கண்ணன் தருவது தான் உண்மையான பால். அவன் தரும் தயிர் தான் கெட்டியான கட்டித்தயிர் எனும் உயிர்களனைத்திடமும் காட்டும் பேரன்பு. இந்த ரஸ்கானுக்கு வேறொன்றும் சொல்லாத தெரியவில்லை. அவனுடைய இந்த மனோநிலை கிருஷ்ணனுக்கு பிடித்திருந்தால் அந்த ஆனந்தம் ஒன்றே போதுமே.

सेस, गनेस , महेस, दिनेस, सुरेसहु जाही निरंतर गावैं जाहीं अनादी अनंत अखंड अछेद अभेद सु वेद बतावें
नारद से सुक व्यास रहें पचि हारे तऊ पुनि पार न पावें ताहि अहिर कि छोछरिया छछिया भरी छाछ पई नाच नचावैं

யார் என் கடவுள், கிருஷ்ணனுக்கு இப்படி இனிய பெயர்கள் வைத்தது? ‘ சேஷன், கணேசன், மகேசன், சுரேசன், தினேசன், ரொம்ப சுலபமா அவனை கூப்பிட முடிகிறதே. இந்த பெயர்களை சொன்னால் பாடினால் இன்பம் ஊற்றாக பெருகுகிறதே. அடேயப்பா அவன் ஆரம்பமோ , முடிவோ, அளவோ, எல்லை இல்லாதவனாக, அழிவற்றவனாக இருக்கிறானே. வித்தியாசமில்லாதவன். வேதங்களில் உட்பொருளா கியவன். அவனைத்தேடி அலைந்து காணாமல் களைத்தவர்கள் ஒருவரா இருவரா? , இதோ நாரதர், சுகர், வியாசர் இவர்களையே கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள். அவனது ஆழம், விளிம்பு, எல்லை எது எனத் தேடி தோற்றவர்கள். அதேசமயம் ஒரு ஆச்சர்யம் கண்ணில் படுகிறதே. இந்த பிரிந்தாவனத்து ஆய்ச்சிமார், அவனை ஆடவைக்கிறார்கள், பாடவைக்கிறார்கள், தங்கள் உள்ளங்கை குழிவில் கொஞ்சம் மோர், தயிர், வெண்ணையை காட்டினால் போதும், அவர்கள் சொன்னபடியெல்லாம் செயகிறவனாக இருக்கிறானே இந்த கிருஷ்ணன்.
இந்த அழகைப் பார்த்தபிறகு, மன்மதன் தான் அழகன் எல்லோரையும் வசீகரிக்கிறவன் என்று பலர் சொல்வதை, ‘சரிதான் போங்கடா’ என்று சொல்ல தோன்றுகிறது. என்னால் ஏற்க முடியவில்லை.

गुंज गेरे सिर मोर पाँख अरू चाल गयंद को मो मन भावै। साँवरों नंदकुमार सबै ब्रजमंडली में ब्रजराज कहावै। साज समाज सबै सिरताज औ छाज की बात नहीं कहि आवै। ताहि अहीर की छोहरियाँ छछिया भरि छाछ पै नाच नचावै।

ஆஹா, அந்த கிருஷ்ணன் நடப்பதைப் பாருங்கள். இது தான் பீடு நடையா? ஒரு ஆண் யானை மிடுக்குடன் அசைந்து நடந்து வருவது போல் ஒரு அழகு நடை. பவழமும், முத்தும் கலந்த கழுத்து நிறைந்த ஹாரங்கள், கருங்கூந்தல் சுருண்ட சிகையைக் கட்டி முடிந்து அதில் அற்புதமாக ஒரு பெரிய மயிலிறகு அவனுக் கென்றே அமைந்தது போல் அவன் அம்மா யசோதை செருகி இருக்கிறாள். அது காற்றில் ஆட, கிருஷ்ணா, உன்னை நினைக்கும் போதே என் மனம் உன்னிடம் வந்து விட்டது. உன்னை நந்தகுமாரா, எங்கள் ”வ்ரஜ மஹா வீரா” என்று உன் சாகசமறிந்தவர்கள் அன்போடு அழைக்கிறார்கள். ஆஹா, அவனைப்போல வேறெவரையும் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. யதுகுல சம்ரக்ஷகன், அவன் திவ்ய ரூபத்தை என்னால் முழுதுமாக வர்ணிக்க இயலவில்லை. இருந்தாலும் என்ன ஆச்சர்யம் போங்கள் , இந்த பிரிந்தாவன இடைப்பெண்கள் ரகசியம் தெரிந்தவர்கள். தங்கள் உள்ளங்கைகளின் குழிவில் சிறிது தயிர், வெண்ணை, வைத்து அவனிடம் காட்டினால் போதும் ஆசையாக அதை அவர்கள் கையில் இருந்தே குடிக்க, உண்ண, அவர்கள் பின்னே ஓடிவிடுபவன். அவர்களும் லேசில் கொடுப்பார்களா?

mora kirita navina lasai makarakrita kundala lola ki dorani
jho rasakhana ghane ghana main damakai bibi damini capa ke chorani
mari hai jiva to jiva balaya biloka bajaya launana ki korani
kauna subhaya so avata syama bajavata bainu nacavata maurani

கிருஷ்ணன் ஆடுகிறானா? அவனது அழகிய மயிலிறகு அவனை மயில் போல் ஆட வைக்கிறதா என்பது கண்டுபிடிக்க முடியாத ஒரு ப்ரம்மரஹஸ்யம்! ஆடாது அசங்காது வா கண்ணா என ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் மத்தியமாவதியில் பாடியது போல. ரஸ்கான் ஊத்துக்காட்டுக்கு முன்பே கிருஷ்ணனின் செவிகளில் ஆடும் மகர குண்டலங்கள் கிருஷ்ணன் ஆடும்போது எப்படி அசைகிறது என்று ஹிந்தியில் ஒரு அற்புத உதாரணம் கொடுக்கிறார் ரஸ்கான் .

கருத்த, இருண்ட, கார் மேகங்களிடையே பளிச்சென்று கண்ணைக் குருடாக்கும் ஒளிவீசி தாக்கும் இரு மின்னல் கீற்றுக்கள். கிருஷ்ணன் கருப்பு தான், அவன் காதில் ஜொலிக்கும் குண்டலங்கள் சூரிய குட்டிகள். அவற்றை மன்மத பாணங்கள் என்கிறார் ரஸ்கான் . ஆஹா நம்மை காந்தம் போல் கவரும் தன்மை
யுள்ளவை என்பதற்கு நல்ல உதாரணம். நமது புராணங்கள், மன்மதன், அவனது கரும்பு வில், புஷ்ப பாணம், எல்லாமே ரஸ்கானுக்கு அத்துபடி போல் இருக்கிறது. அவன் ”பார்வை ஒன்றே போதுமே” இன்னொரு அற்புத சொல்லோவியம். அவன் கடைக்கண் பார்வையில் நான் அழிந்தே போனேன், என்னை மறந்தே இழந்தே போனேன் என்கிறார். என் ஷ்யாம் வருவதற்கு முன்பே அவன் பார்வை வந்து என்னை கொள்ளை கொண்டுவிட்டதே. அவன் என் நெஞ்சில் வருவதை நான் விமரிசையாக கொண்டாடுகிறேன். மயிலிறகோடு கண்ணன் ஆடுவதைப் பார்த்த மயில் கூட்டங்கள் அவனையும் ஒரு மயிலாக நினைத்து அவன் குழலிசைக்கு தக்க ஜதி , தாளத்தோடு அந்த ராக த்துக்கு ஏற்ற நடனத்தை அவனோடு சேர்ந்து ஜோடியாக தாங்களும் ஆடுகிறது என்கிறார். இதெல்லாம் மனதில் அருள் பார்வையால் பார்க்காமல் எழுத முடியுமா?

maina-manohara baina bajai su saje tana sohata pita pata hai
yaun damakai camakai jhamakai duti damini ki manau syama ghata hai
e sajani brajarajakumara ata cadhi pherata lala bata hai
rasakhani maha madhuri mukha ki musakani karai kulakani kata hai

நண்பர்களே, மன்மதன் எல்லோரையும் வசியப்படுத்துகிறவன். அதில் அவனுக்கு ஈடு இணை இல்லை என்கிறோம். ஆனால் அந்த மன்மதன் கிருஷ்ணனின் குழலோசையில் மகுடி கேட்ட நாகமாக மயங்கி ஓடிவருகிறான். தன்னிச்சையின்றி கவரப்படுகிறான். கிருஷ்ணன் கருப்பு, அவன் மேல் வெள்ளைப் புழுதி, மார்பிலும் கழுத்திலும் பளபளக்கும் பல வண்ண ஆபரணங் கள், வெண்ணைத் துளிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் உதடுகள், கன்னங்கள், இடுப்பிலே மஞ்சள் பீதாம்பரம், காலிலே சதங்கை ஒலிக்க பளபள ஜிலுஜிலுவென்று தலையில் பல வண்ண மயிலிறகு காற்றில் சாமரம் வீச மேலே சொன்னேனே அந்த கருமேகத்தை பிளந்து இதோ வந்து ஆடுகிறது கிருஷ்ணன் எனும் மின்னல் வடிவம். மலை வாயில் விழும் அஸ்தமன சூரியன் பார்த்ததுண்டா? மாலை ஆறு மணிக்கு ஆரஞ்சு வண்ண நெருப்பு பந்து மலையேறும். அதைப் போல கிருஷ்ணன் ஒரு கோபியின் வீட்டின் கூரையில் ஏறி நின்று ஆடுகிறான். அவன் கையிலும் ஒரு சிவப்பு பந்து. இப்படி ஒரு தீப்பிழம்பு போல ஜொலிக்கின்றான் இந்த வ்ரஜ பூமி ராஜகுமாரன். இதில் எனக்கு எவ்வளவு பேரதிர்ஷ்டம் பாருங்கள், அவன் என்னைப் பார்த்துவிட்டான். ரொம்ப தெரிந்தவன் போல என்னைப் பார்த்து ஒரு க்ஷண கால குட்டிப் புன்னகை. அவ்வளவு தான். இதனால் என்ன ஆயிற்று என்று யோசிக்கவே வேண்டாம். நான் எல்லா லோகங்களோடும் தொடர்பு விட்டு எங்கோ எல்லையில்லா விண்ணில், திக்கு திசை இன்றி ஆனந்தமாக பறந்துகொண்டிருக்கிறேனே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;