MAYIL RAVANAN 6 J K SIVAN

மயில் ராவணன் –    நங்கநல்லூர்   J K  SIVAN
6வது பகுதி 

சீட்டு, குடி, புகையிலை, வெற்றிலை, போன்றவை  எளிதில் ஒருவனை தன்வசப்படுத்தி அடிமையாக்கி விடும். அவனால் அதன் போதையிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பான். அது போலத்தான் தற்காலத்தில்  மொபைல் போன், வாட்ஸாப்ப், FB , wifi,   போன்ற இணையதள  வலை  சாதனங்களும்.  அதில் ஈடுபட்டு நிறைய  ஒவ்வொருநாளும் மணிக்கணக்காக பழக்கமாகி விட்டதால் ஒன்றிரண்டு நாட்கள் கணினி எதிரில் அமர்ந்து ஏதாவது எழுதாமல் இருக்க முடிய வில்லை.  என் வீட்டு வாசல் தெருவில் எதிர்பக்கத்தில் ஒரு பெரிய புங்க மரம், அதன் வயிற்றில் AIRTEL காரர்கள்  அவர்களது CABLE ஐ சுற்றி என் வீட்டு   மொட்டை மாடியில் எறிந்திருக்கிறார்கள். அங்கேயிருந்து ரெண்டு மாடி கீழே  என் வீட்டு பக்கசுவற்றில் அந்த கேபிள் பாம்பு மாதிரி வளைந்து நுழைந்து MODEM வயிற்றில் புகுந்து ஆறு  மஞ்சள் விளக்குகள் ஒளி தந்தால் தான் வெளிஉலகுடன் என் கணினி பேச முடியும்.   ஆகவே  தெருவில் எதிர் பக்க மரத்தின் வயிற்றிலிருந்த கேபிள் யாராலோ துண்டிக்கப்பட்டிருக்கிறது.   EB ஆட்கள் சமீபத்தில் மழையின் போது  ட்ரான்ஸ்பார்கள்  டப் டப்  என்று வெடித்து  மரங்களின் கிளைகள் மின்கம்பிகளோடு உறவு கொண்டாடும்போது இந்த அக்கிரமங்கள் நடப்பதால் மரக்கிளைகளை வெட்டும் கும்பல் வந்து எல்லா மரங்கள் கிளைகளையும்  க்ஷவரம் செய்யப்பட்டன. அப்போது தான்  என்னுடைய  AIRTEL  CABLE  சம்பந்தமேயில்லாமல் துண்டிக்கப் பட்டிருக்கிறது. அப்புறம்  என்ன மொட்டு வளையைப்  பார்த்துக்கொண்டு ரெண்டு மூணு நாள் புஸ்தகம் படித்துக் கொண்டிருந்தேன். பாட்டுக்  கேட்டுக்கொண்டிருந்தேன்.  முடிந்த  போது பாடிக்கொண்டும் இருந்தேன். COMPLAINT  கொடுத்து  மூன்றாவது நாள் இன்று வந்து ஒரு சில நிமிஷங்களில் வாசலில் மரத்தின் வயிற்றில் அறுந்து தொங்கும் தொப்புள் கொடியை  விலக்கி புது கேபிள் சுற்றப்பட்டு நான் இதோ உங்களுக்கு அடுத்த பதிவு  மயில்ராவணன் கதையை   அனுப்புகிறேன்.
++ 

அழுது கொண்டிருந்த  தூம்ரதண்டி  தன்னோடு பேசிய  அசரீரி யார் என்று அங்கும் இங்கும் தேடும் போது  தொப் பென்று  அவள் எதிரில் மரக்கிளையிலிருந்து ஹனுமான் குதித்தார். 

‘அபலைப் பெண்ணே…உனக்கென்னம்மா அத்தனை சோகம்?அசரீரி குரலில் உன்னிடம் பேசியது நான் தானம்மா……ராம-லஷ்மணர்களைக் காப்பாற்ற வந்துள்ள நீ நினைக்கும் அந்த அனுமனும்  நானே தானம்மா …… தயை செய்து இப்போ கூறு, ராம லஷ்மணர்களை மயில் ராவணன் எங்கே ஒளித்து வைத்திருக்கிறான்?. அங்கே எப்படிப் போவது என்று உனக்கு வழி தெரிந்தால்  அதையும்  உடனே  என்னிடம் சொல்…சீக்கிரம் நான் சென்று  அவர்கள் உயிரைக் காப்பாற்ற நீதான்  உதவ வேண்டும்  அம்மா” எனக் கெஞ்சினார் ஹனுமான்.

ஹநுமானைப் பார்த்து தூம்ரதண்டி முதலில் பயந்து போனாள். ‘வானரமே, நீர் யாரையா? மனிதக் குரலில் பேசுகிறீர்கள்…உம்மை மயில் ராவணன் அனுப்பி என்னை சோதிக்க சொன்னாரோ?’

‘அம்மணி  நீ  நல்லவள். நான்  மயில் ராவணனின் சேவ கன் இல்லை.  நான் ராமதூத அனுமான். இது சத்தியம் ….என்னை நம்பு  ராம லக்ஷ்மணர்களை  எப்படி யாவது மீட்கவே நான் இங்கு வந்தேன். கோட்டைக்குள் போகணும்….. மயில் ராவணனையும் தேடணும்……அதான் அந்த இடத்தை தேடி அலையறேன். அதனால் தானம்மா உன்னிடமும் இத்தனையும் கேட்கறேன்’

தூம்ரதாண்டியின் சந்தேகம் தீரவில்லை. பயம் அகலவில்லை. ஹநுமானையே  உற்று உற்றுப் பார்த்த பின் மெதுவாக பேசினாள். 

‘ஏ வானரமே, நீ உன்னை ராம தூதனான அனுமான் என்கிறீர். நீரோ குரங்காக இருக்கையில் மனிதக் குரலில் பேசுவதெப்படி சாத்தியமாகும்? அதனால் தான் உன்னை  சந்தேகப்படுகிறேன். ஒருவேளை அந்த மாயாவி  உம்மை மயில் ராவணன் மாற்று உருவில் என்னை வேவு பார்க்கவே அனுப்பி இருப்பானோ இரு தோன்று கிறது.    முதலில் குரங்கான நீர் எப்படி மனிதக் குரலில் பேசுகிறீர் என்பதை எனக்கு தெளிவு படுத்தி, உம்முடைய உண்மையான உருவைக் காட்டும். அனுமா னாக இருந்தால் நீர் விஸ்வரூபமும் எடுத்து அனுமான் சொரூபத்தையும் காட்ட முடியும் அல்லவா?’.

 ‘அம்மா, நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.  ராக்ஷசர் வம்சத்தில் அவதரித்த நல்ல குணவதியே. எனக்கு மனித குரலில் பேச மட்டும் அல்ல எனக்கு அனைத்து சாஸ்தி ரங்களும், அறுபத்தி நாலு பாஷையும், நீதி நூலின் தர்க்கமும், ஈ எறும்புகளின் பாஷைகளும் கூட புரியும் அம்மா. இப்போ அதெல்லாம் கூற எனக்கும் நேரமில் லை.  என் நிஜ சொரூபத்தைப் பார்த்தால் நீ பயந்து விடுவாய் என்பதால்தான் உனக்கு அதைக் கட்ட தயக்க மாக உள்ளது. ஆகவே முதலில் ராம லஷ்மணர்கள் எங்கு உள்ளார்கள் என்பதை விரைவாகக் கூறம்மா’ 

‘வானரமே, நீ  உண்மையான ராம தூதன் என  எனக்கு நிரூபித்தால் தான் நான் பயமின்றி  மேற்கொண்டு பேச முடியும். எனக்கும் நேரமாகி விட்டது. அதிக நேரமானால் அங்கே மயில் ராவணனும் என்னை சந்தேகிப் பான்’
சட்டென்று ஹனுமான் தனது  சுய ரூபத்தை தூம்ர தண்டிக் குக் காட்ட அவள் அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் பண்ணி தன்னை மன்னிக்குமாறு கூறி விட்டு, அவரிடம் முகமெல்லாம் ஆறு போல கண்ணீர் வழிய தன் கதையையும் சொல்லலானாள்.

‘அனுமானே, என்னை முதலில் மன்னியும். நான் சொல்வ தைக் கேளுங்கள்.  மயில் ராவணன் என் புருஷன் காலதத்தனைக்  கொன்று விட்டு என்னையும், நீல மேகன் என்ற என் ஒரே பிள்ளையையும் சிறையில் அடைத்து விலங்கு போட்டு பூட்டி வைத்து உள்ளான். அதற்கான காரணம் ஒன்றுண்டு. முன்னாலே என் புருஷன் மயில் ராவணனுக்கு அனைத்து விதத்திலும் நம்பிக்கையானவராக  இருந்தார்.  அத்தனை நெருக்கம் இருவருக்கும் உண்டு   ‘நீலமேகன் எனக்கு பிறந்தபோது மயில் ராவணனுக்கு ரூபவதி என்ற பெண்ணும் பிறந் தாள். ஆகவே வயதுக்கு வந்ததும் ரூபவதிக்கும் என் பிள்ளை நீலமேகனுக்கும் கல்யாணம் செய்து வைக்க லாமென ஏற்பாடு செய்தான். கலியாணம் செய்ய தேதி குறிக்கும்போது அசரீரி ஒன்று என்ன சொல்லிற்று  தெரியுமா;
‘மூடனாகப் பிறந்து விட்ட மயில் ராவணா…….நடத்து ….இருவருக்கும் திருமணத்தை நடத்து. அந்த நீலமேகனே இந்த பாதாள இலங்கைக்கு அதிபதியாகி நிலையா இருக்கப் போகிறான். நீயும் வதமாகப் போகிறாய்.. இதை மனதில் வைத்து திருமணத்தை விரைவாகவே நடத்து’ என்று கூறிவிட்டு சென்று விட்டது.  அதனால்  மயில் ராவணன் கடும் கோபம் கொண்டு  இந்த கல்யாண  எண்ணத்தையும் விட்டு, எங்களையும் அரண்ம னையில் இருந்து துரத்திட்டான். எங்களுடைய
 போறாத காலம். மயில் ராவணன் ராம லஷ்மணர்களை தூக்கி வந்தபோதும் வழியிலே இன்னொரு ஆகாச வாணியும்

 ‘அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்வது நல்லதல்லடா…. வைகுண்டநாதர் அவதாரங்களை களவாடிக் கொண்டு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டத டா….நீர் அழிவது நிச்சயம். ..போ…போ….நீர் இத்தனை சிரமப்பட்டு ராவணனுக் காக இதை செய்கிறாயே. அவனும் ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத் தை இழக்கப் போகிறாய் . முட்டாள் மயில்ராவணா,  உன் சகோதரி தூம்ரதண்டியின் பிள்ளை உன் சிம்மாச னத்தில் அமரப் போகிறான். இந்த சத்திய வாக்கு  நிறைவேறுவதை நீயே பார்க்கப்போகிறாய். உன் சந்ததியினரும் பார்பார்கள்…போடா மூடனே….போ’ என்று கூறியது .

இரண்டாம் முறையாக என் பிள்ளை சிம்மாசனத்துல அமரப் போகின்றான் என்பதைக் கேட்டு  ஆக்ரோஷம் கொண்ட மயில் ராவணனும் உடனே என் கணவரை வரச் சொல்லி காரணமே இல்லாமல், என் எதிரிலேயே அவர் கழுத்தை அறுத்துக் கொன்று போட்டான். அது மட்டும் அல்ல என் பிள்ளயையும் அவன் கொல்ல வந்தபோது ‘தங்கை நான் கெஞ்சுகிறேன். அவனை விட்டு விடு வென்று  அழுதேன். அதனால என் பிள்ளை யையும் என்னையும் ஆயிரம் கனம் கொண்ட விலங்கை காலிலும் கையிலும் மாட்டி ஒரு சிறையிலே தள்ளி வருஷ வருஷமாக கொடுமையில் வைத்து விட்டான். இன்று ராம லஷ்மணர்களை கொல்ல தங்கக் குடத்தில் தண்ணீர் வேணும்னு எனக்கு சிறிது விடுதலை தந்துள் ளான். அதை நான் கொண்டு தந்தால் அந்த பாவம் எனக்கும் சேருமாம். அவனுக்கு அந்தப் பாவம் வராதாம். அந்த பாவம் எனக்கு வந்ததும் என்னையும் பின்னர் கொன்று குழி தோண்டி புதைத்து விடுவானாம்.

”ஆஞ்சனேயா, ஆபத்சகாயா, ராம லஷ்மணரைக் காப்பாற்றிய பின் என்னையும், எம் பிள்ளையையும் நீர்தான் காப்பாற்றணும். அதை செய்வேன்னு சத்தியம் தரணும்’ என அனுமாரிடம் வேண்டிக் கொள்ள அதைக் கேட்ட அனுமானும் அவள் உள்ளங் கையில் ஒரு சத்தியம் செய்து தந்தார். 

‘அம்மணி, நீ கவலைப்படாதே. நான் உனக்கு சத்யம் செய்து தந்தது போல அந்த மயில் ராவணனை வதம் செய்து உம் குடும்பத்தையும் விடுதலை செய்து உம் மகனை முடிசூட்டி அழகு பார்க்க வைப்பேன். நீ இப்ப எனக்கு உதவி செய். மயில் ராவணன் பலமென்ன? இப்ப ராம லஷ்மணர் எங்கு உள்ளார்கள்? அதையெல்லாம் எனக்கு விவரமாக் கூறு’  என்று தைரியம் சொன்னார்.

அதைக் கேட்ட தூம்ரதண்டி கூறலானாள் ‘ அனுமானே, அந்த மயில் ராவணனை சாதாரணமாக எடை போடா தே.. அவன் பரமேஸ்வரனிடமிருந்து மூவேறு தலை முறைக்கும் வேண்டுமான வரமாக  பலம் பெற்ற வன். பராக்கிரமசாலி. தந்திரக்காரன். மாயக்காரன். அவன் கோட்டையின் நுழை வாசலிலே பல துலா யந்திரங் களை மாட்டி வைத்திருக்கான். அது யார் வருவாரோ, யார் போவாரோ அது அவனுக்கு விரோதியா, நண்பனா என்பதைக் காட்டிடும் யந்திரமாகும். அத்தனை மந்திர சக்தி உள்ளதது. உள்ளே போறவன் சத்ரு என்றால் அங்குள்ள இருபது லட்சம் வீரனும் ஒருசேர அங்கு வந்து சத்ருவை துவம்சம் செய்து விடுவார்கள். அதனால் நீர் மிக்க கவனமாக இருக்கவேணும்’.

அதைக் கேட்ட அனுமானும் ‘பெண்ணே நீ எனக்கொரு ஒரு உபாயம் சொல்லோணும். நான் கோட்டைக்குள்ளே அந்தப் பக்கம் நுழைந்து விட்டால் அத்தனை அசுரர்க ளையும் வதம் பண்ணும் அளவுக்கு எனக்கு பலம் வந்து
விடும். அதனால் எப்படியாவது கோட்டை மதிலுக்கு அந்தப் புறம் செல்ல ஏதேனும் ஒரு உபாயம் சொல்’ என்றவுடன் தூரதண்டி பேசினாள் 

‘வாயுபுத்ரா, எனக்கெந்த யோசனையும் தோன்ற வில்லை.  நான் ஒரு விஷயம் சொல்வேன். நீ அதைக் கேட்டு உள்ளே செல்ல அந்த உபாயம் சரியானதான்னு முடிவு செய்துகொள் . நான் தங்கக் குடத்தில் தண்ணீர் மொண்டு அதன் மீது ஒரு கொத்து மாவிலையும் வைத்துக் கொண்டு செல்லணும். அதையும் அந்த துலா யந்திரம் துருவித் துருவி பார்க்கும். அதனால் நான் குளத்தில் இறங்கி தண்ணீர் மொள்ளும் முன்னேயே ஏதாவது ஒரு  உபாயத்தை சேர்த்து வைத்துக் கொள்’ என்று கூறி விட்டு குடத்திலே தண்ணீர் எடுக்கச்  சென்றாள்.

ஒரு க்ஷணம் யோசனை செய்த ஹனுமானுக்கு மனதில் ஒரு உபாயம் மின்னலைப் போல வந்தது. தூம்ரதண்டி தண்ணீர் எடுத்த குடத்தில் மாவிலைக் கொத்தை வைத்த துமே அதில் சிறு பூச்சி போல தன்னை உருமாற்றிக் கொண்டு அமர்ந்து கொண்டு அவளிடம் சொன்னார்

”பெண்ணே , நீ எந்த சந்தேகமும் இல்லாமல் தண்ணீரை எடுத்துக் கொண்டு உள்ளே போய் விடு. வாசலில் யாரே னும் தடுத்தால் தடுக்கி விழுந்தது போல விழுந்து அரண் மனை நுழை வாயிலின் உள்ளே தண்ணீர் குடத்துடன் மாவிலையையும் சேர்த்துக் கொட்டிடு. அதுக்குப் பின்னே நான் பார்த்துக் கொள்கிறேன்’ என யோசனைக் கூற தூம்ரதண்டியும் பயத்துடனே தடுமாறிக் கொண்டு மாவிலைக் கொத்தில் சிறு பூச்சியாக அனுமான் அமர்ந்திருக்க தண்ணீர் நிறைந்திருந்த அந்த அந்த தங்கக் குடத்தையும் தன் தலை மீது வைத்துக் கொண்டு அரண்மனைக்கு திரும்பிச் சென்றாள். நுழை வாயிலில் இருந்த துலாயந்திரத்தின் அருகில் வந்ததும் அது யாரோ சத்ரு உள்ளே வரவுள்ளதைக் காட்டியது.

இனி அடுத்த பதிவு….

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;