
everyonefollowme மயில் ராவணன் – 5 – நங்கநல்லூர் J K SIVAN
”அடேயப்பா, இந்த மயில் ராவணன் எவ்வளவு பலத்த பாதுகாப்பு செய்திருக்கிறான். இதோ சற்று நேரம் முன்பு தானே செங்கல் கோட்டையை தவிடு பொடி செய்து எல்லோரையும் கொன்றேன், இது என்னடா அதிசயம், அடுத்ததாக எதிரே இன்னொரு பெரிய கோட்டை,! பித்தளையாலானது தோன்றுகிறதே!!
அதைசுற்றியும் லக்ஷ லக்ஷமான ராக்ஷஸர்கள். அடுத்து சில நொடிகளில் சுழன்று, சுழன்று அத்தனை பேரையும் துணியைக் கிழிப்பது போல கந்தல் கந்தலாக்கி அழித்து விட்டு இன்னும் உள்ளே சென்றால் இன்னுமொரு அதிசயம்? செம்பினாலான இன்னொரு கோட்டை இருக்கிறதே…அதையும் பிளந்து உள்ளே சென்றார்.
அங்கே இருப்பது லக்ஷம் அசுரர் படை.ர். மெல்ல மெல்ல கோட்டையைத் தகர்த்துக்கொண்டே உள்ளே போய் தொப்பென அங்கேயும் இருந்த ராக்ஷஸர்கள் மத்தியில் குதித்து ஹனுமார் விஸ்வரூபம் எடுத்து அனைவரையும் மிதித்தே கொன்றார்.
ஹனுமாரால் அடிக்கடி விஸ்வரூபம் எடுக்க முடியாது. நிஜமான காரணம் இருந்தால், அதிலே நியாயமும் இருந்தால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும் என்ற விதியும் அவருக்கிருந்தது. அதனாலேதான் நிஜமாவே தேவை என்றால் மட்டுமே விஸ்வரூபத்தை எடுக்க முடியும். ஆகவே ஹனுமான் அதுவரை விஸ்வரூபத்தை எடுக்கவில்லை. களைத்துப் போய் இருந்ததால் அடுத்தடுத்து லக்ஷக் கணக்கான ராக்ஷஸர்களை கொன்றதால் உடல் பலமும் குறைந்ததால் அவருக்கு விஸ்வரூபம் எடுக்க வேண்டிய அவசியம். அப்புறம் அசுரர்களை எளிதாக அழித்து விட்டு இன்னும் உள்ளே சென்றவர் திகைத்தார். அங்கே ஒரு வெங்கலக் கோட்டை!
அங்கே காவலில் இருந்த இருபத்தி எட்டு லட்சம் அசுரர்களையும் த்வம்சம் செய்த பின் உள்ளே இன்னொரு கோட்டை. தங்க கோட்டை… இப்படி
அடுக்கடுக்காய் கோட்டைகள் வந்து கொண்டே இருந்தது. சளைக்காமல் அங்கெல்லாம் இருந்த அசுரர காவலர்களைக் கொன்று விட்டு உள்ளே சென்ற ஹனுமான் முழுதும் களைத்துப் போனார் . தங்கக் கோட்டையில் மட்டுமே அறுபது லக்ஷம் பலம்
கொண்ட ராக்ஷஸர்கள். ” ஹே ராமா” என்று மனதில் ராமனை நினைத்து ப்ரார்த்தித்துவிட்டு அவர்கள் அத்தனைபேரையும் யமலோகம் அனுப்பி அடுத்ததாக இருந்த பவழக் கோட்டைக்குள் சென்றார். அங்கே முப்பது லக்ஷம் அசுரர்கள். அவர்களையும் அழித்துவிட்டு உள்ளே ஓடின ஹனுமானுக்கு எதிரே ஒரு நந்தவனம். வேகமாக அதற்குள் சென்ற ஹனுமான் அதன் நடுவே ஒரு தங்க அரண்மனையைக் கண்டார். அதற்குள் காளிகோயில், அதில் ஒரு பெரிய காளி சிலை, எதிரே பலிபீடம்.
உள்ளே போகாமல் வெளியே இருந்த நந்தவனத்தை சுற்றி பார்த்தார். ரம்யமாக இருந்த மரக்கூட்டங்க ளில் ஒரு பெரிய மரத்தின் உச்சியில் சென்று உருவத்தை சின்னதாக மாற்றிக்கொண்டு அங்கே இருந்து கவனித்தார் ஹனுமான். அதில் ஒரு மரத்தின்
உச்சியில் சென்று சிறு உருவில் அமர்ந்து கொண்டார் அனுமான். அந்த தங்க அரண்மனைக்குள் நுழைவது சுலபமல்ல. இங்கே ரொம்பவும் பலம் வாய்ந்த சாமர்த்திய மாயாவி ராக்ஷஸர்கள் இருந்தார்கள். அரண்மனை வாசலில் பல மந்திர தந்திர யந்திரங்கள் காணப்பட்டன. அந்த பகுதி பூராவும் தந்திர மந்திர சக்திகளால் கண்காணிக்கப்பட்ட இடம். ஹனுமான் தனக்கு சக்தி அதனால் குறைந்ததை உணர்ந்தார்.
”இங்கே ரொம்ப ஜாக்கிரதையாக நான் இருக்க வேண்டும். இங்குள்ள அசுரர்களை தம்மால் நேரடியாக மோதி யுத்தம் செய்ய முடியாது. எப்படியாவது அந்த அரண்மனைக்குள் சென்று அவர்களுக்கு தெரியாமல் அவர்களை உள்ளேயிருந்து வந்து அவர்கள் பின் பக்கத்தில் இருந்து தாக்கினால் தான் கொல்ல முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார். காரணம் அரண் மனையின் வெளிப்புறத்தில் இருந்த பூமி முழுவதும் மந்திரங்களினால் பாதுகாக்கப் பட்டுள்ளது. அதன் மேல் யாராவது காலை வைத்தாலே பாதி பலம் போய்விடும். மச்சவல்லபன் இதை ஜாடையாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த அரண்ம னைக்குள் எப்படி நுழைவது?
அந்த அரண்மனையை சுற்றி வந்த ராக்ஷஸர்கள் எல்லாமே சரியாக இருக்கிறதா என ரோந்து சுற்றி பார்த்தார்கள். தாரை தம்பட்டங்களை சப்தமாக அடித்து வெளியில் காவலில் இருந்தவர்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு உள்ளே போனார்கள். அவர்கள் எல்லாம் போனபின் வேறு யாருமில்லை என்பதை அறிந்த பிறகு ஹனுமான் மெல்ல நந்தவனத்தில் இருந்த மரத்தில் இருந்து கீழிறங்கினார், நாலாபுறமும் உற்றுப் பார்த்தார்.
எல்லா இடமும் மந்திர சக்தியால் நிரம்பியது. தன் பலம் குறைந்து போனதை ஹனுமான் அறிந்தார். மயில் ராவணன் தன் சேனை வீரர்களுக்கெல்லாம் மந்திர சக்தி கொண்ட தாயத்தைக் கட்டி இருந்தான். அதனால் அவர்கள் பலம் குன்றவில்லை. தாயத்தில்லாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதி பலம் காணா மல் போய்விடும். எப்படி இந்த கட்டுக் காவலை மீறி உள்ளே போவது? தீவிரமாக ஹனுமான் யோசித்த போது அங்கே அரண்மனைக்குள்ளே ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அரண்மனையிலே ஒரு படுக்கை அறை. இப்போது அதில் மனைவியோடு மயில் ராவணன் படுத்திருந் தவன் ‘நேரமாச்சே’ என நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக எழுந்தான்.
‘நாழிகை ஓடுகிறது. இன்னும் இரண்டு ஜாமம் தான் பாக்கி இருக்கிறது. அதற்குள் மீதி காரியத்தை எல்லாம் முடிப்போம் தக்க நேரத்தில் நான் கொண்டுவந்த ராம-லஷ்மணர்களை காளிக்கு பலி தரணும்’ என அவன் மனதில் எண்ணம் ஓடியது.
‘அபிஷேகத்துக்கு ஜலம் கொண்டு வரணும். அதற்கு அவன் அக்கா தூம்ரத்தண்டி தான் போகணும். அது தான் பாரம்பரிய முறை.
ஏற்கனவே அங்கே காவலில் கை விலங்கோடு கட்டி வைத்திருந்த தூம்ரதண்டியை அழைத்து வரச் சொன் னான். ஒரு தங்கக் குடத்தை அவளிடம் கொடுத்தான். ‘சீக்கிரமா போய் உத்தியான வனத்திலிருந்து ஒரு குடம் தண்ணி கொண்டுவா”’ என ஆணையிட்டான்.தூம்ரதண்டிக்கு கடும் கோபம்.
‘இத்தனை நாளும் எனக்கு கையிலும், காலிலும், மார்பிலும் விலங்கு கட்டி பூட்டி இருந்துவிட்டவன் இன்னிக்கு என்னையும், என் பிள்ளையையும் காளிக்கு பலி தரப்போகிறானோ? அதனால்தான் என்னை தண்ணி கொண்டு வா என்று அனுப்புறானோ? போகட்டும். என்னிக்காவது ஒருநாள் செத்துத்தானே போயாகணும். கைகளில் காலில் மார்பில் விலங்கோடு காலம் பூரா இவனிடம் அவதிப் படுவதை விட இன்றைக்கே காளிக்கு பலியாக சாவது ரொம்ப மேல்’ என மனதில் துக்கத்தோடு இருந்தாள். அவள் மனதில் இருந்த எண்ணங்களை மயில் ராவணன் அறிந்து கொண்டான். அவனுக்கு அந்த சக்தி உண்டே.
‘அடியே தூம்ரதண்டி , எனக்கு துரோகம் நினைத்த உன்னையும் உன் மகனையும் இன்று வெட்டிக் கொல்ல கண் சிமிட்டும் நேரமே எனக்கு போதுமடி. அதை இப்போவே கூட என்னால் செய்ய முடியுமே. ஆனால் நீ நினைக்கற மாதிரி ஒங்க ரெண்டு பேரையும் காளிக்கு பலி கொடுக்க ஜலம் கொண்டு வரச் சொல்ல வில்லை நான். முதலில் அந்த ராம லஷ்மணர்களை காளிக்கு பலி தரணும். அதற்கு நேரம் நெருங்கி வருகிறது. அதனால்தான் சொல்றேன் , போ….போய் யாருக்கும் இதைக் சொல்லாம சீக்கிரமா கிளம்பி குளத்துல இருந்து தங்க குடத்துல சுத்தமான ஜலம் கொண்டுவா” . மயில் ராவணன் அவளை விரட்டினான்.
’ஐயோ….அண்ணா…நீ ராம லஷ்மணர்களை காளிக்கு பலி கொடுக்கப் போறியா? இந்த பாவ காரியத்தைப் பண்ண நானா உனக்கு கிடைத்தேன்? நான் இந்த பாவ காரியத்தைப் பண்ணப் போகமாட்டேன் அண்ணா’ எனக் கதறியவளை நோக்கி உருவிய தன் வாளை காட்டி ‘ போ…போய் சீக்கிரமா தண்ணீ கொண்டு வரியா இல்லையா . இல்லேன்னா உன்ன வெட்டமாட்டேண்டீ…அதுக்கு பதிலா உன் பிள்ளைய வெட்டி கண்ட துண்ட மாக்கி மிருகத்துக்கு ஆகாரமாக போட்டுடுவேன் ஜாக்கிரதை.”
கோபமாக மயில் ராவணன் கத்தினான்.
‘ஐயோ அண்ணா….அப்படியெல்லாம் செய்துவிடாதே. ..அவனைக் கொல்வதற்கு முன் என்னைக் கொன்று விடு” என்று அழுதாள்
‘அப்படீன்னா போ…போய் சீக்கிரமா தண்ணீ கொண்டு வா” என வாளை சுழற்றினான்.. பயந்து போய் அவள் நந்தவனத்துக்குள் ஓடி ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழத் துவங்கினாள்.
‘ஐயோ தெய்வமே, இப்படி ஒரு பாபத்தைப் பண்ண நானா கெடச்சேன்? இந்த ராம லக்ஷ்மண ரெண்டு புண்ணிய புருஷர்களுக்கும் இப்படியொரு நிலைமை வரணுமா? ஆத்தாடி…என் அண்ணன் செய்வது தப்புடி….. நான் யாருகிட்ட இதைக் கூறி அழுவேன்? வாலினாலே கோட்டைக் கட்டி அத்தன பேரையும் காத்து நின்ற அந்த வானரக் குரங்கு அனுமான் இங்கு வந்து என் அண்ண னைக் கொன்று அந்த புண்ணிய புருஷர்களை மீட்காதோ? . நானென்ன செய்வேன்? ………..இதை செய்யலேன்னா என் பிள்ளையும் வெட்டிடுவேன் என்கிறானே இந்த மகாபாவி ……… மகா பாவி சுகமா இருப்பானா? ……..அவனுக்கும் கேடு வாராதோ’ எனப் பலவாறாக புலம்பினாள். பூமியிலே புரண்டு புரண்டு அழுதாள்.
அந்த மரத்தில் தான் ஹனுமான் மீண்டும் ஏறி அமர்ந்தி ருந் தார். அவள் ஏன் அப்படி அழுது கொண்டிருக் கிறாள் என்பது ஹநுமானுக்கு புரியவில்லை. ஆனால் நடப்பது அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தார். அவர் கவலை யெல்லாம் இந்த அரணம னைக் குள் எப்படி நுழைவது? உள்ளே போனால்தானே வெளியில் உள்ள அசுரர்களை பின்னால் இருந்து அழிக்க முடியும்.
ஒரு க்ஷணம் ஹனுமான் மனதுக்குள் சிரித்தார். ஆஹா அழுது கொண்டிருக்கும் ராக்ஷஸ பெண்மணி கெட்டவள் இல்லை. இவள் மூலமாவது நமக்கு ராம லஷ்மணர்கள் சிறை வைக்கப்பட்டு உள்ள இடம் தெரிந்து கொள்ள முடியுமா? இவளை எப்படியாவது நம் கைக்குள் போட்டுக் கொண்டு காரியத்தை முடிக்க முயற்சிக் கலாம்”
ஹனுமான் மரத்தின் மீதிருந்து அசரீரி ஒன்று கூறுவது போல அவளுக்கு மட்டுமே கேட்கும்படி கூறலானார்.
‘இங்கே பார் அபலைப் பெண்ணே, நீ ஏன் வருந்தி அழுகிறாய்? அழுதழுது ஏன் வாடி வதங்குகிறாய் ? உன்னையும் உன் மகனையும் சேர்த்தே காப்பாற்ற ஒரு உபாயமுள்ளது. அதற்கு நீ சரியென்று ஒப்புக் கொண்டால் அது நடக்கும். உன் உதவி இதற்கு தேவை”
தூம்ரதண்டி இந்த அசரீரியைக் கேட்டு அதிசயித்தாள். ‘இதென்ன மனித குரலா இருக்குதே. ஒருவேளை மயில் ராவணனே என்னை சோதிக்க இப்படி ஒரு நாடகம் ஆடுகிறானோ? மாயாவியாயிற்றே!! சரி நமக்கேன் வம்பு. தண்ணீ கொண்டு போய் கொடுத்து விட்டு பரிகாரமாக என் மகன் உயிரையாவது விட்டுடூன்னு கேட்கலாம்’ என்று எண்ணியவளாக தண்ணீர் எடுக்க தங்கக் குடத்தோடு குளத்தில் இறங்க அதுதான் தக்க தருமணம் என நினைத்த ஹனுமான் மரத்திலிருந்து தாவி ஓடி அவளருகில் நின்று கொண்டு அவசரமாக அவளிடம் பேசினார்.
இன்னும் கதையின் நீளம் குறையவில்லை .. நான் என்ன செய்வது.. ஹனுமார் கதை அவர் வால் போல் நீளமானது. அவ்வளவு சீக்கிரம் மயில்ராவணன் விஷயம் சொல்லிவிடுவேனா……அடுத்த பதிவுக்கு காத்திருங்கள் ஹனுமானைப் போலவே….
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

