
உபநயனம். – நங்கநல்லூர் J K SIVAN
ப்ராமண குடும்பங்களில் அடிக்கடி பூணல் கல்யாண பத்திரிகைகள் வருகிறதே. பூணல் கல்யாணம் என்றால் என்ன? சமஸ்க்ரிதத்தில் அதற்கு உபநயனம் என்று பெயர். அப்படியே என்றால் என்ன ஸார்?கிட்டே வா என்று அழைப்பது. இதை ஒரு சிறப்பான பெரிய விழாவாக படா படா ஆடம்பரத்துடன் நடத்துபவர்கள் அநேகர்.ப்ராமணர்களைத் தவிர மற்ற சில குலத்தோருக்கும் பூணல் உண்டு. ஆனால் இதுவரை எனக்கு மற்ற குலத்தோர் வீட்டு பூணல் பத்திரிகை ஒன்று கூட வந்ததில்லை.
பூணல் என்கிற நூலை சாதாரணமாக தக்ளியில் நூற்று தருவது சரியல்ல. அதற்கென்று சில வேத மந்திரங்கல் இருக்கிறது. அவற்றை ஜபம் பண்ணி , பிராண பிரதிஷ்டை செய்து தயாரிப்பது தான் சரியான பூணல்.
கிட்டத்த்தட்ட நூறு இழைகள் அதில் உண்டு. சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டு , பிராண பிரதிஷ்டை செய்து மிக்க கவனமாக பூணூல் தயாரிப்பதை அணிவிப்பது தான் ஸமஸ்க்ரிதத்தில் யக்ஞோபவீதம் என்பது.காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.
எப்போதோ ஒரு கதை படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு ஏழை பிராமணர் மேலே சொன்னபடி சாஸ்த்ரோக்தமாக காயத்ரி சொல்லிக்கொண்டே பூணல் தயாரிப்பார். அதை விற்று வரும் வருமானத்தில் அவர் ஏழைக்குடும்பம் வாழ்ந்தது. அவர் பெண்ணுக்கு கல்யாணவயது, அதாவது 8 அல்லது 9வயதாகிவிட்டது. அந்த வயத்துக்குள் தான் அப்போதெல்லாம் கல்யாணம் பண்ணுவார்கள். கல்யாணம் எப்படி பண்ணுவது, பணத்துக்கு எங்கே போவது? ராஜாவிடம் இவர் பற்றி சேதி போனது. ராஜா கூப்பிட்டான் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டபோது ஒரு ஜோடி பூணலை வைத்து அதற்கீடான பணம் போதும் என்று சொல்லிவிட்டார். ஒரு தராசில் ஒரு பக்கம் ஒரு ஜோடி பூணல், இன்னொரு தட்டில் பல தங்கக்கட்டிகள் வைத்தும் பூணல் உள்ள தட்டு தாழ்ந்து இருந்தது. ராஜாவுக்கும் மந்திரிக்கும் ஆச்சர்யம். மந்திரி கெட்டிக்காரன். ஆகவே. ”பிராமணரே, நீங்கள் நாளை வாருங்கள். வரும்போது ஒரு புது ஜோடி பூணல் பண்ணிக் கொண்டு வாருங்கள்” என்று அனுப்பிவிட்டான். அன்று வீடு திரும்பிய பிராமணருக்கு மனதில் புயல். அடடா, நமது ஒரு ஜோடி பூணலுக்கு இத்தனை தங்கக்கட்டிகளா மதிப்பு.. நாளை ராஜா இன்னொரு பூணல் பண்ணிக்கொண்டு வா என்கிறாரே. ஒருவேளை இன்னும் அதிக தங்கக்கட்டிகள் கொடுப்பதற்காகவா. அதில் தாராளமாக பெண்ணுக்கு கல்யாணம், நகைகள் பண்ணிப் போட்டுவிட்டு மீதியை நமது குடும்பம் சொச்ச காலம் சௌகர்யமாக வாழ வசதியாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றி விட்டது. பூணலை ராஜாவுக்கு த்ரிப்திகரமாக பண்ணிக்கொண்டு போகவேண்டும் என்று பண்ணி எடுத்துக்கொண்டு போனார். மந்திரி புது பூணலை தராசில் ஒரு தட்டில் வைத்து விட்டு இன்னொரு தட்டில் ஒரு வெள்ளிக்கட்டியை போட்டான். பூணல் தட்டு மேலேயும் வெள்ளிக்காசு இருந்த தட்டு கீழேயும் இருந்தது. அதை எடுத்துவிட்டு சின்னதாக ஒரு வெண்கல காசு தட்டில் போட்டான், அப்போதும் தட்டு கீழேயே இருந்ததால் அதை எடுத்து ”இந்தாருங்கள் ப்ராமணரே , உங்கள் பூணலுக்கு ஈடான பொருள் என்று வெண்கல காசை நீட்டினான் மந்திரி.ராஜாவுக்கு ஆச்சர்யம். நேற்று நிறைய தங்கக்கட்டிகள் வைத்தும் போனாலும் ஈடாகவில்லை, இன்று ஒரு சிறு வெண்கலக்காசுக்கு ஈடாகிவிட்டதே பூணல். ஏன்?” என்று மந்திரியை கேட்டபோது மந்திரி சொன்னது;
”மஹாராஜா, நேற்று கொண்டுவந்த பூணல் வழக்கமாக அந்த பிராமணர் காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டு தயாரித்த பூணல். அதற்கு எவ்வளவு தங்கக்கட்டிகளும் ஈடாகாது. இன்று கொண்டுவந்த பூணல் பிராமணர் தனக்கு இன்னும் எவ்வளவு தங்கக்கட்டிகள் வரும், எப்படி சௌகர்யமாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு தயாரித்த பூணல். ஆகவே அது தரம் தாழ்ந்துவிட்டது. காயத்ரிமந்திரத்துக்கு அவ்வளவு சக்தி, மஹிமை” என்று மந்திரி எடுத்துரைத்தான்.
உபநயனம் என்பது ஒரு மாணவன் பிரம்மச்சாரி ஆஸ்ரமத்தில் கால்வைப்பது. உபநயனம் ஆணவத்துடன் குருகுலவாசம் துவங்கும். கல்வி கற்று முடிந்தபின் க்ரஹஸ்தாஸ்ரமம் ஆரம்பிக்கும்
ஒரு ஹிந்து வின் வாழ்வில் சடங்குகள் பல உண்டு. மூன்று வகையானவை அவை. நித்ய கர்மா, நைமித்திக கர்மா, காம்ய கர்மா.சந்தியாவந்தனம் நித்யகர்மாநுஷ்டானம் அது. குழந்தை பிறந்ததும் அதற்குண்டான மந்திரங்கள் ஜாதகர்மா போன்ற சடங்குகள், 7 வயது முதல் 11 வயதுக்குள் பூணல் போடும் உபநயனம் போன்றவை ஏதோ ஒரு நிமித்தமாக செய்யப்படுவதால் நைமித்திக கர்மா. எதையாவது எதிர்பார்த்து, விரும்பி, அது நடக்கவேண்டும் என்று செய்யப்படும் கர்மா காம்ய கர்மா, கார்ய சித்திக்காக செய்யப்படுபவை. அததற்கு என்று தனிப்பட்ட தெய்வங்களை வழிபடவேண்டும். உபநயனத்துக்கு தேவதை காயத்ரி தேவி.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



