
14.4.2025 முதல் நமக்கு விஸ்வாவஸு என்கிற புது தமிழ் வருஷம் ஆரம்பமாகிறது. 13.4.25 ஞாயிற்கிழமை கிழமை 51.16 நாழிகைக்கு நடு இரவுக்கு பின் காலை 02.38 க்கு பிறக்கின்றது அதனால் சித்திரை மாத விஷு புண்யகால தர்பணம் 14.04.2025 திங்கள் கிழமை காலை 7.00 மணிக்கு மேல் செய்யலாம் என்று நண்பர் வேதிக் ரவி சொல்கிறார்.
புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும். ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதை எப்போதும் தேடுபவர்கள். அறுபது எழுபது வருஷ ப்ரயோஜனமில்லாத அருதப் பழசுக்கு பதிலாக அஞ்சு வருஷ புதுசு தொடர்ந்து இருந்தாலே போதும் என்று சேதி பலரிடமிருந்து எங்கும் காதில் விழுகிறது.
நமது தேசத்தில் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மொழி பேசுகிறோம். நமக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் ஆரம்பம். வடக்கே இதை குடி பட்வா என்று கொண்டாடுகிறார்கள். உகாதியும் குடி பட்வா கொண்டாடு பவர்களும் தேசத்தில் பாதிக்கு மேல் உள்ள தெலுங்கானா, ஆந்திர, மஹாராஷ்ட்ரா ஜனங்கள். தெலுங்கு பேசுபவர்களுக்கு உகாதி, கன்னடக்காரர்களுக்கு யுகாதி, சிந்தி ஆசாமிகளுக்கு ‘சேதி சாந்த்’ என்று நிறைய இனிப்புகளோடு இந்தியில். காஷ்மீர் காரர்கள் சும்மா இருப்பார்களா? ”நாவ்ரே”என்று ஏதோ விரட்டுகிற மாதிரி, கோபமாக அடிக்க வருகிறாற் போல் ஒரு பெயர். மணிப்பூரில் இந்த புது வருஷத்துக்கு என்ன பெயர் தெரியுமா? எங்கே சொல்லிப்பாருங்கள். அதற்குள் புது வருஷம் போய் அடுத்தநாள் வந்து விடும். எங்கே சொல்லுங்கள் அதன் பெயரை :” சஜிபு நொங்மா பண்பா சீய்ரா ஒபா” . நான் தான் ஓடிவிட்டேனே. என்னை நீங்கள் எப்படி அடிக்க முடியும்? ஒருவர் அருகே இன்னொருவர் வரமுடியாது என்கிற தைரியம் எனக்கு.
புது வருஷத்துக்கு என்ன பேர் வைக்கலாம் எப்படி அழைக்கலாம் என்பது இருக்கட்டும். வழக்கமாக இந்த நாளில் என்ன செய்வார்கள் என்பதைச் சொல்கிறேன். வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள், மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள்வீட்டை அலங்கரிக்கும். . குடி என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே எழுந்து குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு. இதை இப்போது நினைத்து கூட பார்க்க முடியாது.
தமிழ் நாட்டில் நமக்கு தெரிந்த ஒரு வழக்கம். துன்பம், கசப்பான நிகழ்ச்சிகள் போக, வேப்பம்பூ வெல்ல பச்சடி. வேப்பம் பூ துயரத்தையும், வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவித்ததை நினைவூட்ட. பச்சை மிளகாய் கோபம். உப்பு : பயம் . புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை. நாம்ப கொழுக்கட்டை பண்ணுவோமே அதுபோல் பூரண போளி என்று ஒரு பக்ஷணம் மஹாராஷ்ட்ரர்கள் பண்ணுவார்கள். இது மாதிரி ஒன்றை பொப்பட்டு (bobbattu ) என்று தெலுங்கர்களும் ஹோலிகே, ஒப்பட்டு என்று கன்னடியர்களும் பண்ணி சாப்பிடுவார்கள்.
“எல்லோரும் ஒன்றாக கூடி மகிழ்ந்து வாழ என்ன பாஷை பேசினால் என்ன? எந்த பக்ஷணம் இனிப்பாய் ஏதேதோ பேரில் சாப்பிட்டால் என்ன? நாம் எல்லோரும் இந்தியர்கள். பாரத தேச புண்ய பிரஜைகள்.
புது வருஷம் விஸ்வாவஸு பற்றி சொல்லட்டுமா?
சித்திரை மாதம் வருடத்தின் முதல் பருவமான வசந்த காலத்தின் முதல் மாதம். வண்ண வண்ண மயமாக பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதம். இந்த மாதத்திற்கு அதிதேவதை விஷ்ணு. விஷ்ணு என்றால் எங்கும் நிரம்பியுள்ளவர். அதிக ஒளி உடையவர் என்று பொருள். பகவத் கீதையில் பருவ காலங்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று சொன்னதால் பகவானின் மதிப்பிற்குரிய மாதம். சித்திரை மாதத்தில் தான் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்கள்.
தமிழ் வருஷங்கள் 60. அவை பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்… மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்… பிறகு மீண்டும் இப்படியே தொடரும்… இந்த வரிசையில் 39-வது ஆண்டின் பெயர் விசுவாவசு. விசுவாவசு என்றால் ”நேர்மையான பண்பாளர் ,தயாள சிந்தனை,செல்வந்தர்” என்று அர்த்தம்.
”விசுவா வசு வருடம் வேளாண்மை யேறும்
பசுமாடு மாடும் பலிக்குஞ் – சிசுநாசம்
மற்றையரோ வாழ்வார்கண் மாதவங்கண்
மீறுமே யுற்றுலகி னல்லமழை யுண்டு.”
இடைக்காட்டு சித்தர் தீர்க்க தரிசனத்தின் படி பார்த்தால் நாளை தொடங்கும் வருஷத்தில் விசுவாசு ஆண்டில் ஜோரான மழை பெய்யும். ஆற்றில் வெள்ளம் ஓடி,வயல்களில் வேளாண்மை செழிக்கும். ஆடு மாடு கோழி நிறைய பெருகும். ஆனால் குழந்தைகளுக்கு நோய்களால் தொந்தரவு ஏற்படலாம், ஜாக்கிரதை. இன்னொரு முக்கியமான விஷயம். பகைவர்களுக்கு சிலரின் கூட்டணி, ஆதரவு கிட்டும். என்ன செய்வது? நல்லதும் கெட்டதும் கலந்தே நடக்கும். இந்த வருஷத்துக்கு ராஜா சூர்யன். அரசியல் கட்சிகளின் தலைவர்களில் மாற்றம் உண்டாகும். பாருங்கள் எப்படி கரெக்டாக இடைக்காட்டு சித்தார் அப்பவே யூட்யூப் பார்க்காமலேயே சொல்லி இருக்கிறார். தொழிற்சாலைகள் கை மாறும். வெயில் கொளுத்தும், புயல் இருக்கும், மழை குளிரும் நிறைய இருக்குமாம். பூமியின் காலநிலை கடுமையாக இருக்கும் என்கிறார் சித்தர்.
சகல வித ஜீவராசிகளுக்கு சுபிக்க்ஷம் 1-க்கும் 2-க்கும் உடைய சனிபகவான் ஆட்சிபலம் பெற்று இந்த விசுவாவசு வருடம் இரஸாதிபதியாக பதவி வகிக்கிறார். சூரியன் பகவான் இவ்வாண்டு இராஜாவாகவும், அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி வருவதால் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு (ஓசோன்) ஆக்சிஜன் முழுமையாக கிடைக்கும். இயற்கைவளம் பெருகும். மழை நன்றாக பொழியும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்க நேரும். இரும்பு எக்கு தளவாடங்கள் உற்பத்தி அதிகரிக்கும். உலகத்தில் உணவு பொருட்களின் உற்பத்தி அதிக அளவில் குறையக்கூடும். உப்பு உற்பத்தி அதிகரிக்க நேரும். விமான போக்குவரத்தில் பல அதி நவீன வசதிகள் ஏற்படும். எரிவாயு உற்பத்தி அதிகரிக்க நேரும் உடனுக்குடன் விலை வாசியும் அதிகரிக்க நேரும். மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்க நேரும். , இவ்வாண்டு நீல மேகம் கிழக்கு திக்கில் உற்பத்தி ஆவதால் வடமாநிலம் கடுமையாக வெள்ளத்தில் பாதிக்க நேரும். மரக்கால் (குறுணி) மழையும் இவ்வாண்டு ஆதாயம் 65, விரையம் 59, வருவதால் அதிகமான ஆதாயம் 06 வருவதால் பல நலத்திட்டங்களை மத்திய மாநில அரசாங்கம் அறிவிக்க நேரும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
குரு பகவான் சித்திரை மாதம் 28-ந் தேதி ஞாயிறுக்கிழமை (11.05.2025)) மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புரட்டாசி மாதம் 22-ந் தேதி புதன் கிழமை (08.10.2028)|கடகம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தேவகுருவாகிய குரு அசுர சுக்கிரன் வீட்டில் செய்வதாலும் 09-பார்வையாக லக்னத்தை பார்ப்பது உகந்த காலம் ஆகும். இதனால் குடிநீர் தேவை அதிகரிக்க நேரும். அடிக்கடி மின்சாரம் தடைகள் ஏற்படும். உற்பத்தி ஆகும். மோட்டார் ரக பேட்டரி வாகனத்தில் உற்பத்தி அதிகரிக்கும், பொது இடங்களிவு போக்குவரத்து
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



