
மஹா பாரதம் – நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்துக்களுக்கு ரெண்டு கண்கள் இருக்கிறது ஸார். அவர்களில் ஒருவனான நான் சுவாசிப்பது மஹா பாரதமும் ராமாயணமும். ராமாயணம் மூத்தது, பாரதம் தம்பி.
இக்ஷ்வாகு வம்சத்தில் ராமன் பிறந்த விருத்தாந்தம் தான் ராமாயணம். ஏழாயிரம் வருஷம் முன்பு நடந்தாலும் நேற்று நடந்தது போல் அதில் வரும் சம்பவங்கள், இடங்கள், மனிதர்கள் பெயர்களுடன் நினைவில் நிற்கிறது.
இன்னொரு வம்சம் பரதன் வழியில் வந்தவர்கள். இக்ஷ்வாகு குலத்தினர் சூரிய வம்சத்தினர். பரத குலத்தினர் சந்திர வம்சம் பாரத வம்சத்தினர்
ஒரு காலத்தில் நிறைய யானைக் கூட்டங்கள் அரண்மனையை பாதுகாத்தன. நமது தலைநகரம் டில்லியிலிருந்து அறுபது கி.மீ. தூரத்தில் இருந்த நகரம் அது. யானைக்கு ஹஸ்தி என்று பெயர் ஆகவே அந்த நகரம் ஹஸ்தினாபுரம் எனப்பட்டது. பரத வம்சம் ஆண்ட தேசம் நமது என்பதால் பாரத வர்ஷம், பாரத தேசம் என்று இன்றும் பெயர் கொண்டது.
விசித்திர வீர்யன் என்ற ராஜா பரதனின் கொள்ளுப் பேரன். அகால மரணமடைந்து பின்னர் அவனது வாரிசுகளாக த்ரித ராஷ்ட்ரன், பாண்டு என்ற இரு பிள்ளைகள். பெரியவன் த்ரித ராஷ்ட்ரன் பிறவிக் குருடன். ஆகவே தம்பி பாண்டு அடுத்த ராஜா வாகி றான்.
பாண்டுவுக்கு ரெண்டு பனைவிகள். குந்தி என்பவளுக்கு மூன்று பிள்ளைகள் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன், ரெண்டாவது மனைவி மாத்ரிக்கு ரெண்டு பிள்ளைகள் நகுலன் சகாதேவன். ஆகவே பாண்டுவின் இந்த ஐந்து பிள்ளைகளும் பஞ்ச பாண்டவர்கள் என்று அறிவோம்
என்ன துரதிர்ஷ்டம். பாவம் பாண்டுவும் இறந்துவிடு கிறான். சிறுவர்கள் பாண்டவர்கள். ஆகவே கண் தெரியாத அண்ணா த்ரித ராஷ்டிரனே ராஜ்ய பரிபாலன பொறுப்பேற்று ராஜாவாகிறான்.குந்தி ஐந்து பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு த்ரிதராஷ்ட்ரன் அரண்மனையில் ஹஸ்தினாபுரத்தில் வாழ்கிறாள்.
த்ரிதராஷ்டிரனுக்கு காந்தாரி என்ற மனைவி மூலம் நூறு பிள்ளைகள். ஆகவே அவன் அரண்மனையில் நூற்று ஐந்து குழந்தைகள் பெரிய பள்ளிக்கூடம் போல கஜ கஜ வென்று சப்தத்தோடேயே இருக்கும். அவர்கள் விளையாட்டின் சப்தம் எங்கும் எதிரொலிக்கும்.
பாண்டுவின் புத்திரர்கள் ஐந்து பேரும் தெய்வாம்சம் பொருந்திய சக்தி, வீரமிக்க பிள்ளைகள். பெரியவன் யுதிஷ்டிரபான் தர்மம் நீதி, நேர்மையில் சிறந்தவன். தர்ம புத்ரன் (தர்ம தேவதையின் பிள்ளை )என்று கூட அவனுக்கு பெயர்.
அடுத்தவன் பீமசேனன் (வாயு புத்ரன் ) பத்தாயிரம் யானை பலம் கொண்ட மஹா வீரன். எளிதில் யாராலும் ஜெயிக்க முடியாதவன் .
மூன்றாவது பாண்டவன் அர்ஜுனன் வில் வித்தையில் நிகரற்றவன் (இந்திர குமாரன் ).
நான்காவது ஐந்தாவது பிள்ளைகள் நகுல சகாதேவன் இருவரும் அஸ்வினி குமாரர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் .
திருதராஷ்டிரன் தனுர் வேதத்தில், வில் வித்தையில், இணையற்ற துரோணாச்சார்யார் என்பவரை நியமித்து நூற்று ஐந்து பிள்ளைகளும் அவரிடம் அஸ்திர சாஸ்த்ர வித்தை பயிற்சி பெற்றார்கள். துரோணாச்சாரியார் பாரத்வாஜ மஹரிஷியின் மகன். பாண்டவர்கள் மிகச் சிறந்த மாணவர்களாக திகழ்ந்தனர். அதுவும் அர்ஜு னன் துரோணாச்சார்யரின் தனி மதிப்பைப் பெற்ற மாணவன்.
த்ரிதராஷ்டிரனின் நூறு பிள்ளைகளில் மூத்தவன் துரியோதனனுக்கு பாண்டவர்களை பிடிக்காத காரணம் அவர்கள் எதிலும் சிறந்தவர் களாக இருப்பதால். அவனுடைய ப்ரத்யக்ஷ எதிரி பீமன் என்று கருதினான். இருவருமே மல்யுத்தம், கதாயுத போட்டியில் வல்லவர்கள். ஆனால் எதிலும் பீமசேனன் கை ஓங்கி இருந்தது.
துரோணாச்சார்யருக்கு பால்ய நண்பனாக இருந்து பின்னர் எதிரியானவன் பாஞ்சால தேச அரசன் துருபதன். ஆகவே அவனை பழிவாங்க நினைத்த துரோணாச்சார்யார் தனக்கு குரு தக்ஷிணையாக பாண்டவர்கள் ஐவரும் பாஞ்சால தேசம் புறப்பட்டு துருபதன் சேனையை முறியடித்து அவனைச் சிறை பிடித்து துரோணர் முன் நிற்க வைத்தனர். துரோணாச் சார்யருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. துருபதனுக்கு உயிர்ப் பிச்சை அளித்து அவனுடைய ராஜ்யத்தில் பாதியை மட்டும் அவனுக்கு திரும்ப கொடுத்து மன்னித்து அனுப்புகிறார்.
மனம் ஒடிந்த துருபதன் பாஞ்சாலம் திரும்பி ஒரு பெரிய யாகம் நடத்துகிறான். தேவர்களை வேண்டி வரம் கேட்கிறான். ”என்னை துரோணர் வெல்ல காரணமாக இருந்த பரத வம்ச ராஜகுமார்கள் பாண்டவர்களை வெல்ல, பரத குலமே அழிய ஒரு சக்தி எனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறான். யாக அக்னி குண்டத்தி லிருந்து ஒரு அழகிய பெண் தோன்றுகிறாள். யாக குண்டத்திலிருந்து பிறந்ததால் அவள் ‘யஞசேனி’ என்றும், துருபதன் அவளை மகளாக ஏற்றதால் ‘த்ரோபதி ‘ என்றும் பேர் பெற்றாள். கருப்பு பெண் என்பதால் ‘கிருஷ்ணா’ என்றும் துரோபதிக்கு ஒரு பெயர். அவளால் தான் பாரதர்களுக்குள் யுத்தம் ஒன்று பேரிடியாக உருவாகி நிகழ்ந்து பரத குலமே பூண் டோடு அழியப் போகிறது. மஹா பாரத யுத்தம் என்று அந்த நிகழ்ச்சிக்கு பெயர்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


