
சித்ரகூட ராமாயண நவாஹம் – நங்கநல்லூர் J K SIVAN
எனக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த மாதம் 18ம் தேதி, (18.3.25 -30.3.25) கிளம்பி மத்திய பிரதேசம் சித்ரகூடத்தில் ஒன்பது நாள் ராமாயண நவாஹம் பங்கேற்று சென்னை திரும்பப்போகிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் சென்னையிலிருந்து, தமிழகத்திலிருந்து கூட வருகிறார்கள். அந்த பத்து நாளும் என்னருகே கம்ப்யூட்டர் கிடையாது. எதுவும் எழுத முடியாது. ராமாயணம் ராமாயணம் ராமாயணம் அது ஒன்றே தான்.
சித்ரகூடம் மத்திய பாரதத்தில் புந்தேல்கண்ட் எனும் காடுகள் அடர்ந்த பிரதேசத்தில் சத்னா மாவட்டத்தில் உள்ளது. நமது பாரம்பரிய வரலாறு, கலாசாரம், புராதனமான தொல்லியல் கொண்ட ஊராகும். உத்தரப் பிரதேசம் – மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்தது சித்திரகூடம். இவ்வூர் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பேரூராட்சி ஆகும். சித்திரகூடம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைப் பிரிக்கும் இடமாக உள்ளது. சித்திரகூட ஊரில் பல இந்து கோயில்கள் அமைந்துள் ளது.
இராமன் பதினான்கு ஆண்டு வனவாசம் இருந்தபோது சீதா, லக்ஷ்மணனோடு முதலில் சித்ர கூடத்தில் சில காலம் இருந்தார். சித்ரகூடத்தை அவருக்கு அடையாளம் காட்டியது பாரத்வாஜ ரிஷி. அவர் ஆசிரமத்தி லிருந்து பத்து மைல் தூரம். அனுசுயா, அத்ரி, மார்க்கண்டேயர் போன்ற முனிவர்கள் தவமிருந்த இடம். அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி, மகரசங்கராந்தி, இராமநவமி போன்ற இந்துக்களின் விசேஷ நாட்களில் சித்ரகூடத்தில் கூட்டமாக பக்தர்கள் கூடுவார்கள். மந்தாகினி நதி ஸ்னானம் விசேஷம். ராமர் வருவதற்கு முன் இங்கே அநேக ராக்ஷஸர்கள் முனிவர்களின் தவத்துக்கு இடையூறு விளைவித்துக் கொண்டி ருந்தனர். அவர்களை ராமர் கொன்று அமைதி பிரதேசமாகியது.
சித்ரகூட மலைத் தொடர்கள் காமத் மலை, அனுமான் மலை, சீதை குளம், லக்ஷ்மணன் மலை எல்லாம் கொண்டது. சித்ர கூடத்தில் தான் பரதன் ராமனை சந்தித்து ”அயோத்திக்கு திரும்பி வா, ராஜாவாகி விடு’ என்று பிடிவாதம் பிடித்தான். ராமன் மறுத்ததோடு இல்லாமல் பரதன் மூலம் அப்பா தசரதன் இறந்த செய்தி கேட்டு தனது தம்பிகளோடு தசரதனுக்கு அந்திம கிரியைகளை மந்தாகினி ஆற்றின் கரையில் செய்தார் . அப்புறம் தான் தண்டகாரண்யம் வனப்பகுதியை அடைந்தார் .
சித்ரகூடத்தில் லக்ஷ்மணன் ராமன் சீதா தங்குவதற்கு அழகாக ஒரு பர்ணசாலை அமைத்தான். சித்ரகூடம் ராமனுக்கு ரொம்ப பிடித்தது. ”சீதா இந்த சித்ரகூட மலைகளைப் பார்க்கும்போது பரம சந்தோஷ மாக இருக்கிறது. நாடிழந்து, நண்பர்களை இழந்தது எதுவுமே பெரிதாக தோன்றவில்லை. எவ்வளவு வண்ண வண்ண பறவைகள் பறக்கிறது பார். சூரிய ஒளியிலில் தங்கம் போல் மின்னும் வானத்தை தொடும் சிகரங்களைப் பார். பொன்மயம் மட்டும் இல்லை, வெள்ளி, நவரத்தினங்கள் வர்ணமும் வைரம் போலும் கண்ணைப் பறிக்கிறது பார். நிறைய மான்கள், புலிகள், கரடிகள், யானைகளை, குரங்குகள் எல்லாம் குடும்பத்தோடு வாழ்கிறது இங்கே.
மா, பலா, வாழை, பழங்கள் தொங்கும் மரங்கள், நறுமணம் வீசும் வித வித மலர்கள் குலுங்கும் செடிகள் கொடிகள். படிப்படியாக வெள்ளியை உருக்கி விட்டால் போல அருவிகள் மலைமேலிருந்து கீழே சீராக நீர் வீழ்ச்சியாக தொடர்ந்து விழுவதைப் பார். இங்கே பல காலம் வாழ மனதில் ஆசை பிறக்கிறது. ராமாயணம் ராமனை ”கிரி வன ப்ரியன்” என்று சொல்கிறது.
மந்தாகினியில் தான் எத்தனை வெண்ணிற அன்னங்கள் குடும்பத்தோடு மிதக்கிறது. ஆற்றங்கரை மணல் சுகமாக பட்டுப் பாயில் படுப்பது போல் அல்லவா இருக்கிறது. அயோத்யா மறந்து போய்விடும் போல் இருக்கிறது எனக்கு’. மந்தாகினி ஆற்றில் ஸ்னானம் செய்ய சில இடங்கள் இருக்கிறது. ராம் காட், இங்கு தான் ராமன் ஸ்னானம் செய்வான். துளசிதாசருக்கு இங்கே தான் ஹனுமான் தர்சனமும் அவர் மூலம் ராம தர்ஸனமும் கிடைத்தது. தினமும் சாயந்திரம் மந்தாகினிக்கு ஆர்த்தி காட்டுகிறார்கள். சித்ரகூடம் துளசிதாசருக்கு ரொம்ப பிடித்த ஸ்தலம். நிறைய இதைப்பற்றி எழுதி இருக்கிறார்.
ஜானகி குண்டம் பயஸ்வினி நதி கரையில் உள்ளது. சீதை ஸ்னானம் செய்த இடம். சீதையின் பாதச் சுவடுகள் காண்கிறதாம். ராம் காட்டிலிருந்து மூன்றரை கி.மீ. தூரம் இது. அமைதியான இடம்.
ஸ்படிக சீலா மந்தாகினி நதிக்கரையில் ஒரு பாறை. இதன் மீது அமர்ந்தவாறு ராமனும் சீதையும் சித்ரகூட இயற்கை எழிலை ரசிப்பார்கள். இந்த பாறையில் ராமர் சீதை காலடிச் சுவடுகள் உள்ளன. இங்கே தான் இந்திரனின் மகன் ஜெயந்தன் காக்கை வடிவில் வந்து மூக்கால் சீதையை காயப்படுத்தி தண்டனை பெற்றான்.
காமத்கிரி மலை – ராமன் லக்ஷமணன், சீதை வனவாசத்தில் இங்கேயும் தங்கி இருக்கிறார்கள். இன்றும் பக்தர்கள் இந்த மலையை சுற்றி கிரிவலம் வருகிறார்கள். ஐந்தரை கி.மீ. தூரம். ப்ரதக்ஷிண வழியில் சில கோவில்கள் இருக்கிறது. ராமகிரி சக்திபீடம் இங்கே தான் உள்ளது.
லக்ஷ்மணன் புஹாரி என்று ஒரு இடம்.சீதையையும் ராமனையும் இரவு கண் துஞ்சாமல் லக்ஷ்மணன் நின்று காவல் காத்த இடம்.
700 படிகள் ஏறி போகும்படியாக ஒரு குன்று சீதா ரசோய் என்று பெயர். மேலே போனால் ஹனுமான் தாரா என்ற இடத்துக்கு பக்தர்கள் போகிறார்கள். சீதை சமைத்த சமையல் கட்டு இது. அங்கிருந்து கீழே முழு சித்ரகூடம் அற்புதமாக காட்சி தரும்.
சித்ரகூட ஆஸ்ரமங்களில் இரவு பகலாக ராம நாம பாராயணம் நடக்கிறது. வருவோர்க்கு அன்னதானம்.
my book on Adhyathma Ramayana titled ‘RAME RAAME MANORAME” AVAILABLE FOR DISTRIBUTION. ON MINIMUM DONATION . IF INTERESTED CONTACT ME ON WHATSAPPNO. 9840279080
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


