
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN
வள்ளுவர் வாக்கு –
”நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.
நாலு பேர் சேர்ந்து வம்பு பேசும்போது நிச்சயம் ஒருவர் தலையாவது உருளும். அவரைப் பற்றி கேலியாக பேசுவது, இகழ்வது, அவரது குறைகளை பெரிதாக்கி காட்டி சிரிப்பது போன்ற காட்சிகள் நடப்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அது விளையாட்டுக் குக் கூட செய்யக்கூடாத தப்பு, தவறு , பகைவர்கள் ஆனாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு சின்ன நல்ல குணம், செயல், பேச்சு, இருந்தால் அதைப் பற்றி மட்டும் உயர்வாக பேசவேண்டும். இது தான் மனிதனின் உயர்ந்த பண்பு என்கிறார் வள்ளுவர்.
”பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்”
இந்த உலகம் இன்னும் நூறு மடங்க்கு கெட்டுப் போகாமல் கொஞ்சமாவது வாழ உகந்ததாக இருப்பதற்கு காரணம் என்ன என்று வள்ளுவர் சொல்வது இது தான்; பண்புடையவர்கள் இன்றும் நம்மிடையே தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை மாதிரி அவர்கள். அவர்களால் தான் இந்த உலகம் மண்ணில் புதையாமல் இருக்கிறது.
‘
‘அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்”.
இங்கிலீஷிலில் கெட்டிக்காரனாக ஒருவன் இருந்தால் அவனுக்கு SHARP BRAIN என்று சொல்கிறோம். தமிழில் கூர்மையான புத்தி, கூரான மூளை என்கிறோம். ஒருவனுக்கு இவ்வளவு அரம் மாதிரி கூர்மையான அறிவு இருந்தாலும், அவனிடம் மக்களிடம் பழக நல்ல ஒழுக்கமான பண்பு, நல்ல குணம், இல்லாவிட்டால் அவன் மரத்துக்கு சமம். உணர்ச்சியற்ற பிண்டம் என்கிறார் வள்ளுவர். வாஸ்தவம். ”நிறைய படிச்சவனா அவன். சே.எப்படி நாய் மாதிரி விழுகிறான்?’ என்று சொல்வதில்லையா?
”நண்பற்றா ராகி நயம்இல செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை”.
யார் உண்மையில் ரொம்ப இழிந்தவன், கெட்டவன்? என்றால் எவன் ஒருவன் தனக்கு கெடுதல் ஒன்றே செய்யும் பகைவனிடத்திலேயும் பண்போடு நடந்து கொள்ளவில்லையோ அவன் அந்த பகைவனை விட கெட்டவனை விட ரொம்ப மோசமானவன்.
”நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.”
யாரையும் புறக்கணிக்காமல் எல்லோரையும் சமமாக பாவித்து மகிழ்ச்சியோடு பழக வேண்டும். இப்படி பழக முடியாதவர்களுக்கு மிகப் பெரிய இந்த உலகமானது சூரியன் கொளுத்தும் வெயிலில், பகலில் கூட இருட்டான
உலகமாகத் தான் தோன்றும்.
”பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று”.
நல்ல குணம் இல்லாதவனிடம் பெரிய பரம்பரை சொத்து இருந்த என்ன பிரயோஜனம்? பால் சுத்தமான பாத்திரத்தில் வைக்கப்படா விட்டால் திரிந்து போகிறதே
அதுபோல அவனால் அந்த செல்வம் யாருக்குமே பயனில்லாமல் போய்விடும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



