SIVA DHARSHAN J K SIVAN

சிவன் கேட்ட விட்டல்  பஜனை –  நங்கநல்லூர்  J K  SIVAN
இன்று  மஹா சிவராத்திரி.  பக்தனின்  பூரண  விஸ்வாசம்  தோய்ந்த  போற்றுதலில்  சிவன்  மயங்குவதில்  என்ன  ஆச்சர்யம்?   இதன்  பின்னணி  என்ன?   பக்தியின்  காந்த  சக்தி  ஒன்றே.  இது  எவ்வாறு  விட்டல பக்தர்கள்  ஞானேஸ்வர், நாமதேவர், ஆகியோர் வெளிப்படுத்தினார்கள்?  அதை  பரம சிவன்  எவ்வாறு ஏற்றுக்கொண்டார்?

கொளுத்தும்  வெயிலில் நாமதேவரும்  ஞானேஸ்வரும்  எண்ணற்ற  பக்தர்களும் யாத்திரை சென்றபோது  ராஜஸ்தான்  பாலைவனத்தில் நீரின்றி  உணவின்றி  வாடி வதங்கினாலும் விட்டலனின் நாம சங்கீர்த்தனத்தை நிறுத்தவில்லை. “விட்டலா”  என்று மயங்கி விழுந்தார் ஞானேஸ்வர். கண்ணுக் கெட்டிய தூரம்  ஒரு  வீடோ கிராமமமோ ஒதுங்க  நிழலோ தென்படவில்லை . மனித சஞ்சாரமற்ற  வெறும் பாலைவனம். 

“உடனே  வாயேன்,  வந்து  எங்களுக்கு  ஏதாவது வழிகாட்டேன்?” என்று  கெஞ்சினார் ஞானேஸ்வர். ஆனால் நாமதேவர்  அசரவில்லை, மனம் தளரவில்லை.   ”கட்டாயம் விட்டலன் வந்து நமக்கு  உதவுவான் கவலை வேண்டாம்” என்று நம்பிக்கையை அனைவருக்கும் ஊட்டினார். விட்டலன் வரவில்லை.  ஆனால் அவனது சுதர்சன சக்ரம் வந்து விட்டது. பூமியை  குடைந்து அமுதெனும் இனிய குளிர்ந்த  நீரூற்று  அவர்களுக்கு  கிடைக்க வழி செய்து மறைந்தது. சமய  சஞ்சீவியாக வந்து உதவிய சுதர்சன  சக்ரத்தை போற்றிப்  பாடி அனைவரும் தாகம்  தீர்ந்து களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன்  உத்சாகமாக பயணம் தொடர்ந்தனர். ஒரு சிற்றூர் வந்தது. அதில் சில பக்தர்கள்  உணவு வழங்கி அனைவரும் பண்டரிபுரம்  திரும்பினர்.  இனிமேல் தான் சிவராத்திரி அன்று நடந்த அற்புதம் சொல்லப்போகிறேன். அன்று  சிவராத்திரி. அவர்கள் இருந்ததோ பீகாரில் இப்போது தேவ்கார் என்று அழைக்கப்பட்டு அக்காலத்தில்  வைத்யநாதம் என்ற  அருமையான பெயருடன்  விளங்கிய ஒரு  க்ஷேத்ரம்.  இதன் பெருமை உங்களுக்கு தெரியுமே!!. பன்னிரண்டு  ஜோதிர் லிங்கத்தில்  இந்த  ஊர்  லிங்கமும் ஒன்று.  ஞானேஸ்வர்  நாமதேவர்  கோஷ்டி இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா?  மூல விக்ரக சிவலிங்கம் முன் அமர்ந்து  வழக்கமான விட்டல் நாம சங்கீர்த்தனம் தொடங்கினர். அந்த கோவில் பிரதம அர்ச்சகர் காதில் இது  நாராசமாக விழுந்திருக்கும்  போல இருக்கிறது!!!!. எப்படி இவர்களை தடுப்பது என்று யோசித்து “இப்போது  இங்கு சிவனுக்கு  அர்ச்சனை அபிஷேகம்  எல்லாம் நடைபெற இருக்கிறது. மேலும் இது சிவன் கோயில். இங்கு போய் விஷ்ணுவை போற்றி பாடுகிறீர்களே” என்றார்    

“சுவாமி, க்ஷமிக்கணும். சிவபெருமான் எங்களை ஆக்னையிட்டு தான் அவர் முன்   நாங்கள் நாம  சங்கீர்த்தனம் செய்கிறோம். அவர் வேண்டாமென்றால் அடுத்த கணம்  நாங்கள்  நிறுத்தி விடுகிறோம்” என்று ஞானேஸ்வர் பதிலளித்தார்” 

இது ஒரு பிரச்னையாகி விடக்கூடதே என்று ஆலய நிர்வாகிகள் குறுக்கிட்டு மூல விக்ரஹமான சிவன் சந்நிதிக்கு  பின்புறம் ஒரு  இடம் ஒதுக்கி அவர்களை அங்கு போய்  நாமசங்கீர்த்தனம் செய்ய அனுமதித்தனர். பஜனை கோஷ்டி  அங்கு போய்  அமர்ந்து  தொடர்ந்தது. அர்த்த ஜாம  கால பூஜைஎல்லாம்  முடிந்து  கோயில்  நடை சார்த்தப்பட்டது. வெளியே  பிரகாரத்தில் சிவராத்ரி இரவு பூரா  நாம  சங்கீர்த்தனம்  பஜனை  தொடர்ந்து  கொண்டே இருந்தது.
விடியற் காலை மறுநாள் அர்ச்சகரும் மற்றோரும் ஆலயம் திறந்து பூஜைகளை ஆரம்பிக்க சிவபெருமான் சந்நிதி கதவை  திறந்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
 ஜோதிர் லிங்கம் பின் பக்கமாக திரும்பி காட்சி யளித்தது.  சந்நிதி சுவருக்கு பின் பக்கம் தானே நாமதேவர் ஞானேஸ்வர் பக்த பாகவத சிரோமணிகள் அமர்ந்து சிவராத்திரி இரவு பூரா  நாம சங்கீர்த்தனம் ஜோராக  நடந்து கொண்டிருந்ததே . ஆகவே தான் சிவன் திரும்பி அமர்ந்து விட்டார். .
தங்கள்  தவறை உணர்ந்தனர் அர்ச்சகரும் மற்றோரும். அவர்களது விட்டலன் நாம சங்கீர்த்தனம் உகந்ததே என்று  உணர்த்தவே சிவன் திரும்பினான் என்று புரிந்து கண்ணீர்  மல்க ஓடி நாமதேவர் ஞானேஸ்வர்  கால்களில் விழுந்து மன்னித்தருள வேண்டினர்.   என்னுடைய  ”தெவிட்டாத விட்டலா”  புத்தகத்தில் இந்த சம்பவம் வரும்.
சுவாமி சிவானந்தா  சிவலிங்கம்  பற்றி  என்ன  சொல்லியிருக்கிறார்  தெரியுமா?
சிவலிங்க  புராணம் ”பிரதானம்  பிரக்ரிதிம் தட்ச யதாஹுர்  லிங்கமுத்தமம் – கந்தவநரசைர்ஹினம்  சப்த-ஸ்பர்சாதி-வர்ஜிதம் ”என்கிறது.  அதாவது   சிவலிங்கம்  என்பது இயற்கையின் மற்றொரு பெயர் இல்லாத,  உருவில்லாத,  குணமில்லாத ஒன்று.  லிங்கம்  என்றால்  ஒரு குறி.  ஆற்றில் அகன்ற  வெள்ளம்  ஓடுகிறது.  அது  எதைக்  குறிக்கிறது.  நேற்றோ அதன் முதல் நாளோ  பலத்த  மழை  பெய்திருக்கிறது  என்று  தானே?   ஒரு  பெரிய  புகை மண்டலம்  அவ்வாறே  எதைக்  குறிக்கிறது?  எங்கோ  பெருந்தீ இருந்ததை.   அது  போலவே  சிவலிங்கம்  எங்கும்  பரவி  விச்வாகாரமாக  இருக்கும்  பரமேஸ்வரனைக்  குறிக்கிறது.   சிவலிங்க தரிசனம்  பண்ணும்போது  மனம்  புளகாங்கிதம்  அடைகிறதல்லவா? அவருக்கென்று  தனி  உருவில்லை . ஏன்  என்றால்  எல்லா  உருவும்  அவரே. 

 மோன சக்தியை  பிரதிபலிப்பது   சிவலிங்கம். வெறும்  கல்லல்ல. தேஜஸ்,  சைதன்யத்தின்  மறு உரு. ஸ்படிகத்தில் பூசிப்பதன்  காரணம் அதற்கென்று  ஒரு  வண்ணம், நிறம்  கிடையாது. எதிரே  இருப்பதை  பிரதிபலிப்பது.   நிர்குண பிரம்மம்.  நாம்  பக்தியோடும்  நம்பிக்கையோடும்  முன் நின்றால்  நம்  பூரண நம்பிக்கை  பக்தியை  நாமே  உணர்வோம்.
 சொல்லொணா அபூர்வ காந்த சக்தி   சிவலிங்கத்துக்கு  உண்டு.  அது  மனதை  ஒரு நிலைப்  படுத்தும்.  இதனால்  தான்  நமது முன்னோர்,  ரிஷிகள்,  எல்லோரும்  லிங்கத்தை  வழிபட்டார்கள். கோவில்களில்  சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்தார்கள்.  உண்மையான  பக்தனிடம்  சிவலிங்கம்  பேசியிருக்கிறது  நம்மோடும்  பேசும்.   சிவலிங்க தரிசனம் இதயத்தை உருக  வைக்கும். கண்களில்  ஆறாக  ஆனந்தக்கண்ணீர்  வழியும் . உண்மையான பக்தன்  உடனே  நிர்விகல்ப  சமாதி  அடைவான்.
 ஸ்ரீ  ராமனே  சிவனை  லிங்க  ரூபமாக  ராமேஸ்வரத்தில்  பூஜித்திருக்கிறார்.  ராவணனும்  சிவனை  தங்க லிங்கத்தில்  வழிபட்டவன்.  சக்தியை  உள்ளடக்கிய குறியே  சிவனின்  லிங்க ஸ்வரூபம்.
இதெல்லாம் நமது  முன்னோர்கள்  நமக்கு  கற்பித்தார்களே .  நாமும்  அவ்வாறேஅடுத்த தலைமுறைக்கு  இதை  கற்பிக்க கடமைப்பட்டவர்கள்  இல்லையா? 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;