
சாமுத்ரிகா லக்ஷணம் – நங்கநல்லூர் J K SIVAN
இது அதிகம் அறியப்படாத ரஹஸ்ய சாஸ்திரம். சிலை வடிக்கும் ஸ்தபதிகள், ராஜ குருக்கள் அதிகம் அறிந்து வைத்திருந்த விஷயம். தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஒரு முறை நான் ஓலைச்சுவடியில் இருந்த விஷயத்தை நாம் படிக்கும் தமிழில் அச்சடித்து ஒரு புஸ்தகம் பல வருஷங்களுக்கு முன்பு படித்த ஞாபகம் இருக்கிறது. சமீபத்தில் சாமுத்திரிகா லக்ஷணம் படிக்க நேர்ந்தது. சில காலத்துக்கு ஒவ்வாத விஷயங்களை விலக்கி எல்லோரும் படிக்கத் தகுந்ததை மட்டும் இங்கே சுருக்கமாக சொல்கிறேன். இதை தெரிந்துகொள்வதால் என்ன பயன்? அதை படிப்பவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.
சாமுத்திரிகா லக்ஷணம் என்று ஒரு சாஸ்திரம். அது சகல ஆண்கள், பெண்கள் பற்றிய உருவம், குணாதிசயங்கள் பற்றி சுவாரஸ்யமாக சொல்கிறது. அது சொல்கிறபடி பார்த்தால், பெண்களில் நான்கு வகையினர். அவர்களை அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என அழைக்கிறார் அகத்தியர். இவர்களை எப்படி அடையாளம் காண்பது?
ரிஷி அகத்தியர் விவரிக்கிறார்.:
பெருகுவதற்குப் பெண்ணிடச் சாதி நாலும்
பிரித்து நாம் ஒவ்வொன்றாய்ப் பேசக்கேளு
வருவதற்கு வத்தினிதான் பிற்குலமாகும்
யடவானிச் சங்கினிதான் சத்திரிய குலமாகும்
வருவதற்கு வசியாளே சித்தினிதானாகும்
வசனித்தோம் பத்மினிதான் சூத்திர குலமாகும்
நறுவதற்கு நால்சாதி குலமே சொன்னோம்
– அகத்தியர்-
காணப்பா புலத்தியனே பெண்சாதி நாலும்
கருவறிந்து சொல்லுகிறோம் வரணங்கேளீர்
பேணப்பா அத்தினி ஸ்தான்கேரும்
பேணிப்பார் வெளுமை வரணம் பேதமில்லை
நாணப்பா சங்கினி தான் மஞ்சள் நிறமாகும்
நலமான சித்தினி தான் செழுமை நிறமாகும்
ஆணப்பா பத்மினிதான் கருப்பு வாரணமாகும்
அருளினோம் நால்சாதி வரணம் இதுவாமே
– அகத்தியர் –
அகத்தியர் பாடல் புரியாவிட்டால் பரவாயில்லை. நாலுவகை பெண்கள் எப்படி அடையாளம் காண்பது/ ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் எந்த வகையை சேர்ந்தவள் என்று கண்டுபிடிப்பது பற்றி அகத்தியர் சொல்கிறார்;
அத்தினி-பெண்களில் இவர்களை உயர்ந்த வகையினர் என்கிறார்.வெளிர்மையான நிறத்தை உடையவர்களாம். அழகியகண்களும், மென்மையான தலை முடியையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
சங்கினி-நடுத்தர உயரமும் , மஞ்சள் நிறமும் உடைய இந்த வகை பெண்களுக்கு சங்கு போன்ற கழுத்து அமைந்திருக் குமாம்.அழகான மற்றும் அளவான உடலமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்களாம் சங்கினி வகைப் பெண்கள்.
சித்தினி- மெலிவும் இல்லாமல் அதிக பருமனும் இல்லாமல் நடுத்தர உடலமைப்பைக் கொண்ட இந்த வகைப் பெண்டிர் செழுமை நிறமாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் மேனி கதகதப்பாக இருக்குமாம்.
பத்மினி- இந்த வகைப் பெண்கள் தடித்து உயர்ந்த உதடுகளையும், செம்பட்டை நிற கூந்தலையும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் கரிய நிறம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பகங்கள், தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், தொடை, பெண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து சித்தர்கள் பலன் கூறியிருக் கின்றனர்.
உடல்- பெண்களின் உடலானது பூவினைப் போன்று மென்மையாக இருக்குமானால் அவள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்களாம். எல்லா வளங்களும் நிறைந்திருக்குமாம்.இங்கே வளங்கள் என்பது உடல் நலமாக இருக்கக் கூடும்.
பெண்ணின் உடலில் அதிகமான பகுதிகள் சிவந்து காணப்பட்டால் அவள் உலக மக்கள் வணங்கும் அளவு சிறப்பையும் மேன்மையையும் அடைவாளாம்.
பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, எலுமிச்சை வாசனை, தாமரைப்பூ வாசனை உடம்பில் வருமானால் அவளுடன் மகாலட்சுமி உடன் வாசம் செய்வாராம்.
பருத்த உருண்ட முகத்தை உடையவர்கள், இளகிய மனம் உடையவர்கள் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் மரியாதையை அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். அகலமான, உருண்டையான முகத்தை யுடையவர்கள், நேரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வர். தடைகளை வென்று சாதிக்க வல்லவர்கள். இவரை அனைவரும் எளிதில் ஏமாற்றி விடலாம். சிறிய முகத்துடன் ஒட்டியக் கன்னங்களுடன் உள்ளவர்கள், மிகவும் சுறுசுறுப்பானவர்கள், சுயநலக்காரர்கள். இவர்கள் சஞ்சலமுடைய மனத்துடன் வாழ்வர்.
தங்கத்தைப் போல பொலிந்து சிவந்து முகத்தினை உடைய பெண்ணிடம் எப்போதும் தர்ம சிந்தை மேலோங்கி இருக்குமாம்.
பூரண சந்திரனைப் போல் முகவசீகரமும், சூரியன் உதிக்கும் காலத்தில் உள்ளதைப் போல பிரகாசமான தேஜஸும், பெரிய கண்களையும் உடையவள் எப்போதும் மகிழ்வாக இருப்பதுடன் அவளைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பாளாம்.
நீண்ட முகம் உள்ளவர்கள், பிடிவாதக் குணமும், தனக்குத் தான் எல்லாம் தெரியும், என்று காட்டிக் கொள்ளும் சுபாவமும் உடையவர்கள். மற்றவர்களை எளிதாக ஏமாற்றிப் பிழைக்கத் தெரிந்தவர்கள்.
தலை உடலின் முதல் பகுதி. நமது உடலையும், உயிரையும் இயக்குவது நம் தலையே ஆகும். தலை சிறியதாக குருவி போன்று உள்ளவர்கள், சுறுசுறுப்பாகவும், அதிக முன்னெச்சரிக்கையாகவும் இருப்பர். பார்க்க அப்பாவியாக இருக்கும் இவர்கள், குடும்பத்தையே ஆட்டிப் படைப்பார்கள்.
தலை பந்து போன்று இருப்பவர்கள், பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பர். இவர்களை கட்டுப்படுத்த இயலாது. மேலும் முரட்டுத்தனமாக இருப்பர். ஆனாலும், சுகமான வாழ்க்கையை வாழ்வர். பெரிய தலை உள்ளவர்களுக்கு, சகிப்புத்தன்மை மிகக் குறைவு. இவர்கள் தங்கள் பாலினத்தை விட எதிர்பாலினத்திடம் அதிகமாகப் பழகுவர்.
புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்.
வளைந்த கண் புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வரை நெருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமசாலியாகவும் நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பாளாம்.இவர்களின் கன்ன கதுப்பு மலர்களைப் போல பளபளப்புடன் இருக்குமாம்.
ஒரு பெண்ணின் நெற்றியில் ஐந்து ரேகைகள் இருந்தால் அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன், சிறப்பான சிந்தனை வளமும் கொண்டவளாக இருப்பாளாம்.
பொதுவில் உதடுகள் சிவப்பு நிறமாக இருப்பது மிகவும் நன்மை பயக்குமாம்.என்ன மாதிரி நன்மைகள்?
உருண்டை வடிவமாகவம் சதைப்பிடிப்புடன் கூடிய உதடுகளைக் கொண்ட பெண்களின் வாழுவு சிறப்பாக அமையுமாம்.
பெண்ணின் மேல்உதடு பெரிதாயிருப்பின் அவள் முன் கோபக்காரி, சண்டைக் கோழியாக இருப்பாளாம்.
உதடுகள் சிவந்து தாமரை இதழ் போல இருக்கும் பெண்கள் அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், பிறரை வழிநடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.
கண்கள் பளிச்சென அளவாக உருண்டு திரண்டிருந்தால் அத்தகைய பெண்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்களாம்.
கலை மானின் கண்களைப் போல மருளக் கூடிய கண்களை உடையவர்கள், தங்கள் வாழ்க்கைத் துனைக்கு ஏற்ற குணவதியாகவும், நேர்மறையான சிந்தனை போக்கினை கொண்டவராகவும் இருப்பார்களாம்.இத்தகையவர்கள் கணவனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்களாம்.
மீனைப் போல கண்களை உடைய பெண்கள் சுதந்திரமான எண்ணப் போக்கினை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
விழிகளை விட விழித்திரை ரொம்ப முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கிறதா அல்லது மஞ்சளாக இருக்கிறதா?
உருண்ட விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தால் அவர்கள் திருட்டுத் தனம் செய்பவர்களாக இருப்பார்கள்.
நாக்கு நுனி கூராக இருக்கும் பெண்கள் வாக்கு சாதுர்யத்துடன், பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப்பார்களாம்.
நாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வீட்டில் தகராறு செய்பவளாயும், குடும்பத்தை பிரித்து வைப்பவராகவும் இருப்பாளாம்.
குவிந்த அழகிய வாயை உடைய பெண்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும் , அதிகம் கோபப்படாதவர்களாகவும் இருப்பார்களாம்.
அளவில் சமமான, மிருதுவான காதுகளை உடைய பெண்கள் அதிக புகழை அடைவார்களாம்.
சரியான அளவில் மேடு பள்ளங்களுடன் நேர்த்தியான காதுகளை கொண்ட பெண்கள் பிறரின் வணக்கத்துக்கு உரியவர்களாகவும், தான தர்மங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.
விசாலமானதாகவும், முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சோம்பேறித் தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம்.
முகத்துக்கு பொருத்தமான காதுகளை உடைய பெண்கள் அனைவரையும் கவாந்திழுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம்.
கரடு முரடான காதுகளை கொண்ட பெண்கள் துன்பத்தினையே அனுபவிப்பார்களாம்.
சுருள் சுருளான அழகிய நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வம் தங்குமாம்.
மிருதுவான கருத்த நிற கூந்தலைக் கொண்ட பெண்கள் சிறப்பானவர்களாக இருப்பார்களாம்.
கரடுமுரடான கூந்தலையும், வட்டவடிவமான கண்களையும் உடையவள் எவளோ அவள் விரைவில் கணவனை இழப்பாளாம்.
கட்டையான தலைமுடிகளை கொண்ட பெண்கள் அதிக ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்களாம்.
கன்னம் பருமனாக இருப்பவர்கள், அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். ஆனால், இவரை எளிதில் ஏமாற்றிவிடலாம். நன்குப் பேசத் தெரிந்தவர்கள். எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பர். கன்னம் பருமனாக தொங்கிக் கொண்டிருந்தால், நல்ல மனம் இயற்கையாகவே இருக்கும்.
எண்ணெய் பசையுள்ள பற்களையுடையவள் சாப்பாட்டுப் பிரியையாக இருப்பாளாம். பற்கள் வரிசையாக இருந்தால், கலகலப்பான குணமும், தாராள உள்ளமும் உடையவர்கள். பற்கள் சிறியதாக இருந்தால் நிலமைக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டு தங்கள் வெற்றியை நோக்கிச் செல்வர். பற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தால், புத்திசாலியாக இருப்பர். பெரிய நெருக்கமானப் பற்களை உடையவர்களிடம், திமிரு சற்று அதிகம் காணப்படும்.
நடுவிலுள்ள பற்கள் நீளமாகவும், இருபுறமும் கூர்மையானப் பற்கள் உடையவர்கள், புகழுடனும் ஞானிக்குறியத் தன்மையுடனும் இருப்பர். இவர்களிடம், தெய்வீக சிந்தனை அதிகம் இருக்கும். பற்கள் கோணலாக இருந்தால், எவரையும் பொருட்படுத்தாமல் நினைத்தைச் சொல்வர், நினைத்ததையேச் செய்வர்.
சிறியத் தாடையுள்ளவர்கள், முன்னெச்சரிக்கையாக எதையும் யோசித்துச் செய்யும் திறனுடையவர்கள். காலத்திற்கேற்ப, தம்மை மாற்றிக் கொள்வர். பேசுவதைக் காட்டிலும், செயலை மட்டுமே அதிகம் நம்புபவர். பெரிய தாடை இருப்பவர்கள், சற்றுக் குழப்பத்துடனேயே காணப்படுவர். இவர்களுக்கு வெளியுலக மதிப்பும், மரியாதையும் அதிகமாகவே கிடைக்கும்.
நடுவில் வெட்டியதைப் போன்ற தாடையுள்ளவர்கள், பெயருடனும், புகழுடனும் வாழ்வர். இவர்களுக்கு ஏமாறுவது பிடிக்காது. தாடை அதிக சதைப்பற்றுடன் இருப்பவர்களின், வாழ்வு சந்தோஷமாக இருக்கும். பெரிய தாடையுடன் மேடுபள்ளம் கலந்திருந்தால், புத்திசாலியாக இருப்பர். இவர்களிடம் சுயநலம் அதிகம் காணப்படும்.
நீண்ட நாக்குடையவர்கள், பேச்சில் வல்லவர்கள். இவர்களை பேசி வெல்வது அரிது. மேலும், இவர்கள் தன் எதிரியைக் கூட பேசியே கவிழ்த்துவிடுவர். சிறிய நாக்குள்ளவர்கள், கடினமாகப் பேசும் தன்மை உள்ளவர்கள். ஒரு சொல் என்றாலும், அது மிகக் கடுமையானதாக இருக்கும்.
குட்டையான கழுத்தடையுடைய பெண்கள் துன்பத்தையே அனுபவிப்பார்களாம்.
தொப்புள் என்பது உடலின் அடிவயிற்றில் காணப்படும் ஒரு வடு ஆகும். குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி நீக்கப்படும்.அப்போது உருவாகும் வடுவே தொப்புள் ஆகும். தூயதமிழில் கொப்பூழ் என்பதே சரியான உச்சரிப்பு. இது பேச்சு வழக்கில் தொப்புள் அல்லது தொப்புள் குழி என்று குறிப்பிடப்படுகிறது. உந்தி,நாபி என்றும் தொப்புள் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் நாவெல் (navel) அல்லது பெல்லி பட்டன் (belly button) என்று குறிப்பிடப் படுகிறது.மருத்துவ முறையில் தொப்புள் உம்பிளிகிஸ் (umbilicus) என்று குறிப்பிடப்படுகிறது. அனைத்து பாலூட்டி விலங்குகளுக்கும் தொப்புள் இருந்தாலும் அது தெளிவாகக் காணப்படுவது மனிதர்களில் மட்டுமே. மனித உடற்கூற்றியலின்படி ஆங்கிலத்தில் தொப்புளை உட்புறத் தொப்புள் (Innie, இன்னி) மற்றும் வெளிப்புறத் தொப்புள் (outie, ஔட்டி) என்று இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
சாமுத்ரிகா லட்சணப்படி ஓர் இளம் பெண்ணின் இடை நடுவில் சிறுத்தும், மேலும் கீழும் விரிந்திருக்க வேண்டும். ஆலிலை போல் வயிறு அமைந்திருந்தால் அழகு. வயிறு நல்ல வெள்ளித் தட்டுப்போல் இருந்து தொப்புள் வலது பக்கமாக சுழித்திருந்தாலும் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. இடது பக்கமாக சுழித்திருந்தால் உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. ஒரு பெண் சாதாரண நிலையில் நின்று கொண்டிருக்கும்போது (அவளது கைகள் தரையை நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில்) அவளது இரு முழங்கைகளுக்கும் இடையே ஒரு கற்பனைக்கோடு வரையப்படுவதாகக் கொள்வோம். அக்கோட்டின் மையப்பகுதிக்குச் சரியாக அவளது தொப்புள் அமைந்திருந்தால் அவள் சிறந்த பெண்ணாவாள். கணவனின் அன்பைப் பெறுவாள். உடலில் தேவையற்ற ரோம வளர்ச்சி அதிகமிருக்காது. அவள் வைத்தது விளங்கும், தொட்டது துலங்கும்.
கை நீளமாக இருந்தால், திறமைசாலியாக இருப்பர். உடல்நலக் கோளாறு அடிக்கடி ஏற்படும். கை குட்டையாக இருந்தால், முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வர். கை சரிசமமாக இருந்தால், பேசியே காரியம் சாதித்துவிடுவர்.
பரந்த மார்புடையவர்கள், தைரியத்துடனும், வேலையில் கவனமாகவும் இருப்பர். சொந்தக்காலில் நிற்கும் பாக்கியம் பெற்றவர். சிறிய மார்புடையவர்களின் பின்பகுதி வாழ்க்கை யோகமுடையதாக அமையும். அதிக சதைப்பற்றுடன் மார்பிருந்தால், முன்கோபம் அதிகம் காணப்படும். மார்பு சதைப்பற்றின்றி எலும்பாக இருந்தால், மற்றவர்களின் வளரச்சிக்கு உதவியாக இருப்பர்.
மெலிந்த இடுப்பை உடைய பெண்களையே, அதிகமான ஆண்கள் விரும்புகின்றனர். பெறிய இடுப்பை உடையவர்கள், சோம்பலுடன் காணப்படுவர். சிறிய இடுப்பை உடையவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பர்.
வயிறு பெரியதாக இருந்தால், மூர்க்கத்தனமாக நடந்து கொள்வர். சமமான வயிறுடையவர், எதிர்பாலினத்தை அதிகம் ஈர்க்கும் தன்மைப் பெற்றவர். இவர்களுக்கு மந்திர தந்திரத்தில் அதிக ஆர்வம் இருக்கும். சிறியதாக வயிறு இருந்தால், அதிகம் பேசமாட்டார்கள். கவனமாகவும் திறமையாகவும் செயல்படுவர்.
முதுகு சமமாக இருந்தால், நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று தெய்வ அருளுடனும், செல்வ வளத்துடனும் வாழ்வர். சமமின்றி கரடுமுரடாக முதுகு இருந்தால், மிகவும் கோபக்காரர்களாக இருப்பர். முதுகு மிருதுவாக இருந்தால், அன்புடனும், பண்புடனும் வாழ்வர். கூன் விழுந்தது போன்ற முதுகையுடையவர்கள், வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுப் பொருள் சேர்ப்பர்.
தொடைப் பெரியதாக இருந்தால், இனிமையான குணம் இயற்கையாகவே இருக்கும். மெலிந்த தொடையை உடையவர்கள், கடின உழைப்பாளிகளாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பர்.
இராவணன் தனது தந்திரத்தால் இராமனும் இலக்குவனும் செத்து விட்டதாக சீதையை நம்ப வைக்க முயன்று போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த ராமரையும் லக்ஷ்மணரையும் பார்த்த சீதை லக்ஷ்மணரை நோக்கிப் புலம்பும் போது தன் சாமுத்ரிகா லக்ஷணங்களைக் கூறிப் புலம்புதல்
“குலப் பெண்கள் எவைகளால் அரசர்களாகிய தம் கணவர்களோடு பட்டமஹிஷிப் பதவியில் அபிஷேகம் செய்யப்படுகிறார்களோ அந்த பத்ம ரேகைகள் என் பாதங்களில் இதோ இருக்கின்றனவே!” (வால்மீகி ராமாயணம் – யுத்த காண்டம் 48ஆம் அத்தியாயம் ஸ்லோகம் 6)
எனக்கு கூந்தல் மயிர்கள் தடிக்காதவை. ஒத்தவை! கறுத்தவை. புருவங்கள் இரண்டும் ஒன்று சேராமல் இருக்கின்றன. எனது கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் மத்தியில் உள்ள பாகங்கள் இரண்டும் தசைப்பற்று உள்ளவையாகவும் உரோமம் இல்லாமலும் இருக்கின்றன. பற்கள் இடைவெளியில்லாமல் இருக்கின்றன. (ஸ்லோகம் 9)
எனது நெற்றியின் இரு புறங்களும், கண்களும், கைகளும், கால்களும், தொடைகளும் சதைப்பற்று உடையவாக இருக்கின்றன. எனது விரல்கள் வட்டமான நகம் உடையனவாயும், மிருதுவானவைகளாகவும், ஒத்தவைகளாகவும் உள்ளன. (ஸ்லோகம் 10)
எனது நிறம் மாணிக்கத்தைப் போல இருக்கிறது. உரோமங்கள் மிருதுவாக இருக்கின்றன. (பத்து விரல்கள் மற்றும் இரு உள்ளங்கால்கள் ஆக) இந்தப் பன்னிரெண்டும் பூமியில் படியப் பெற்ற உத்தம லக்ஷணம் பொருந்தியவள் என்று என்னைப் பார்த்துச் சொன்னார்கள் (ஸ்லோகம் 12)
உள்ளங்கைகளும், உள்ளங்கால்களும் பூர்ணமான யவரேகைகளை உடையன. இடைவெளியற்றன. செந்நிறம் வாய்ந்தன. பெண்களின் லக்ஷணங்களை அறிந்தவர்கள் என்னைப் பார்த்து எப்போதும் புன்னகை உடையவள் என்றும் சொல்லி இருக்கிறார்கள் (ஸ்லோகம் 13)
இதில் ஒரு உத்தமமான பெண்ணுக்கு இருக்க வேண்டிய நல்ல லக்ஷணங்களை சீதைச் சுட்டிக் காட்டுவதைக் கவனித்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே ஹிந்து தர்மத்தில் சாமுத்ரிகா லக்ஷணம் பற்றிய கூரிய அறிவும் நம்பிக்கையும் இருந்திருப்பது புலனாகிறது.
சாமுத்ரிகா லக்ஷணம் என்ற கலை பெரியோர்களால் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதும் நன்கு தெரிகிறது.
கம்பன் தரும் சாமுத்ரிகா லட்சணம்:
சங்கு சக்கரக்குறி உள தடக்கையில் தாளில்
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை
செங்கண் விற்கரத்து இராமன் அத் திரு நெடுமாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும்.
-நட்பு கோட் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்
சுக்ரீவனிடம் அனுமன் சொல்கிறான் ” இராமனுக்கு பெரிய கைகளிலும் கால்களிலும் சங்கு, சக்கர அடையாளங்கள் உள்ளன. இததகைய உயர்ந்த லக்ஷணங்கள் எந்த உலகத்திலும் எவர்க்கும் இல்லை. ஆகையால் சிவ ந்த கண்களையும் வில்லை ஏந்திய கைகளையும் உடைய இராமன் இப்போது அறத்தை நிலை நிறுத்துவதற்கா க உலகில் அவதரிக்கும் திருமாலே ஆவான். கைகளில் மட்டும் சங்கு ச்க்கர ரேகை இருப்பதே ஆபூர்வம்; இவனுக்கோ கைகளிலும் கால்களிலும் இப்படி சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன’ எல்லையற்ற மிகுந்த அன்புகொண்டவர்கள், மென்மையான பாதத்தைக் கொண்டவர்கள் என்கிறது சாமுத்ரிகா லக்ஷணம். அந்த வகையில், உலக உயிர்களிடத்தில் மிகுந்த அன்புகொண்டவள் உமையம்மை என்பதை மெல்லடியார் என்ற வார்த்தை குறிக்கிறது.சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண் குடும்ப வாழ்க்கைக்கே ஒத்து வராது, எவ்வளவு இருந்தாலும் கணவரை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
ஒருவரின் முகத்திலுள்ள மூக்கின் நீளம், கண்களின் இருப்பிடம் மற்றும் தாடையின் நீளம் ஆகியவை தங்க விகித நியமனப்படி அமைந்தால் அவர் அழகாக இருப்பார்.
ஒரு கயிறு/நூலை எடுத்து ஒரு பெண்ணின் ஐந்து விரல்களைச் சுற்றி வளைத்து, முழங்கையிலிருந்து நடுத்தர விரல் வரை நூலை நீட்டி அளவிடவும். அது நடுவிரலின் நுனி வரை தொட்டால், அவள் கணவனுடன் மகிழ்ச்சியான மற்றும் நீண்ட வாழ்க்கையை வாழ்வாள். மேலும் அவரது கணவர் உயர் பதவியில் இருப்பார்.
அந்த நூல் நடுவிரலின் நுனிக்கு சற்று கீழே தொட்டால் அவள் நீண்ட ஆயுள் கொண்ட புத்திசாலியான குழந்தைகளைப் பெற்றெடுப்பாள்.
இயற்கையாகவே எவரொருவர் நறுமணத்தோடு இருக்கின்றாரோ, அவரிடம்தான் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படும். திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்ற மங்களகரமான பொருட்கள் கலந்த வாசனை வீசுவது மிகவும் நல்லது. பெண்கள் மீது வாசனையுள்ள பூக்களின் வாசம் வீசலாம்.
ஒரு பெண்ணின் மேல் வீசக்கூடாத வாசனையாக 3 வாசனைகள் சொல்லப்பட்டுள்ளது. வேம்பு வாசனை, கற்றாழை வாசனை, மாமிச வாசனை. கட்டாயம் ஒரு பெண்ணின் மீது இந்த 3 வாசனைகள் வீசக் கூடாது என்று சொல்கிறது சாமுத்திரிகா லட்சணம்.
இயற்கையாகவே சில பெண்களின் மீது இந்த வாசம் வீசினால் அவர்களுக்கு என்ன பிரச்சனை வரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. இயற்கையாகவே இந்த வாசத்தை கொண்ட பெண்கள் பெரும்பாலும் தோல்வியை சந்திக்கலாம். திருமணத்தடை உண்டாகும். இப்படிப்பட்ட பெண்களுக்கு நட்பு வட்டாரம் அதிகமாக இருக்காது.
பெண்களின் முகம் நிலவு போல பளிச்சென்று இருந்தால் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.எல்லாவற்றிற்கும் தோற்றப் பொலிவுதான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்.
அங்க அமைப்புகளை வைத்து ஒருவருடைய எண்ணங்களை யூகிக்க, அந்த யூகம் ஓரளவேணும் சரியாக இருப்பதால்தான், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தைப் பலரும் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்.
எல்லா சாமுத்திரிகா லட்சணமும் பெற்றிருந்தால், அவள் தேவலோகத்தில் உள்ள தேவதை என்றுதான் கூற வேண்டும்.
உடல் அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று கூறும் இந்த சாத்திரம் சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சாத்திரத்தில் தேர்ந்த சிற்பிகளும் ஓவியர்களும் படைக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் காலம் கடந்து புகழ்பெறும்.
ஆண் அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத்தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பவன். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதையும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவன்.
அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ளவன். பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப்பும் உறுதியும் உள்ளவன்.
மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பவன். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு அஞ்சாதவன். பிற பெண்களோடு அடிக்கடி உறவு கொள்வதில் மிகுந்த விருப்பமுள்ளவன்.
கறுத்த பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்டவன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். பெரியோரை மதியாதவன், தெய்வ பக்தியில்லாதவன். மிகுந்த கோபக்காரன். நிறைய உண்பவன். அழகோ அவலட்சணமோ எப்படிப் பட்ட பெண்ணையும் வயது வித்தியாசமின்றி உறவு கொள்வான்.
பத்மினி
கற்பு நெறி தவறாதவளாகவும் கணவனிடம் மாறாத காதல் கொண்டவளாகவும், தெய்வபக்தியுள்ளவளாகவும் இருப்பாள். தன் கண் பார்வையால் உலகையே தன் வயப்படுத்துபவளாகவும், அன்ன நடையும், கொஞ்சும் குரலும், கொடியிடையும், மென்மையான தேகமும் கொண்டவள். இச்சாதிப் பெண்கள் இளம் சந்திரனைப் போன்ற முகமும், செவ்விதழ்களும், செந்தாமரை மலர்க்கண்களும், ஒன்றோடு ஒன்றிணைந்த மார்பகங்களும், ஒற்றை நாடி உடலும் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர்களாகவும், வெண்மை நிற உடையும், வெண்மையான மலரும் விரும்பி அணிபவர்களாகவும் இருப்பார்கள். சுத்தமும், சுவையும்முள்ள உணவை மிதமாக உண்பார்கள். உரத்துப் பேசாத இனிமையான குரலை உடையவர்கள்.
சித்தினி
அற்புதமான அழகும், மிகுந்த அன்பும், தெய்வ பக்தியும் உள்ளவள். நேர்மையும், திடசித்தமும், வாக்குநாணயமும் உடையவள். அழகிய முகமும், தாமரை மலர் போன்ற கண்களும், கூரிய மூக்கும், பருத்த உதடுகளும், மென்மையான பளபளப்பான தேகமும், அழகிய இறுக்கமான மார்பகங்களும், நடுத்தர உயரமும் கொண்டவள். பல வண்ண ஆடைகளை உடுத்துவதிலும், வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்வதிலும் விருப்பமுடையவள். தனக்கு வரப்போகும் கணவன் அன்பானவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பவள்.
சங்கினி
பேரழகும், நீண்ட விழிகளும், நிமிர்ந்த மூக்கும், சங்குக் கழுத்தும், உயரமான உடல்வாகும் கொண்டவள். உடல் முழுவதும் ரோமமும், உஷ்ணமான உடல்வாகும், நீண்ட கூந்தலும் உடையவள். சிகப்பு கருப்பு வண்ண ஆடைகளை விரும்பியணியும் இச்சாதிப் பெண், மிகுந்த முன்கோபமும், பெரியோரை மதியாத குணமும் கொண்டவள். எப்படிப்பட்ட ஆணையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சக்தியுள்ளவள். அந்நிய ஆடவரை பெரிதும் விரும்புபவள்.
அத்தினி
அழகு குறைந்தவளாகவும், பருத்த உதடுகள், சிவந்த கண்கள், நீண்ட புருவம், பரட்டை தலை, குட்டையான கழுத்து, தடித்த உருவம், பருத்த தோள்கள், தடித்த குரலோடு, கற்றாழை நாற்றம் வீசுபவளாகவும் இருப்பாள். தன்னை புகழ்ந்து பேசும் யாரோடும் எவரோடும் உறவு கொள்வாள். குடும்பம் சொந்த பந்தங்களைப்பற்றி கவலை கொள்ள மாட்டார்கள்.
ஆண்
ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடையவராகவும் இருப்பார்கள். சற்றே நீலம் பாய்ந்த நாக்கினைப் பெற்றிருப்பது உத்தமம்; அவர்கள் திரண்ட ஐசுவரியங்களைப் பெற்றிருப்பார்கள். குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்க சிந்தை உடையவர்களாக இருப்பார்கள்
பெண்
சங்கு போன்ற கழுத்தினை உடைய பெண்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தருவார்கள். மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள். கண்புருவங்கள் வில்லைப் போல் வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் ஒருகுறையும் அற்ற சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


