
அப்பைய தீக்ஷிதர் -3 – நங்கநல்லூர் J K SIVAN
அப்பய்ய தீக்ஷிதருக்கு கல்யாணம் பண்ண பெற்றோர்கள் ஆசைப்பட்டார்கள். அக்காலத்தில் ரத்னகேட தீக்ஷிதர் என்ற ஒரு காமாக்ஷி தாசர் பிரபலமானவர். மஹா வித்வான். அவரை சூரப்ப நாயக்கன் என்ற குறுநில மன்னன் ஒருவன் ஆதரித்து அவனது சபையில் ஆஸ்தான வித்வானாக கௌரவித் தான் .ரத்நகேட தீக்ஷிதருக்கு அது விருது, பட்டப்பெயர், அவர் உண்மைப்பெயர் ஸ்ரீனிவாச தீக்ஷிதர்.
மராத்தி தேசத்தில் பூனாவில் மைதிலோட்ரம் என்ற ஊருக்கு ஒரு ராஜா, சந்திரசேகர பூபாலன் என்று அவன் பெயர். ஒருநாள் அவன் தீக்ஷிதரைப் பார்த்து
”சுவாமி என்று என்ன திதி?” என்று கேட்டான்.
தீக்ஷிதர் ஏதோ அம்பாள் மேல் கவனமாக இருந்தவர்
”இன்றைக்கு பௌர்ணமி” என்று மெஷின் மாதிரி பதிலளித்தார். அருகில் இருந்தார்கள் விடுவார்களா? எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் தீக்ஷிதரைக் கவிழ்க்கலாம் என்று திட்டம் போடுபவர்களாயிற்றே.
”ராஜா, இந்த தீக்ஷிதர் ஒரு பித்தலாட்ட பேர்வழி, இன்று வகையாக உங்களிடம் சிக்கிக் கொண்டுவிட்டார். இன்று அமாவாசை, எப்படி தைர்யமாக உங்களிடம் பௌர்ணமி என்று பொய் சொல்லி இருக்கிறார் பாருங்கள்” என்று கோபமூட்டினார்கள்.
”தீக்ஷிதரே, என்னை அவமானப்படுத்த, கேவலப்படுத்த பொய் சொன்னீர்களா?” என்று ராஜா கேட்டான்”
ஸ்ரீனிவாச தீக்ஷிதர் ”மஹாராஜா, பிறர் பேச்சை கேட்காதீர்கள், இன்று பௌர்ணமி தான்” என்கிறார்
”எப்போது அம்மாவாசையா பௌர்ணமியா என்பதை தெளிவாக அறியமுடியும்?”
”சூரிய அஸ்தமனம் ஆனபின் ஆகாயத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்”
தீக்ஷிதருக்கு தன்னை அறியாமல் ஏதோ ஒரு சக்தி இவ்வாறு சொல்ல வைத்தது என்று புரிந்து விட்டது. சாயங்காலம் அஸ்தமன நேரம் காயத்ரி, சந்தியாவந் தனம் பண்ணி அம்பாளுக்கு அர்க்யம் கொடுத்தார்.
”ஜகன்மாதா, காமாக்ஷி, என்னை ஏன் இப்படி சொல்ல வைத்தாய். ராஜா என் தலையை இன்னும் கொஞ்ச நேரத்தில் சீவப் போகிறான் என்னை உன் திருவடியில் சேர்த்துக் கொள்” என்று பிரார்த்தனை செய்தார்.
அம்பாள் காமாக்ஷி தீக்ஷிதர் முன் ப்ரசன்னமானாள் .
”குழந்தாய், எல்லாம் நன்மைக்காகவே நடந்துள்ளது. ”இந்தா” என்று தனது காதில் இருந்த தாடங்கத்தை எடுத்து தீக்ஷிதர் கையில் கொடுத்தாள் .
”ஸ்ரீநிவாஸா, உன் வாக்கு பொய்க்காது. தைரியமாக இரு. ராஜா வந்ததும் இதை ஆகாயத்தில் வீசு”.
சூர்ய அஸ்தமனமானது. எங்கும் இருள் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்தது. ராஜ சந்திர சேகர பூபாலன் மட்டும் தனியாக வரவில்லை பெரிய படையே அவனு டன் வந்தது. இனிமேல் தீக்ஷிதர் தப்ப முடியாது. உடை வாளுடன் சேனாபதி அவர் தலையை எல்லோர் முன்னாலும் சீவ காத்திருந்தான்.
”தீக்ஷிதரே, , நன்றாக இருட்டிவிட்டதே. எங்கே வானத்தில் நிலாவைக் காணோம் காட்டுங்கள்” என்றான் ராஜா.
”ராஜா, இதோ பாருங்கள் . தீக்ஷிதர் அம்பாள் தந்த தாடங்கத்தை வானில் வீசினார்..
ஆஹா என்ன ஆச்சர்யம். தாடங்கம் ஆகாயத்தில் ஆயிரம் சந்திரர்கள் பூரணமாக உதயமானது போன்ற ஒரு பேரொளி தென்பட்டது.. விண்ணில் தேவர்கள் அதிசயித்தார்கள். ராஜாவும் கூட இருந்த அத்தனை படையும் ஆ வென்று வாயைப் பிளந்து அதிசயத்தில் ஆழ்ந்தது.
இந்த பிரகாசம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு யாருக்கு பதில் தெரியும்?ராஜா எல்லோர் எதிரிலும் அவரை வணங்கி பதில் சொன்னான்.
”இது அம்பாள் பக்தர் ஸ்ரீனிவாச தீக்ஷிதர் மஹிமை தான்”என்று அவர் காலில் விழுந்து வணங்கினான். ஒரு ரத்னமயமான சிம்மாசனத்தில் அவரை அமர்த்தி ரத்னகேடம் என்ற விலையுயர்ந்த ஆபரணத்தை அவருக்குசூட்டி மகிழ்ந்தான். அன்று முதல் தான் ஸ்ரீனிவாச தீக்ஷிதர் என்ற பெயர் மறைந்து ரத்னகேட ஸ்ரீனிவாச தீக்ஷிதர் என்ற பெயர் நிலைத்தது.
இந்த சம்பவம் எதை ஞாபகப்படுத்துகிறது” திருக்கடை யூரில் தஞ்சாVOO ர் ராஜா முதலாம் சரபோஜிக்கு அபிராமி பட்டர் தை அமாவாசை அன்று பௌர்ணமி யை வானில் காட்டிய சம்பவத்தை தான். அந்த நிகழ்விலும் அம்பாள் தான் தனது தாடங்கத்தை பௌர்ணமி சந்திரனாக்கினாள் .
சில விஷயங்கள் இப்படி ஒரே டைப்பாக இருந்தாலும், காப்பி அடிப்பது போல் தோன்றினாலும் ரெண்டு சம்ப வங் கள் ஒரே மாதிரி நடக்காது என்று சொல்ல வழி இல்லையே. அம்பாள் அருளால் எதுவும் எப்போதும் நடக்கும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


