
தைப்பூசம் வள்ளலார் வாக்கியங்கள்-
நங்கநல்லூர் J K SIVAN
”தைப்பூச நன்னாளில் ஆண்டுதோறும் வடலூரில்ஏழு திரைகள்விலகி ஜோதிதரிசனம் நிகழும்.ஒவ்வொரு திரைக்கும்ஒவ்வொரு சக்திஎன்பது நம்பிக்கை.(கண்ணாடிக் கதவுகளில்).
கறுப்புத்திரை என்பதுமாயா சக்தி,
நீலத்திரை – கிரியாசக்தி
பச்சைத்திரை – பராசக்தி,
சிவப்புத் திரை– இச்சா சக்தி,
பொன்வண்ணத் திரை– ஞானசக்தி,
வெண்மைத் திரை– ஆதிசக்தி,
கலப்புத்திரை – சிற்சக்தி
கருமை, நீலம்,பசுமை, சிவப்பு,பொன்மை, வெண்மை,கலப்பு எனஒன்றிற்கொன்று நிறஅடர்த்தி குறைந்துவரும் ஏழுதிரைகள் விலக,தூய கன்ணாடியின்வழியே பேரொளிப்பிழம்பை ஞானசபையில் வள்ளலார்அமைத்தது எதற்கு? மாயா சக்திஎன்னும் திரை விலகி மனம்தூய்மை பெற்றதும்,உள்ளொளியாய் இறைவன்விளக்கம் தருகிறான்என்பதை விளக்கிக் காட்டுவதற்காக.
“அருள் ஒளி விளங்கிடஆணவம் எனும் ஓர்இருளற என்உளத்துஏற்றிய விளக்கே(அகவல், 1495–-96 ” -அருட்பெருஞ் ஜோதிஅகவலில் வள்ளலார் இப்படி சொல்கிறார். அருள்ஜோதி இறைவனை தீப வடிவில் அன்றுதரிசிக்கிறோம்
தைப்பூச நாளில்விடியற்காலையில்மேற்கே சந்திரனும்கிழக்கே சூரியனும்காணப்பெறும். அந்தநேரத்தில்தான் ஞானசபையில் அருட்பெருஞ் ஜோதியைக் காட்டியருளினார்வள்ளலார்.
இதனைஉணர்த்தும் விதமாகஆண்டுதோறும் தைப்பூசநாளில் ஜோதிதரிசனம் நடைபெறுகிறது.இந்த பதிவை நான் எழுத முக்கிய காரணம்;
வள்ளலாரின் ஒரு சில வாக்கியங்கள் மனதைத் தொடு கிறது. உலகில்எல்லா உயிர்களும்பசியின்றி வாழ பகவானை வேண்டிய ஒரு உத்தமர் வள்ள லார். ஜீவ காருண்யத்தின் மானிடஅவதாரம்.
வள்ளலார் எழுதியதைப் படியுங்கள்:
‘உள்ளபடி பசியால்வருந்துகின்ற சீவர்களுக்குஆகாரம் கொடுக்கநினைத்தபோது, நினைத்தபுண்ணியரது மனம்வேறு பற்றுக்களைவிட்டுச் சுத்தக்கரணமாகி நினைத்தபடியால், அந்தப் புண்ணியர்களை யோகி களென்றே உண்மையாகஅறியவேண்டும்.
ஆகாரங் கொடுக்கநினைத்தபடி உபசரித்துக் கொடுக் கும் போது, அவருண்ணுவதுதாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்ற படியால்,ஞானிகளென்றே உண்மை யாக அறியவேண்டும்.
ஆகாரங்கொடுக்க உண்டு, பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின்உள்ளும், புறத்தும்,கீழும் மேலும்,நடுவும் பக்கமும், நிறைந்து கரணமுதலிய தத்துவங்களெல்லாம்குளிர்வித்துத் தேக முழுதும் சில்லென்றுதழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்கு கின்ற கடவுள் விளக்கத்தையும் திருப்தியின்ப மாகிய கடவுளின் இன்பத்தையும்பிரத்தியட்சத்தில்தரிசித்து அனுபவிக்கின்றார்களாதலால், அந்தப்புண்ணியர்கள் கடவுளைக்கண்டவர்களென்றும்கடவுளின்பத்தை அனுபவிக்கின்றமுத்தரென்றும் அறியவேண்டும்.பசி நீங்கஉண்டு சந்தோஷித்தவர்கள்இந்தப் புண்ணியர் களைத் தெய்வமாகப் பாவிக்கின் றார்க ளாதலால் இவர்களே தெய்வமுமென்றுஉண்மையாக அறியவேண்டும்.”
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



