
கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN
பழைய உணவுப்பழக்கம்
”வெந்ததைத் தின்னுப்புட்டு விதி வந்தா சாவறது தான் வாழ்க்கை ”. இப்படி விரக்தியான குரல்கள் நூறாண்டுகளுக்கு முன் கேட்டது. நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் சாப்பிட்டவர்கள். ருசிக்காக இல்லை பசிக்காக சாப்பிட்டாலும் சாப்பிடுவதை ருசியாக பண்ணி சாப்பிட்டவர்கள். உணவு மருந்தாக இருந்தது.
அன்றாட சமையலில் உணவில் மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி தனியா என்று பல மூலிகைப் பொருட்களை பயன் படுத்தினர். அவர்கள் சமையலில் மஞ்சள் பொடிக்கு முக்கியத்வம் இருந்தது. உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் மஞ்சள் பொடி பயன் பட்டது. துவரம் பருப்பை விட பாசிப் பயிரை அதிகம் சேர்த்துக்கொண்டனர். காரத்துக்கு மிளகாயை விட மிளகையே பயன் படுத்தினர். காப்பி டீ தெரியாத காலம். கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவை ஒவ்வொரு வீட்டிலும் விருந்தினர்களுக்கு உபசாரம்.
உளுந்தை குறைவாகவே உபயோகித்தனர். fridge கிடையாது. மின்சாரம் இல்லை. ஒவ்வொருநாளும் காலையில் நீராகாரத்தை உண்டனர். தயிரை விட மோருக்கு மஹத்வம். இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து துளசி ஜலம் பருகி தியானம் பண்ணியவர்கள் அநேகர். வாழையிலை, வாழை மரப்பட்டைகள், ஏடுகள், மந்தார இலை தான் சாப்பிட பாத்திரம். மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படாது என தெரிந்தவர்கள்.
நொறுக்குத் தீனி கிடையாது. மதிய உணவை பசியோடு சாப்பிட்டவர்கள். உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜாடராக்னியை அவித்து விடும் என்று உணவுக்கு முன் தண்ணீர் குடிக்காதவர்கள். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது. பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை இலையில் உள்ள உணவை தொடாதவர்கள். உண்ணும்போது பேசாமல் அவசரப்படாமல் சிறிது சிறிதாக உணவுக்குழாயை அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது. இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப் படும். நெய்யை சாத த்தின்மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள். அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள். இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.இறைவனுக்கு, உடலில் உள்ள பஞ்சாக்னி வாயுக்களுக்கு அர்ப் பணித்த பிறகு உண்டவர்கள். இதை பரிஷேசனம் என்று வடமொழியில் சொல்வார்கள்.
மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும். இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள். அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும். பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள். இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள்.
அடுத்து மோர் சாதம். இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும். அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும். பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இதை விரிவாகச் சொல்வதற்கு காரணம் இப்போது நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



