
நிர்வாண மஞ்சரி – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்
ஆதி சங்கரரின் நிர்வாண மஞ்சரி ஒரு அற்புத காவியம். இதுவரை அறியாதவர்கள் என்னோடு சேர்ந்து அறிந்து கொள்வோம். ஏற்கனவே இதை பதிவிட்டிருக்கிறேன்.
நிர்வாண மஞ்சரி மொத்தம் 12 அத்வைத சார ஸ்லோகங்கள் . ஒவ்வொன்றிலும் கடைசி வார்த்தை சிவோஹம் என்று முடியும். ‘நானே சிவன்’ என்று த்வனிப்பது. எல்லாம் ஒன்றே தான் அத்வைதம். எனது இனிய நண்பர் ஸ்ரீ பி.ஆர். ராமச்சந்திர இதை ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்திருக்கிறார். கூகுளில் தேடி படியுங்கள்.
நிர்வாணம் என்றால் உடம்பில் துணியில்லாமல் என்று அர்த்தம் இல்லை. மனதில் பற்றின்றி, எதிலும் ஆசையில்லாமல் எல்லாம் ஒன்றேயான சிவன் ஒருவனையே பிடித்துக் கொள்வது. இதை மனதில் கொண்டு படித்தால் சுகமாக புரியும்.
Aham na amaro naiva marthyo na daithyo, Na Gandharva Yaksha, pisacha prabhedha,
Pumanniva na sthree naiva shanda, Prakrushta prakasa swaroopa Shivoham.
அஹம் நாமரோ நைவ மர்த்யோ ந தை3த்யோ ந க3ந்த4ர்வ ரக்ஷ: பிசாச ப்ரபே4த3: |
புமான் நைவ ந ஸ்த்ரீ ததா2 நைவ ஷண்ட ப்ரக்ருஷ்ட ப்ரகாச ஸ்வரூப: சிவோஹம்
”நீ யார் ? இது தான் கேள்வி. அதற்கு விடை விசித்திரமாக வருகிறது. நான் கடவுளோ, தேவனோ அல்ல, அதற்காக என்னை யாரோ ஒரு ராக்ஷஸன் என்றோ மானுடன் என்றோ நினைத்து தவறு செய்யாதே. நான் அதுவுமல்ல. ஓஹோ யக்ஷ, கந்தர்வ, பைசாச வகையராவோ என்றால் அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா. நிச்சயம் நீ ஆணுமல்ல பெண்ணுமல்ல என்கிறாயே, நீ பொதுஇடத்தில் கை தட்டி கன்னத்தை கிள்ளி காசு கேட்கும் அலி எனும் ரெண்டும் கெட்டான் தானே? என்று கேட்காதே. முட்டாளே, உன் புத்தி இப்படியா போகவேண்டும். உயர்ந்த வகையில் நினையேன். நான் சிவோஹம் என்று சொல்லிக்கொள்ளும் ஒளி மயன். இயற்கை ஸ்வரூபன் என்று நினை.
Aham naiva balo, yuva naïva vrudho, Na varni , na brahmachari na Grahastha, Vansdhobhi naham sanyasa dharma, Jaga jjanma nasaika hethu Shivoham. 2
அஹம் நைவ பா2லோ யுவா நைவ வ்ருத்3தோ4 ந வர்ணீ ந ச ப்3ரஹ்மசாரீ க்2ருஹஸ்த2: | வநஸ்தோ3(அ)பி நாஹம் ந ஸந்யஸ்த த4ர்மா ஜகஜ்ஜந்ம நாசைக ஹேது: சிவோஹம் || 2
நான் பால் குடிக்கும் குழந்தையோ, வாலிபனோ, கிழவனோ அல்ல. நான் எந்த வர்ணத்தவனும் இல்லை, கல்யாணமாகாத பிரம்மச்சாரியோ குடும்ப ஸ்தனு
மல்ல..காட்டை தேடிப்போய் மரத்தடியில் உட்கார்ந்து தவம் செய்யும் ரகம் இல்லை. தாடி மீசை,மொட்டை தலை, ருத்ராக்ஷ சன்யாசி வகையறா இல்லை. இன்னுமா தெரியவில்லை, பிறப்பு இறப்பற்ற சிவன், சிவோஹம், சம்ஹார மூர்த்தி.
Aham naïvameyasthiro bhoota maya, Thadaivekshithum maam pradhangaasthupaya,
Samaslishta kayo thryo apyaadhwitheeya, Sada athindriya sarva roopa shivoham. 3
அஹம் நைவ மேயஸ் – தி2ரோபூ4த – மாய: ததை2வேக்ஷிதும் மாம் ப்ருத2ங் – நாஸ்த்யுபாய்: ஸமாச்லிஷ்ட – காய – த்ரயோ(அ)ப்யத்3விதீய: ஸதா3(அ)தீந்த்3ரிய: ஸர்வரூப: சிவோஹம் || 3
”அடேய், என்னை எதாலும் எதிலும் அளக்க முடியாதடா. எவராலும் நான் எந்த உருவிலிருப்பேன் என்று கற்பனை செய்யக் கூட முடியாது. எவர் கண்ணுக்கு நான் எப்படி வெவ்வேறாக தெரிந்தாலும், நான் எல்லாவற்றின் ஒட்டு மொத்த சேர்க்கை, பலவற்றை ஒன்றாக சேர்த்து காட்சியாக தருபவன். நான் அந்த த்ரிமூர்த்திகளில் ஒன்றானவன் என்று கருதப்பட்டாலும் நான் எந்த எண்ணிக்கையிலும் இல்லாதவன், எவருக்கும் நான் தாழ்ந்தவன் அல்லன். பின் வரிசையில் இல்லை. நான் சிவோஹம். சிவன். எங்கும் எதிலும் எதுவுமாக இருப்பவன். புலன்களுக்கு எட்டாதவன்.
Aham naiva mantha na gantha na vaktha, Na kartha , na bhoktha, na muktha asramastha,
Yadaaham mano vruthi bheda swaroopa, Sthadha sarva vuthi pradheepa, shivoham. 4
அஹம் நைவ மந்தா ந க3ந்தா ந வக்தா ந கர்தா ந போ4க்தா ந முக்தாச்ரமஸ்த2: |
யதா2(அ)ஹம் மநோவ்ருத்தி பே4த2 ஸ்வரூப: ததா2 ஸர்வவ்ருத்தி ப்ரதீ3ப: சிவோஹம்4 ||
நான் யோசிப்பவன் அல்ல. எங்கும் எதையோ நாடி தேடி அலைபவனல்ல. பேசிப்பேசி நாளை ஓட்டுபவனல்ல. நான் எதையும் செய்ய வேண்டியதில்லை, எதையும் உட்கொள்ளுபவனும் அல்ல. ஆஸ்ரமவாசியாகி எதையோ நோக்கி எதிர்பார்த்து தேடுபவனுமல்ல. மனத்தில் ஆடும் எண்ணங்கள் அவற்றின் தோற்றங்களாக காணப்பட்டாலும் நான் உண்மையில் அவையல்ல. நான் சிவன், சர்வ காரணன்.
Na mey loka yathra pravaha pravruthy, Rna mey bandhabhuddha dureeha nivurthy,
Pravuthy nivurthasya chithasya vruthy, Ryathasthanvaham thathswaroopa shivoham 5
ந மே லோக யாத்ரா ப்ரவாஹ ப்ரவ்ருத்தி ந மே ப3ந்த4 – பு3த்2த்4யா து3ரீஹா நிவ்ருத்தி: ப்ரவ்ருத்திர் நிவ்ருத்த்யா(அ)ஸ்ய சித்தஸ்ய வ்ருத்திர் யதஸ்த்வந்வஹம் தத்ஸ்வரூப: சிவோஹம் || 5
மூவுலகங்களின் இடையே நிகழும் எந்த செயல்பாடும் நான் இல்லை. அதேபோல் ஜீவன்களில் உருவாகும் தவறான, எந்த சுயநலஎண்ணமும் நான் இல்லை. செயலின் முடிவில் காரணமான மனதின் எண்ணம் என்று வேண்டுமானால் என்னை சொல்லலாம். ஆனால் அதுவும் கூட நான் இல்லை. நான் சிவன். உடல் உள்ளம் கடந்த ஒரு சாஸ்வதன். உளதும் நான். இலதும் நான்.
Nidhanam yada jnana karyasya karya, Vina yasya sathvam swatho naiva bhathi,
Yadhyantha madhya antharalantharala Prakasathmakam syatha devaham asmi., 6
நிதா3நம் யத3ஜ்ஞாந – கார்யஸ்ய கார்யம் விநா யஸ்ய ஸத்த்வம் ஸ்வதோ நைவ பா4தி | யதா3த்4யந்த மத்4யாந்தராளாந்தராள ப்ரகாசாத்மகம் ஸ்யாத் ததே3வாஹமஸ்மி 6
இதோ ஒரு உபாயம். அறியாமை அஞ்ஞானம் எனும் அழுக்கு உன்னிடமிருந்து நீங்கவேண்டுமா? அஞ்ஞானத்தினால் புரியும் செயல்கள் , எண்ணங்கள் விலக வேண்டுமா? அறியாமை அஞ்ஞானமே அறவே அகல வேண்டுமா, உண்மை, சத்யம் எதையும் அறியாமல் புரியாமல் இருளில் மூழ்கி ஒளி தேடுகிறாயா? முதல் இடை கடை என்று ஒன்று மாற்றி உன்னை பின்னல் போல் சம்சார தொடர்புகள் பிடித்து உன் மனம் வாடுகிறதா, இதிலிருந்து விடுதலை பெற சில தெய்வங்களை நாடினாயா? அந்த தெய்வம் நான் தான். சிவோஹம். நான் சிவன்.
Yathoham na budhir na mey karya sidhi, Yatho nahamangam na mey linga bhangam,
Hrudhakasa varthi, gathanga thrayarthi, Sada Sachidananda murthy Shivoham., 7
யதோ(அ)ஹம் ந பு2த்2தி4ர் ந மே கார்ய ஸித்3தி4: யதோ நாஹமங்க3ம் ந மே லிங்க3 ப4ங்க2: |ஹ்ருதா3காசவர்தீ க3தாங்க3த்ரயார்தி: ஸதா3 ஸச்சிதாநந்த மூர்தி: சிவோஹம் || 7
நீ தேடும் அறிவாக, ஞானமாக என்னை பார்க்கிறாயா, உன் கர்மா அல்லது கார்ய சித்தி, பலனாக, என்னை பார்க்காதே. நான் அதல்ல . உன்னுள் விளங்கும் ஹ்ருதய ஆகாசம் நான். உருவமோ அருவமோ எதுவோ, அது நான் தான்.புலன்களின் சுகமோ துக்கமோ அல்ல. பரமானந்தம், பிரம்மானந்தம், சதானந்தம், சித்தானந்தம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறாயா. அத்தனையும் நான் தான் – சிவன். சிவோஹம்.
Yadaaseedvilasad vikaram jagadha, Dwikarasrayam naa dwithyathwath syath, Mano budhi
c hithahamakara murthy Pravruthiryatha syatha devaham asmi., 8
யதா3ஸீத்3 விலாஸாத்3 – விகாரோ ஜக3த்3- யத்3 விகாராச்ரயோ நாத்3விதீயத்வத: ஸ்யாத் | மநோ பு2த்தி4 சித்தாஹமாகார வ்ருத்தி ப்ரவ்ருத்திர் யத: ஸ்யாத் ததே3வாஹமஸ்மி || 8
உலகம் ஒவ்வொருவருக்கும் ஓவ்வொரு விதமாக பேதமாக காண்கிறதா அந்த பேதம் சிவனாகிய நான் தான். ஆனால் நான் அபேதன் . ஏனென்றால் என்னை ரெண்டாக பார்க்க முடியாது. ஒன்றே பலவாக காண்பவன். பலனாக காணும் யாவும் ஒருவனாகிய நான். சிவன். சிவோஹம். ”
Yadantharbahirvyapakam nithya shudham,Yadekam sada sachidananda kandam,
Yatha sthoola sukshma prapanchasya bhanam,Yathasthat prasoothistha devahamasmi. 9
யத3ந்தர் – ப3ஹிர் வ்யாபகம் நித்ய சுத்3த4ம் யதே3கம் ஸதா4 ஸச்சிதாநந்த3 கந்த3ம் |
யத: ஸ்தூ2ல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சஸ்ய பா4நம் யதஸ்தத் ப்ரஸூதிஸ் – ததே3வாஹமஸ்மி.9
எங்கும் எதிலும் பர ந்து விரிந்து நிறைந்து காணப்படும் தூய பளிங்கு போன்ற உள்ளும் புறமும் களங்கமற்ற ஆத்மா நானே, நீ ”ஹரா , சிவா என அழைக்கும் சிவன். சதா ஆனந்தத்தில் திளைத்து அருளும் பூரணன். சிறிதும் பெரிதுமாக இந்த பிரபஞ்சத்தில் காணும் எதுவும் நானே, அவற்றை படைத்தவனும் நானே. நினைத்தால் சர்வவியாபியான என்னை உன்னிலும் நீ காணலாமே.
Yadarkendu vidhwat prabha jala maala,Vilasapadam yathswa bhedhadhi soonyam,
Samastham jagdyasya padathmakam sya Dhyatha shakthi bhanam thadevahamasmi. 10
யத3ர்கேந்து3 வித்3யுத் ப்ரபா4 ஜால மாலா விலாஸாஸ்பத3ம் யத் ஸ்வபே4தா3தி3 சூந்யம் |ஸமஸ்தம் ஜகத் யஸ்ய பாதா3த்மகம் ஸ்யாத் யத: சக்திபா4நம் ததே3வாஹமஸ்மி ||10
என்னை நினைத்தோர்க்கு சக்தி அளிப்பவன் நான். சிவன். சிவனை நினைந்தோர் எவர் தாழ்ந்தார், சிவனை மறந்தோர் எவர் வாழ்ந்தார் என்று ஒரு பாட்டு இருக்கிறதே. மின்னல் அடுத்தடுத்தது ஒளிக்கற்றையாக வருமே அதுபோல் ஒளி வீசிக்கொண்டு இருப்பவன், சூரிய சந்திர ஒளி போன்று எங்கும் எவருக்கும் இரவும் பகலிலும் ஞான ஒளி வீசிக்கொண்டிருப்பவன். ஓருவரிலிருந்து மற்றவர் எப்படியெல்லாம் வேறு படுகி றார்கள், உருவத்திலும் குணத்திலும், அந்த உருவம், குணம் வெவ்வேறாக அளித்தாலும் உள்ளே ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஜீவஜோதியாக இருப்பவன் நான் தானே. நீங்கள் அறிந்த சிவன்… சிவன் சிவன்.. வேறாக நினைத்தால் அந்த வேறுபாடும் நானே. வித்யாசமே இல்லை என்றால் எல்லாம் ஒன்றானவன் நான். சிவன். என்னிலிருந்து பிறந்த ப்ரபஞ்சம் என்னுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. என்றாலும் நான் அதல்ல .
Yatha kala moorthir bhibhethi prakamam, Yathaschitha budhindriyanam vilasa, Hari brahma
rudrendra chandradheenaam,Prakaso yatha syatha devahamasmi. 11
யத: கால ம்ருத்யுர் பி3பே4தி ப்ரகாமம் யதச்சித்த பு3த்3தீ4ந்த்ரியாணாம் விலாஸ: |
ஹரி ப்4ரஹ்ம ருத்3ரேந்த்ர சந்த்3ராதி3 நாம ப்ரகாசோ யத: ஸ்யாத் ததே3வாஹமஸ்மி.11|
எல்லா உயிர்களையும் தக்க, குறித்த, நேரத்தில் பூமியிலிருந்து விடுபட வைக்க இருக்கும் ஒருவன் தான் எம தர்மன். அவனும் என் தொழிலைச் செய்ய என்னால் ஏற்படுத்தப்பட்டவன். கால ஸம்ஹாரம் என்பதே எந்த நேரத்தில் அழிக்கப்பட வேண்டுமோ அந்த நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்து அதை நிறைவேற்றுவது. உயிர்களின் மறையும் நேரம் வந்தால் அதை முடிப்பது எமனுக்கு நான் இட்ட வேலை. என் கட்டுப்பாட்டில் அவன் அதை நிறைவேற்றுபவன். நான் சிவன், கால சம்ஹார மூர்த்தி. நானே மனத்தின் உயர்ந்த நிலைபாட்டிற்கும் காரணன். ஞான காரகன். புலன்களின் அதிகாரி. ப்ரம்மா, சிவன், இந்திரன் சந்திரன் என்றெல்லாம் பல கடவுள்களாக மாறி மாறி தோற்றமளிப்பதும் நான் ஒருவனே. சிவன். பரப்ரம்மன்.
Yad akasavad sarvagam, Shantha roopam Parama jyothiraakara soonyam varenyam,
Yadad antha soonyam param, Shankarakhyam, Yadanthar vibhavyam, tadhevaha masmi. 12
யதா3காசவத் ஸர்வக3ம் சாந்த ரூபம் பரம் ஜ்யோதிராகார சூந்யம் வரேண்யம் |
யதா3த்3யந்த சூந்யம் பரம் சங்கராக்3யம் யத3ந்தர் விபா4வ்யம் ததேவாஹமஸ்மி ||
சிவன் என்று நான் சொல்லும்போது என்னை எளிதில் வசப்படுத்த முடியாது என்று புரிந்து கொள் . எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன். பரந்த ஆகாயத்தையும் கடந்த எல்லையில்லாத எங்கும் நிறைந்த பர ஒளி. என்னை அமைதியான ஒரு தியானிக்கும் மௌனமான உருவமாக பார்க்கலாம். தீயினும் ஒளி மிக்கவன். ஜோதி ஸ்வரூபன். எதுவுமில்லாத அருவன். ஆதி அந்தமில்லா தவன். என்னை சிவன் என்றும் சங்கரன் என்றும் அழைப்பார்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


