BAGAVAN ANSWERS QUESTIONS J K SIVAN

மக்கள் கேள்வி  மஹரிஷி பதில்  –   நங்கநல்லூர்  J K  SIVAN  

 திருவண்ணாமலை  ரமணாஸ்ரமத்தில்  எங்கோ எதையோ  வெறித்த பார்வையுடன் அந்த கோவணாண்டி சந்நியாசி அமர்ந்திருக்கிறார். எங்கும் நிசப்தம். அவரைச்சுற்றி உள்நாட்டு வெளிநாட்டு  பக்தர்கள்  சூழ்ந்துள்ளனர்.  யாரோ சிலர் அவரிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு அறிவுரை பெறுகிறார்கள்.
”சுவாமி, நாங்கள் அடிக்கடி தங்களை கேட்கும் கேள்வி இது.  மனோ நாசம் எப்படி இயலும்? அறியாமையால் கேட்கிறோம். ஆன்மீக பயிற்சி முயற்சியால் தான் இது முடியும் என்கிறார்களே. எப்படி அதை செய்வது?”
”எந்த மனதை  அழிக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ, அந்த மனதையே  கேள்.  யாருடைய மனது நீ  என்று. அப்புறம் அதை அழிக்க நாசம் செய்ய முயற்சிக்கலாம்..  இந்த விசாரம் தான்  ஆன்மீக  பயிற்சி,  முயற்சி.
”நான்” யார் என்றே தெரியவில்லையே சுவாமி”
”நாம் யார் என்றே தெரியாமல் நாம் எதையோ அடைய விரும்புகிறோம். உண்மையில் நாம் எதை அடைய வேண்டும் என்று ஏங்குகிறோமோ  அதை எங்கோ தேடி அடையவேண்டாம், நாம் அதாகவே இருப்பதை அறியவில்லையே.  இதனால்  என்ன ஆகிறது?  நம்மிடம் உள்ள  அந்த அற்புத நிலையை நாமே விரட்டி விடுகிறோம். நம்மை விட்டு விலகக்கிக் கொள்கிறோம். .  எது வந்து போகிறதோ அது ஆத்மா இல்லை. எது எல்லோராலும் அனுபவிக்க முடியுமோ, சாஸ்வதமாக நம்மில் உள்ளதோ, அதை புரிந்து கொண்டு தேடி அடையவேண்டும். அது தான் உண்மையில் ஆத்மா. அது தான் முக்தி. அது தான் ஞானம். ”
”சுவாமி, குருவினால் சீடனுக்கு என்ன  லாபம் கிடைக்கும்?”
”குருவோ  பகவானோ வழி தான் காட்ட முடியும். உன்னை தூக்கிச் செல்ல முடியாது. ” நீ தான் அது” என்று எத்தனை முறை சொன்னாலும் புரியாவிட்டால் என்ன செய்வது? அவர்கள் காட்டிய பாதையில் நீ  செல்ல வேண்டும். அது தான் சீடன் கடமை.” ”பகவானே,  என்னை நான் அடையாளம் காணவேண்டும். ஆத்மாவை அறிய வேண்டும். எனக்கு வழிகாட்டுங்கள் ”
”இதே கேள்வி கேட்டவனைப்  பற்றி தான் சாந்தோக்ய உபநிஷத் ஒரு கதையாக  சொல்கிறது. சொல்கிறேன் கேள்.
”ஒருவன்  வீட்டில் சுகமாக  தூங்கிக்  கொண்டிருந்தான். தூக்கத்தில் ஒரு கனவு கண்டான்.  அவன் வீட்டுக்கு யாரோ  ஒருவன் மெதுவாக வந்து  அவன் மூக்குக்கு நேரே ஏதோ ஒரு மருந்தை காட்டுகிறான். உடனே அந்த ஆசாமிக்கு மயக்கம் வருகிறது.  வந்தவன் அப்புறம் அந்த ஆசாமியின் கண்ணை ஒரு துணியால் இறுக்கமாக  கட்டி  பார்க்கமுடியாதபடி செய்த பின், கைகளை பின்னால் மடக்கி  கயிற்றால் கட்டி தூக்கிக் கொண்டு போய் ஒரு நடு காட்டில் போட்டு விட்டு  போய்விடுகிறான்.  அந்த ஆசாமி  கண் தெரியாமல் கை   கட்டுகளை அவிழ்க்க முடியாமல்  கால் போனபடி நடக்கிறான்.  எப்படி வீட்டுக்கு போவது  என்று  வழி தெரியாமல் தவிக்கிறான். முள்ளிலும்  கல்லிலும் தட்டு தடுமாறி விழுந்து காயம். வலி, எரிச்சல்… ஹோ வென்று அழுகிறான். ஒரு தேவதை அவன் முன் வந்து கேட்கிறது. ”ஏனப்பா அழுகிறாய்? யார் நீ?  எதற்கு இங்கே வந்தாய்?”
” ஐயா, தெய்வம் போல் வந்தவரே, நீர் யாரென்று பார்க்க முடியவில்லை.  நான் சுப்புசாமி, என் வீடு விலாசம், என் ஊர் என்று விவரங்கள் சொல்கிறான். யாரோ வந்து என்னை மயங்க வைத்து கண்ணைக் கட்டி, கைகளை பின்னால்  கட்டி  இங்கே கொண்டு வந்து போட்டு விட்டு போய்விட்டார்கள். என்ன செய்வேன்  எப்படி வீடு போய்ச்  சேர்வேன் ?”
அந்த தேவதை ஆசாமியின் கண், கை  கட்டுகளை அவிழ்த்து விட்டது. இதோ பார்  உனக்கு எதிரே ஒரு  ஒற்றையடிப்பாதை, அதில் நடந்தால்  சில மணி நேரங்களில் . உன் ஊர் வரும். அப்புறம் உன் வீட்டுக்கு போ”அந்த ஆசாமி அப்படியே செய்தான்  வீடு போய் சேர்ந்தான்.
இந்த கட்டத்தில் தான்  அந்த  கனவு கண்ட  ஆசாமி விழித்துக் கொண்டான். கனவு கலைந்து  படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். உடல் வியர்த்து நடுக்கம். நாக்கு குழறியது. பேச முடியவில்லை.  மிரள  மிரள சுற்று முற்றும் பார்த்தான். அறையில்  மெல்லிய விளக்கு  வெளிச்சம் இருக்கிறது. அவன் படுத்துக்  கொண்டிருந்த அறையின்  கதவு   மூடி அவன்  உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டபடியே  தானே  இருக்கிறது.
அவனுக்கு அப்போது தான் புரிகிறது. அவன் இதுவரை அவன் வீட்டிலேயே தான் இருக்கிறான். அவனது அறையில், அவனது படுக்கையில் தான் படுத்திருக்கிறான் . அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து  மயங்க வைத்து  யாரும் எந்த காட்டுக்கும் கண்ணைக்கட்டி, கையைக் கட்டி  தூக்கிக் கொண்டு போய் போடவில்லை. எந்த தேவதையும் உதவி செயது கண்  கை கட்டை அவிழ்த்து விட்டு  வீட்டுக்குப் போக  வழி சொல்லவில்லை. அவனும் நடந்து வீடு திரும்பவில்லை.. அப்படியென்றால்…இதெல்லாம் அவன் தானாகவே மனதில்  கற்பனை செய்து கொண்டது.  தான் யார் என்று அவன் அறிந்து கொள்ளாததால் விளைந்த  அவஸ்தை.
”நாம் கடவுளிடமிருந்து வேறு பட்டவர்கள்,  ஆத்ம நாதனை அறிய ரொம்ப கஷ்டப்படவேண்டும், ரொம்ப கடின முயற்சி பயிற்சி எல்லாம் தேவை”  என்பது தப்பு. பொய் . மேலே சொன்ன  கனவு கண்ட ஆசாமி பட்ட துன்பங்கள் போல் இதுவும் பொய் .அவன் ஜம்மென்று மெத்து மெத்தெ\ன்று பஞ்சணை கட்டிலில் தூங்கியவன். அவன் கண்ட கனவு நிஜம் போல் தோன்றி அவனை படாத பாடு படுத்தி விட்டது.  ஆத்மாவை உள்ளே தேடி அடையாளம் காணாவிட்டால் இந்த வித அசௌகரியங்களைத் தவிர்க்க முடியாது.   உலகம் நிஜம் போல் தோன்றி அவனை அலைக்கழித்து விட்டது. தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு தான் மீண்டும் படுத்தான்.   ”கடவுள், ஆத்மா ப்ரம்மம் எல்லாம் ஒன்றே. அதை முதலில்  தேடவேண்டும். விடாமல் அதையே பற்றி சிந்திக்க வேண்டும். அப்புறம் சுகமோ சுகம்.”
இன்னும் தொடர்கிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;