
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி
ஸ்லோகங்கள் – 44-47
44. सा रम्या नगरी महान्स नृपतिः सामन्तचक्रं च तत् पार्श्वे तस्य च सा विदग्धपरिषत्ताश्चन्द्रबिम्बाननाः । उद्वृत्तः स च राजपुत्रनिवहस्ते बन्दिनस्ताः कथाः
सर्वं यस्य वशादगात्स्मृतिपथं कालाय तस्मै नमः ॥
Saa ramyaa nagaree mahaan sa nripatih saamantachakram cha tat Paarshwe tasya sa vidagdhaparishat taashchandrabimbaananaah
Udriktah sa cha raajaputranivahah te bandinastaah kathaah Sarvam yasya vashaadagaat smritipatham kaalaaya tasmai namah [34]
ஸா ரம்யா நகரி மஹாம்ஸ ந்ருபதி: ஸாமந்தசக்ரம் ச தத் பார்ஸ்வே தஸ்ய ச ஸா வித3க்3த4பரிஷத்தாஶ் சந்த்3ர பி3ம்பா3னனா: | உத்3வ்ருத்த: ஸ ச ராஜபுத்ர நிவஸ்தே பந்தி3னஸ் தா: கதா2: ர்வம் யஸ்ய வஶாத3கா3த்ஸ்ம் ருதிபத2ம் காலாய தஸ்மை நம: || 41 ||
புகழ்பெற்ற பேரரசர்களின் வரலாற்றை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மிகவும் போற்றப்பட்டவர்களாக, புகழ்பெற்றவர்களாக, அதிகசக்தி, செல்வம் உடையவர்களாக இருந்திருப்பார்கள் ஆனால் காலம் சென்றதும் அவர்களுடைய புகழ், பெருமை வரலாற்று புத்தகத்தில் சில பக்கங்களாக சுருங்கிவிடுகிறது. அவர்களுடைய வாழ்ந்த காலத்தின் பெருமையானது இப்படி சுருங்கி இருக்கும்போது சாதாரண மக்களின் நிலைமையை பற்றி சொல்லவே வேண்டாம். எங்கேடா காணோம் அவர்களை? ஹர்ஷன், அக்பர், சந்திரகுப்தன், ராஜராஜன்…. எல்லாம் மண்ணுக்குள். வந்த இடத்துக்கே போயாச்சு. அழகிய நகரங்களை ஆண்ட சக்ரவர்த்திகள். எல்லாம் கருப்பும் வெள்ளையுமா அச்சிட்ட புத்தகங்களில் பெயர்களை மட்டும் தான் சின்ன எழுத்தில் பார்க்கமுடிகிறது. ராஜாக்கள் மட்டும் இல்லை. வித்வான்கள், பிரபுக்கள், கலையரசிகள், கவிஞர்கள், கலைஞர்கள் ,அழகிகள்…. யாரும் இவரக்ளை பற்றி நினைப்பது கூட இல்லை.இவர்கள் கதியே இப்படி என்றால் நம்மைப்போன்ற அல்ப புழுக்களின் நிலையை ஒரு வினாடி நினைத்துப் பாருங்கள். யார் இதெல்லாம் இப்படி மாற்றுவது தெரியுமா…. கால தேவன் ஒருவனே.. காலமே உனக்கு எல்லோரும் சமம்.
45 यत्रानेकः क्वचिदपि गृहे तत्र तिष्ठत्यथैको यत्राप्येकस्तदनु बहवस्तत्र नैकोऽपि चान्ते । इत्थं नेयौ रजनिदिवसौ लोलयन्द्वाविवाक्षौ
कालः कल्यो भुवनफलके क्रीडति प्राणिशारैः ॥
yatranekah kvacidapi grhe tatra tisthatyathaiko yatrapyekastadanu bahavastatra naiko’pi cante । ittham neyau rajanidivasau lolayandvavivaksau
kalah kalyo bhuvanaphalake kridati pranisaraih ॥ 42 ॥
யத்ராநேக: க்வசித³பி க்³ரு’ஹே தத்ர திஷ்ட²த்யதை²கோ யத்ராப்யேகஸ்தத³நு ப³ஹவஸ்தத்ர நைகோऽபி சாந்தே । இத்த²ம் நேயௌ ரஜநிதி³வஸௌ லோலயந்த்³வாவிவாக்ஷௌ கால: கல்யோ பு⁴வநப²லகே க்ரீட³தி ப்ராணிஶாரை:
நமக்கே இப்போது நிதர்சனமாக தெரிகிறதே. ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமாக கலகலவென்று இருந்த வீடுகள் இப்போது களையிழந்து ஒருவரோ இருவரோ மட்டும் இருக்கும் நிசப்த குடில்களாக காணப்படுகிறது. ஒவ்வொருவராக இல்லங்களிலிருந்து தனித்து சென்று விட்டார்கள். கடைசியில் ஒருவருமில்லாத பாழ் மனையாகிவிடும். எல்லாம் காலத்தின் கோலம் தான். வெகு அழகாக கால தேவன் வாழ்வில் உலகில் இந்த சொக்கட்டான் விளையாட்டை விளையாடி ஜெயிக்கிறான். மனிதன் தோற்கிறான். பகடைக்காய்கள் இதில் நாம் தான்.
46. रात्रिः सैव पुनः स एव दिवसो मत्वा मुधा जन्तवो धावन्त्युद्यमिनस्तथैव निभृतप्रारब्धतत्तत्क्रियाः । व्यापारैः पुनरुक्तभूत विषयैरित्थंविधेनामुना संसारेण कदर्थिता वयमहो मोहान्न लज्जामहे ॥ ४४॥
Ratrih saiva punah sa eva divaso matva mudha jantavo dhavantyudyaminastathaiva nibhrtaprarabdhatattatkriyah । vyaparaih punaruktabhuta visayairitthamvidhenamuna samsarena kadarthita vayamaho mohanna lajjamahe ॥ 44 ॥\
ராத்ரி:ஸைவ புந: ஸ ஏவ தி³வஸோ மத்வா முதா⁴ ஜந்தவோ தா⁴வந்த்யுத்³யமிநஸ்ததை²வ நிப்⁴ரு’தப்ராரப்³த⁴தத்தத்க்ரியா: । வ்யாபாரை: புநருக்தபூ⁴த விஷயைரித்த²ம்விதே⁴நாமுநா ஸம்ஸாரேண கத³ர்தி²தா வயமஹோ மோஹாந்ந லஜ்ஜாமஹே ॥ 44॥
ஒவ்வொருநாளும் பகலும் தொடர்ந்து இரவும் விடாமல் மாறி மாறி வருவதைப் பார்க்கிறோம். இந்த நேரத்தில் உயிர்கள் அனைத்தும் ஓடி ஆடி சுறுசுறுப்பாக தான் விரும்புபவைகளைத் தேடி அலைகிறது. எல்லாம் ஆசையின் காரணத்தால், சிரருக்கு பேராசை காரணம். துளியும் இப்படி அலைவதில் நமக்கு வெட்கமே இல்லை. ஒரு ஜென்மம் முடிந்து இன்னொன்று ஆரம்பித்தாலும் நமது அலைச்சல், வேட்கை, தீரவில்லையே. மரணம் ஆசையை மறக்கச் செய்யவில்லை.
47. , आदित्यस्य गतागतैरहरहः संक्षीयते जीवितं व्यापारैर्बहुकार्यभारगुरुभिः कालोऽपि न ज्ञायते । दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते
पीत्वा मोहमयीं प्रमादमदिरामुन्मत्तभूतं जगत् ॥ ४३॥
adityasya gatagatairaharahah samksiyate jivitam vyaparairbahukaryabharagurubhih kalo’pi na jnayate । drstva janmajaravipattimaranam trasasca notpadyate pitva mohamayim pramadamadiramunmattabhutam jagat ॥ 43 ॥ ॥ 42॥
ஆதி³த்யஸ்ய க³தாக³தைரஹரஹ: ஸங்க்ஷீயதே ஜீவிதம் வ்யாபாரைர்ப³ஹுகார்யபா⁴ரகு³ருபி:⁴ காலோऽபி ந ஜ்ஞாயதே । த்³ரு’ஷ்ட்வா ஜந்மஜராவிபத்திமரணம் த்ராஸஶ்ச நோத்பத்³யதே பீத்வா மோஹமயீம் ப்ரமாத³மதி³ராமுந்மத்தபூ⁴தம் ஜக³த்
நமது வயசு ஒவ்வொரு நாளாக கூடி, அதிக மாகிக்கொண்டே வருகிறது.இந்த நாள் என்பது சூர்ய உதயத்தாலும் அஸ்தமனத்தாலும் தான் கணக்கிடப்படுகிறது. வயசு ஒவ்வொரு நாளும் கூடக் கூட நமக்கும் மரணத்துக்கும் இடையே உள்ள இடைவெளி ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டே வருகிறது என்று தானே அர்த்தம்? நமது எத்தனையோ வேலைகளுக்கு நடுவே இந்த உண்மையும் மறைந்து இருக்கிறது. எத்தனையோ மனக்கோட்டைகள் நாம் கட்டுகிறோம் . வந்து விடுமோ என்று மரணத்தைப் பார்த்து அல்ல, நினைத்தே பயம் நம்மை கொல்கிறது .
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


