HINDU WEDDINGS J K SIVAN

கல்யாணமாம் கல்யாணம் –   நங்கநல்லூர்  J K SIVAN

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர். இது தான் எத்தனை தலைமுறையாக நாம் அறிவது. வம்ச வ்ருத்தியை மனதில் வைத்து தான் நல்ல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து மணமகன் மணமகளை சரியாக தேர்ந்தெடுத்து விவாஹம் நடக்கிறது.    அந்த வம்சம் தொடர்ந்து அப்படியே வளரவேண்டும். பண்பாடுகள் பின்பற்றப் படவேண்டும்.   நடுவே  மதம் மாறுவதோ வம்சம்  வாரிசில்லாமல் அழிந்து போவதோ  ஏதோ சாபம். பெரிய  துரதிர்ஷ்டம். அது நடக்கக்கூடாது என்பதே பெரியோர்கள் எண்ணம்.   விவாஹம் என்பது வாழ்க்கையில் முக்யமான ஒருஅனுஷ்டானம். ஸுகமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.  விவாஹம் ஒரு முறைப்படி நடக்கவேண்டிய  விசேஷ கார்யம். எவனுக்கோ எவளையோ எதற்கோ முடிச்சுப்  போட்டு  ஒரு கறுப்புக் கோட்டு  பின்னால்  அந்த முடிச்சை அவுக்க வைக்கும்  முடிச்சவுக்கியாக  கல்யாண பந்தத்தை  நீதிமன்றத்தில்  அறுத் தெறியவா  பெற்றோர்  இவ்வளவு பாடு பட்டு குருவி  மாதிரி சேர்த்ததை கடல் மாதிரி செலவழித்து ஊரெல்லாம் கூட்டி கடன் வாங்கி கல்யாணம் பண்ணுகிறார்கள்.
நிறைய  விவாக ரத்துக்கு  காரணம்  பணம், மன  அஹம்பாவம்,  மமதை,  கர்வம். துஷ்ட சகவாசம், கடவுள் மீது அவநம்பிக்கை. வேறெதுவும் காரணமாக  தெரியவில்லை. ஏன் என்றால் பல விஷயங்களை விசாரித்து திருப்தியாக இரு பக்கமும் ஒப்புக்கொண்டபின் தான் கல்யாணம் முடிவாகிறது.
ஒரு கணவன் மனைவி  அமைவது பூர்வ ஜென்ம பலன்.  அனுஷ்டான பலன்.  ரிஷிகளின்  தபோ பலம், தீர்க்க தரிசனம்  நம்மை  வழிநடத்துகிறது.  ரிஷிகள் விரும்பினாலும்  அனுஷ்டான பலனை மாற்ற முடியாது. வேதங்களில்  விவாஹ முறை  சாஸ்த்ர சம்பிரதாயமாக  சொல்லப்பட்டுள்ளது.
அப்போதெல்லாம் விவாஹம் குறைந்தது  ஐந்து நாட்கள் நடந்தது.  நடைமுறையில்  இப்போது ஒண்றரைநாளாக சுருங்கிவிட்டதே தவிர  தாத்பர்யம் அதே தான். பொன் வைக்கிற இடத்தில் பூ.  எதிர்கால  நிகழ்கால  வம்ச க்ஷேமத்திற்காக  ஏற்படுத்தப்பட்ட  வழிமுறை.  தேசத்துக்கும் பிரஜைகளால்  க்ஷேமம்.

கல்யாணத்துக்கு முதல் நாள்  விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகிறது.  முதல்நாள் சாயந்திரம்  அஸ்தமன சந்தியா வந்தனத்துக்குப் பிறகு  விரதஸமாவர்த்தனங்கள்.  ஸ்னாதகாக்னிகார்யம்.
கல்யாணத்தன்று காலை ஸ்னாதகாக்னிகார்யம்.கூஷ்மாண்ட ஹோமம் . அந்த காலத்தில் ருது ஆகாத பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும் வழக்கம் என்பதால்  கன்யகைக்கு ரத்னதானம் பண்ணுவது.   பையனின் தந்தை   கோமூல்யதானம் பண்ணுவது  வழக்கத்தில் இருந்தது.
கல்யாணத்தில் முக்ய ஹோமம்  ஸப்தபதி,  லாஜஹோமம் , அப்புறம்  அக்ஷதை  ஆசீர்வாதம்,  ஹாரத்தி .
கல்யாணமான புது தம்பதிகள்  கல்யாணமான  நாளிலோ, மறுநாளோ,  விவாஹாக்னியை எடுத்துக் கொண்டு அஸ்தமனத்துக்குள்  பிள்ளையின் வீட்டுக்கு  வந்துவிடுவார்கள்..

க்ருஹத்துக்கு வந்துசேர்ந்தநாளன்று மாலை வதூக்ருஹப்ரவேச ஹோமம் த்ருவாருந்ததீ தர்சனம் ஸ்தாலீபாகம் ஔபாஸனாரம்பம் .இவற்றிற்கு அவரவர் க்ருஹ்யஸூத்ரப்படி அதிகபக்ஷமாக  2 மணி நேரத்துக்கு மேல் ஆகாது.அத்துடன் அன்றைய கார்யக்ரமம் பூர்த்தி.
இந்த ஔபாஸனாரம்ப நாள் முதல் 4 நாட்கள் தம்பதிகள் ஔபாஸனாக்னி உள்ள வீட்டில் காலையும் மாலையும் 5 மணி முதல் 7மணிவரை அவஸ்யம் இருக்கவேண்டும். இந்த 4நாட்களும்   காலை ஸூர்ய உதயம் ஆனபின்பும் மாலை ஸூர்யாஸ்தமனத்துக்கு பின்பும் ஔபாஸனம் பண்ணவேண்டும். இதற்கு ஆகும் நேரம் அதிக  பக்ஷமாக 15 நிமிஷங்கள் மட்டுமே. வேறு எந்த  கார்யக்ரமமும் கிடையாது.தம்பதிகள் இந்த 4 நாட்களில் உள்ளூரை விட்டுத்   தாண்டி  வெளியே போய்விடக்கூடாது.வேறு எந்த நியமலோபத்துக்கும் நிஷ்க்ருதி பண்ணிவிடலாம்.

ஔபாஸனாரம்பம் சனிக்கிழமை என்றால் புதன்கிழமை விடிகாலை 4 மணிக்கு சேஷஹோமம் எனஒரு சின்னஹோமம். அதிகபக்ஷமாக  ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆகாது. அன்றையதினம் மங்களஸ்னானம் பண்ணி ஸூர்ய உதயத்துக்குப்பின் ஔபாஸனம் பண்ணிவிட்டு நாந்தீ பண்ணவேண்டும். இதற்கு ஆகும் நேரம் ½ மணி.
உடனே  ப்ரதமார்த்தவசாந்தி ஜபஹோமம் பண்ணுவது.
இதற்கு ஆகும் நேரம்ஒரு மணிநேரம்.
தெலுங்கு ஸம்ப்ரதாயக்காரர்கள் விவாஹமாக இருந்தால் இன்று நாகவல்லி நடத்தவேண்டும். இதற்கு ஆகும் நேரம் 2 மணிநேரம்.
அன்று இரவு சாந்திமுஹூர்த்தம் வைக்கலாம்.
இவ்விதமாகத்தான் எல்லா விவாஹங்களும் நடக்கவேண்டும். அந்த குடும்பங்கள்  பரமக்ஷேமத்துடன் ப்ரகாசிக்கும்.
ப்ராம்மண்யம் சிறக்கும்.
யதோக்தமான விவாஹத்தின் பலன்கள் –
வ்ரதஸமாவர்த்தனங்களால் வரனுக்கு மந்த்ரசக்தி ஏற்படும்.
ருதுமதீயானகன்னிகையை விவாஹம் செய்துகொள்ளும்படி இருந்தால் அவளை விவாஹம் செய்துகொள்ள யோக்யதா ஸித்திக்காக கூஷ்மாண்டஹோமம்.
கன்யகை ரத்னதானம் செய்வதால் விவாஹத்துக்கு முன் ருதுவானதோஷம் விலகும்.
கன்யகையின் தகப்பனார் ஒரு கோமூல்யதானம் பண்ணுவதால் கன்யகையை ருதுவாவதற்கு முன்னால் தானம் செய்யாததோஷத்துக்கு பரிஹாரமாகிறது.
ப்ரம்மசாரிக்கு ஸமிதாதானம் போல் ஸமாவர்த்தனம் செய்து கொண்டவனது அக்ன்யுபாஸனம் ஸ்னாதகாக்னிகார்யம்.
ஸாயங்காலம் வதூக்ருஹப்ரவேசஹோமத்தால் பத்னீ வந்தவேளை வரன் க்ருஹத்தில் ஸகல ஸம்ருத்திகளையும் அக்னியிடம் ப்ரார்த்தித்து அடைவோம்.
ஸ்தாலீபாகத்தால் தம்பதிகளுக்கு அக்னிஸித்தி ஏற்படுகிறது.
ஔபாஸனத்தால் உலகநன்மையை ப்ரார்த்திக்கிறோம்.
3 நாட்கள் தீக்ஷையால்  தம்பதிகளுக்கு தேஜஸ் மனோபலம்  சரீரத்துக்கு யதேஷ்டமான சக்தி எதையும் எதிர்க்கொள்ளும் வலிமை யாவும் உண்டாகின்றன.
5வது   நாள் சேஷஹோமத்தால் வதூவிடம் ஏதும் தோஷம் இருந்தால் யாவற்றையும் அக்னி பரிபூர்ணமாக விலக்கி க்ஷேமத்துக்கு வழிவகுத்துவைக்கிறார்.
நாகவல்லியால் பத்னீயை பூர்ணமாக தனக்கு ஸ்வாதீனமாக்கிக் கொண்டு முப்பத்துமுக்கோடி தேவர்களிடமும் க்ஷேமங்களை ப்ரார்த்திக்கிறான்.
ப்ரதமார்த்தவசாந்தி ஜபஹோமங்களால் வதூ ருதுவானகாலத்தில் ஏதும் தோஷங்கள் இருந்தால் விலகிவிடும்.கர்ப்பதாரணசக்தி ஏற்படும்.
இவ்விதமாக சாஸ்த்ரீயமாக நமது ஸந்ததிகளுக்கு விவாஹத்தை நடத்திவைத்து அவர்களுக்கு அக்ஷயமான தர்மநிதியை சேர்த்துவைப்போம்.
ஒரே ஒரு நிமிஷம்.  இத்தனை ஹோமங்கள் பேர் சொன்னேனே  ஏதாவது அது பற்றி தெரியுமா? மந்திரங்கள் சொன்னது நினைவிருக்கிறதா?  வாத்யார் இத்தனை மந்திரங்கள் சொன்னாரா, மனப்பாடமாக சொன்னாரா புத்தகத்தை, மொபைலில் பார்த்து சொன்னாரா? ஹோமத்தின் பெயர் , அதன் காரணம் அர்த்தம் சொன்னாரா?  தெரியாது என்பது தான் பொதுவான பதில்.நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக  நாம் இழந்து கொண்டே வருகிறோம். சடங்குகள் மந்திரங்கள் யஹாங்காங்கை, ஹோமங்கள் ஏதோ பெயருக்காக, விளையாட்டாக போய்விட்டன.  ஆகவே தான்  விவாஹங்கள் எதிர்பார்த்த பலனை கொடுப்பதில்லை. கருப்பு ;கோட்டுகளை  திட்டி, இகழ்ந்து என்னபயன்.
மனப்பூர்வமாக  இறைவன் மேல்  நம்பிக்கையோடு, பெண்வீட்டாரும், பிள்ளைவீட்டாரும், ஏகமனதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், குழந்தைகளின் எதிர்கால க்ஷேமம் ஒன்றே மனதில் கொண்டு கல்யாணம் நடத்த வேண்டும். கோயில்களில் உறவினர்களுடன் முக்கியமான  நண்பர்கள்  மட்டும் போதுமே, மனதார வாழ்த்துபவர்கள் வந்தால் அதுவே  கல்யாணத்துக்கு பெருமை, பொருத்தம். டாம்பீகம் தேவையல்ல. விவாஹ மந்த்ரங்கள் தர்ப்பை, பூஜை சாமான்கள், திரவியம், முக்கியமான வஸ்திரம் பற்றி மட்டுமே சொல்கிறது. மற்றதெல்லாம் காசுக்கு வந்த கேடு. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;